உங்கள் பொறுமைக்கு என் நன்றிகள் !
மீண்டு(ம்) வந்தேன்!
ஐந்து மாத விடுமுறையை நன்றாக அனுபவித்த பிறகு, ஊர் வந்து சேர்ந்ததும் பிடித்தது வினை. ஊர் சுற்றல் என்பது எனக்கு, என் கணவர்,மகள், மகனுக்கு எல்லாருக்குமே சுகமானதாய்த்தான் இருக்கும். அதிகமாய் போனால் எனக்கு குறைந்த ரத்த அழுத்தத்தால் தலைசுற்றலும், எல்லாருக்கும் கொஞ்சம் சளி, இருமல் வரும். அவ்வளவுத்தான்!
ஊர் சுற்றி சுற்றி அவ்வளவு பழக்கம்! குடி நீர், பாட்டில் தண்ணி மட்டுமே. சுத்தமான உணவாய் தேடி பிடிப்போம். இல்லை என்றால் கையிருப்பு பழம், பிஸ்கெட்டை வைத்து சமாளித்து விடுவோம்.
இந்த முறை குஜராத் - நிறைய இடங்கள், ராஜஸ்தானில் மவுண்ட் அபு, மும்பை ஆகியவை பதினைந்து நாட்களுக்கு மேல். பிறகு கொழும்பு ( அரை நாள்), மலேசியா- நான்கு நாட்கள் மற்றும் சிங்கப்பூர்- நான்கு நாட்கள் என்று நீண்ட பயணங்கள்.நீண்ட பயணம் எனக்கு பெரும்பயணத்துக்கு வலிக்கோலிவிடுமோ என்று ஊர் வந்து சேர்ந்த நாளில் இருந்து, முதலில் இருமல் தொடங்கியது. பிறகு அதீத ஜூரம் வாந்தி என்று பத்து நாட்கள். டைபாயிட், மலேரியா என்று டாக்டர்களும் குழம்பி கடைசியில் மஞ்சள் காமாலை என்று உடம்பு மஞ்சள் பூசிக் கொண்டதும் எல்லாருக்கும் தெளிவானது.
ஐந்து நாட்கள் ஆஸ்பத்திரிலில் சேர்ந்ததுமே ஜூரம் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இப்பொழுது ஒரு வாரமாய் கொஞ்சம் தேவலை. இதில் ஊருக்கு வந்த புதியதில் வேண்டாத பிரச்சனையை நானே இழுத்துப் போட்டுக் கொண்டதில் விளைவு, அன்றைய உடலும், மனமும் சோர்ந்திருந்த தருணத்தில் வலைப்பதிவை இழுத்து மூடினேன்.
இப்பொழுது மீண்டும் வேதாளமாய் முருங்கை மரத்தை தேடி வந்து விட்டேன்.
தொடரும்
12 பின்னூட்டங்கள்:
எப்படியோ வந்தா சரித்தான் ! :)
Bonne santé !
//வேண்டாத பிரச்சனையை நானே இழுத்துப் போட்டுக் கொண்டதில் விளைவு,//
என்னது அது? நான் கவனிக்கவில்லையே !
Welcome Back Usha Avargale!
:).. vanthuteengala! neenga absent aana samayathula naatulla ethotho nadanthu potchu! Khushboo oorukkullam poittu vanthrukeenga..!
உஷா
இப்போது உடல் நலம்தானே. இன்னும் சில காலம்B complex அல்லது B6 (pyridoxin) எடுத்துக்கொள்ளுங்கள். சந்தோஷ்ம உஷா திரும்ப எழுதுவதற்கு.
மிக்க மகிழ்ச்சி உஷா அவர்களே. முதல் சில நாட்கள்தான் க்ரிட்டிக்கலாக இருக்கும். உங்களை மறுபடியும் எரிச்சலடையச் செய்யும் முயற்சி நடைபெறக்க்குடும். ஜாக்கிரதை. மனதைத் தளர விடாதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாங்க உஷா
welcome back iron lady
வந்து விளாசுங்க
ரவியா, வி.எம், தேன் துளி. இனோமினோ, மதுமிதா, ராம்கி, டோண்டு ராகவன், கும்பகோணம் கோபாலு வருகைக்கு நன்றி.
ராம்கி, குஷ்பூ மேட்டர்தானே எழுதிட்டா போச்சு!
உஷா,
``மறுபடியும்” வலைப்பதிவில்! சும்மாவே காமாலைக் கண்ணோட அலையிறவங்க முன்னாலே மஞ்சள் காமாலைக்காரியாக அவதரிச்சுட்டீங்களே! நலம் பெற வாழ்த்துக்கள்.
``காமாலை போய்விட்டது
வேதாளம் பிடித்துக் கொண்டது;
பூவிரித்து வரவேற்பார்கள்-விரல் நுனியில்
பூநாகம் மறைத்துக்கொண்டு;
விருந்தாளிகளின் வியாக்கியானத்திற்கு
விக்கிரமாதித்தத்தனம் போதும்;
விடைகள் சொல்லிவிட்டு
வேலையைப் பார்த்துக் கொ(ல்)ள்க!”
என்றென்றும் அன்புடன்
தாணு
ஒரு வழியா போஸ்ட் இப்பொ தெரியுது! காலையிலே இருந்து சஸ்பென்ஸ் தாங்க முடியலே - அப்படி என்னதான் எழுதி இருப்பீங்கன்னு:-)
மீண்டும் வருக.. நோயிலிருந்து முழுமையாக மீண்டும் வருக!
வாங்க உஷா வாங்க.
புல்லு நிறைய முளைச்சுப் போய்'நுனிப்புல்' வெட்டாமக்கிடக்கு பார்த்தீங்களா?
என்ன சொல்றீங்க? மேஞ்சுறலாமா?:-)
தாணு, பினாத்தல், துளசி வாழ்த்துக்கு நன்றி! தாணு ஒரு பர்சனல் மெயில் உங்க ஜீமெயில் ஐடிக்கு போட்டனே கெடச்சுதா?
துளசி, கப்பு எப்படி இருக்கு?
முற்றிலும் குணமடைய வாழ்த்துக்கள்
Post a Comment
<< இல்லம்