Saturday, October 08, 2005

சிங்கையில் இணைய மாநாடு.

கொழும்பில் முக்கால் நாள், மலேசியாசில் நான்கு நாட்கள், சிங்கையில் நான்கு நாட்கள் என்று உல்லாசபயணம் (!) சென்றோம். கைவசம் கணிணி இல்லாததாலும் தனிப்பட்ட இணைய முகவரி என்பது தோழி ஜெயந்தி சங்கரின் இருந்ததால் அவருக்கு ஒரு மடல் அனுப்பிவிட்டு, இருக்கிற தலைப்போகிற பிரச்சனைகளால் தொடர்ந்து யாரையும் தேடி, பிடிக்க முடியவில்லை.
மாலை மூன்று மணிக்கு ஜெயந்தி முதலில் வர சாந்தன், குழலி- பிரபல வலைப்பதிவாளர்- பிறகு அருள்குமரன் வர சபை களைக்கட்டியது. அன்று உடலும், மனசும் சரியில்லை. இரண்டு எக்ஸ்றா குரோசினை முழுங்கிவிட்டு, கலந்துக் கொண்டேன்.
ஜெயந்தி இவரை பற்றி ஓரே அறிமுகம்- இவுங்க எழுதுகிற கதை, ஏறக்குறைய எல்லாமே பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும். ஒரு தடவ வாழ்த்து சொன்னா, நன்றி சொல்லிட்டு அடுத்த பரிசு பற்றி சொல்லி என்னை பெரூச்சுவிட செய்பவர்.
அருள்குமன். செல்பேசியில் சிறுகதை எழுதி, படிச்சி பாருங்க என்று என்னை அலற வைத்தார்.
குழலி- அசின் புகழ் என்று சொல்ல வேண்டும். பார்க்க சின்ன பையன், ஆனா எழுத்தில் தெரியும் வேகம், சின்ன பையனின் உருவத்தில் பார்த்ததும் ஆச்சரியப்பட வைத்தது.
சித்ரா- ஆட்டோகிராப் புகழ் ( திண்ணையில் படித்த ஞாபகம் இருக்கா?) கடைசியாய் சில நிமிடங்கள் ஆனந்தபவன் உணவகத்தில் பேசினேன்.
நேரம் ஆக, ஆக தலைவலி மண்டையை பிளந்ததால், என்னால் சரியாய் பேச முடியவில்லை.
கடைசியாய் எல்லாருக்கு இளைய மாணவர் சாந்தன் . இவர் இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை. குடும்பசூழ்நிலை. அப்போதுதான் கொழும்பு போய் வந்ததால்,அவர் ஊர், குடும்பம் என்று விசாரித்ததில், சாந்தன் எழுத ஆரம்பித்தால் கட்டாயம் அவர் எழுத்து பலரையும் கவரும். பேச்சில் வெகு நிதானம், முகத்தில் பெயருக்கு ஏற்ற சாந்தம், சொல்லும் சொல்லில் தெளிவு என்று அவரின் வாசிப்பிலும், வாழ்க்கை அனுபவத்திலும் பன்முக பார்வை தெரிந்தது.
சில குட்டி செய்திகள்- அருள் சிரிக்காமல் ஜோக் அடிப்பதில் வல்லவர். பிறகுதான் தெரிந்தது உருப்பாடாதது நாராயணின் நண்பர் என்று! அவர் அடித்த விட்டில் ஜெயந்தி- ஒரு விசேஷ் சிரிப்பு. விழுந்து, விழுந்து சிரித்து உட்கார்ந்திருந்த இடத்தின் பின்னால் இருந்த தூணில் இரண்டு முறை நன்றாக இடித்துக் கொண்டார். அப்புறம் அருள் வாயை திறந்தால், நான் என் கையை ஜெயந்தியின் தலைக்கு பின்னால் வைத்துக் கொண்டேன்.
படித்த புத்தகங்கள், எழுத்து மற்றும் இணைய வம்புகளை பகிர்ந்துக் கொண்டோம்.
அடுத்து மானசாஜென் ( ஸ்பெல்லிங் கரைட்டா?) அவர்களும் குழலியின் செல்பேசி மூலம் தொடர்ப்பு கொண்டார். ரமேஷ் என்னும் மானசாஜென் மற்றும் ரம்யா நாகேந்திரனையும், என் மனம் கவர்ந்த எழுத்தாளர் திருமதி. சித்ராவுடனும் இலக்கிய அனுபவங்களப் பற்றி பேசமுடியவில்லை என்று குறையாய் இருக்கிறது.
நான், என் கணவர், என் மகன் மற்றும் என் மாமியார், மாமனாருடன் சென்றிருந்தோம். முதல் நாள் எல்லாம் சரியாய் இருந்தது. மலேசியாவில் ஜெண்டிங் என்று இடத்திற்கு போகும்பொழுது, சடன் பிரேக் போட்டதில் என் மாமியார் வேகமாய் டாஷ் போர்ட்டின் மேல் விழுந்து, முகத்தில் நல்ல அடி. சர்க்கரை, ஹை பி.பி போன்றவை இருப்பதால், உள்ளூர் கோலாலம்பூர் மருத்துவர் வெறும் பெயின் கில்லரை கொடுத்தனுப்பி விட்டார். அதனால் மற்ற இடங்களில் எல்லாம் வீல் சேரில் வந்தார். ஆகையால் உல்லாசபயணத்தின் சந்தோஷம் காணாமல் போய்விட்டது.
அவரை நடத்தி செல்ல, மெதுவாய் நடந்து, கழிவறைக்கு அழைத்து செல்லுதல் இதில் என் உடம்பு கழண்டு விட்டது. கிளம்புவதற்கு முதல்நாளே ஜூரம் ஆரம்பித்துவிட்டது.
அத்தைக்கு பெரிய காயம் ஒன்றுமில்லை. முதலிலேயே பற்கள் ஆடிக் கொண்டிருந்ததால், நாலு பற்களை எடுத்து விட்டு, பொய் பல் கட்டப்பட்டுள்ளதாம். சில் மூக்கு உடைந்ததில் ரத்த பெருக்கு, மற்றப்படி அனைத்தும் வெளிகாயம் ஆறிவிட்டது என்றார்.
மூர்த்தி, குமார், ரம்யா, அன்பு என்று பெயர்கள் ஞாபகம் இருந்தும் சூழ்நிலை இடம் கொடுக்காததால் தொலைப்பேசியில் கூட பேச முடியவில்லை.
பி.கு போட்டோ ஏன் போடலை என்று கேட்காதீங்க. போஸ் கொடுத்தவங்க சரின்னாதான் போட முடியும் :-))

9 பின்னூட்டங்கள்:

At Saturday, 08 October, 2005, சொல்வது...

ம்... கடைசியா எழுதிட்டிங்க நம்ம மாநாட்டை பற்றி, விஜயகாந்த் பொறாமையில் இருக்கின்றாராம் நம்ம மாநாட்டை விட பெரியதாக அவரால் நடத்த முடியாமல் போனதால்.

ஹி ஹி ரொம்ப தேங்க்ஸ் என்னை சின்ன பையன்னு சொன்னதற்கு.

நன்றி

 
At Saturday, 08 October, 2005, சொல்வது...

உஷா, உங்களை பார்க்க முடியாம போனது எனக்கும் வருத்தம் தான். இன்னோரு தடவை வாங்க.

குழலி..இது உங்க அண்ணன் போட்டோவா? :-)

 
At Wednesday, 12 October, 2005, சொல்வது...

அன்பின் உஷா,

தாங்கள் இங்கு வந்த சமயம் நான் இந்தியாவில் இருந்தேன். காணக் கொடுத்து வைக்கவில்லை. அடுத்தமுறை கட்டாயம் சந்திப்போம்.

நன்றி.

 
At Wednesday, 12 October, 2005, சொல்வது...

நானும் அந்நேரம் வெளியூர் சென்றிருந்தேன்..அடுத்த முறை சந்திப்போம்

 
At Wednesday, 12 October, 2005, சொல்வது...

அன்பு(இல்லாத)உஷா அவர்களூக்கு,

///மூர்த்தி, குமார், ரம்யா, அன்பு என்று பெயர்கள் ஞாபகம் இருந்தும் சூழ்நிலை இடம் கொடுக்காததால் தொலை"ப்"பேசியில் கூட பேச முடியவில்லை.////

தொலைபேசியில் இருமுறை பேசினோமே, மறந்துவிட்டீர்களா? என்னமோ போங்க!

சோதனை மேல் சோதனை! போதும் அய்யா சாமி!

எம்.கே.

 
At Wednesday, 12 October, 2005, சொல்வது...

மூர்த்தி, ஜோ அடுத்த முறை வரும் பொழுது கட்டாயம் சந்திக்கலாம். புதுமாப்பிள்ளை சார், வாழ்க்கை எப்படி போகுது? வாழ்த்துக்கள்!
குமாரு, மறுநாள் போன் செய்கிறேன் என்று சொன்னேனே, செய்யலையே? அது மனதில் உறுத்தலாய் இருந்தது. அதனால் அப்படி எழுதிவிட்டேன்.
என்ன குழலி புகைப்படம் போட்டுடட்டா :-)))))
ரம்யா, உங்களுக்கு ஒரு தனிமடல் வருகிறது.

 
At Wednesday, 12 October, 2005, சொல்வது...

//புதுமாப்பிள்ளை சார், வாழ்க்கை எப்படி போகுது?//

இப்போதுதானே புதுமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இனியெல்லாம் சுகமே.

//வாழ்த்துக்கள்!//

வாழ்த்துக்கு நன்றி உஷா அவர்களே.

 
At Sunday, 23 October, 2005, சொல்வது...

சாந்தன், விரைவில் புகைப்படம் அனுப்பி வைக்கிறேன். வேற யாருக்காவது வேண்டுமா? கையைத் தூக்கவும், போஸ் கொடுத்த
பார்ட்டிங்க சைலண்டாய் இருப்பதால் இங்கு பொதுவில் போடவில்லை :-))

 
At Monday, 08 October, 2007, சொல்வது...

அதான பார்த்தேன்... 2005 விசிட்டா?
பல இக்காலத்து நிகழ்வுகளில் எதிரும் புதிருமா இருக்கே என்று.
2005 யில் குழலி சின்ன பையனா? :-))

 

Post a Comment

<< இல்லம்