Tuesday, October 11, 2005

என் புகைப்பட தொகுப்பில் இருந்து-2( பால்கனிக்கு வெளியே)


கொஞ்சம் புகைப்படம் எடுப்பதில் ஆரவமுண்டு. ஒரு முறை போட்டோ ஸ்டூடியோவில், படங்களைப் பார்த்துவிட்டு, நல்லா எடுத்திருக்கீங்க என்று அங்கு பணிப்புரிபவர் சொன்னதன் விளைவு, காமிரா கையுமாய் அலைய ஆரம்பித்துள்ளேன். இங்கு இடப் போடுபவை அனைத்தும் என் சொந்த தொகுப்பில் இருந்து போடப்படுபவை.
ஐக்கிய அரபு குடியரசில் வானம் என்பொழுதும் வெளுத்துக் காணப்படும். மழை மட்டுமல்ல மேகம் சூழ்ந்த வானமே அதிசயம்.
அப்படி ஒரு நாள், இயற்கை வரைந்த அற்புதம்.

10 பின்னூட்டங்கள்:

At Tuesday, 11 October, 2005, Blogger ஏஜண்ட் NJ சொல்வது...

ஆஹா... அற்புதம்; அப்டியே மணிரத்னம் படம் பார்க்குற எஃபக்ட் கெடக்கிதுங்க! :-)


//போட்டோ ஸ்டூடியோவில், படங்களைப் பார்த்துவிட்டு, நல்லா எடுத்திருக்கீங்க என்று அங்கு பணிப்புரிபவர் சொன்னதன் விளைவு...//

அப்படிச் சொன்னால்தான் நாம் படம் நெறய சுட்டுத் தள்ளி பிரிண்ட் போடச் சென்று அவர்கள் தொழில் தழைக்கச் செய்வோம் என்பது அவர்களின் தொழில் ரகசிய-தர்மம்!

 
At Tuesday, 11 October, 2005, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

ஞானபீடம், பாலுமகேந்திரா எபெக்ட்ன்னு சொன்னா குறைந்தா போய்விடுவீங்க :-(
இது டிஜீடல் காமிரா. அதனால பிரிண்ட் போடுகிற வேலை இல்லை. அப்படியே கம்ப்யூட்டல்ல சேவ் செய்ய வேண்டியதுதான். ஆனா ஒன்றிரண்டு மாமியார் பிரிண்டு கேட்டதால், அதை பிரிண்ட் போட போயி, இந்த கமெண்ட்.

 
At Wednesday, 12 October, 2005, Blogger தாணு சொல்வது...

உஷா,
நிஜமாவே நிங்க எடுத்த ஸ்டில்லுன்னா சூப்பர்தான், போட்டோ ஷாப்பில் எடிட் பாண்ணாத பட்சத்தில்!!!

எழுதறதை மறந்துட்டு நிழல் தேடி ஓட ஆரம்பிச்சுட்டீங்களே.

 
At Wednesday, 12 October, 2005, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

தாணு, அதெல்லாம் ஒண்ணுமில்லை. எடுத்ததை அப்படியே போட்டிருக்கிறேன். இது ரொம்ப நாள் ஹாபி.
ஈனோமீனோ, டி.ராஜ், நாங்கள் இருப்பது பாலைவனம். வானம் எப்பொழுதும் கண்ணை கூசும் நீல நிறத்தில்தான் இருக்கும். அதனால் என்னவோ இந்த படம் எனக்கு அபூர்வமாய் தோணும். வீட்டுக்கு எதிரில் மலை தொடர். எப்படி இருக்கும் தெரியுமா? வெறும் சாம்பல் நிறத்தில் பச்சை என்பதே மருந்துக்கு இருக்காது. அதே இடத்தை படம் எடுத்து விரைவில் போடுகிறேன்.

 
At Wednesday, 12 October, 2005, Blogger b சொல்வது...

படம் நல்ல அழகு.

 
At Wednesday, 12 October, 2005, Blogger ரவியா சொல்வது...

//மழை மட்டுமல்ல மேகம் சூழ்ந்த வானமே அதிசயம்.
//
அக்கரைக்கு இக்கரை...

 
At Wednesday, 12 October, 2005, Blogger Dubukku சொல்வது...

Nalla irukungga...
kalakunga

 
At Wednesday, 12 October, 2005, Blogger Gnaniyar @ நிலவு நண்பன் சொல்வது...

துபாய்ல மழைதான் வரல்ல ..ம்ம் வேற என்ன செய்ய
இதைப்பார்த்தாவது ஆறுதல் அடைய வேண்டியதுதான்

இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

 
At Thursday, 13 October, 2005, Blogger பினாத்தல் சுரேஷ் சொல்வது...

உஷா, கொஞ்சம் இங்கே பாருங்க!

 
At Friday, 14 October, 2005, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

டுப்புக்கு, ரவியா மூர்த்தி நன்றீ. ஞானீயார் மற்றும் சுரேஷ் மேகமே அதிசயம் என்னும் பொழுது, மழையை நினைத்து பெரூமூச்சு விட வேண்டியதுதான்.

 

Post a Comment

<< இல்லம்