ஏதோ சொல்ல வந்தேன்!
வெற்றிகரமான நூறாவது நாளை நோக்கிப் போய் கொண்டிருக்கிறது. அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. வீரம், சண்டை, கண்ணீர், கவர்ச்சி, ஆபாசம், நகைச்சுவை என்று நவரசமும் இணைந்த காவியமல்லவா? ஆயிரம் விளக்கு அம்சவேணியில் இருந்து பெரியார் சீடர் ஞாநீ வரை கருத்து கூறிய குஷ்பூ மேட்டரை தாங்க சொல்லுகிறேன். போதாதற்கு என் வலைப்பதிவுக்கு வந்த ரெண்டு பேரூ வேற, நீங்க என்ன நெனைக்கிறீங்க? உங்க கருத்த சொல்லுங்கன்னு கேட்டு விட்டார்களா? பிறகு பேசாமல் இருக்க முடியுமா?
இதே பிரச்சனைதாங்க குஷ்பூவுக்கும்! ரிடையர் ஆன நம்பளையும் மதித்து கேட்கிறார்களே என்று கொஞ்சம் புரட்சிகரமாய் கருத்து சொல்லிட்டாங்க. இதே இருபது வருஷம் முன்னாடி என்றால் நம்ம நடிகைகளும் கற்பின் மேன்மையை வலியுறுத்து கருத்து மழை பொழிஞ்சியிருப்பாங்க.
ஆனால் ஒண்ணுங்க, பெண்கள் சமுதாயத்தை வழி நடத்தி, அவர்களை கண்ணின் இமை போல காப்பாற்றும் ஆண்களின் கரிசனம் இவங்க சொன்னதுல நல்லா தெளிவா விளங்கிடுச்சுங்க. ஆனா ஒண்ணு மட்டும் புரியலைங்க, அது அவங்க கருத்து, அவங்க நிலையில இருக்கிறவங்க வாழும் வாழ்க்கையை சொன்னாங்க. நிலைன்னா நடிகை என்று சொல்லவில்லை, ஸ்டேடஸ்னு சொல்லுவாங்களே அதை சொன்னேன். பாவம் அதுக்காக நாடு கடத்த வேண்டும் என்று சொல்வது எல்லாம் டூ மச்!
சமுதாயத்துல வாழுகிறவங்க மூணு வகை. பணக்கார வர்க்கம், மத்திய வர்க்கம், கடைசில ஏழை பாழைங்க. பணக்காரங்களுக்கு சமுதாய சட்டதிட்டங்கள் தேவையில்லை. ஏழைங்களுக்கு அது தெரியாது. ஆக அத்தனை விதிகளும் மத்தியவர்க்கத்துக்குதான். இன்னைக்கு குரல் கொடுக்கிற பல குரலுக்கு சொந்தமானவங்க மத்திய வர்க்கமே. ஆனால் இதில் குஷ்பூ சொன்ன ஒரு கருத்து சரியில்லை. கற்பு என்ற சொல்லை தவிர்த்து, தனிமனித ஒழுக்கம் என்ற வார்த்தையை உபயோகிக்கலாமே!. இதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஓரே நீதி.
பொண்ணுக்கு பையன் பார்க்கும்பொழுது, பையனுக்கு கேர்ள் பிரண்ட்ஸ் இருக்காங்க, குடிக்கும் பழக்கம் இருக்கு என்று வெளிப்படையாய் சொன்னால், யாருங்க பொண்ணு தருவாங்க? இன்றைய காலக்கட்டத்தில் பெண்களும் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டார்கள். பெறுவது ஒன்று இல்லை என்றால் ஆண் பிள்ளைக்கு முயற்சித்து இன்னொரு பெண்! ஆகையால் பெண் வீட்டார்களும் பெண்ணை தள்ளிவிடுவது என்றெல்லாம் இன்று நடை முறையில் இல்லை. இது அனைத்து சாதிக்கும் பொறுந்தும். அதே போல சிற்றூர்களிலும் பெண்கள் தொழில் படிப்பு பிறகு வேலை என்று ஹவுஸ் ஓய்ப் என்ற கான்செப்டே ஒழிந்து வருகிறது.
நகரங்களில் 40% மனைவிகள் ஒழுக்கமாய் இல்லை, பெண்கள் கிளப்பு பாருக்கு போய் தண்ணி அடிக்கிறார்கள் என்பது எல்லாம் கருப்பு பணம் வைத்துக் கொண்டு பணத்தை செலவழித்தே ஆக வேண்டும் என்று இருக்கும் பணக்காரவர்க்கத்தின் வாழ்க்கை முறை.
இன்று இந்த மேட்டரை எழுதிய அனைவரும், என் கண்ணோட்டத்தில் மத்தியவர்க்கம் என்று நினைக்கிறேன். துபாயிலோ, அமெரிக்காவுக்கோ சென்று கோடிகள் சம்பாதித்தாலும் எண்ணி எண்ணித்தான் செலவழிக்கும் மத்தியவர்க்கம்தான் நாம்.
நமக்கு இன்னும் குடும்பம் என்ற அமைப்பு இருக்கிறது. அது குலையாமல் இருக்க வேண்டும் என்றால் பரஸ்பர நம்பிக்கை வேண்டும்.
காலம் மாறிக் கொண்டு இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆண்களும், பெண்களும் சேர்ந்து பழகும் நிலை இப்பொழுது.
கண்டதும் காதல் என்பதெல்லாம் இல்லாமல், இந்த கால பையன்களும் பெண்களும் மிக தெளிவாய் இருக்கிறார்கள். நிதானமாய் பலதும் யோசித்து காதலித்து கல்யாணமும் செய்துக் கொள்கிறார்கள். சாதி, சமயம் பார்க்காமல் நிறைய திருமணங்கள் நடக்கின்றன.
நட்பு என்று பழகும் விதத்தில் லிமிட் எது என்பதிலும் மிக தெளிவாய் இருக்கிறார்கள். காதலிக்க தெரியாதவர்கள் சமர்த்தாய்
பெற்றோர் சொல்லும் பையன்/ பெண்ணுடன் வாழ்வில் இணைகிறார்கள்.
ஒழுக்கம் என்பதில் பெண்கள் உறுதியாய்தான் இருக்கிறார்கள். காரணம் நமக்கு எதிர்காலம் என்பது நம் பிள்ளைகள்.
பெயர் கெட்டுப் போனால் குழந்தைகள் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும் என்ற பயம்.
இன்னும் ஐம்பது நூறு ஆண்டுகள் போனால் திருமணம் என்பதெல்லாம் இல்லாமல் இங்கும் சேர்ந்து வாழும் நிலை வரும். அதிலும் பல பிரச்சனைகள் பெண்களுக்கு வரும். இங்கு பிலிப்பினோ பெண் ஒருத்தி பதினாறு வயதில் பிள்ளை பெற்று, குழந்தையை தாயிடம் விட்டு விட்டு இங்கு சாதாரண வேலையில் இருக்கிறாள். பிலிப்பைன் நாட்டில் இக்கதைகள் அதிகம் என்றாள். மேற்கத்திய நாடுகள் போல, சேர்ந்து வாழ்ந்தப்பொழுது பிறக்கும் குழந்தைகளுக்கான உரிமைகளை காக்க தேவையான சட்டங்கள் வேண்டும்.
கற்பாவது மானமாவது, பெண்களுக்கு பாலுணர்வு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்ற டயலாக்ஸ், பெண்களை இன்னும் படுகுழியில் தள்ள செய்யும். ஆண் சுலபமாய் இத்தகைய தொடர்ப்புகள் ஏற்படுத்திக் கொண்டு, கல்யாணம் என்று வரும் பொழுது அம்மா பார்த்த பெண்ணுக்கு தாலிகட்டுவார்கள்.
பெண்கள் படிப்புறிவை வளர்த்துக் கொண்டு சுயசம்பாதியத்தில் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் தங்கள் சண்டையில் அடுத்தவனின் முகம் தெரியாத அவன் வீட்டு பெண்களை ஏலம் போடுவதை நிறுத்துங்கள்.
ஊடகங்களில் காட்சிகளிலும், எழுத்திலும் பெண்களின் மேலான வன்முறையை ஒழித்துக்கட்டப்பட வேண்டும். உங்கள் வீட்டு பெண்களுக்கு தரும் மரியாதையும் அனைத்து பெண்களுக்கும் கொடுங்கள், பிறகு பெரியார் சொன்னதையும், பெண் விடுதலையையும் பற்றி பேசலாம்.
13 பின்னூட்டங்கள்:
யோசிக்க வைத்த நடுநிலைமையானதொரு கட்டுரை.
நீங்கள் இதை சமுதாய அந்தஸ்து என வகைப்படுத்தி அலசி இருந்தாலும், நான் இதை வயது வாரியான அணுகுமுறையாகவும் பார்க்கிறேன்.
இப்போதைய இளைஞர்கள் (இளைஞிகளையும் சேர்த்துத் தான்) தெளிவாகத்தான் இருக்கிறார்கள். நம்முடைய 1000 ஆண்டு பாரம்பரியத்தையும் மரபு என்னும் சுமையையும் அவர்கள் மேல் ஏற்றுவது, நடுத்தர வயது மக்கள்தான். கோடிகளாய் சம்பாதித்தாலும், எண்ணி எண்ணி செலவு செய்வதும் அதே நடுத்தர வயது மக்கள்தான் (ஏழ்மையிலிருந்து படிப்படியாக முன்னுக்கு வந்ததால்). செலவு செய்வதிலும் அடுத்த தலைமுறையின் மனோபாவத்தைக் கவனித்திருக்கிறீர்கள்தானே?
மற்றபடி, பெரும்பாலும் உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.
மூர்த்தி நன்றி!
சுரேஷ், சவுண்டு விட்ட பார்ட்டிகள் யாருமே இளைஞர்கள், இளைஞிகள் இல்லையே :-)செலவழிக்கும் மனோபாவம் அவரவர் சொந்த சம்பாத்தியம் என்றால் கண்ணோட்டம் மாறும். அதே நடுத்தர வர்க்கமான நாங்கள்.- என் மாமியார், மாமனார் உட்பட சிங்கை, மலேஷியா போனது என் மாமியார் மாமனார் கண்ணோட்டத்தில் வேஸ்டு. செலவழிக்கும் மனோபாவத்தில் மாற்றம் வந்துள்ளதே தவிர, கிளப்பு, குடிப்பது (பெண்கள்), கீ செயின் ஆபாசம் எல்லாம் கருப்பு பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று திண்டாடுபவர்களின் வாழ்க்கை முறை.
வண்டூ சோதனை முடிந்ததா?
//இன்றைய சமுதாயத்தில் பெரும் பணக்காரர்களும், மிக ஏழைகளும் குறைந்த விழுக்காட்டிலேயே உள்ளனர், மத்தியதர வர்க்கத்தினர் தான் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர், இதிலும் உயர் மத்திய (Upper Middle class), மத்திய மத்திய, கடை மத்திய(Lower Middle class) என்று மூன்று நிலைகள் உள்ளன, இன்றைய சமுதாயத்தில் இந்த மத்திய வர்க்கத்தினர் தான் சமுதாயக் கலாச்சாரத்தின் குறியீடாக உள்ளனர் அல்லது இவர்கள் தான் கலாச்சாரத்தின் குறியீடாக கருதப்படுகின்றனர்,
//
இப்படி எழுத ஆரம்பித்து ஒரு கட்டுரை பாதியில் நிற்கின்றது அதற்குள் பேச வந்த பல விடயங்களை நீங்கள் இதில் பேசி விட்டீர், மீதியும் எழுதி போட்டாலும் உங்க கட்டுரையை CTL+C, CTL+V செய்த மாதிரி இருக்கும், ம்... வேறு மாதிரி எழுத முயற்சிக்கின்றேன்.
நன்றி
I'm also one of the reader,expected ur voice on Kushboo issue. You tried to highlight one important point but failed to elaborate it. Let me to try!
உஷா ஒரு தடவை வாய்ஸ் கொடுத்து வாங்கி கட்டிகிட்டேன். ஆனாலும் உங்க கருத்தில் எனக்கு சில ஐயப்பாடுகள் உள்ளன.
//செலவழித்தே ஆக வேண்டும் என்று இருக்கும் பணக்காரவர்க்கத்தின் வாழ்க்கை முறை.//
இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும். ஆனால் இன்றைய நிலைமை வேறு. ஒரு software engineer, stress relief என்ற பெயரில் தான் இதனைப் பார்க்கிறானே தவிர இதில் நீங்கள் சொல்வது போல் பணக்காரன், ஏழை, நடுத்தரம் என்ற வர்க்க முறை இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பீர் குடித்தே ஆக வேண்டும், ஒவ்வொரு சனிக்கிழமையும் ஹாட் அடித்தே ஆக வேண்டும் என்பது இந்த IT professionals மத்தியில் பெருகி வருகிறது. நீங்கள் சொல்வது போல் பார்த்தால் இதில் ஒரு 40% பாதிக்கப்படுவது நடுத்தர IT professionalஸ் தான்.
இது பணம் செய்யும் வேலை தான். தேவைக்கு அதிகமான பணம் செய்யும் வேலை.
ÌÆÄ¢, «È¢Å¡Ç¢¸û¾¡§É µ§Ã Á¡¾¢Ã¢ º¢ó¾¢ôÀ¡÷¸û????????
áõ¸¢, ±ýÉ ¦¾Ã¢Ô§Á¡ «¨¾¾¡§É ±Ø¾ ÓÊÔõ? º£ì¸¢Ãõ ±ØÐí¸!
§¸¡.¸§½‰ ±ôÀÊ Å¡í¸¢ì ¸ðÊ츢ðËí¸? »¡À¸§Á¢ø¨Ä§Â? þ¨Å ±øÄ¡õ ¦ÅÚõ ¸ÕòÐì¸û. þ¾¢ø ¿¡ý ¦º¡øÅÐ
ÁðΧÁ ºÃ¢ ±ýÚ ¿¢¨ÉôÀÐ ÅÊì¸ðÊ Óð¼¡û¾Éõ. ¸¼ó¾ À¾¢¦ÉðÎ ÅÕ¼Á¡ö ÀÄ °÷, ¿¡Î ±ýÚ §À¡É¾¢ø À¡÷ò¾
«ÛÀÅõ. Áò¾¢ÂÅ÷ì¸ ¬ñ¸Ç¢ø 90% §À÷¸ÙìÌ ÌÊìÌõ ÀÆì¸õ þÕ츢ÈÐ.. ( ±í¸ çðθ¡ÃÕìÌ ±ó¾ ¦¸ð¼ ÀÆì¸Óõ
þø¨Ä. «¾É¡ø ¿ðÒ Åð¼Óõ ̨È×) . §º¡„¢Âø Š§¼¼Š ±ý§È¡ , ÁÉ ¯Çîº¨Ä ¾£÷òÐì ¦¸¡ûÇ ±ý§È¡ º¡øº¡ôÒ
¦º¡øÄôÀθ¢ÈÐ. ¬É¡ø þíÌ ¿¡Ûõ, ̉â×õ ¦º¡øÄ ÅÕÅÐ ¦Àñ¸¨Ç ÌÈ¢òо¡§É? ¿¡ý À¡÷ò¾Å¨Ã¢ø ¸¢È¢ŠÐÅ
«¾¢Öõ §¸¡Å¡¨Å §º÷ó¾ ¦Àñ¸Ùõ, ¬í¸¢§Ä¡ þó¾¢Â ¦Àñ¸Ùõ ¨¸Â¢ø §¸¡ô¨À ²ó¾¢ô À¡÷ò¾¢Õ츢§Èý. ¬ñ¸û
ÌÊôÀÐ ¦¾Ã¢ó¾¡Öõ þýÛõ Áò¾¢ÂÁ÷¸Ç¢ø «¨¾ ¦ÀÕ¨Á¡ö ¦º¡øÄ ÓÊÔÁ¡?
(மேடம்... Alt+3 நஹி... Alt+2 :)
குழலி, அறிவாளிகள்தானே ஓரே மாதிரி சிந்திப்பார்கள்????????
ராம்கி, என்ன தெரியுமோ அதைதானே எழுத முடியும்? சீக்கிரம் எழுதுங்க!
கோ.கணேஷ் எப்படி வாங்கிக் கட்டிக்கிட்டீங்க? ஞாபகமேயில்லையே? இவை எல்லாம் வெறும் கருத்துக்கள். இதில் நான் சொல்வது
மட்டுமே சரி என்று நினைப்பது வடிக்கட்டிய முட்டாள்தனம். கடந்த பதினெட்டு வருடமாய் பல ஊர், நாடு என்று போனதில் பார்த்த
அனுபவம். மத்தியவர்க்க ஆண்களில் 90% பேர்களுக்கு குடிக்கும் பழக்கம் இருக்கிறது.. ( எங்க வூட்டுகாரருக்கு எந்த கெட்ட பழக்கமும்
இல்லை. அதனால் நட்பு வட்டமும் குறைவு) . சோஷியல் ஸ்டேடஸ் என்றோ , மன உளச்சலை தீர்த்துக் கொள்ள என்றோ சால்சாப்பு
சொல்லப்படுகிறது. ஆனால் இங்கு நானும், குஷ்பூவும் சொல்ல வருவது பெண்களை குறித்துதானே? நான் பார்த்தவரையில் கிறிஸ்துவ
அதிலும் கோவாவை சேர்ந்த பெண்களும், ஆங்கிலோ இந்திய பெண்களும் கையில் கோப்பை ஏந்திப் பார்த்திருக்கிறேன். ஆண்கள்
குடிப்பது தெரிந்தாலும் இன்னும் மத்தியமர்களில் அதை பெருமையாய் சொல்ல முடியுமா?
நகரங்களில் 40% மனைவிகள் ஒழுக்கமாய் இல்லை, பெண்கள் கிளப்பு பாருக்கு போய் தண்ணி அடிக்கிறார்கள் என்பது எல்லாம் கருப்பு பணம் வைத்துக் கொண்டு பணத்தை செலவழித்தே ஆக வேண்டும் என்று இருக்கும் பணக்காரவர்க்கத்தின் வாழ்க்கை முறை.
kalachara varkam pirithadhu saridhaan. nan partha sila panakara vargathu kudumbangalil katupadu adhigam. kaalayil kalloriyil kondu vittu, driver angeye wait panni meendum maalai veetuku azaithu sellvar. saadhi vidhyasamal illamal idhai parthadhundu.
andha kalathilum panakararkaluku dhan adhiga katupadu. kovalargal adhigamaga irupadhum panakara varkathil dhan. enaku shoping seyya kasu iruka, nee engeyo po endru avargal manaivigal kandukolla matargal. kannagi indha varkkam dhan.
keezh vargathil marumanangal undu. pengal aangalaye nambi kalam thalla vendiyathillai. avargalum oreyadiyaga katuupadu illamal
irukkavillai endre ninaikiren.
நடுநிலையான பதிவு, சிறப்பான அலசல்,
பதிவிற்கு நன்றி
//You tried to highlight one important point but failed to elaborate it.//
அதே !
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி! பின்னூட்டம் இடாமல் படித்து விட்டுப் போனவர்களுக்கும் நன்றீ (அதுதான் மீட்டர் போட்டுட்டோமிலே!)
ரொம்ப நாளைக்கப்புறம் இப்பத்தான் ஃபுல் பார்ம்முக்கு வந்திருக்கீங்க...
நல்லா வந்திருக்கு.....
Post a Comment
<< இல்லம்