Sunday, February 26, 2017

ஓடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் -6
அடுத்த நாள் இரவு நல்ல தூக்கம் என்றாலும் இந்த மைக்ரேன் , சைனஸ் வலி வந்து விட்ட மறுநாள் உடம்பு மிக டல் ஆயிடும்.
தலைவலி தேவலை என்றாலும் முகம் வெளுத்து இருந்தது.
காலையுணவாய் நாலு பிரட் டோஸ்ட் , ஒரு ஐம்பது கிராம் அளவில் வெண்ணெய். கால் கிளாஸ் சூடாய் காபி. மதியம் வரை எதுவும் சாப்பிடவில்லை. வலியும் இல்லை.
இன்று முழுக்க பார்த்தது புத்த சமய இடங்களான
லலிதகிரி, ரத்னகிரி, உதய கிரி.
காலசக்கரத்தில் பின்னே பயணித்ததுப் போல ஒரு அனுபவம். புத்தன் என்றுமே என் மனம் கவர்ந்தவன். யுக புருஷன்.
லலித கிரி - ரெண்டு மணி நேரம் பஸ்ஸில் போன நினைவு. அடுத்த முறை,ஆசானைப் போல் லேப் டாப் எடுத்துப் போய் அன்றன்றே அனுபவங்களை தட்டிப் போட்டு விட வேண்டும் :-)
ஆனால் படுக்கையில் படுத்தால் அஞ்சு நிமிஷத்தில் தூக்கம் அத்தனை அலச்சல், நடை.
அங்கேயே ஒரு சின்ன மியூசியம் இருந்தது. கொஞ்சம் சிலைகள் இருந்தன.
சுவாமிநாதன் சார், அங்கிருந்த மரங்களை பற்றி நிறைய சொன்னார்.
பாலை மரம் என்று ஒரு மரத்தைக் காட்டினார். அந்த மரங்கள் அதிகம் இருந்ததால் ஒரு ஊருக்கே
பெயர் வைத்துவிட்டார்கள் பாலக்காடு என்று ;-)
வெளியே வந்தால் நாலைந்து செல்லங்கள் ஓடி வந்து சூழ்ந்துக்கொண்டன.
மதியம் அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் சாப்பாடு.
சப்பாத்தி, பொரியல், சால்ட். சூப் குடித்தேனே என்று நினைவில்லை.
தலைவலி முற்றிலும் நின்று விட்டது.
ஹோட்டலில் வாஷ் ரூம் எங்கே என்றுக் கேட்டால் இருட்டான அறை ஒன்றை காட்டினான் ஒரு ஆள்.
பாத்ரூம் ஸ்விட்சும் இல்லை.
ஹேண்ட் பேக்கை கூட வந்தவரிடம் தந்து விட்டுப் போய் விட்டு வந்தால், அவர் அங்க பாருங்க என்றார்.
பெரிய ஜன்னல், அந்த பக்கம் வரிசையாய் ஆண்களுக்கான யூரினல்கள். நல்லவேளையாய் யாருமில்லை :-)
அந்த ஆளை வாய்யான்னு அழைத்து, ஏ கியா ஹே பையா'' என்று கோவமாகவே கேட்டேன்.
விருவிருன்னு போய் கர்டனை இழுத்துவிட்டு வந்தது.
கழிவறை சுவரில் பெரிய ஜன்னல் வைப்பார்களா? அவ்வளவு பெரிய ஹோட்டலை டிசைன் செய்த மகானுபவனைப் பார்த்து தலையில் அடிச்சிக்கொள்ளணூம் என்று ஆவலாய் இருந்தது.
அடுத்து ரத்னகிரி உதயகிரி போனோம்.
ரத்னகிரி பிரமண்டமான திறந்த அரங்கு . வாசல், ஒரு பக்கமும் அழகான சிலைகள், எதிரில் பிரமாண்ட புத்தர்.
சுவாமிநாதன் சார், இங்கேயே ஒரு நாள் முழுக்க இருந்தால் எப்படி இருக்கும் என்றார்.
பெளர்ணமி இரவு முழுக்க இங்கே இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றேன்.
அப்படியே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
படங்களும் உதயகிரியும் தொடர்கின்ற

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்