ஓடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் -3
நல்ல தூக்கம். காலையுணவுக்கு போனால் அனைவரும் சந்தோஷமாய் இட்லி , உப்புமா சாம்பார் சட்னி சூப்பர் என்றார்கள்.
தட்டில் விழுந்தவைகளை பயத்துடன் பார்த்தேன். இவைகளை காலையுணவாய் சாப்பிட்டு கனகாலம் ஆச்சேன்னு வயிறு அலறியது.
கஷ்டப்பட்டு ஒரு இட்லியையும் கொஞ்சமாய் உப்புமாவையும் உள்ளே தள்ளினேன்.
கால் டம்ளர் சக்கரை போட்ட காபி :-(
கஷ்டப்பட்டு ஒரு இட்லியையும் கொஞ்சமாய் உப்புமாவையும் உள்ளே தள்ளினேன்.
கால் டம்ளர் சக்கரை போட்ட காபி :-(
பேருந்து கிளம்பியது பசி தாங்காமல் கொடுக்கப்பட்ட முறுக்கு சீடை ஸ்வீட்டுன்னு அதையும் உள்ளே தள்ளினேன்.
சரியாய் பன்னிரெண்டு மணிவாக்கில் தலைவலிக்க ஆரம்பித்தது. கழுத்து முகம் என்று சைனஸ் தலைவலி. இந்த தலைவலி ஏறக்குறைய வாழ்வில் இருந்து விடை பெற்றுப் போனதால் மாத்திரைகளும் கொண்டு வரவில்லை.
ஒரு பெயின் கில்லர் போட்டுக்கிட்டேன், ரெண்டு மணி நேரத்தில் மீண்டும் வலி பிடுங்க ஆரம்பித்தது. வாந்தி வருவது போல பிரட்டல். மதியம் என்ன சாப்பிட்டேன் என்பதே நினைவில்லை.
வந்த நாளே யாரை என்ன கேட்பது, அப்படியே புவனேஸ்வரில் பிளேன் பிடிச்சி சென்னைக்கு ஓடிடலாமான்னு கூட யோசிக்க ஆரம்பித்தேன்.
கொஞ்சம் மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, சாப்பாட்டை எப்படி சரி செய்யலாம்ன்னு யோசித்தேன்.
மறு நாளில் இருந்து, நாலு பீஸ் பிரெட் ரோஸ்ட் வித் 50 கிராம் வெண்ணெய் , ஜாம் இல்லாமல். முடிந்தவரையில் பஸ்ஸில் தரப்பட்டவைகளை தவிர்த்தேன். நன்றாக பசி தாங்கியது.
மதியம் எல்லாருக்கும் 100 மில்லி சூப் என்றால் நான் ரெண்டு பெரிய கிளாஸ் சூப்- 400 மில்லி ;-) கடையியாய் வந்தவர்களுக்கு சூப் இல்லை என்றிருந்தால் காரணம் நான் தான் :-)
ஒரு சப்பாத்தியுடன் வெந்த பொரியல், பொரியலுக்கு சப்பாத்தி தொட்டு சாப்பிட்டேன். எண்ணை மிதக்கும் கிரேவியை தவிர்த்து விட்டேன்.
சில சமயங்களில் கொஞ்சூண்டு தயிர் சாதம், இல்லாவிட்டால் தயிர் அப்படியே சாப்பிட்டு விடுவேன்.
அதே இரவு உணவு. ஐஸ்கிரீம், ஸ்வீட்ஸ் முற்றிலும் ஒதுக்கிவிட்டேன். ஒரு நாள் மட்டும் எல்லாரும் சொன்னதால் ரசகுல்லா சாப்பிட்டேன்.
மாலை பஜ்ஜி போண்டாவும் சாப்பிடவேயில்லைன்னு சொல்ல மாட்டேன், சிலநாள் ரொம்ப கொஞ்சமாய்.
தலைவலி சைனஸ் போயே போயிந்தி. அதுக்கு பிறகு வந்த நாட்களில் என்ன வெய்யில் அலைந்தாலும் எந்த வித வலியும் இல்லை.
மொட்ட வெய்யிலில் எக்கசக்க விட்டமின் டி ஏத்துக்கிட்டு மிக உற்சாகமாய் பயணத்தை தொடர்ந்தேன்.
அன்று பார்த்தவை அடுத்த பதிவில்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment
<< இல்லம்