Saturday, February 04, 2017





ஒடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல்
முன்னுரை- சென்னைக்கு வந்த இந்த அஞ்சு வருஷத்தில் ரஜினிராம்கியுடன் பேசும்பொழுதெல்லாம் தமிழ் ஹெரிடேஜ் குழுவுடன் சென்ற பயண கதையையே பேசி வெறுப்பேத்துவான் :-)
மன்னார்குடி, ஶ்ரீரங்கம், பாதாமின்னு அள்ளிவிட்டு விட்டு, கடைசியாய் அடுத்த ட்ரிப்புக்கு நீங்களும் வாங்க என்று சொன்னாலும், எங்கே :-(
இந்த முறை கட்டாயம் போகிறேன் என்று வீட்டில் அறிவித்துவிட்டேன்.
பெயர் கொடுத்தாச்சு. டிக்கெட்டுக்கு பணமும் கட்டியாச்சு
.
அப்புறம் ஆரம்பிச்சாங்கய்யா, ப்ரீபரேஷன் டாக்ன்னு நாலு மாசம் ஞாயிறு தோறும்.
அவ்வப்பொழுது எட்டிப் பார்த்துட்டு வருவேன்.
ஒரு மாதிரி புரிந்தும் புரியாமலும் கிளாஸ் போய்க்கிட்டு இருந்தது
.
என்னமோ ஜெயமோகன் ஜெயமோகன்னு ஒருநாள் சொல்லிக்கிட்டு இருந்தாங்களா, பிறகு பார்த்தால் அது ஜெக மோகன். அப்படி என்றால் கோவில் முன் மண்டபமாம்.
இப்படி தட்டு தடுமாறி மெல்ல மெல்ல சொல்லப்படுவது புரிப்பட ஆரம்பித்தது
.
மிக சுவாரசியமான உரை என்றால் அது கோபு ரங்கரத்தினம் என்பவரின் பேச்சுதான். 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த பதானி சந்திர சேகர் சிங் என்கின்ற வானியல் ஆராய்ச்சியாளர் பற்றிய அறிமுகம். வெறும் கண்ணாலையே பார்த்து சம்ஸ்கிருதத்தில் பல நூல்கள் எழுதியிருக்கிறார்.இன்னும் பல சுவாரசிய விஷயங்கள் எழுத ஆரம்பித்தால் இப்ப முடியாது.
இது இப்படி போய்க்கிட்டு இருக்க, வீட்டிலும் ப்ரிபேரேஷன் டாக் போய்கிட்டு இருந்தது, எது சொன்னாலும் ஜனவரி கடைசியிலே ஓரிசா போகிறேன்னு ஒரு தடவை சொல்லிடுவேன்.
அந்த நாளும் வந்தது
ஜனவரி 24ம் தேதி ஒரு வார பயணமாய் ஒரிசாவுக்கு கிளம்பியாச்சு.
இங்கிருக்கும் படம் கடைசி நாள் கொனாரக்கில் எடுத்தது

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்