Sunday, February 26, 2017

ஒடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் 9
முந்தின பாகங்களை படித்துவிட்டு வாருங்கள். எனக்கே மறந்துப் போயிடுச்சு ;-)
அன்று மதிய உணவுக்கு பிறகு Khandagiri, Udayagiri க்கு கிளம்பினோம்.
கண்டகிரி மட்டுமே ஜெயின மதத்தை சார்ந்தது. வழக்கம் போல் அழகான சிற்பங்கள். சித்திரம் வரைவதுப் போல, ஒரு சம்பவத்தை அடுத்து அடுத்து சிலையாய் செதுக்கியிருந்தார்கள்.
அங்கிருந்த Kharavel Inscription படிக்கப்பட்டது.
அங்கிருந்து எதிர் புறம் இருந்த கண்டகிரி க்கு சென்றோம். அங்கு எக்க சக்க கூட்டம். எங்கு பார்த்தாலும் குரங்குகள். போகும் வழி எங்கும் வாழைப்பழ தோலிகள்.
நான் பார்க்க பார்க்க கூடை கூடையாய் வாழைப்பழங்கள் மேலே போய் கொண்டு இருந்தன.
அங்கிருக்கும் குரங்குகளுக்கு வாழைப்பழம் கொடுப்பது ஏதோ பிராத்தனைப் போல, ஆள் ஆளுக்கு வாங்கி தந்துக்கொண்டு இருந்தார்கள்.
எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள். நம் நாட்டு சரித்திர மேன்மையை பறைசாற்றும் இடத்தை எவ்வளவு முடியுமா அவ்வளவு நாஸ்தி செய்துக்கொண்டு இருந்தார்கள்.
அத்துடன் அன்றைய பயணம் முடிந்தது.
படங்கள் நன்றி திரு.V.K.Srinivasan

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்