மூக்கறுப்பட்ட சூர்பனைகைகள்
உலக இலக்கியங்களை
சிலாகிப்பர்
நவீன (பின்)கவிதையால்
தமிழன்னைக்கு
சோறிடுவர்!
தரமான தமிழ்படம்
இல்லை என்று மருகுவர்
பெண்ணடிமையை
நினைத்து கண்ணீர்
சொறியும்
சாதி, சமயங்களை
வேரறுப்போம்
என அறைக்கூவுவர்.
விடம் உள் சென்றதும்
உள்ளிருக்கும் சாத்தான்
வெளிக் குதித்து
முகமூடிகளைக் களையும்.
குடிப்போதையில்
அடித்தடி என்கிறது
சண்டேன்னா ரெண்டு!
Labels: சமக்கால இலக்கியம்

