மூக்கறுப்பட்ட சூர்பனைகைகள்
உலக இலக்கியங்களை
சிலாகிப்பர்
நவீன (பின்)கவிதையால்
தமிழன்னைக்கு
சோறிடுவர்!
தரமான தமிழ்படம்
இல்லை என்று மருகுவர்
பெண்ணடிமையை
நினைத்து கண்ணீர்
சொறியும்
சாதி, சமயங்களை
வேரறுப்போம்
என அறைக்கூவுவர்.
விடம் உள் சென்றதும்
உள்ளிருக்கும் சாத்தான்
வெளிக் குதித்து
முகமூடிகளைக் களையும்.
குடிப்போதையில்
அடித்தடி என்கிறது
சண்டேன்னா ரெண்டு!
Labels: சமக்கால இலக்கியம்
6 பின்னூட்டங்கள்:
//
விடம் உள் சென்றதும்
உள்ளிருக்கும் சாத்தான்
வெளி குதித்து
முகமூடிகளை களையும்
//
அருமையான வரிகள்.. கவிதையை விட அதன் லேபிள் அட்டகாசம். :)
சண்டேன்னா ரெண்டு!
good
OMG...Kavithai?! You too?! :)
நன்றி வெண்பூ. எழுத்துக்கு கிடைக்கும் மிகப் பெரிய சன்மானம் எது தெரியுமா? எங்கோ
ஒரு இடத்தில் எழுத்தாளன் (ள்) தன் மன ஓட்டத்தை சூட்சமாய் வைத்துள்ளதை வாசகர்கள் கண்டுப்பிடித்து சொல்வதுதான்!
ருத்தரன் சார், எப்பொழுதும் சண்டைக்கு குறைந்தபட்சம் இரண்டு பேர்கள் தேவை :-)))
ராஜ் சந்திரா! கவிதை தானே எழுதிக் கொள்கிறது :-)
உஷா
கவிதை ??? உம் உம் நடத்துங்க !!
விடம் உள் சென்றதும்
உள்ளிருக்கும் சாத்தான்
வெளிக் குதித்து
முகமூடிகளைக் களையும்.
ஓஹோ ! ஓஹோ ! இப்போ புரியுது
கவிதை நன்று வாழ்த்துகள்
Post a Comment
<< இல்லம்