இந்தி நமது தேசிய மொழி :-)
அன்று“
இந்த ஊர்ல இருக்கணும்ன்னா இந்தி கத்துக்கிட்டா தான் முடியும். பேச ஆளு இல்லென்னு புலம்பி புண்ணியமில்லே” என் கணவர் கடுப்பு அடித்ததும்,
“நாங்க எல்லாம் சுத்த தமிழர்கள், காசு பதவி கொடுத்தாலும், இந்தி கத்துக்காத புல்லு
திங்காத புலி சாதி ! ஏதோ ஜானுக்காக தோஸ்தானா பார்த்தேனே தவிர, நா பார்த்த இந்தி படங்க, பத்துக்குள்ளதான் இருக்கும்” என்றேன்.
“போதுமே! போன ஞாயித்துகிழம, அந்த மணீஷ் அப்பாக்கிட்ட, இந்த திராவிட மொழி
கொள்கையை சொன்னியே, பாவம் அந்த புரபசர் பயந்தே போயிட்டாரு”
“பின்னே என்ன? என்னமோ இந்தி தெரியாட்டா இந்தியனே இல்லை சொல்றாமாதிரி
இருந்ததும், சும்மா விட முடியுமா?”
"சரி சரி! ஒரு லாங்வேஜ் கத்துக்கிற தா நெனச்சி, இந்தி கத்துக்கோ மொதல்ல இந்தி சீரியல் பார்க்க ஆரம்பி என்று என் கணவர் உத்தரவு போட்டதும், என்ன செய்வது என்று யோசித்தேன்.
தமிழ் சீரியலே அலர்ஜி, இது இந்தி வேறையா என்று எண்ணி, நம்ம பக்கத்துக்கு
வீட்டு அம்மணிக்கிட்ட இந்தி டூயூஷன் போக ஆரம்பித்தேன். ஒண்ணாங்கிளாஸ்ஸில் இருந்து, ஐந்தாவது வரையான பாட புத்தகங்கள் வாங்கி, எழுதி படிக்க ஆரம்பித்தால். கூட படிக்கும் வாண்டுகளுக்கு ஓரே சிரிப்பு மற்றும் சந்தேகம். அ, ஆ, இ ன்னு எழுத்துக்கூட்டி படிக்கும் என்னைப் பார்த்து தினமும் ஓரே கேள்வி. நீ ஸ்கூலுக்கே போகவில்லையா என்று :-)
ஓரே மாதத்தில், பக்க பக்கமாய் எழுத்துக்களை எழுதிப்பார்த்ததன் பலனாய் படிக்க சுலபமாய் வந்துவிட்டது. ஓரளவும் புரிய ஆரம்பித்தது. நல்ல ஸ்டூடண்ட் என்று டீச்சர் எனக்கு நற்சான்றிதழும்
தந்தார்.
இது இவ்வாறு இருக்க, மூட்டைக்கட்டும் நேரம் வந்தது. மிக சந்தோஷமாய் இந்தி புத்தகங்களை தூக்கிப் போட்டுவிட்டு வந்தால் :-(
இன்று
ஏழு எட்டு இளைஞர்கள், சாமான்களை இறக்கி வைக்க, பார்த்தால் அனைவரும் உ.பிகாரர்களாம். இந்தியிலேயே பேசி வேலை வாங்கியாச்சு.
பிளம்பர் வேலைக்கு வந்த இருவரும் ஒரிசாகாரர்களாம். சுவாரசியமாய் சொந்தக்கதை, இங்கு வந்தக்கதைகளைச் சொல்லிவிட்டுப் போனார்கள்.
பெட்சீட் வாங்க கடைக்குப் போனால், ஐயா பேசுவதை வைத்து எந்த ஊரு என்றால் ராஜஸ்தான் என்றார். என் இந்தி பேச்சால் சந்தோஷப்பட்டு, இருபது ரூபாய் தள்ளுப்படி.
பேன் வாங்கப் போனால், சிந்திக்காரங்க, பிளவுஸ் தைக்கப்போனால் அம்மணி
சேட்டு பொம்பளை. எல்லாரிடமும் இந்தி பேச்சுதான்.
நல்லவேளை என் ஊட்டுக்காரரு பக்கத்துல இல்லை.
விருப்பமில்லாமல் கற்றுக் கொண்ட மொழி “கோயம்பத்தூர்” ல உபயோகப்படும்
என்று கனவிலும் நினைக்கவில்லை.
Labels: சோகக்கதை

