இந்தி நமது தேசிய மொழி :-)
அன்று“
இந்த ஊர்ல இருக்கணும்ன்னா இந்தி கத்துக்கிட்டா தான் முடியும். பேச ஆளு இல்லென்னு புலம்பி புண்ணியமில்லே” என் கணவர் கடுப்பு அடித்ததும்,
“நாங்க எல்லாம் சுத்த தமிழர்கள், காசு பதவி கொடுத்தாலும், இந்தி கத்துக்காத புல்லு
திங்காத புலி சாதி ! ஏதோ ஜானுக்காக தோஸ்தானா பார்த்தேனே தவிர, நா பார்த்த இந்தி படங்க, பத்துக்குள்ளதான் இருக்கும்” என்றேன்.
“போதுமே! போன ஞாயித்துகிழம, அந்த மணீஷ் அப்பாக்கிட்ட, இந்த திராவிட மொழி
கொள்கையை சொன்னியே, பாவம் அந்த புரபசர் பயந்தே போயிட்டாரு”
“பின்னே என்ன? என்னமோ இந்தி தெரியாட்டா இந்தியனே இல்லை சொல்றாமாதிரி
இருந்ததும், சும்மா விட முடியுமா?”
"சரி சரி! ஒரு லாங்வேஜ் கத்துக்கிற தா நெனச்சி, இந்தி கத்துக்கோ மொதல்ல இந்தி சீரியல் பார்க்க ஆரம்பி என்று என் கணவர் உத்தரவு போட்டதும், என்ன செய்வது என்று யோசித்தேன்.
தமிழ் சீரியலே அலர்ஜி, இது இந்தி வேறையா என்று எண்ணி, நம்ம பக்கத்துக்கு
வீட்டு அம்மணிக்கிட்ட இந்தி டூயூஷன் போக ஆரம்பித்தேன். ஒண்ணாங்கிளாஸ்ஸில் இருந்து, ஐந்தாவது வரையான பாட புத்தகங்கள் வாங்கி, எழுதி படிக்க ஆரம்பித்தால். கூட படிக்கும் வாண்டுகளுக்கு ஓரே சிரிப்பு மற்றும் சந்தேகம். அ, ஆ, இ ன்னு எழுத்துக்கூட்டி படிக்கும் என்னைப் பார்த்து தினமும் ஓரே கேள்வி. நீ ஸ்கூலுக்கே போகவில்லையா என்று :-)
ஓரே மாதத்தில், பக்க பக்கமாய் எழுத்துக்களை எழுதிப்பார்த்ததன் பலனாய் படிக்க சுலபமாய் வந்துவிட்டது. ஓரளவும் புரிய ஆரம்பித்தது. நல்ல ஸ்டூடண்ட் என்று டீச்சர் எனக்கு நற்சான்றிதழும்
தந்தார்.
இது இவ்வாறு இருக்க, மூட்டைக்கட்டும் நேரம் வந்தது. மிக சந்தோஷமாய் இந்தி புத்தகங்களை தூக்கிப் போட்டுவிட்டு வந்தால் :-(
இன்று
ஏழு எட்டு இளைஞர்கள், சாமான்களை இறக்கி வைக்க, பார்த்தால் அனைவரும் உ.பிகாரர்களாம். இந்தியிலேயே பேசி வேலை வாங்கியாச்சு.
பிளம்பர் வேலைக்கு வந்த இருவரும் ஒரிசாகாரர்களாம். சுவாரசியமாய் சொந்தக்கதை, இங்கு வந்தக்கதைகளைச் சொல்லிவிட்டுப் போனார்கள்.
பெட்சீட் வாங்க கடைக்குப் போனால், ஐயா பேசுவதை வைத்து எந்த ஊரு என்றால் ராஜஸ்தான் என்றார். என் இந்தி பேச்சால் சந்தோஷப்பட்டு, இருபது ரூபாய் தள்ளுப்படி.
பேன் வாங்கப் போனால், சிந்திக்காரங்க, பிளவுஸ் தைக்கப்போனால் அம்மணி
சேட்டு பொம்பளை. எல்லாரிடமும் இந்தி பேச்சுதான்.
நல்லவேளை என் ஊட்டுக்காரரு பக்கத்துல இல்லை.
விருப்பமில்லாமல் கற்றுக் கொண்ட மொழி “கோயம்பத்தூர்” ல உபயோகப்படும்
என்று கனவிலும் நினைக்கவில்லை.
Labels: சோகக்கதை
26 பின்னூட்டங்கள்:
கடைசி வரி கலக்கல் பஞ்ச்... ரசித்து சிரித்தேன்..
ஒரு சந்தேகம், இந்த பதிவுக்கு நெகட்டிவ் ஓட்டு விழுந்திருக்கு போல, மூணு ஸ்டார்தான் காட்டுது... :)))
வெண்பூ, ஏதோ ஒரு ஓட்டு, படிச்சிட்டுதானே போட்டு இருப்பாங்க, அது போதும் எனக்கு :-)
:-) adhu enna solli vecha madhri indha vadakathi karanga ellam hindi thaan desiya mozhi nu solikaranga? adhe pola 20 -2 5 varusham thamizhnatula irupanga ana damil nai malum nu perumaiya vera sollipanga! :-(
//பேன் வாங்கப் போனால், சிந்திக்காரங்க//
அடப்பாவமே, பேன் இருக்கேன்னு கவலைப்படறவங்களத்தான் பாத்திருக்கேன். கடன் வாங்கறவங்களை இப்பத்தான் பாக்கறனுங்க. :)
நீங்க இருக்கறது ஆரெஸ் புரம், சாயிபாபா காலனி ஏரியாவாட்ட இருக்குதுங்க. அங்க தான் அவிங்க நிறையப்பேர் இருப்பாங்க.
ஏதோ உபயோக படுதுல்ல மற்ற மொழிகள் தெரிந்திருப்பதில் தவறில்ல்லை .
:)
அதே போல் தெலுங்கு கற்றுக் கொண்டால் நாயுடுகளிடம், கன்னடம் கற்றுக் கொண்டால் கவுடர்களிடம், மலையளம் கற்றுக்கொண்டால் நம்புதிரிகளிடமும் பேசலாம், "கோயம்பத்தூரிலேயே"
பொற்கொடி, இந்தி பேசுவது ஆங்கிலம் போல, ஸ்டேடஸ் சிம்பல், தெரியாதா உங்களுக்கு :-)
சின்ன அம்மிணி, மின் விசிறி என்று மாற்றிப்படிக்கவும் :-)
சுரேஷ் குமார், மொழி கற்றுக் கொள்வதற்கு எனக்கும் மிக பிடிக்கும். ஆனால் திணிக்கும்பொழுது,
வெறுப்பும், கோபமும் வருகிறது.
கோவியாரே, அனைத்து திராவிடமொழிகளும் ஓரளவுக்கு தெரியும். இந்தியை விட :-)
நம்ம சாமான்களுக்காகத் துறைமுகம் போனால்.....
அங்கேயும் ஹிந்தி இருந்ததால் 'அச்சா ஸே ஸப் காம் ப்பூரி ஹுவா'.
ட்யூட்டியும் 'லேசா'த்தான் இருந்துச்சு.
எனிவே 'குச் காம் கோ ஆயா'நா?
ஃபைதா யி ஃபைதா.
"விருப்பமில்லாமல் கற்றுக் கொண்ட மொழி “கோயம்பத்தூர்” ல உபயோகப்படும்
என்று கனவிலும் நினைக்கவில்லை" சூப்பர் பஞ்ச் ! இனி கோவை வாசமா ?.
//அதே போல் தெலுங்கு கற்றுக் கொண்டால் நாயுடுகளிடம், கன்னடம் கற்றுக் கொண்டால் கவுடர்களிடம், மலையளம் கற்றுக்கொண்டால் நம்புதிரிகளிடமும் பேசலாம், "கோயம்பத்தூரிலேயே.//
:))))))
//adhe pola 20 -2 5 varusham thamizhnatula irupanga ana damil nai malum nu perumaiya vera sollipanga! :-(//
@போர்க்கொடி, தமிழில் வெளுத்து வாங்குற இன்னும் சொல்லப் போனால் இலக்கியம் படைக்கிற ஹிந்திக்காரங்க, குறிப்பா ராஜஸ்தானி, உ.பி. காரங்களைத் தெரியும் சொல்லட்டுமா?? பொதிகை சானலில் குறள் விளக்கம் சொல்ல ஒரு ராஜஸ்தானி வருவார். அது தவிர, கிரிதாரி பிரசாத் கேள்விப் பட்டிருக்கீங்களா? மழைபோல் பொழியும் சொற்பொழிவு, இவர் ஆன்மீகப் பேச்சைக் கேட்கவே கூடும் கூட்டம் பற்றியும் கேட்டிருக்க மாட்டீங்க! எனக்குத் தமிழை உண்மையில் வளர்ப்பது இவங்க போன்றவர்கள்தானோனு தோணும். அந்த அளவுக்குத் தமிழில் ஈடுபாடு! இங்கே அம்பத்தூரில் ஒரு தெலுங்கர், சுத்தாநந்த பாரதியாரின் சீடர் கம்பன் கழகம் வைத்து நடத்தித் தமிழ் இலக்கியபுத்தகங்களை நூலகம் நடத்தி இலவசமாக அனைவரும் எடுத்துப் போக வசதி செய்துள்ளார். இந்த மாதிரித் தொண்டர்களை எல்லாம் யாருக்கும் தெரியறதில்லை! :(((((( ஒரு பதிவாப் போச்சோ???? மன்னிக்கணும் உஷா, ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவுக்கு வந்ததில்.....:)))))))
துளசி, பகுத் அச்சா - அப்புசாமி, சீதா பாட்டி கதை ஞாபகத்துக்கு வருது :-)
கிருஷ்ணன் ஆமாம், கோவை வாசம் கொஞ்ச நாளைக்கு
என் பக்கம் நன்றி
கீதா, சுவாரசியமான தகவல்கள், விவரமாய் ஒரு பதிவு போடுங்களேன்.
எல்லாம் நன்மைக்கே !!. :))
welcome back usha
விருப்பமில்லாமல் கற்றுக் கொண்ட மொழி “கோயம்பத்தூர்” ல உபயோகப்படும்
என்று கனவிலும் நினைக்கவில்லை.
பகுத் அச்சா..!பீவி...ஆப் இந்தி மே....( ஹி ஹி..)
அவ்வளவுதான் எனக்கும் தெரியும்..
எனக்கு சொல்லிதர முடியுமா,,? சகோதரி..!
Geetha paati, thamizhla veluthu vangra vada-indhiyargal irukanga na sandhoshame! naan chinna ponnu thaane.. paatha 4 -5 per ipdi thaan alatinanga. sonen :) ungala madhri anubavam vandha apram enakum ellam theriya varum :D
தமிழ்நாட்டில் ஹிந்தி இல்லாமல் வாழமுடியாது என்றும், அரசியல்வாதிகள் ஹிந்தியைப் படிக்கவிடாமல் சாகடித்துவிட்டார்கள் என்றும் சொல்லும் இந்தப் பதிவின் நுண்ணரசியலைக் கண்டிக்கிறேன்!
அட??? உஷா, உங்களையே எடுத்துக்குங்களேன்?? தாய்மொழி கன்னடம் இல்லையா?? இன்னும் கி.ராஜாநாராயணன், சுத்தாநந்த பாரதியார், கு.அழகிரிசாமி போன்றவர்களும் தெலுங்கைத் தாய்மொழியாய்க் கொண்டவர்களே. இது போல் திரு நரசையா, சிட்டி போன்றவர்களும் தெலுங்கு தான் தாய்மொழினு நினைக்கிறேன். நரசையா சமீபத்தில் மதுரை பற்றி ஆய்வு செய்து ஆலவாய்ங்கற பெயரில் ஒரு புத்தகமே வெளியிட்டிருக்கார். சிட்டி அவர்கள் தான் தி.ஜானகிராமனோடு காவிரியின் கூடவே நடந்து "நடந்தாய் வாழி காவேரி!" எழுதியவர். இவங்க எல்லாம் ஆற்றி இருக்கும் தமிழ்த் தொண்டு பற்றி நான் சொல்லித் தெரியணுமா உங்களுக்கு?? இது போல் இன்னும் நிறையப் பேர் இருக்காங்க. என்ன??? வெளியே தெரியலை! விளம்பரமே இல்லை, உண்மையான தமிழார்வம் உள்ளவர்கள்.
இந்தி கத்துக் கொண்டால் ஆபிசில் பக்கத்து சீட்டில் நன்றாக கடலை போடலாம். :))
//கீதா, சுவாரசியமான தகவல்கள், விவரமாய் ஒரு பதிவு போடுங்களேன்//
எதுக்கு சிங்கத்தை சீண்டறீங்க? நாலு பக்கத்துக்கு, மூவாயிரம் வரிகளுக்கு மிகாமல் கட்டுரை வரைய போறாங்க பாருங்க. :p
///அதே போல் தெலுங்கு கற்றுக் கொண்டால் நாயுடுகளிடம், கன்னடம் கற்றுக் கொண்டால் கவுடர்களிடம், மலையளம் கற்றுக்கொண்டால் நம்புதிரிகளிடமும் பேசலாம், "கோயம்பத்தூரிலேயே"///
தமிழ் கற்றுக் கொண்டால் எல்லாத் தமிழர்களிடமும் பேசலாம் ஆங்கிலத்தில்."எந்த ஊரில் வேண்டுமானாலும் "
மொழி ஆர்வம் என்பது கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் மட்டுமன்றி அதை உபயோகிப்பதிலும் உள்ளது. படிச்ச தமிழனுக்கு அது கொஞ்சம் கம்மிதான் என்பது என் எண்ணம்.
ஏனோ படித்த தமிழர்களுக்கு ஆங்கிலத்தில் அல்லது அடுத்த மொழியில் பேசினால்தான் மரியாதை என்ற எண்ணம் கொஞ்சம் ரத்ததில் கலந்து விட்டது .
நம்ம தமிழ் நாட்டில் உடைந்த இந்தியிலாவது அடுத்த மாநிலத்தவரிடம் பேசும் நாம் ,அவனுக்குத் தெரிந்த தமிழில் அவனுடன் அளவளாவலாமெ என்று தமிழனுக்கு மற்றும் தோன்றாது.
இரண்டு தமிழ் மாமிகள் மும்பையில் சந்தித்தால் ஹிந்தியில் பேசிக் கொள்கிறார்கள்..அமெரிக்காவில் சந்தித்தால் ஆங்கிலத்தில்.... சென்னைக்கு வந்த பின்பும் அதையே தொடர்கிறார்கள்.
ஃபாரின் போய் விட்டு வந்ததும் என் தங்கைகள் பேசுவது 'பேஷ்ரது" ஆகவும் "துளசி" என்பது "துல்சி" ஆகவும் எப்படி / ஏன் மாறிப்போனது என்பது இன்று வரை எனக்குப் புரியவில்லை
:((
பதிவுக்கு சம்மந்தமா எழுதலையேன்னு யோசிக்காதீங்க..பின்னூட்டம் ஏதாவது போடணுமில்லியா :))))
கீதா, ஜானகிராமன் கூட செளராஷ்டிரர் என்று நினைக்கிறேன். நான் பொதுவாய்
நாங்கள் தமிழ் என்றுதான் சொல்லிக் கொள்வது. ஒரு மொழியின் மீது ஆர்வமும் காதலும் வர
அதன் இலக்கியங்களை படிக்க ஆரம்பித்து, அதன் தொன்மைகளை அறியும்பொழுது ஏற்படும் வியப்பே
மொழியின் மீது பற்றுக் கொள்ள வைக்கிறது. அப்படி பார்த்தால், நாங்கள் பேச மட்டும் தெரிந்த 60/40 தமிழும் கன்னடமும் கலந்த மொழி வெறும் உறவினர்களுக்குள்ளான தொடர்ப்புக்கு மட்டும்.
நீங்கள் குறிப்பிட்ட ( வீட்டு மொழி தமிழ் அல்லாத) அனைத்து தமிழ் எழுத்தாளர்களுக்கு இதே கருத்து இருக்கும் என்று நம்புகிறேன்.
ரவியா, பிரசன்னா, துபாய் ராஜா வாங்க வாங்க.
பிரசன்னா, உண்மையை வெளிக் கொண்டு வந்ததற்கு நன்றி :-)
பேரரசன் பீதியைக் கிளப்பாதீங்க:-)
ச.சங்கர் கீதாவுக்கு சொன்னதுதான் மொழியின் மீது பற்று வர நல்ல வாசிப்பு அனுபவம் இருந்தால்தான்
சாத்தியம். இந்த கொடுமை தமிழுக்கு மட்டுமல்லா, இப்ப எல்லாம் ஹிந்தி காரங்க பேசுவது ஹிந்தீலீஷ் :-)
//இந்தி கத்துக் கொண்டால் ஆபிசில் பக்கத்து சீட்டில் நன்றாக கடலை போடலாம். :))//
அம்பி, உங்க காரியத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பதுக்கண்டு வியக்கிறேன்:-))))))))))))
அப்படியா....
//கீதா, ஜானகிராமன் கூட செளராஷ்டிரர் என்று நினைக்கிறேன்.//
தி.ஜானகிராமனையா சொல்றீங்க?? நிச்சயமா இல்லை,. உறுதியோட சொல்லமுடியும். செளராஷ்டிரர் இல்லை. எம்.வி.வெங்கட்ராம் செள்ராஷ்டிரர், கும்பகோணத்தைச் சேர்ந்தவர். கதைகளும் கும்பகோணம் செளராஷ்டிரர் பத்தியே வரும்.
அச்சச்சோ............... இந்தியாவில் இருந்தபோதே என் பெயர் துல்சியாத்தான் இருந்துச்சு. ஃபாரீன் குடி உரிமை வாங்கியதால் வேணுமுன்னுதான் துளசின்னு வச்சுக்கிட்டேன்:-)
அ, ஆ, இ ன்னு எழுத்துக்கூட்டி படிக்கும் என்னைப் பார்த்து தினமும் ஓரே கேள்வி. நீ ஸ்கூலுக்கே போகவில்லையா என்று :-)
ரொம்ப நாள் கழித்து மறைந்த legend சுஜாதா அவர்களின் ஜோக் படித்த மாதிரி என்னை (எங்களை) மறந்து சிரித்தோம்
வளர்க உங்கள் படைப்புக்கள்
லதா மற்றும் sridhar
Post a Comment
<< இல்லம்