Sunday, February 26, 2017ஒடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் 10
மறுநாள் காலை லிங்க ராஜா கோவிலுக்கு கிளம்பினோம். பிரம்மாண்டமான கோவில். செல் போன், கேமிரா, தோல் பொருட்கள் அனுமதியில்லை.
நிறைய சிறு தெய்வங்களுக்கு சந்நிதிகள். வழிப்பாட்டு தலம். நல்ல கூட்டம். ஓரளவு சுத்தமாக இருந்தது.
உள்ளே நுழைந்ததும் நடுவில் சிவலிங்கத்தை சுற்றி நிறைய பக்தர்கள் அவர்களின் கைப் பிடித்து இழுக்கும் பூஜாரிகள். நிஜமாகவே இடது கையை கெட்டியாய் பிடித்து இழுத்த பூஜாரியை இரு இரு அல்லது வேண்டாம் என்று சொல்வதுப் போல வலது கையை ஆசிர்வாதம் செய்வது போல சொன்னதும், நல்லவேளையாய் கையை விட்டு விட்டு அடுத்த ஆளை பிடிக்க போனான்.
இந்த ஆசிர்வாத சைகையால் அன்று தப்பித்தேனே தவிர இரவு நன்றாக மாட்டினேன்.
அன்றிரவு பூரி ஜெகந்நாதரை தரிசிக்க போனப் பொழுது, சாமி முன்னால் நின்றிருந்த பூஜாரி தன் முன்னால் இருந்த நீள டேபிள் போன்ற அமைப்பில் பெரிய பெரிய கிண்ணம் வைத்து அதில் காசை போடும்படி கத்திக்கொண்டு இருந்தான்.
பார்க்க ஆபாசமாய் இருந்தது. நானும் அதே வலது கை ஆசிர்வாதம் செய்துப் போல கையாட்டிவிட்டு நகரும்பொழுது, அங்கு பக்தர்களுக்கு ரெண்டு குச்சியால் தலையில் அடித்து ஆசிர்வாதிப்பார்கள்.
என் முறை வரும்பொழுது, ஓரளவு நன்றாக தலையில் அடி விழுந்தது.
நானும் வலிக்கலையே என்று வடிவேலு பாணியில் மனதில் நினைத்து, அவனைப் பார்த்து சிரித்துவிட்டேன்.
என்னை பக்கத்தில் இருந்த இன்னொரு பூஜாரியிடம் கோபமாய் ஏதோ சொன்னான்.
போடான்னு வெளியே வந்தேன்.
பூரி கதை பிறகு :-)
லிங்கராஜா கோவில் சிலைகளும் அற்புதம். எல்லா கோவில்களிலும் பிள்ளையார், மிக அழகான காதல் ஜோடிகளாய் பரமசிவன், பார்வதி. நடராஜர், மயில் வாகன, சேவல் கொடியோன் இருந்தார்கள்.
தமிழ் கடவுளாய் முருகன் மாறியது எப்பொழுது?
மதிய சாப்பாடு முடிந்ததும் , அசோகரின் கல்வெட்டான,
Edicts of Asoka பார்க்க போனோம்.
கல்வெட்டு படிக்கப்பட்டது. நாங்கள் இருந்த இடத்தின் அருகில் தான் கலிக்கத்து போர் நடந்திருக்கிறது.
காலசக்கரத்தில் அப்படியே பின்னால் போனதுப் போன்ற உணர்வு.
அங்கிருந்து பூரிக்கு கிளம்பினோம். வழியில் ஒரு ஆர்டிஸ்ட் வில்லேஜ்.
கிராமத்து வீதியில் நடக்கும்பொழுது ஒரு வீட்டு வாசலில் ஒரு பூனைக்குட்டியை கட்டிப் போட்டு இருந்தார்கள்.
என் ஓட்டை ஹிந்தியில் இதை ஏன் கட்டி போட்டு வைத்திருக்கிறீர்கள் என்று உள்ளே படம் வரைந்துக் கொண்டு இருந்த ஆளை கேட்டேன்.
அம்மா பூனை இறந்துவிட்டது, இது ஓடுகிறது என்றான்.
இந்த மாதிரி செல்லங்கள் வளர்ப்பவர்கள் சீக்கிரம் நண்பர்கள் ஆகிவிடுவார்கள் :-)
அவன் பூனை மகாத்மியங்களை சொல்ல ஆரம்பிக்க இன்னொரு பெண் வந்தாள்.
அதுக்கு பேர் சூட்டும்படி சொன்னதும், ''லட்டூ" என்று சொன்னதும் அவளுக்கு மகா குஷி.
நான் என் வீட்டு செல்லங்கள் கதையை ஆரம்பித்ததும், அவள் நாய் வளர்த்து அது செத்துப் போன சோக கதையை சொன்னாள்.
உள்ளே இருந்த ஆளும், இந்த பெண்ணும் ஒரு வார்த்தைக் கூட தங்கள் கலைப் பொருட்களை வாங்கவோ, பார்க்கவோ கூட சொல்லவில்லை.
புவனேஸ்வர் வந்த நாள் முதல் சாப்பிட்ட கத்திரிக்காய் சுவை பிடித்துப் போய் ஹோட்டல் தோட்டக்காரனை தேடினேன். விதைக்கிடைக்குமா என்று!
ரிசப்ஷனில் விசாரித்தால் அவன் பத்து மணிவாக்கில் வந்து ஐந்து மணிக்கு கிளம்பிடுவான் என்று சொல்லி நாங்க விதை அவனை வாங்கி வர சொல்கிறோம் என்று மிக உறுதியாய் வாய் வார்த்தையில் சொல்லி காற்றில் விட்டார்கள்.
காலை இரவு விசாரித்து விசாரித்து ஓன்றும் பயனில்லை. பஸ் டிரைவரை கேட்டால், அது உள்ளே கடைகளில் கிடைக்கும், அங்கெல்லாம் பஸ்ஸில் போக முடியாது என்று சொல்லிவிட்டான்.
இந்த ஆர்ட்டிஸ் வில்லேஜ் வரும்வழியில் ஒருவன் விதை கடை பரப்பியிருந்ததைப் பார்த்துவிட்டேன்.
திரும்பும்வழியில் போய் விசாரித்தால் கத்தரிக்காய் தவிர பல விதைகள் இருந்தன, :-(
வெள்ளரியும், கொத்தமல்லி விதையும் வாங்கினேன்.
அங்கிருந்து பூரி ஜெகந்தாதரை தரிசிக்க கிளம்பினோம். அந்த அடி வாங்கின கதைத்தான் மேலே இருக்கிறது.
புகைப்படம் Vallabha Srinivasan
எனக்கு பின்னால் இருக்கும் கதவருகில் ஒரு ஆள் இருக்கிறான் :-)
Image may contain: 1 person, sitting

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்