Saturday, April 18, 2009

எழுத்து, இலக்கியம் சோறு போடுமா?

நேற்று சென்னைக்கு தெரிந்தவருடன் போன் பேசும்பொழுது, தன் மகள்( வயது இருபத்தி மூன்று) சென்னையில் பிரபல நாளிதழில் ஒரு வருடமாய் வேலையில் இருப்பதாகவும், சம்பளம் ஐடி சம்பளத்துக்கு இணையானது என்று பெருமையுடன் கூறினார். சட்டென்று கவிஞர் யுகபாரதி நினைவு வந்தது.

இரண்டு வருடத்திற்கு முன்பு திரு. எஸ்.பொ எழுதிய மாயினி புத்தக வெளியிட்டு விழா மற்றும் யுகமாயினி இலக்கிய இதழ் வெளியிட்டு விழாவுக்கு போயிருந்தேன். (அந்நேரம் சென்னையில் இருந்தேன்).

அன்று மேடையில் பேசிய கவிஞர் யுகபாரதி சொன்ன சில விஷயங்கள் என்றும் மறக்க முடியாதவை. திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கு முன்பு (என் கணிப்பில் 2003 வரை) சில வருடங்கள் கணையாழி இலக்கிய இதழில் ஆசிரியராய் பணியாற்றியிருக்கிறார். பிறகு திரையுலகில் அவர் பிரபலம் ஆனதற்கு காரணம் "மன்மத ராசா" பாட்டு. ஒரு இலக்கியவாதி இத்தகைய தரக்குறைவான பாடலை எழுதலாமா என்று கோப கணைகள் நாலாபக்கங்களில் இருந்தும் வந்ததாக சொன்னவர், அன்று அதாவது ஆறேழு வருடங்களுக்கு முன்பு கணையாழியில் அவருக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் ரூபாய் ரெண்டாயிரத்துக்கு ஓரிரண்டு நூறுகள் குறைவு. வாடகை, சாப்பாடு, போக்குவரத்து இவைகளுக்கு , சென்னையில் இந்த ஆயிரத்து எழுநூறு, எண்ணூறு ரூபாயில் எப்படி சமாளிக்க முடியும்?

இப்பொழுது நாலு இலக்கிய இதழ்கள் வாங்குகிறேன். அதைப் பார்க்கும்பொழுது எல்லாம் யுகபாரதி நினைவுக்கு வருகிறார். நல்லி குப்புசாமி செட்டியார் புண்ணியத்தில் புடைவை கடை விளம்பரம் மின்னுகிறது. அதைத் தவிர ஒன்றிரண்டு கண்களில் படுகின்றன. இவ்விதழ்கள் சந்தாக்காரர்களை நம்பியே நடத்துவதால், எத்தனை சந்தாக்காரர்கள் இருப்பார்கள்? அப்பத்திரிக்கைகளில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் ஒழுங்காய் கிடைக்குமா? கிடைக்கும் சம்பளம் எவ்வளவு இருக்கும்? இந்த கேள்விகளே இலக்கிய இதழ்களைப் பார்த்ததும் முதலில் தோன்றுகிறது.

இலக்கிய பத்திரிக்கையை விடுங்கள், வணிக பத்திரிக்கைகளில் சம்பளம் எப்படி? அடுத்து தமிழ் தொலைக்காட்சிகளில் பணிப்புரிபவர்களின் ஊதியங்களுக்கும், ஆங்கில மீடியாவுக்கும் ஊதியங்களில் வித்தியாசம் உண்டா? அறிந்தவர்கள் சொல்லுங்கள்.

Labels:

Saturday, January 10, 2009

பதிவுபோதை ஐயாவின் கதையை நான் காப்பியடித்தேனா?

என்னமோங்க, குற்றம் செய்வவன் மனசுதான் குறுகுறுக்கும்ன்னு இல்லை. அபாண்டமா பழிப்போடும்போதும் மனசுக்கு கஷ்டமா போய்விடுகிறது. முந்தா நாள், 9-1-2009 அன்று மாலை, இந்தியன் என்பவர் கமெண்ட் பாக்சில் , ஒரு மேட்டரைச் சொல்லியிருக்கிறார்.

Indian has left a new comment on your post "2009ன் புத்தக சந்தையும், நான் வாங்கியவைகளும்"

I hope you read this blog. Any comments?

http://rajnatarajan.blogspot.com/2008/12/anecdote-on-perceptions.html

//I was reading couple of articles in Tamil blog world about, how and when one is plagiarized. People are copying left and right, all the images, from the nest and also some posts of others, concocting to a different form - wither getting published in print media as stories. They take the story's central theme, and write in their way. Inspiration! Nevertheless, even my stories and experiences have been plagiarized by many including self styled authors. Many write to me quoting the sources.... If that is the way they can earn, so be it. God bless them!

I am not going to growl about it, as God knows what to give to each - when and the best!

My best friend Ramesh's Tamil story with a title One Rupee, was plagiarized (internalized) by someone called Ramachandran Usha, and even got published in a magazine. We laughed about it. She or He would have made few hundred rupees and people would have forgotten about it.//

படிச்சிட்டு அப்படியே பக்குன்னு ஆயிடுச்சு. என்ன கதை? அப்படி நம்மை இம்ப்ரஸ் செய்து, தாக்கத்தைத் தந்து மனசுல ஆழமா பதிஞ்சிப் போச்சா அல்லது புத்திசாலிகள் ஓரேமாதிரி சிந்திப்பார்களே என்பார்களே, அப்படி ஏதாவது நடந்துச்சா ? புத்திசாலியா கொஞ்சம் ஓவரா இல்லே - அட என்னை சொன்னேங்க- என்று மன்சாட்சி நக்கல் அடித்தது.

அதை அப்படியே பப்ளிஷ் செய்துவிட்டு, அவங்க தளத்திலேயே போய் எந்த கதை என்றுக் கேட்டு கமெண்ட் பாக்சில் போட்டேன். அதில் இருந்த ரமேஷ் என்பவரின் பெயரை கிளிக்கி, பு·ரோபல் பார்த்தால் அதில் அவரின் சிறுகதைகளுக்கு என்றே ஒரு தளம் இருந்தது. ஆனால் அது குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கு மட்டும்தான். எழுத்தாளர் ரமேஷ் தளத்திலேயே , (பதிவுபோதை) நல்லவேளையாய் சிறுகதைகள் லிஸ்டில் "ஒரு ரூபாய்" எனற கதை இருந்தது.

http://pathivubothai.blogspot.com/search/label/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 வாசித்துப் பார்த்தால், அழகு தமிழில் இது அல்லவா இலக்கியம் என்று மெய்சிலிர்த்துப் போனேன். ஆறு ஒற்றுமையாவது இருக்கிறதா என்றுப் பார்த்தால், ஓரே ஒரு ஒற்றுமை கண்ணில் பட்டது. என்னுடைய அசம்ஷன் என்னவென்றால் கல்கி சிறுகதைப் போட்டி -2008ல் எனக்கு கிடைத்த பரிசு கதையிலும் ஏழை நாயகன் கஷ்டப்பட்டு பொறியல் படிக்கிறான். இங்கும் அப்படியே! ஐயகோ! தவமாய் தவமிருந்து சேரனும் கஷ்டப்பட்டு பொறியல் படிச்சாரே ! வடிவேலு, சின்னிஜெயந்த் எல்லாம் பொறியல் படிச்சிருக்காங்களே, சினிமாவில்! அவிங்களும் சண்டைக்கு வருவாங்களோன்னு ஓரே யோசனை!

இதைத்தான் நான் சுட்டு விட்டேனா என்றுக் கேட்டு உடனே, (9-1-2009) ரமேஷ் அவர்கள் பதிவின் கமெண்ட் பாக்சில் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. சே! ஐநூறு ரூபாய் செக் வந்துதே, அதை அப்படியே இவங்களுக்கு தந்துவிடலாமா என்று நினைத்தால், ரமேஷ் அவர்கள் கதை போட்ட தேதி அக்டோபர் 16, 2008. கண்ணை நன்றாக தேய்த்துக் கொண்டுப்பார்த்தேன். 2006 ஆ 2007 ஆ என்று. அது 16-10-2008 தான்.

ஐயா! அம்மா! கல்கி சிறுகதைப் போட்டி அறிவிப்பு வந்தது ஏப்ரல் 2008. மே முதல் வாரம் நான் கதை அனுப்பிவிட்டேன். ஆகஸ்ட் மாதம் கல்கி பத்திரிக்கையில் தேர்வான கதைகளின் பட்டியல் வந்துவிட்டது. ஆகஸ்டில் இதைக் குறித்த அறிவிப்பு என் பிளாக்கில் போட்டேன். கதை பத்திரிக்கையில் வருவதற்கு முன்பு, இணையத்தில் போட முடியாது என்பதால், பலர் கேட்க, அவர்களுக்கு தனிமடலில் அனுப்பினேன். என்னுடைய பதினோறாவது எண். என் முறை வர நவம்பர் ஆகிவிட்டது.

ஐயா! அம்மா! பிறரைப் பற்றி குற்றம் சாட்டி எழுத்தில் எழுதும்போது கொஞ்சம் கவனமா இருங்கணும். அதில் பெயர் சொல்லி எழுதும்பொழுது கொஞ்சம் யோசிக்கணும். முன்ன கூட பதிவாளர்கள் எல்லாம் மனநோயாளிகள்ன்னு ஒரு பத்திரிக்கையில வந்துது, ஆனா பெயர் சொல்லி இல்லை. அதனால நம்மை சொல்லவில்லைன்னு, கண்டுக்காம போகவில்லை! ஆனா நீங்க செஞ்சது ?

ஓரே ஒரு வார்த்தை ஏம்மா, எங்கதையை சுட்டே / திருடினே/ காப்பியடிச்சேன்னு என்னிடமே நேரா கேட்காமல், நீங்க ரெண்டு பேரும் சிரிச்சிருக்கீங்க. இப்ப பாருங்க, எனக்கு சிரிப்பே வரலை :-)

Labels: