Saturday, April 18, 2009

எழுத்து, இலக்கியம் சோறு போடுமா?

நேற்று சென்னைக்கு தெரிந்தவருடன் போன் பேசும்பொழுது, தன் மகள்( வயது இருபத்தி மூன்று) சென்னையில் பிரபல நாளிதழில் ஒரு வருடமாய் வேலையில் இருப்பதாகவும், சம்பளம் ஐடி சம்பளத்துக்கு இணையானது என்று பெருமையுடன் கூறினார். சட்டென்று கவிஞர் யுகபாரதி நினைவு வந்தது.

இரண்டு வருடத்திற்கு முன்பு திரு. எஸ்.பொ எழுதிய மாயினி புத்தக வெளியிட்டு விழா மற்றும் யுகமாயினி இலக்கிய இதழ் வெளியிட்டு விழாவுக்கு போயிருந்தேன். (அந்நேரம் சென்னையில் இருந்தேன்).

அன்று மேடையில் பேசிய கவிஞர் யுகபாரதி சொன்ன சில விஷயங்கள் என்றும் மறக்க முடியாதவை. திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கு முன்பு (என் கணிப்பில் 2003 வரை) சில வருடங்கள் கணையாழி இலக்கிய இதழில் ஆசிரியராய் பணியாற்றியிருக்கிறார். பிறகு திரையுலகில் அவர் பிரபலம் ஆனதற்கு காரணம் "மன்மத ராசா" பாட்டு. ஒரு இலக்கியவாதி இத்தகைய தரக்குறைவான பாடலை எழுதலாமா என்று கோப கணைகள் நாலாபக்கங்களில் இருந்தும் வந்ததாக சொன்னவர், அன்று அதாவது ஆறேழு வருடங்களுக்கு முன்பு கணையாழியில் அவருக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் ரூபாய் ரெண்டாயிரத்துக்கு ஓரிரண்டு நூறுகள் குறைவு. வாடகை, சாப்பாடு, போக்குவரத்து இவைகளுக்கு , சென்னையில் இந்த ஆயிரத்து எழுநூறு, எண்ணூறு ரூபாயில் எப்படி சமாளிக்க முடியும்?

இப்பொழுது நாலு இலக்கிய இதழ்கள் வாங்குகிறேன். அதைப் பார்க்கும்பொழுது எல்லாம் யுகபாரதி நினைவுக்கு வருகிறார். நல்லி குப்புசாமி செட்டியார் புண்ணியத்தில் புடைவை கடை விளம்பரம் மின்னுகிறது. அதைத் தவிர ஒன்றிரண்டு கண்களில் படுகின்றன. இவ்விதழ்கள் சந்தாக்காரர்களை நம்பியே நடத்துவதால், எத்தனை சந்தாக்காரர்கள் இருப்பார்கள்? அப்பத்திரிக்கைகளில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் ஒழுங்காய் கிடைக்குமா? கிடைக்கும் சம்பளம் எவ்வளவு இருக்கும்? இந்த கேள்விகளே இலக்கிய இதழ்களைப் பார்த்ததும் முதலில் தோன்றுகிறது.

இலக்கிய பத்திரிக்கையை விடுங்கள், வணிக பத்திரிக்கைகளில் சம்பளம் எப்படி? அடுத்து தமிழ் தொலைக்காட்சிகளில் பணிப்புரிபவர்களின் ஊதியங்களுக்கும், ஆங்கில மீடியாவுக்கும் ஊதியங்களில் வித்தியாசம் உண்டா? அறிந்தவர்கள் சொல்லுங்கள்.

Labels:

9 பின்னூட்டங்கள்:

At Saturday, 18 April, 2009, சொல்வது...

இருங்க! உனா தானாவுக்கு சொல்லிவிட்டுருக்கேன். எந்த எந்த பத்திரிக்கைல என்ன என்ன சம்பளம்ன்னு புட்டு புட்டு வைப்பாரு!

 
At Saturday, 18 April, 2009, சொல்வது...

இலக்கியம் பேசுபவர்களின் வருமானம் கொஞ்சம் கவலைக்குரிய விசயமாக இருந்தாலும் பரபரப்பு சேதி சொல்லும் பத்திரிக்கைகளில் பணி புரிவோர் கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள் அவர்களின் கவலை எல்லாம் அடுத்து என்ன பரபரப்பு செய்தி வெளியீடுவது என்பதாகவே இருக்கிறது!

 
At Saturday, 18 April, 2009, சொல்வது...

விசாரிக்கிறதைப் பார்த்தா ஏதும் இலக்கியப் பத்திரிகையில் வேலை செய்யப் போகலாமா என்று யோசிக்கிற மாதிரி தெரிகிறதே :-)) வாழ்த்துகள். - பி.கே. சிவகுமார்

 
At Saturday, 18 April, 2009, சொல்வது...

அபி அப்பா, வெயிட்டிங்.

ஆயில்யன், உ.த என்ன சொல்கிறார் பார்ப்போம்.

பி.கே.எஸ், இல்லவே இல்லை. பத்திரிக்கைகளில் சேர்ந்தால் எழுத முடியாதே? என்னால் எழுதுவதை விட முடியாது.

 
At Saturday, 18 April, 2009, சொல்வது...

விசாரிச்சு விவரமா இன்னோரு பதிவு போடுங்க.. :)எல்லாருக்கும் பயனுள்ளதா இருக்கும்.. அப்படியே கதை எழுதினா எவ்வளவு தருவாங்க.. இந்த மாதிரி எங்க சந்தேகத்தையும் எழுத்தாளர் நீங்க தானே தீத்துவைக்கனும்..

 
At Sunday, 19 April, 2009, சொல்வது...

இலக்கியம் என்பது கோபுரம். தாங்கிப் பிடிக்க அஸ்திவாரம் இருந்தால் மட்டுமே அண்ணாந்து பார்த்து எல்லோரும் ஆஹா என்பார்கள்.

- சத்யராஜ்குமார்

 
At Tuesday, 21 April, 2009, சொல்வது...

நல்ல கேள்வி, உண்மை தமிழன் பதிலை அறிய நானும் ஆவலா இருக்கேன்.

இலக்கியத்தை விடுங்க, பிளாக் எழுதினா சோறு கிடைக்குமா?

(ஹிஹி, எனக்கு ஒரே ஒரு தங்கமணி தான் கிடைச்சாங்க.)

எத்தனை பின்னூட்டம் போட்டு இருக்கேன் உங்களுக்கு. ஒரு கப் கேசரி குடுத்து இருக்கீங்களா நீங்க? :))

 
At Friday, 24 April, 2009, சொல்வது...

முத்துலட்சுமி, வணிக பத்திரிக்கைகளில் சில நூறு கிடைக்கும். இலக்கிய பத்திரிக்கைகளில்
உங்களுக்கு எழுதும் உத்தேசம் இருந்தால், முதலில் சந்தா கட்டிவிட்டு கதை அனுப்புங்கள்.
அப்பொழுதுதான், உங்க கதை வந்த பத்திரிக்கையாவது உங்கள் கண்ணில் தென்படும். சந்தா
கட்டவில்லை என்றால், கதை வந்த ஒரு இதழ் எல்லாம் விலைக்கு கிடைக்காது.

சத்தியராஜ் குமார், இலக்கியம் கோபுரம் என்றால் அஸ்திவாரம் ?

அம்பி,
பொதுவுல சொந்த விஷயங்கள் சொல்லும்பொழுது கொஞ்சம் யோசித்து சொல்லவும் :-)
பதிவு போடுவதன் பலன் இப்படிக்கூட இருக்குமா என்று பிரம்மசாரி பயல்கள் ஆனந்த கூத்து
ஆட தொடங்கிவிட போகிறார்கள் :-)
நேரில் சந்திக்கும்பொழுது ஒரு கப் கேசரி கிடைக்கும்.

 
At Monday, 22 June, 2009, சொல்வது...

//"எழுத்து, இலக்கியம் சோறு போடுமா?"//

போடும்..பழைய பேப்பர் கடை வைத்திருப்பவருக்கு என்று தான் தோன்றுகிறது.

 

Post a Comment

<< இல்லம்