Saturday, January 10, 2009

பதிவுபோதை ஐயாவின் கதையை நான் காப்பியடித்தேனா?

என்னமோங்க, குற்றம் செய்வவன் மனசுதான் குறுகுறுக்கும்ன்னு இல்லை. அபாண்டமா பழிப்போடும்போதும் மனசுக்கு கஷ்டமா போய்விடுகிறது. முந்தா நாள், 9-1-2009 அன்று மாலை, இந்தியன் என்பவர் கமெண்ட் பாக்சில் , ஒரு மேட்டரைச் சொல்லியிருக்கிறார்.

Indian has left a new comment on your post "2009ன் புத்தக சந்தையும், நான் வாங்கியவைகளும்"

I hope you read this blog. Any comments?

http://rajnatarajan.blogspot.com/2008/12/anecdote-on-perceptions.html

//I was reading couple of articles in Tamil blog world about, how and when one is plagiarized. People are copying left and right, all the images, from the nest and also some posts of others, concocting to a different form - wither getting published in print media as stories. They take the story's central theme, and write in their way. Inspiration! Nevertheless, even my stories and experiences have been plagiarized by many including self styled authors. Many write to me quoting the sources.... If that is the way they can earn, so be it. God bless them!

I am not going to growl about it, as God knows what to give to each - when and the best!

My best friend Ramesh's Tamil story with a title One Rupee, was plagiarized (internalized) by someone called Ramachandran Usha, and even got published in a magazine. We laughed about it. She or He would have made few hundred rupees and people would have forgotten about it.//

படிச்சிட்டு அப்படியே பக்குன்னு ஆயிடுச்சு. என்ன கதை? அப்படி நம்மை இம்ப்ரஸ் செய்து, தாக்கத்தைத் தந்து மனசுல ஆழமா பதிஞ்சிப் போச்சா அல்லது புத்திசாலிகள் ஓரேமாதிரி சிந்திப்பார்களே என்பார்களே, அப்படி ஏதாவது நடந்துச்சா ? புத்திசாலியா கொஞ்சம் ஓவரா இல்லே - அட என்னை சொன்னேங்க- என்று மன்சாட்சி நக்கல் அடித்தது.

அதை அப்படியே பப்ளிஷ் செய்துவிட்டு, அவங்க தளத்திலேயே போய் எந்த கதை என்றுக் கேட்டு கமெண்ட் பாக்சில் போட்டேன். அதில் இருந்த ரமேஷ் என்பவரின் பெயரை கிளிக்கி, பு·ரோபல் பார்த்தால் அதில் அவரின் சிறுகதைகளுக்கு என்றே ஒரு தளம் இருந்தது. ஆனால் அது குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கு மட்டும்தான். எழுத்தாளர் ரமேஷ் தளத்திலேயே , (பதிவுபோதை) நல்லவேளையாய் சிறுகதைகள் லிஸ்டில் "ஒரு ரூபாய்" எனற கதை இருந்தது.

http://pathivubothai.blogspot.com/search/label/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 வாசித்துப் பார்த்தால், அழகு தமிழில் இது அல்லவா இலக்கியம் என்று மெய்சிலிர்த்துப் போனேன். ஆறு ஒற்றுமையாவது இருக்கிறதா என்றுப் பார்த்தால், ஓரே ஒரு ஒற்றுமை கண்ணில் பட்டது. என்னுடைய அசம்ஷன் என்னவென்றால் கல்கி சிறுகதைப் போட்டி -2008ல் எனக்கு கிடைத்த பரிசு கதையிலும் ஏழை நாயகன் கஷ்டப்பட்டு பொறியல் படிக்கிறான். இங்கும் அப்படியே! ஐயகோ! தவமாய் தவமிருந்து சேரனும் கஷ்டப்பட்டு பொறியல் படிச்சாரே ! வடிவேலு, சின்னிஜெயந்த் எல்லாம் பொறியல் படிச்சிருக்காங்களே, சினிமாவில்! அவிங்களும் சண்டைக்கு வருவாங்களோன்னு ஓரே யோசனை!

இதைத்தான் நான் சுட்டு விட்டேனா என்றுக் கேட்டு உடனே, (9-1-2009) ரமேஷ் அவர்கள் பதிவின் கமெண்ட் பாக்சில் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. சே! ஐநூறு ரூபாய் செக் வந்துதே, அதை அப்படியே இவங்களுக்கு தந்துவிடலாமா என்று நினைத்தால், ரமேஷ் அவர்கள் கதை போட்ட தேதி அக்டோபர் 16, 2008. கண்ணை நன்றாக தேய்த்துக் கொண்டுப்பார்த்தேன். 2006 ஆ 2007 ஆ என்று. அது 16-10-2008 தான்.

ஐயா! அம்மா! கல்கி சிறுகதைப் போட்டி அறிவிப்பு வந்தது ஏப்ரல் 2008. மே முதல் வாரம் நான் கதை அனுப்பிவிட்டேன். ஆகஸ்ட் மாதம் கல்கி பத்திரிக்கையில் தேர்வான கதைகளின் பட்டியல் வந்துவிட்டது. ஆகஸ்டில் இதைக் குறித்த அறிவிப்பு என் பிளாக்கில் போட்டேன். கதை பத்திரிக்கையில் வருவதற்கு முன்பு, இணையத்தில் போட முடியாது என்பதால், பலர் கேட்க, அவர்களுக்கு தனிமடலில் அனுப்பினேன். என்னுடைய பதினோறாவது எண். என் முறை வர நவம்பர் ஆகிவிட்டது.

ஐயா! அம்மா! பிறரைப் பற்றி குற்றம் சாட்டி எழுத்தில் எழுதும்போது கொஞ்சம் கவனமா இருங்கணும். அதில் பெயர் சொல்லி எழுதும்பொழுது கொஞ்சம் யோசிக்கணும். முன்ன கூட பதிவாளர்கள் எல்லாம் மனநோயாளிகள்ன்னு ஒரு பத்திரிக்கையில வந்துது, ஆனா பெயர் சொல்லி இல்லை. அதனால நம்மை சொல்லவில்லைன்னு, கண்டுக்காம போகவில்லை! ஆனா நீங்க செஞ்சது ?

ஓரே ஒரு வார்த்தை ஏம்மா, எங்கதையை சுட்டே / திருடினே/ காப்பியடிச்சேன்னு என்னிடமே நேரா கேட்காமல், நீங்க ரெண்டு பேரும் சிரிச்சிருக்கீங்க. இப்ப பாருங்க, எனக்கு சிரிப்பே வரலை :-)

Labels:

47 பின்னூட்டங்கள்:

At Saturday, 10 January, 2009, சொல்வது...

என்ன கேள்வி உஷா? காப்பி அடிக்கலைன்னா, பின்னே டீ அடிச்சீங்களான்னு கேக்கப்போறாங்க.

அந்தக் 'கதை'யைப் படிச்சேன். குற்றம் சொல்லணுமுன்னா சம்பவத்தைச் சொன்ன நண்பரைத்தான் சொல்லணும்.

உங்ககிட்டே சொன்ன ஞாபகம் இல்லாம போதையாருக்கும் சொல்லிட்டாரு போல.

அவர் பண்ண தப்பு ரெண்டுபேருக்கும் ஒரே சமயத்தில் சொல்லலை!!!!!

ஒருவேளை......

சரி விடுங்க. போதை தெளியட்டும்

 
At Saturday, 10 January, 2009, சொல்வது...

உஷா!

நல்லவேளை, உங்கள் கண்ணில் பட்டது. உண்மையை உணர்த்திவிட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

 
At Saturday, 10 January, 2009, சொல்வது...

துளசி :-)

மாதவராஜ், கவனத்துக்கு கொண்டு வந்த "Indian" என்பவருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

 
At Saturday, 10 January, 2009, சொல்வது...

சம்பவம் சொன்ன நபர் யாரு??
அவர் உங்க கதயைப் படிச்சுட்டு
அப்புறம் அவங்க கிட்டச் சொல்லி இருக்கலாமோ.

இது ரெண்டுவழியிலயும் வேலை செய்யும் இல்லையா.

இன்னோண்ணு உங்க கதைக்கும் அந்தக் கதைக்கும் சம்ப்பந்தமே இல்லை.
காப்பி அடிக்கறதுல கூட கோட்டைவிடத் தெரிஞ்வங்களா :(((((

நான் நீங்க லின்க் கொடுக்கிற வரை அந்த மாதிரி ஒரு பதிவே பார்த்ததில்லையே.

இந்தப் பதிவூக்கும் சொன்னப்பட்ட சொல்லுக்கும் பதில் வந்தே ஆகவேண்டும்.

 
At Saturday, 10 January, 2009, சொல்வது...

விட்டுவிடுங்கள்னு சமாதானம் சொல்ல எனக்குத்தோணவில்லை.
ஒரு நேர்மையான எழுத்தாளரை
இந்த மாதிரி


சொல்வது அடுக்காது.
இதற்கு ஆவன என்ன செய்யணும்னு நீங்களே தெளிவா யோசீத்துச் செய்வீங்க.

மிகவும் வருத்தமாக இருக்கு உஷா.

 
At Saturday, 10 January, 2009, சொல்வது...

விட்டுத் தள்ளுங்க, இப்படி எத்தனையோ இருக்கும்!

 
At Saturday, 10 January, 2009, சொல்வது...

ம்ம்ம்ம்ம் அப்புறமா யோசிச்சதிலே, நல்லவேளையா, வால்மீகியோ, வியாசரோ என் கிட்டே வந்து சண்டை போடமாட்டாங்கனு நிம்மதியாவும் இருக்கு! :)))))))))

 
At Saturday, 10 January, 2009, சொல்வது...

வல்லி, சம்பவம் என்றாலே அபூர்வ சகோதரர்கள் ஜனக ராஜ் நினைவுக்கு வந்துவிடுகிறார் :-)

கீதா! கீதையை அருளிய மிஸ்டர் கிருஷ்ணனை விட்டுடீங்களே ;-))))))))))))))

வல்லி, கீதா! சில விஷயங்களை ஒதுக்கி தள்ளிக் கொண்டுப் போக முடிவதில்லை. ஓரு
ஒரு விளக்கம்- பதிவு போட்டதும், மனசு லேசாகிவிட்டது.

 
At Saturday, 10 January, 2009, சொல்வது...

Labels: இலக்கியம் ???

என்னாதிது??? :))

 
At Saturday, 10 January, 2009, சொல்வது...

உஷா...பதிவு போதையார் போதை தெளிஞ்சிருவார் என்று நம்புவோமாக...!!

இந்த மாதிரி பழி சுமத்தி பதிவு எழுதுவதற்கு முன்னால ஏன் சம்பத்தபட்டவர தனியா காண்டாக்ட் செய்ய மாட்டேங்கறாங்க இவங்க?? ஒரு வித பாபுலாரிடி கிடைக்கும்னோ?

 
At Saturday, 10 January, 2009, சொல்வது...

ஆஹா இராமு, உன் கண்ணிலாவது பட்டதே :-) இலக்கியம், திருட்டு இது இரண்டுக்கும் இருக்கும் பிணைப்பு தாங்கள் அறியாததா :-))))

ராதா அதே அதே! என் வருத்தமும் அதுதான்.

 
At Saturday, 10 January, 2009, சொல்வது...

காப்பி அடிச்சுட்டீங்களே உஷாக்கா, இப்படிக் காப்பி அடிச்சுட்டீங்களே!! :)))

 
At Saturday, 10 January, 2009, சொல்வது...

விளக்கம் கேட்டறிந்திருக்க வேண்டும் அவர்.

//ஒரு விளக்கம்- பதிவு போட்டதும், மனசு லேசாகிவிட்டது.//

தவறு நம் பக்கம் இல்லையென்றாலும் அதற்கு விளக்கம் கொடுத்தால்தான் நிம்மதி. அதை தெள்ளத் தெளிவாக விளக்கி விட்டீர்கள். இனி வருத்தப் படாதீர்கள்.

 
At Saturday, 10 January, 2009, சொல்வது...

செம காமெடிங்க...

கண்டுக்காம இலக்கிய தொண்டை ஆற்றுங்க..

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

This comment has been removed by the author.

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

//கீதா! கீதையை அருளிய மிஸ்டர் கிருஷ்ணனை விட்டுடீங்களே ;-))))))))))))))//

நல்லவேளையா கிருஷ்ணர் அதை எழுதலை, வாயாலே தானே சொல்லி இருக்கார்! :P:P:P

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

Radha Sriram, I need not worry about popularity. I have it already. I dont expect such demeaning words from you next time onwards!

There is God to take care of anyone!

Note - my email id is on my profile, and no one bothered to write to me!

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

//ஐயா! அம்மா! பிறரைப் பற்றி குற்றம் சாட்டி எழுத்தில் எழுதும்போது கொஞ்சம் கவனமா இருங்கணும். அதில் பெயர் சொல்லி எழுதும்பொழுது கொஞ்சம் யோசிக்கணும். முன்ன கூட பதிவாளர்கள் எல்லாம் மனநோயாளிகள்ன்னு ஒரு பத்திரிக்கையில வந்துது, ஆனா பெயர் சொல்லி இல்லை. அதனால நம்மை சொல்லவில்லைன்னு, கண்டுக்காம போகவில்லை! //

மிகச் சரி.

//ஓரே ஒரு வார்த்தை ஏம்மா, எங்கதையை சுட்டே / திருடினே/ காப்பியடிச்சேன்னு என்னிடமே நேரா கேட்காமல், நீங்க ரெண்டு பேரும் சிரிச்சிருக்கீங்க. இப்ப பாருங்க, எனக்கு சிரிப்பே வரலை :-)//

ஆனா. இதைப் படிக்கிற எங்களுக்கு கண்ணாபின்னான்னு வருதே.. இப்போ எல்லாம் விளம்பரப் பிரியர்கள் அதிகம் ஆய்ட்டாங்க. அதனால இதை லூஸ்ல விடுங்க.. :))

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

This comment has been removed by the author.

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

Ramesh has done the correct thing by pointing out on the very first day when your story came in!

The case of personal vilification is unacceptable!

I think that you have resorted to a method, where in you can gain popularity, selectively forgetting your first comment.

I hope you remove this blog!

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

அனைவருக்கு நன்றி. சிறுகதை கமெண்ட் பாக்சிக் உங்க கமெண்ட் தான் முதலில் வந்திருக்கு. பல
புதியவர்கள் வருவதால், பெயர் மனதில் நிற்பதில்லை. நான் தனிநபர் தாக்குதல், கதை வேண்டி,
பர்சனல் மெயில் ஐடி தருபவர்கள் கமெண்ட் மட்டுமே பப்ளிஷ் செய்வதில்லை. அதனால் நீங்கள்,
இணைப்பு அனுப்பியது வந்ததா அல்லது நான் பப்ளிஷ் செய்யவில்லையா என்று பார்க்கிறேன்.

எப்படியே நீங்கள் கதை எழுதியது, அக்டோபரில், நான் எழுதி அனுப்பியது மே மாதம். மற்றப்படி,
பெயரை குறிப்பிட்டு, ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளரை நக்கல் அடித்தது, என் மீது இருக்கும்,
நம்பதன்மையை குறைக்கும் என்ற வருத்தம்.

எனக்கும் தமிழ் தாய் மொழி இல்லை. சன் டீவி தவிர காதில் தமிழ் விழுவது இல்லை. வணிக்வியல்
படித்ததால், டிகிரியில் இரண்டாம் மொழியும் இல்லை. அனைத்து இலக்கண தவறுகளுடன்
நானும் முட்டி மோதி எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

மனிதன் எங்கிருந்தால் மேடைக்கு வரவும்.

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

இத தான் Great people think alikenu வெள்ளைக்காரன் சொக்கா சொல்லி இருக்கான் இங்க்லிபிசுல. :)))

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

உஷா, முன்னாடி மாயான்னு ஒருத்தரோட கமெண்ட்ஸோட மல்லுகட்டினீங்களே, ஞாபகம் இருக்கா? இப்ப மனிதனா? உங்களுக்கு மட்டும் ஏன் உஷா இப்படியெல்லாம்? ரொம்ப நல்லவங்களா(வடிவேலு இஸ்டைலில் படிக்கவும் :)))) ) இருகறதாலயோ? உங்களுக்கு கமெண்ட் போட்ட இந்தியன்/மனிதன் நீங்களேன்னா, அவரோட போஸ்ட்ல வந்திருக்கற விஜய்ன்ற கமெண்ட்(ப்ரொபைல் அன் அவைலபிளாம்) யாராம்? :))))

சரி, விஷயத்துக்கு வருவோம். பார்க்குமிடமெல்லாம் பரந்தாமன் தெரிவாராம் ஞானிகளுக்கு. அதுமாதிரி எதைப் பார்த்தாலும் ரமேஷ் அய்யாவுக்கும், திவ்யா அக்காவுக்கும் படிக்கற படைப்பெல்லாம் தன்னுடையதாகவே தோணுது போல.. தோணிட்டு போகட்டும் விடுங்க. நல்ல அத்வைத சித்தாந்திகளா வளர அவங்களை வாழ்த்துவோமாக....

டோண்டு சார் ரொம்ப நியாயமான கேள்வி ஒன்னை அவரோட பதிவுல கேட்டிருக்கார், ரெண்டு கதைக்கும் என்ன சம்பந்தம்னு? அதேதான் எனக்கும் டவுட்டு.... என்ன சம்பந்தமோ?

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

இது சம்பந்தமா வித்யா இன்னொரு பதிவு போட்டிருக்காங்க. அதில் நான் இட்டது இப்பின்னூட்டம். அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க:
http://rajnatarajan.blogspot.com/2009/01/blog-post_11.html

Come on Divya and Ramesh. The two stories have nothing in common. What is more, Usha's story precedes Ramesh's.

I read both the stories and do not see anything similar.

The plot involving coming up by hard work is definitely not Ramesh's sole copyright. Both you and Ramesh went on to suggest that she not only copied but made a few hundreds of Rupees. This is clear libel.

Yet you and Ramesh seem to take offence here, which is not at all warranted.

By the way you say "plagiarized (internalized)". They are not the same either.

//ரமேஷ், இனிமேல், இந்த தமிழ் எழுத்தாளர்கள் பற்றி என்னிடம் பேசும் போது, அவர்களே தவறு செய்திருந்தாலும், அவர்களின் அனுமதி பெற்று, என்னிடம் பேசவும். நன்றி.//
This remark is quite uncalled for and borders on unrepentant arrogance.

Regards,
Dondu N Raghavan

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

நான் உங்களோட அந்த கதைக்கு தனியாக நீண்ட விமர்சனம் எழுதிய தேதி செப்டம்பர் 14. அது சம்பந்தமா எனக்கு நீங்க பதில் தனீமடலில் பதில் தந்தது செப்டம்பர் 15 - 2008.

அந்த விமர்சனத்தில் கூட நான் "அட்மிஷன் மொத்தத்தில் ஆஸ்பத்திரியில் ஆகாம இருந்தா சரிதான்" என வேடிக்கையாக குறிப்பிட்டு இருந்தேன்.

என்னவோ போங்க:-))))

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

மனசாட்சிதாங்க முக்கியம். இருந்தாலும் நம்ம "தவறு செய்யவில்லை" என்பதை நம்மால் முடிந்த அளவுக்கு உலகுக்கு சொல்லிவிடுதல் நல்லது. அதைத்தான் நீங்க செஞ்சு இருக்கீங்க!

பதிவுபோதை பற்றி தெரியாது. இதை ஒரு நல்ல பாடமாக, நீங்க மட்டுமல்ல, நானும், மற்றும் கதை எழுதுகிற அனைத்து தமிழ் வலைபதிவரும் எடுத்துக்கொண்டு கவனமாக எழுது வோம்!

உங்களுக்கு ஒரு பழைய பாடல் வரிகள்:

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பார்த்துக்கோ நல்லபடி!

உங்க மனசப்பார்த்துக்கோங்க!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

கமன்டுகளை படிப்பது சுவாரசியமாக உள்ளது.

திவ்யாவின் பதிலடிகள் அருமை. அவரின் பதிவில் உள்ள திடம், காரம் அமெரிக்காவின் கொள்கை வெறி போல உள்ளது.

ரமேஷ், நீங்கள் எதற்கு தலை தாழ்த்த வேண்டும்? உங்கள் முதல் கமன்டை அவர் (உஷா ராமசந்திரன்) ஏற்றுக்கொண்டு பின் மறந்தால், நியாயம் உங்கள் பக்கம் தான்.

அவர் தன் பதிவில் உள்ள தமாஸ் கமன்ட்களை நீக்குவாரா? உங்களை திட்டி எழுதிய பதிவை எடுத்துவிடுவாரா?

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

This comment has been removed by the author.

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

----தவமாய் தவமிருந்து சேரனும் கஷ்டப்பட்டு பொறியல் படிச்சாரே ! வடிவேலு, சின்னிஜெயந்த் எல்லாம் பொறியல் படிச்சிருக்காங்களே, சினிமாவில்! அவிங்களும் சண்டைக்கு வருவாங்களோன்னு ஓரே யோசனை!----

:)

சாரு நிவேதிதா - ஆபிதீன் போல் இதுதான் துவக்கம் :D

தாங்கள் செல்ல வேண்டிய தூரம் அதிகம் :)

இதெல்லாம் ஃப்ரீயா விடுங்க!

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

மன்னிப்பு கேட்கிறேன் என்னும் தலைப்பில் ரமேஷ் இட்ட இடுகையில் எனது இந்த பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது. போடுவார் என நினைக்கிறேன். அல்லது திவ்யா செய்தது போல போட மறுப்பாரோ அதுவும் நான் அறியேன்.

// "நல்லபடியாக யோசித்து கமண்ட்ஸ் போடுங்கள்! தேவையில்லாமல் கமன்ட் போடுவது தவறு. ஐடி ஆக்ட் படி, தண்டனைக்குரியது. அப்பப்ப வந்துட்டு போங்க!" வாசகம் படிக்கவும். இஷ்டமிருந்தால் தான் பப்ளிஷ் செய்வேன்!//
இதை நீங்கள் ஞாபகம் வைத்து கொண்டது மாதிரி தெரியவில்லையே. இரு கதைகளுக்கும் என்ன சம்பந்தம் என நான் கேட்டதற்கும் பதில் இல்லை. நீங்களும் உங்கள் நண்பியும் சேட் செய்தபோது திருமதி ராமசந்திரன் உஷா காப்பியடித்து சில நூறு ரூபாய்கள் சம்பாதித்திருப்பார் என பேசியது பொறுப்பற்றதனத்தின் உச்சக்கட்டம். அதையும் பதிவாக திவ்யா போட்டது பொறுப்பற்றதனத்துக்கு மேலும் மெருகூட்டுகிறது.

பை தி வே ராமச்சந்திரன் உஷா என்பவர் பெண்தான். He or she எல்லாம் வேண்டாமே.

உஷாவுக்கு நீங்கள் கொடுத்த கமெண்டில் அவரது கதை உங்கள் கதையின் கருவைப் போலிருக்கிறது என்றீர்கள். அவரும் மரியாதைக்கு உங்களிடம் சுட்டி கேட்டார். அதற்கு உங்கள் வலைப்பூவின் சுட்டி தந்ததாகக் கூறியிருக்கிறீர்கள். அவர் அதற்கு மேல அதை படித்தாரா இல்லையா என்பது இங்கு தேவையில்லாத விஷயம்.

உங்கள் சோகால்ட் கதைக்கரு என்னவென்று பார்த்தால் தன் உழைப்பால் முன்னேறியவன் கதை என்று சிரிக்காமல் கூறுகிறீர்கள். இதற்கு ஏதேனும் காப்பிரைட் வைத்துள்ளீர்களா என்ன?

மன்னிப்பு கேட்கிறேன் பேர்வழி என நீங்களும் திவ்யாவும் இன்னும் அதிக காமெடி செய்கிறீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

அனைவருக்கு நன்றி.

டோண்டு சார், இந்த காமடி எல்லாம் ஜூஜூபி! நாம பார்க்காத கூத்துக்களா :-)))))

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

அப்ப ரமேஷ், திவ்யா & விஜய் எல்லாம் வேற வேற ஆளா!!!!!!????
நல்லாகீதே மேட்டர்ர்ர்ர்!!!!!!

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

உஷா.. ஒன்னு நல்லாப் புரியுது. நீங்க பெரியாளாயிட்டீங்க. சூப்பரு.

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

http://pathivubothai.blogspot.com/2009/01/blog-post_11.html இந்த சுட்டியில் பதிவு செய்த எனது கருத்து இங்கே தகவலுக்காக..

------------

ரமேஷ்,

கதைகள் படிப்பதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றாலும், பதிவு எழுத்துகள் மூலம் நான் அறிந்த வரை 'உஷா' சில நூறு ரூபாய்களுக்காக(அல்லது எவ்வளவு ரூபாய்க்காகவும்) அடுத்தவர் உழைப்பை அபகரிப்பவர் அல்ல.

**

உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் இடையே நடந்தது தனிப்பட்ட உரையாடலாக இருந்தாலும், இப்படியெல்லாம் பேசுவீர்கள் என்று தெரியவரும் போது வருத்தமாகத்தான் உள்ளது.

**

நீங்க சொல்றது.....
//நானும், எனது பதிவுபோதை ப்லோக் URL கொடுத்தேன். என் ப்லோக் ப்ரோபையில் மூலம் இமெயில் தெரிந்து மெயில் செய்திருக்கலாம். //

//Can't he or she, have clicked the profile and seen my blog and found the story?//



நீங்கள் செய்வது..

//ராமசந்திரன் உஷா (ஆணா? பெண்ணா?) //

இந்த ஆண் பெண் கேள்வியை எழுதும் முன் நீங்களும் அவரின் ப்ரோபல் பார்த்து இருக்கலாம் அல்லவா.

http://www.blogger.com/profile/00988547166819931579

ramachandranusha(உஷா)

* Gender: Female
* Location: India

*****

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

I left this comment in Divya's blog, leaving this here for you also. It's up to you to publish or not.

"As readers of Tamil blogs, we personally may feel better if we ALL can stop discussing this issue. Both of you (Ramesh & Divya) are keeping the specific posts and links about this issue, while removing only the author's name in the post.

Come on, in the spirit of global freedom of speech AND global citizenship, either remove all the posts (AFAIK, 2 from Divya, 1 each from Ramesh/Usha/Vinitha) about this issue; or, expect Usha to keep the post and remove names as you're doing.

All information I have on this issue are only from the posts referred to above. COOL IT, GUYS!"

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

இப்பின்னூட்டம் ரமேஷின் மன்னிப்பு கோரும் பதிவில் பின்னூட்டமாக இட்டுள்ளேன். பார்க்க: http://pathivubothai.blogspot.com/2009/01/blog-post_11.html

//Divya has removed the name reference! Haven't you checked on that?//
பார்த்தேன். உஷாதான் அது என்பது எங்கள் எல்லோருக்கும் இப்போது தெரியுமே. வெறும் பெயரை எடுத்துவிட்டால் அவர் உங்கள் கதையை காப்பி அடித்து சில நூறுரூபாய்கள் சம்பாதித்தார் என அவதூறாக எழுதியது மறந்து விடுமா? ஒருவன் போராடி முன்னுக்கு வருகிறான் என்பது உங்கள் காப்பிரைட்டில் உள்ளதா?

உண்மை கூறப்போனால் உஷாவின் கதையில் முன்னுக்கு வந்தவர் இன்னொருவர் முன்னுக்கு வர உதவி செய்கிறார். ரிசர்வேஷனில் கிரீமி லேயரை எதிர்க்கிறது அக்கதை. இன்னும் பல விஷயங்களைக் கூறலாம்.

நீங்கள் யாரிடமாவது கோபம் கொள்ள வேண்டுமென்றால் உங்கள் நண்பர் வித்யாவிடம்தான் கொள்ள வேண்டும். நீங்கள் இரண்டுபேர் சேட் செய்ததை அவர்தான் வெளிச்சம் போட்டு பதிவில் எழுதினார்.

பை தி வே அவர் எனது ஒரு பின்னூட்டத்தை போட மறுத்துள்ளார். அதை நான் உஷா அவர்கள் பதிவிலும் பின்னூட்டமாக போட்டிருக்கிறேன். நீங்களே அதை படித்து பாருங்கள். அதை இங்கேயும் தந்துள்ளேன்.

“Come on Divya and Ramesh. The two stories have nothing in common. What is more, Usha's story precedes Ramesh's.

I read both the stories and do not see anything similar.

The plot involving coming up by hard work is definitely not Ramesh's sole copyright. Both you and Ramesh went on to suggest that she not only copied but made a few hundreds of Rupees. This is clear libel.

Yet you and Ramesh seem to take offence here, which is not at all warranted.

By the way you say "plagiarized (internalized)". They are not the same either.

//ரமேஷ், இனிமேல், இந்த தமிழ் எழுத்தாளர்கள் பற்றி என்னிடம் பேசும் போது, அவர்களே தவறு செய்திருந்தாலும், அவர்களின் அனுமதி பெற்று, என்னிடம் பேசவும். நன்றி.//
This remark is quite uncalled for and borders on unrepentant arrogance”.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

Few moments back, I put this comment in Mr.Ramesh's post.

//OMG.
Lots of water has flown under the bridge since my comment in Usha's post.

Well, let me just clarify that I'm not Ramachandran Usha.
Please refer to various comments I've posted in Divya's blogs much earlier to this incident.

I'm a regular visitor to Tamil blogs for many years. I've read Ms.Usha's blogs for the past few years through Thamizhmanam.

When I read about your private conversation in Divya's blog, I thought it needs Usha's attention to set records straight. Hence my comment in her post.

Nothing more to add.//

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

உஷா,
நல்லது நடக்கும். ஜிரா சொன்னது போல பெரிய ஆளா, பெண்மணியாக ஆக்கிவிட்டார்கள்:)

அதாவது ஏற்கனவே பிரபலம்தான். இப்ப இன்னும் பிரகாசமாகி யிருக்கிறது.
உங்களைப் பற்றித் தெரியாமல்
பேசி விட்டார்கள்.
டேக் இட் ஈசினு சொல்லலாம்.:((

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

மீண்டும் பின்னுட்டம் இட்டவர்கள் அனைவருக்கும் நன்றி.

கதை சம்மந்தமே இல்லாத கரு, ஆகஸ்டிலேயே கல்கி பத்திரிக்கையில் லிஸ்ட் ஆகிவிட்டது என்று பலரும் சொல்லியும், அவர்கள் கவனித்ததாய் தெரியவில்லை. செய்த தவறை ஒத்துக்கொண்டு மன்னிப்பு
கேட்பது என்றால், ரெண்டே வரிகளில் ஏதோ தப்பு/ தவறு நேர்ந்துவிட்டது மன்னிக்கவும் என்று
சொல்லி, போஸ்ட் எடுத்துவிடுவார்கள். இதைத்தான் இத்தனை நாள் நான் பதிவுலகில் பார்த்தது.ஆனால் இப்பொழுது நடந்துக் கொண்டு இருப்பது அப்படியல்ல. இந்த ஐந்தாண்டு தமிழ் இணையத்தில் என்ன கோபம் வந்தாலும், கடுமையான வார்த்தையை நான் உபயோகப்படுத்தியதில்லை.ஆனால் மன்னிப்பு என்ற போர்வையில்
நக்கலும், தவறே செய்யவில்லை என்ற தொனியும், திரும்ப திரும்ப என் பெயரும் அடிப்படுவதால்,
இந்த பதிவை எடுக்கவும் மாட்டேன். பெயர்களை நீக்கவும் மாட்டேன்.

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

உஷா மேடம்,

இரண்டு கதைக்கும் தொடர்பே இல்லை என்பது அவற்றை படித்த அனைவருக்கும் தெரியும். நீங்கள் அவ்வாரெல்லாம் செய்யக் கூடியவரல்ல என்பது அந்த கதைகளை படிக்காதவர்களுக்கும் தெரியும். குறிப்பிட்ட பதிவர்களின் பதிவுகளை பார்க்கும் பொழுது ஈகோவும் , ஒரு சின்ன விஷயத்தை கூட புரிந்து கொள்ள முடியாத இயலாமையும் தான் தெரிகிறது. இதற்கு மேல் இதைப் பற்றி யோசிப்பதே கால விரயம். இதையெல்லாம் மறந்து விட்டு நல்ல ஏகாம்பரி பதிவு ஒன்று போடுங்கள். :)

வந்தியத்தேவன்
ஏகாம்பரி ரசிகர் மன்றம்
ஃ ப்ளோரிடா கிளை

 
At Sunday, 11 January, 2009, சொல்வது...

நீங்கள் செய்தது நியாயம் கிடையாது. ரமேஷ் தான் உங்கள் கதையில் முதலில் கமன்ட் போட்டுள்ளார்.

அவர் பதிவுலும் சொல்லியுள்ளார்.

//அதில் நான் தான் முதல் கமண்ட்ஸ் போட்டுள்ளேன். என் கதைகள் மாதிரி உள்ளது என்று.... கிழே பாருங்கள்....

//
Hi Nice Story!

I reminds me of multiple stories that I have written in my blog over the last 2 months.

Appreciate your inputs on them!

Regards
Ramesh

4:39 AM//
நான் reminds me என்று சொன்னது , காப்பி அடித்ததாக சொல்லவில்லை, ஞாபகம் ஓடுகிறது. ஒரே மாதிரி இருக்கிறது, என்றும் கொள்ளலாம்.//

இந்த பதிவின் நோக்கம், அவர் உங்களிடம் கேட்கவில்லை என்பதால் தானே?

இப்போது தான் தெரிந்துவிட்டதே, நீங்கள் தான் மறந்துவிட்டீர்கள் என்று. இது என்ன விளையாட்டு?

நீங்கள் சுட்டி காட்டியிருக்கும், ஆங்கில பதிவு, திவ்யா எழுதியது இப்போது இல்லை.

 
At Monday, 12 January, 2009, சொல்வது...

இது தான் எனக்கும் (TOEFL செய்து) ஆங்கிலம் தெரியும்னு நான் போட்ட பின்னூட்டம் - more or less. நேற்று 10:45pm ESTக்கு போட்டது, அப்புறம் (last comment at 11:05pm EST) குறிப்பிட்ட பதிவு நீக்கப்பட்டிருக்கிறது.

"Imaginary scenario: Let's say I heard a rumour in the office grapevine and I published it in an email for the world to see, it would be an understatement to say I was out of line. Then if the "informant" told me that the information is probably not true;-), and then I still won't undo what I said, out of vanity, what happens to the imaginary line? Way out.

Why do you still refer to Usha as "she(?)"? My blog-posts are not published in "female-power" google reader for women Tamil bloggers; Yours and V.'s are all; so are U's, incidentally way longer than yours/V's. Nobody is questioning whether you/V are women bloggers.

I'd suggest you remove this post. Also, as of 10:45pm EST, your link to U.'s post is still there."


நீங்கள் ரமேஷின் பின்னூட்டத்தை கவனிக்க மறந்தது அநியாயம் என்று சொல்ல மாட்டேன். சரியும் அல்ல. ஆனால், 4 பதிவர்கள் vs 1 பதிவர், கோடிகோடியாய் சம்பாதிப்பது/நூற்றுக்கணக்கில் எழுத்தாளரின் சம்பளம் எல்லாவற்றையும் என்ன சொல்வது:-(

 
At Monday, 12 January, 2009, சொல்வது...

உஷா, நானும் விட்டுடலாம்னு பாத்தா ஏன் இப்படி போட்டு படுத்தறாங்கன்னு தெரியலையே... இந்த குரூப் மொத்தத்துக்குமே ஒரு தனி மொழியகராதி இருக்கும் போல, சொல்லுறது எல்லாத்தையும் சரியா தப்பாவே புரிஞ்சுக்கறாங்கப்பா. இந்த ஒரு முறை விம் போட்டு பாக்கறேன்.

அய்யா விஜய்,

உங்க கமெண்ட் என்னோட பதிவுல கிடைச்சுது. முதல்ல நீங்க, ரமேஷ் எல்லாரும் ஒரு விஷயத்தை புரிஞ்சுக்குங்க. எந்த பதிவுல விவாதம் போயிகிட்டிருக்கோ அங்க மட்டும் நம்ம வாதத்தை எடுத்து வச்சாலே போதும்ன்றது பொதுவா தமிழ் வலையுலகின் வழக்கம். விவாதத்துல பங்கு பெறுகின்ற அனைவரும் விவாதிக்கப் படற எல்லா பதிவையும் தொடர்ந்து கவனிச்சு, நம்ம பாயிண்ட்டுக்கு பதில் வந்திருந்தா நாமளும் அதுக்கு பதில் சொல்லிடுவோம். எனவே, அநாவசியமா எதுக்கு ஒருத்தர் ஒருத்தர் லிங்கா பிடிச்சு போய் அவங்க எழுதியிருக்கற சம்பந்தமே இல்லாத பதிவுகள்ல உங்களோட பதிலை போட்டுகிட்டிருக்கீங்கன்னு தெரியலை. மென்பொருள் துறைல இருந்துகிட்டு, இண்டஸ்ட்ரி இன்னிக்கு இருக்கற நிலமைல கூட இவ்ளோ டைம் செலவழிக்க முடியுது அப்படின்றது எனக்கு ஆச்சரியமாதான் இருக்கு. :))

ஒகே, இப்ப விஷயத்துக்கு வருவோம்.

//உங்களுக்கு கமெண்ட் போட்ட இந்தியன்/மனிதன் நீங்களேன்னா, அவரோட போஸ்ட்ல வந்திருக்கற விஜய்ன்ற கமெண்ட்(ப்ரொபைல் அன் அவைலபிளாம்) யாராம்? :))))//

மேலே இருப்பது நான் உஷாக்கு போட்ட கமெண்ட். இதில் என்ன தவறு இருக்கிறது? தவறாக எழுதியிருக்கிறேனா, தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்களா? உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.

முதலில் தனக்குத் தானே பின்னூட்டம் போட்டுக்கறதா உஷா மேல அபாண்டம் சுமத்தினது உங்க அருமை நண்பர். அதுக்கு பதிலா நான் ஒரு ஹைபத்தாட்டிக்கலா ஒரு கேள்விய கேட்டிருந்தேன். இந்தியன்ற பெயரில் உஷா தனக்குத் தானே கமெண்ட் போட்டுகிட்டார்னு ரமேஷால சொல்ல முடியும்னா அதே போல ப்ரொபைல் ஷேர் பண்ணிக்காத ஒருத்தர் உங்களுக்கு கமெண்ட் போட்டிருக்காரே, அதையும் அப்படியே சொல்லலாமான்னு கேட்டிருந்தேன். இதுல நான் தீர்மானமா உங்களை குற்றம் சாட்டி பேசலை, ஆனா உடனே அது வரை ஷேர் பண்ணிக்காம இருந்த உங்களோட ப்லாக் பொது பார்வைக்கு வந்துட்டதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்தான். :)) மென்பொருள் துறைல இவ்ளோ வருஷம் குப்பை கொட்டிட்டு இருந்துட்டும் இவ்ளோ தப்புத் தப்பா சொல்ற விஷயத்தை புரிஞ்சுக்கற உங்க ஸ்பெஷாலிட்டி என்னை ஆச்சரியப் படுத்துது. நானும் நீங்க requirement gathering phase-ல எல்லாம் இப்படி புரிதலை காட்டினா எப்படியிருக்கும்னு கற்பனை பண்ணி பாக்கறென்.. :)))

பி.கு: ரமேஷ்/விஜய்/etc., இதுக்கு மேல உங்க குழுவுல இருக்கற யாரோட எந்த கேள்விக்கும் நான் பதில் எதும் சொல்லப் போறதில்லை. மங்களம் மங்களம்... சுபமங்களம்.

 
At Monday, 12 January, 2009, சொல்வது...

கமெண்டுகளில் கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி. அவரவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது. அதை நான் மதிக்கிறேன். என்னுடைய நிலையை நான் பல முறை தெளிவாய் சொல்லிவிட்டேன். இனி இந்த விஷயத்தை "இங்கு" இத்துடன் முற்று புள்ளி வைக்க விரும்புகிறேன். இனி இந்த பதிவில் வரும் பின்னுட்டங்கள் என் தனிப்பட்ட பார்வைக்கு மட்டும்.

 
At Tuesday, 13 January, 2009, சொல்வது...

People forgot about one important fact and discussing irrelevantly about internalization and other issues meaninglessly.

The fact here is, your story precedes his story, that means you didn't internalize him. Its very simple. This shows that he and his groups are blabbering baselessly.

Also a mistake in your post is, you have specified this but it was diluted with so many distraction.

Just write precisely to highlight this fact.

 
At Wednesday, 21 October, 2009, சொல்வது...

//கமெண்டுகளில் கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி. அவரவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது. அதை நான் மதிக்கிறேன். என்னுடைய நிலையை நான் பல முறை தெளிவாய் சொல்லிவிட்டேன். இனி இந்த விஷயத்தை "இங்கு" இத்துடன் முற்று புள்ளி வைக்க விரும்புகிறேன். இனி இந்த பதிவில் வரும் பின்னுட்டங்கள் என் தனிப்பட்ட பார்வைக்கு மட்டும்.//

???

 
At Wednesday, 21 October, 2009, சொல்வது...

ரங்கன், சரியா பார்க்காம, (தேதி பாருங்க jan, 2009 இவ்வளவு நாள் கழிச்சி) என் கவனக்குறையில் அவசரத்தில் கிளிக் செய்துவிட்டேன்.

 

Post a Comment

<< இல்லம்