Tuesday, October 18, 2005

தமிழகத்தில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு.

பல்வேறு சம்பவங்கள், செய்திகள் இவற்றை அடிப்படையாய் கொண்டு கண்டுப்பிடிக்கப்பட்ட உண்மைகள்.
1) இந்தியா முழுதும் குற்றவாளிகள் சுதந்திரமாய் உலாவுகிறார்கள்.
2) கொலை செய்ய உட்பட அனைத்து குற்ற செயலுக்கும் கூலிக்கு ஆள் கிடைக்கிறார்கள்.
3) பணத்திற்காக மருத்துவர் கொலைக்கு தலை அசைக்கிறார்.
4) மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடும் நோயாளியை அவர் எதிரிகள், அங்கு வேலைப் பார்க்கும் நர்ஸ், ஆயா, வார்ட்பாய் உதவியுடன்,
கொலை செய்யலாம்.
5) கொலையாளியே ICU வில் சென்று கொலை செய்யலாம்.
6) கடத்தில் தொழில் சர்வசாதாரணமாய் நடக்கிறது.
7) பாங்கில் கோடிக்கணக்கான பணம் வெகு சுலபமாய் கடனாய் வாங்க, வங்கி மேலாளருக்கு சில சதவீதம் லஞ்சமாய் தர வேண்டும்.
8) காவல் துறையினரைப் பற்றி சொல்லவே வேண்டாம். யாரை வேண்டுமானாலும் லாக்கப்பில் வைத்து உதைக்கலாம். எப் ஐ ஆர் என்பதெல்லாம் இல்லவேயில்லை. பணம் கொடுத்தால் விட்டு விடுவார்கள்.
9) மந்திரிகள், எம்.எல்.ஏக்கள் போன்ற அனைத்து அரசியல்வாதிகளும் மோசமானவர்கள்.
10) நீதிபதிகள், வழக்கறிஞர்கள் போன்று அனைத்து துறையினரும் மோசமானவர்களே. இவர்கள் தொடர்ப்புகள் எல்லாம் குற்றவாளிகளுடன் மட்டுமே.
ஹி! ஹி! ஒன்றுமில்லை. மருத்துவர் கட்டாய ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதால், தொலைக்காட்சியின் தொடர்களைப் பார்த்த வேகத்தில் மேலே உள்ளதை தட்டச்ச்சு செய்தேன். இந்த அபத்தங்களுக்கு ஏன் இன்னும் சென்சார் வைக்கவில்லை என்ற கேள்வி தொடர்களைப் பார்த்தப் பொழுது தோன்றியது.
தமிழோவியத்தில் தொலைக்காட்சி தொடர்களைப் பற்றி எழுதிய கிண்டல் இதோ!

http://www.tamiloviam.com/unicode/01130506.asp

4 பின்னூட்டங்கள்:

At Tuesday, 18 October, 2005, சொல்வது...

இதுக்கெல்லாம் கடுமையான தண்டனை இயற்றுவதால் மட்டுமே தீர்வு காண முடியும்

இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்

 
At Tuesday, 18 October, 2005, சொல்வது...

இன்னும் சில நாட்களுக்குள் சீரியல்களில் வரக்கூடிய ஒன்று -இன்னொரு சேர்க்கையாக!
11. நன்கு படித்தும், கணினி விற்பன்னர்களாக இருக்கும் இன்றைய தலைமுறையினர், ப்ளாக்குகளில் பொறுப்பற்ற முறையில் தங்களுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்புகளை தவறவிட்டு, பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்கள்.

 
At Tuesday, 18 October, 2005, சொல்வது...

ஞானியாரே, இந்த கர்மாந்திரத்தை எப்படிதான் பொழுதுக்கு பார்க்கிறார்களோ? பொறுமையின் திலகங்கள் என்று சொல்ல வேண்டும்.
தருமி நீ சொன்னது சரியா புரியலையே?

 
At Thursday, 20 October, 2005, சொல்வது...

ஆக, தமிழர்கள் அனைவரையும் கொஞ்ச நாள் அந்தமான் தீவில் சிறை வைத்து புத்தி புகட்ட வேண்டியதுதான்!

 

Post a Comment

<< இல்லம்