Sunday, February 05, 2017

ஒடிசா -ஒரு நுனிப்புல் மேய்ச்சல்- 2

அடுத்த நாள் முழுக்க ரயில் பயணம். செகண்ட் ஏசியில் போவதற்கு விமானத்திலேயே போயிருக்கலாம் என்று வீட்டில் முணு முணுப்பு வந்தாலும் என் நீண்ட ரயில் பயண மோகம் தெரிந்து பேசாமல் இருந்துவிட்டார்.
அஸ்ஸாமிலும், உ.பியிலும் இருந்தப் பொழுது கோதாவரியும் சில்கா ஏரியும் வழி நெடுக வரும் பசுமையும் , ஜன்னல் ஓர சீட்டும், காதில் இளைய ராஜா பாட்டுக்களும் மான பயணம், ஏறி உட்கார்ந்து இப்படி அப்படி அசையாமல் நாலு மணி நேர விமான பயணம் சுத்த போர் ;-)
தெலுங்கு படமான " கோதாவரி" பார்த்ததில் இருந்து கோதாவரி மீதான காதல் இன்னும் அதிகமாகிவிட்டது ;-)
கூட பயணித்த பேராசிரியர் சுவாமிநாதன் மற்றும் அவர் மனைவி, இரண்டு மகள்கள், சுவாமிநாதன் சாரை பார்த்திருந்தாலும் அறிமுகமில்லை.
ஆனால் அவர் முதல் நாள் அசோக சக்கரவர்த்தி, அவர் எழுப்பிய தூண்கள் ஆங்கில தொல் பொருள் ஆராய்ச்சியளர்கள் பற்றிய பேச்சு மிக அருமையாகவும், விஷயங்கள் நிறைந்ததாகவும் இருந்தது.
அவருடன் கொஞ்சம் தயக்கமாகவே பேச ஆரம்பித்தேன்.என்னை பற்றிக் கேட்டார். சுய பிரதாபம் லிமிட்டாய் விட்டேன்.
அவர் தன்னுடைய அண்ணா மொழிப்பெயர்ப்பாளர் சு.கிருஷ்ண மூர்த்தி என்றதும், ஆஹா என்று தயக்கம் எல்லாம் போய் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டேன்
.
அவரை பற்றி நான் முகநூலில் எழுதியதை தேடிப் பிடித்து காட்டினேன்.
அவர் மொழிப்பெயர்த்த நீலகண்ட பறவையை தேடி,, விடியுமாவும், கொல்லப்படுவதில்லை, வங்க மொழி சிறுகதைகள், இன்னும் ஒரு யாத்திரை - பெயர் மறந்துவிட்டது இவை எல்லாம் என் கலெக்‌ஷனில் இருக்கிறது.
அவரை பற்றியே பேசிக்கொண்டு இருந்தோம். இ.பாவின் குருதிபுனலை வங்காளத்தில் மொழிப் பெயர்த்து அதற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்ததாம்.
ஒரு மீட்டிங்கில் மறைந்த வங்க முதல்வர் ஜோதி பாசு, என்னை விட கிருஷ்ணமூர்த்தி நன்றாக பெங்காலி பேசுவார் என்று சொன்னாராம்.
சுவாரசியமான பேச்சு கச்சேரி, ஆந்திராவின் வயல்வெளிகள், பிரமாண்ட கோதாவரி, அதை விட பெரிய சில்கா ஏரி என்று கண்ணுக்கும், காதுக்கும்
விருந்துதான்.
சுமார் எட்டு மணியளவில் OTDC பஸ்ஸில் ஏறி அவர்களின் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். அதற்குள் விமான பார்ட்டிகளும் வந்து சேர ஜமா சேர்ந்தது.
நல்ல உணவு, நல்ல அறை நானும் என் ரூம் மேட் வசந்தா அவர்களும் எங்களூக்கு ஒதுக்கிய அறைக்கு போய் சேர்ந்தோம்.

1 பின்னூட்டங்கள்:

At Sunday, 05 February, 2017, சொல்வது...

நீலகண்ட பறவையைத் தேடி நாவலுக்கு அடுத்து மிக அற்புதமான பயண நூல் < திரு.சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மொழிப்பெயர்த்த " மணி மகேஷ்" திரு. உமா பிரசாத் முகோபாத்தியாய் எழுதியது.
அருமையான மொழிக்கும், அழகான இமயமலை, பயணங்களில் ஆர்வம் உள்ளவர்கள்
சாகித்ய அகாதமி வெளியிடான இந்த புத்தகத்தை படிக்கவும்

 

Post a Comment

<< இல்லம்