Wednesday, October 19, 2005

ஆத்தா நா பாசாயிட்டேன்

அட என் பதிவும் தமிழ்மணம் லிஸ்டுல இருக்குதுங்க. பச்சை விளக்கு பிரகாசமாய் எரியுது. ஆனா, சில சந்தேகங்கள் மண்டையைக் குடையுது. தனிமனித சுதந்திரம், என் கொள்கை மற்றவர்களை பாதிக்காத வரையில்தான் என்பதில் எனக்கு முழு உடன்பாடு. பத்மா சொல்வதும் சரியாய் இருக்கிறது. ப.வி.ஸ்ரீரங்கன் எடுத்து சொல்வதை மறுக்கமுடியாது. முழு சுதந்திரம் இல்லாத இடத்தில், கட்டுப்பாடுகள் கொண்ட இடத்தில் என்னாலும் இருக்க முடியாது.

ஆனால் சுயகட்டுப்பாடுகள் மனிதனுக்கு அவசியம் என்பது பத்மாவின் எழுத்தில் புரிகிறது. ஆனால் அப்படி இல்லாத பொழுது, ராகவன் அவர்கள் சொல்வதைப் போல கருத்து சுதந்திரம் தானே மனிதன் அறிதலுக்கு முழு காரணம்!
இணைய தொடர்ப்பு ஏற்பட்டவுடன், என் கருத்துக்கள் எண்ணங்கள் இவற்றில் பல மாற்றங்கள். நான் இதுவரை நினைத்திருந்த பல விஷயங்களில் எதிர்மறை கருத்தாளர்கள் எடுத்து சொன்னதில் என்னுள் பல மாற்றங்கள். பல விஷயங்கள் யோசிக்க வைத்துள்ளன.

ஆனால் அதே சமயம், சொல்வதில் நாகரீகம் வேண்டும் என்பதை நாம் எல்லாருமே சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.
இணையத்தில் மிகப் பெரிய குறை, சமூகத்தில் பெரியவர், நல்லவர், அறிஞர், நல்ல நட்பு என்று நாம் நினைத்துக் கொண்டுருப்பவர் கூட போலி பெயரில் வந்து எதை வேண்டுமானாலும் உமிழ்ந்து விட்டுப் போகலாம். ஆனால் அதையும் கண்டுப் பிடிக்கும் தொழிற்நுட்பம் வரும் என்று நம்புகிறேன். அன்று பலரின் முகத்திரை கிழியும். அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

காசியின் உழைப்பு பாராட்ட வேண்டிய ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழ்மணம் என்றாலே காசி என்று பெயர் வாங்கிவிட்டார். இதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனாலும் தன்னிச்சையாய் அவர் எடுத்த இந்த முடிவுகள் பல சந்தேகங்களையும், குழப்பங்களையும், என்னைப் போன்று வெளியில் இருந்து வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு பல கேள்விகளையும் ஏற்படுத்துகின்றன.

ஒருவர் மதத்தின் நம்பிக்கையை இன்னொருவர் கேலி செய்து பரஸ்பரம் இட்டுக் கொண்ட பதிவுகளைக் கூட வெகு சிலரைத் தவிர மற்றவர்கள் கண்டுக் கொள்ளவில்லை. அதில் தாக்கி பின்னூட்டம் இட்டவர்கள் கூட வெகு சிலரே. அப்படி இருக்க, அருணின் பதிவு ஏன் நீக்கப்பட்டது? சிவகுமார் விலகும் அளவு என்ன நடந்தது? இணையகுசும்பன் என்ன அப்படி எழுதினார்? ஒண்ணுமே புரியலைங்க!

பி.கு குஷ்பூக்கு அடுத்து இந்த மேட்டர் எத்தனை நாளுக்கு ஓடும்?

14 பின்னூட்டங்கள்:

At Thursday, 20 October, 2005, சொல்வது...

நானறிந்த வரையில், அருணின் பதிவு நீக்கப்படவில்லை. இன்னும் சிலரின் பதிவுகளும் பச்சை விளக்கு இல்லாவிட்டாலும் திரட்டப்படுகிறது. பச்சை விளக்கு நிரலியில் ஏதோ பிழை என நினைக்கிறேன்.
சிவகுமாரே கேட்டுக் கொண்டாலும் அவரின் பதிவும் நீக்கப்படவில்லை.

என்றைக்குமே 'Volunteering is a thankless job'. அதைத்தான் தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

 
At Thursday, 20 October, 2005, சொல்வது...

மிக சரி சுதர்சன். இலவச பொது தொண்டு சேவை என்றாலே பாராட்ட நாலு பேர்கள், தூற்ற நாற்பது பேர்கள் வருவார்கள். அதன்
தலைவிதி. திரும்ப சொல்கிறேன், காசியின் சேவையை குறை சொல்லும் எண்ணம் இல்லை. ஆனால் மாற்றம் ஏற்பட்டுள்ள இந்த
நிலையில் என் பங்கிற்கு சில கேள்விகள். அவ்வளவுதான்.

இதில் சொல்லாமல் விட்டது, பலமுறை
தமிழ்மணம் உரிமையாளர்கள், தொகுப்பது மட்டுமே எங்கள் வேலை, பதிவில் என்ன உள்ளிடப்படுகிறது என்பதை கவனிப்பது
எங்கள் வேலை இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். ஆக, இப்பொழுது இந்த தணிக்கை நடவடிக்கைக்கு என்ன காரணம்?

 
At Thursday, 20 October, 2005, சொல்வது...

உஷா, நீங்கள் குறை சொல்கிறீர்கள் என நான் நினைக்கவில்லை.

காசி பல இடங்களில் வாங்கிக் கொண்டிருக்கும் இடியை பற்றியது அது.

//ஆக, இப்பொழுது இந்த தணிக்கை நடவடிக்கைக்கு என்ன காரணம்?//

இந்த கேள்விக்கு உண்மையில் எனக்கும் விடை தெரியவில்லை. ஏற்கெனவே நேரமின்மையால் அல்லல்படும் காசி, அதிக நேரவிரயமாகும் ஒரு முயற்சியை இப்போது செய்ய என்ன அவசியம் என்று நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இதனால் மேலும் அதிக நேரவிரயமும் மன உளைச்சலும்தான் மிச்சம்.

 
At Thursday, 20 October, 2005, சொல்வது...

உஷா
நானும் பாஸ். கருத்து சுதந்திரம் மிக அவசியம். ஆனால் சில பதிவுகளில் தனக்கு பிடித்த ஒன்றை விமரிசனம் கூட செய்யாமல் செய்ய விரும்பாமல் ஆதரிக்கும் போது எதிர்க்க வேண்டும் என்பதற்காக எழுதும் போதும் கருத்து சுதந்திரத்தை பலி ஆடாக்குவது தெரிகிறது.அதிக கருத்து பேச்சு சுதட்ந்ஹிரம் உள்ள அமெரிக்காவில் கூட ஒருவரை குண்டாக இருக்கிறாய் என்று சொல்வது கூட சட்டப்பிரச்சினைகளை முடியும். பொது இடத்தில் பேசும் போதும் எழுதும் போதும் நமக்கு சில வரை முறைகள் உண்டு. தவறான வார்த்தையை உபயோகித்த அமெரிக்க உதவி ஜனாதிபதியை விமரிசனம் செய்யாதவர்கள் இல்லை, இத்தனைக்கும் சாதாரணமாக உப்யோகிப்ப்க்கும் ஒரு சொல். அருணின் பதிவை என்னால் படிக்க முடிகிறது. சுய கட்டுப்பாடுகள், நேர்மை இருக்கும் இடத்து காவலர்கள், மற்றும் சட்டங்கள் இவை பயனற்று போகும்

 
At Thursday, 20 October, 2005, சொல்வது...

பத்மா, அருணின் பதிலைப் பார்த்தீர்கள் அல்லவா? ஆபாசம், பிற மதங்களை இகழ்தல் ஆகியவைகளைத் தவிர்த்து மற்ற நீக்கங்களுக்கு என்ன காரணம்?
பாஸ் ஆனதற்கு வாழ்த்துக்கள் :-)))

 
At Thursday, 20 October, 2005, சொல்வது...

ஐயோ உஷா,
நான் இன்னும் என் பதிவை வெரிபை பண்ணவே இல்லியே? பெண்கள் பதிவு எப்பவும் decent ஆக இருக்கும் என்பதால் அகற்றப் பட்டிருக்காது!!

எனது guess என்னன்னா கோவை வலைப் பதிவர்கள் சந்திப்பில் நிறைய எழுத்து மீறல்கள் பற்றி விவாதித்திருக்கலாம். அதன் தொடர்ச்சியாக இந்த பரீட்சார்த்தம் இருக்கும். குட்டையைக் குழப்பட்டும், அப்போதான் ஒரு தீர்வு கிடைக்கும்.

 
At Thursday, 20 October, 2005, சொல்வது...

உஷா,

நானும் 'பாஸ்'

விளக்கு எரியுதம்மா......

 
At Thursday, 20 October, 2005, சொல்வது...

ஆனாலும் தன்னிச்சையாய் அவர் எடுத்த இந்த முடிவுகள் பல சந்தேகங்களையும், குழப்பங்களையும், என்னைப் போன்று வெளியில் இருந்து வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு பல கேள்விகளையும் ஏற்படுத்துகின்றன.

காசி தன்னிச்சையாக முடிவெடுக்காமல், யாரைக்கேட்டு இதுபோன்ற முடிவு எடுத்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

என்னைப் போன்று வெளியில் வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு பல கேள்விகளையும் ஏற்படுத்துகின்றன.

வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கு எல்லாக்கேள்வியும் வரும். அப்படி வந்தால்தானே இதுபோன்ற பதிவு போடமுடியும்.

அருணின் பதிவு ஏன் நீக்கப்பட்டது?
அருணுடைய பதிவு நீக்கப்படவே இல்லை. இதுபற்றிய விளக்கம்தான் உங்களுக்கு முதல் பின்னூட்டமாக சுதர்சன் கொடுத்திருக்கிறார். அதுபோக அவருடைய பதிவு தமிழ்மணத்திலும் வருகிறது. அப்படியிருக்க, திரும்பத்திரும்ப ஏன் இந்தக்கேள்வி?
அதுபோக, அவரே எழுதியிருப்பதை படித்தீர்களா?

இப்போது திடீரென சர்வாதிகாரம் தலையெடுக்க ஆரம்பித்து, தலைவிரிகோலமாக ஆடுகிறது! (எனது பதிவு நீக்கப்பட்டிருப்பதற்கு முன்னரே இது குறித்து ஒரு பதிவு எழுதி வைத்திருந்தேன்….ஆனால், காலையிலிருந்து வேலைப் பளு காரணமாக இணையம் பக்கம் வர முடியவில்லை!) இப்போது நீக்கப்பட்டிருப்பட்டிருக்கிறது என்று அறிந்தவுடன், ‘இதுவும் நல்லதற்கே’ என்று முடிவு செய்து எழுத ஆரம்பிக்கிறேன்.

அவரே ஏதோ சாட நினைத்து, நீக்கிவிட்டார்கள் என்பதை சந்தோசமாக ஏற்று அவர் வசையை தொடர்ந்துள்ளார். இதில் நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்? அதிலும் மீண்டும் சொல்கிறேன், அவருடைய பதிவு நீக்கப்பட்வே இல்லை.

சிவகுமார் விலகும் அளவு என்ன நடந்தது?
அதை சிவக்குமார் எழுதியிருக்கிறார், மேலும் விளக்கம்வேண்டுமானால் அவரிடமே கேட்கலாம். அதுபோக இங்கு அவர் இருந்து இதுவரை எத்தனை பதிவுகள் எழுதியிருக்கிறார், எத்தனை பின்னூட்டமிட்டிருக்கிறார்?

இணையகுசும்பன் என்ன அப்படி எழுதினார்?
இங்க கேட்டா எப்படி தெரியும், அவரோட பதிவுகளைப்போய் பாருங்கள்.

ஒண்ணுமே புரியலைங்க!
கொஞ்சம் நிதானமா யோசிங்க, எல்லாம் புரியும். உங்களைப்போன்றவர்களும், ஏன் சைட்ல குட்டையைக் குழப்புறீங்கன்னு தெரியல, மிகுந்த வருத்தமாயிருக்கிறது.

 
At Friday, 21 October, 2005, சொல்வது...

அன்பு, நேற்று காசியின் பதிவைப் பார்த்ததும், அதில் இருந்த கடைசி - நாலாவது காரணத்தைப் பார்த்ததும், தமிழ்மண வாசகர் மற்றும் பயனாளர் என்ற முறையில் என் சந்தேகங்களைப் பொதுவில் இட்டேன். இன்றுப் பார்த்தால் அதே சந்தேகத்தை பலரும் எழுப்பியுள்ளனர். அருணின் வருத்தத்தைப் பார்த்ததும் எழுதினேனே தவிர மீண்டும், மீண்டும் இல்லை.
அன்பு, என்ன நடந்ததும், காரணம் ஆகிய
கேள்விகளுக்கு பதில் தருவதும் (எனக்கு இல்லை) காசியின் விருப்பம். ஆனால் இத்துடன் இந்த விஷயத்தில் குட்டையை குழப்ப விரும்பவில்லை.
துளசி வருகைக்கு நன்றி.
தாணு, தெருதொண்டன் அவர்கள் பதிவில் அதாங்க மார்க்கிசம் பதிவு, உங்க கூட விவாதம் ஆரம்பிக்கலாம் என்றுப் பார்த்தேன். நேரமில்லாமல் போய் விட்டது.

 
At Friday, 21 October, 2005, சொல்வது...

//ஆத்தா நா பாசாயிட்டேன்// - Usha

வாழ்த்துக்கள்! மிட்டாய் குடுப்பீங்களா!!

 
At Friday, 21 October, 2005, சொல்வது...

ஞா.பீ சார், ரெண்டு மூணு பிரண்ட்சுங்க பெயில் ஆயிட்டாங்களா, அந்த வருத்தத்துல இருக்கறதால, நோ சாக்கலேட் :-)))

 
At Friday, 21 October, 2005, சொல்வது...

ஆத்தா, நான் தப்பிச்சுட்டேன்! :)

 
At Friday, 19 October, 2007, சொல்வது...

இங்கே பலதும் சரியான நுனிப்புல் கோஷ்டிங்க. இன்னிக்கு படிச்சுப்பாத்தா சிரிப்பா இருக்குது.

 
At Friday, 19 October, 2007, சொல்வது...

காசி, இன்று 20/10/2007ல் உங்களை நான் சிரிக்க வைத்து புண்ணியம் தேடிக் கொண்ட்டேன். "பரண்" க்கு நன்றி

 

Post a Comment

<< இல்லம்