Saturday, November 09, 2013

ஒன்றா இரண்டா ஆசைகள்!

எல்லாருக்கும் வாழ்வில் சில அடிமன ஆசைகள் இருக்கும். இவைகளை
லட்சியம் என்று சொல்ல முடியாது. அவ்வப்பொழுது எட்டிப் பார்க்கும்
நீர் பூத்த நெருப்பாய் சில கனவுகள். அப்படி எனக்கு இரண்டொரு ஆசைகள் இருந்தன. அவற்றில் ஒன்று லைப்ரரி அல்லது புக் ஷாப்
வைப்பது.

சின்ன வயதில் லைப்ரரியன் ஆகும் கனவு கூட இருந்தது.
சரி, சினிமாவில் வருவதுப்போல வீட்டிலேயே ஒரு லைப்ரரி இருந்தால்,
நினைத்தப் பொழுது ஒரு புத்தகத்தை உருவி எடுத்துப்படிப்பது எவ்வளவு
சுகம்? கருணாநிதி அவர்களின் வீட்டை காட்டும்பொழுது எல்லாம், அவரின்
நாற்காலிக்கு பின்னால் நீண்ட புத்தக வரிசை இருக்கும்.

சரி, இரண்டு வருடத்திற்கு முன்னால் சென்னை வர முடிவெடுத்ததும்,
1989ல் வாங்கிப் போட்ட ஒரு கிரவுண்டில் வீடு கட்ட ஆரம்பித்ததும் என்
இரண்டு  ஆசைகள் நிறைவேறும் என்று நினைத்தும் பார்க்கவில்லை.
பெரிய புத்தக அலமாரிகள் இரண்டும், சின்னனதோட்டமும் அழகாய்
அமைந்து விட்டன.


முதல் வருடம் தோட்ட முயற்சிகள் பெரியதாய் பலன் தரவில்லை. வீட்டை சுற்றி ஐந்தடி நிலத்தில் வைத்தது எல்லாம் பாழ். செடி வளர
எட்டு மணிநேர வெய்யில் வேண்டும் என்பது. நம் தமிழக தோட்ட கலை
கழகம் நடத்தும் ஒரு நாள் வகுப்பில் அறிந்துக் கொண்ட்டேன்.
 சரி, மாடியில் தோட்டம் போடலாம் என்று ஆரம்பித்து. இந்த ஒரு வருடத்தில் நன்றாக வந்துக் கொண்டு இருக்கிறது.
ரோஜா பூந்தோட்டம்பலபாடங்கள் கற்றுக் கொண்டேன். அவ்வப்பொழுது எழுதலாம் என்று இருக்கிறேன்.
தொடரும் 

6 பின்னூட்டங்கள்:

At Saturday, 09 November, 2013, சொல்வது...

அட! மாடித்தோட்டமா!!!!!

வெற்றி அடைய வாழ்த்துகின்றேன்.

 
At Saturday, 09 November, 2013, சொல்வது...

தோட்டக்கலை பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்க உஷா. அம்பத்தூர் வீட்டில் தோட்டம் போட வேண்டிய இடம் இன்னமும் இருக்கு. :((( எல்லாத்தையும் விட்டுட்டு இங்கே (ஶ்ரீரங்கம்) வந்தாச்சு. எல்லாத்தையும் மறக்கவும் மறந்தாச்சு.

பணியில் இருக்கையில் மாற்றலாகிப் போகும் ஊர்களில் எல்லாம் அழகான தோட்டங்கள் போட்டாச்சு! :))))

 
At Wednesday, 27 November, 2013, சொல்வது...

வாழ்த்துக்கள்.
கலக்கலாய் வண்ணமயமாய் இருக்கிறது உங்கள் மாடி தோட்டம். ரோஜாவை தவிர இன்னும் நிறைய பொறுமையாய் சேர்க்கவும் :-). இந்த பெயின்ட் வாலி எல்லாம் எங்கே கிடைத்தது? நிறைய தெரிகிறது. தொட்டியில் மண் வைத்து ரோஸ் வைத்து இருக்கிறீர்களா இல்லை தேங்காய் தூள் மாதிரி ஏதும் மாற்று பொருள் போட்டீர்களா? விவரமாய் எழுதுங்கள். அடிக்கடி தோட்டம் பற்றி எழுதுங்கள்.

 
At Tuesday, 03 December, 2013, சொல்வது...

மற்ற ஆசைகளையும் சொல்லுங்கள்...,.இதோடு நிறுத்திவிட்டால் என்ன ஆவது?

 
At Tuesday, 03 December, 2013, சொல்வது...

மற்ற ஆசைகளையும் சொல்லுங்கள்...,.இதோடு நிறுத்திவிட்டால் என்ன ஆவது?

 
At Sunday, 15 December, 2013, சொல்வது...

மனிதர்களோட உறவாடுவதற்கு பதிலா, இதுபோல் தாவரங்கள், சில வீட்டு விலங்குகள்னு நேரம் செலவழித்தால் வாழ்க்கை ரொம்ப அர்த்தமுள்ளதாக இருக்கும். என்னங்க நீங்க, மல்லிகை, ஜாதிப்பூ எல்லாம் நம்ம வெயிலுக்கு அமோகமா வளருமே? அதெல்லாம் காணோம்? ரோஜாக்கள் அவர்களை மறைத்துவிட்டனவா? :(

நீங்க இதேபோல் தக்காளி, கத்திரிக்காய், மிளகாய் போன்ற கறிகாய் தோட்டம்கூட தொட்டியில் வைக்கலாம். விளைச்சல் அமோகமா இருக்கும். ஆனால் வரவு செலவு கணக்கு எல்லாம் பார்த்தீங்கன்னா, நஷ்டம்தான். என்ன எங்க தோட்டத்துக் கறி காய்ல நாங்க சாம்பார் வைத்தோம், அதனால தனி ருசியா இருக்குணு சொல்லிக்கலாம். அவ்ளோதான். :)

 

Post a Comment

<< இல்லம்