Thursday, April 12, 2012

படிப்பும் விடுதலைக்கான அறிவும்- மருதையன்

காதில் விழும் ஒரு சொல்லும், கண்ணில் படும் சில வரிகளும் நாளையே
புரட்டிப் போட்டுவிடுவது அவ்வப்பொழுது நம் எல்லாருக்கும் நிகழ்வதுதான். இன்று காலையில் வந்த ஜூனியர் விகடனில் படிப்பும் விடுதலைக்கான அறிவும் என்ற மருதையன் என்பவர் எழுதிய புத்தகத்தின் மதிப்புரை வாசிக்க நேர்ந்தது.

“மிகச் சிறந்த இசையாகவே இருந்தாலும், அதை ரசிக்கும் காதுகள் இல்லை என்றால், அவர்களுக்கு அவை வெறும் ஒலிதான்” என்ற மார்க்ஸின் மேற்கோளுடன் தொடங்கியிருக்கிறார் மருதையன்.

பள்ளியிலும், கல்லூரிகளிலும் படிப்பதும் இலக்கியவாதிகள் படிப்பதும் வெறும் காரியவாதப்படிப்புகள் என்றவர், எதற்காக படிக்கிறீர்கள் என்ற கேள்வியை நம் முன்பு வைக்கிறார். இந்த கேள்வி காலையில் இருந்து என் மனதில் சுழன்றுக் கொண்டு இருக்கிறது.

பலமுறை நான் எண்ணியதுதான் வியந்தது படித்தவர்களின் சிறுமை தனம் படிப்பு இவர்களுக்கு என்ன சொல்லிதந்தது ? கல்வியோ அல்லது இலக்கியமோ ஏன் சக மனிதத்தை மதிப்பதில்லை? அதற்கு விடையாய் கட்டுரையில் வருகிறது, கலை, அரசியல், பொருளாதாரம், இலக்கியம், ஆய்வு இவைகளில் ஆழ்ந்த படிப்பு சமூக அக்கறையையும், ஆளுமையையும் வளர்க்கும் என்கிறார்.

ஒரு புத்தகத்தை வாசிக்காமல், விமர்சனத்தைப் படித்து மட்டும் அந்நூலினை பற்றி எழுதுவது தவறுதான். ஆனால் படிப்பது பிடிக்கும் என்றால் எதைப் படிக்கிறீர்கள்? எதற்காக படிக்கிறீர்கள் என்ற வரிகளே இந்த பதிவு போட தூண்டியது.

நான் என்ன படிக்கிறேன் – பொழுதுப் போக்க படிப்பதில்லை.

ஏன் படிக்கிறேன் – இந்த கேள்விதான் மனதில் சுற்றிக் கொண்டு இருக்கிறது. வாழ்க்கையை புரிந்துக் கொள்ள படித்துக் கொண்டு இருக்கிறேன். அப்படி என்ன புரிந்துக் கொண்டேன் என்றால் அது என்ன அவ்வளவு சுலபமானதா என்ன :-)

5 பின்னூட்டங்கள்:

At Thursday, 12 April, 2012, சொல்வது...

வணக்கம் உஷா, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கட்டுரையை நான் படித்திருக்கவில்லை. ஆனால், நீங்கள் சொல்வது போல, படித்தவர்களும் கற்றவர்களும்தான் எல்லா தில்லாலங்கடி வேலைகளையும் செய்கிறவர்களாக இருக்கிறார்கள். மேலும், உங்களுக்காக ஒரு சுட்டி ‍ http://www.vinavu.com/2010/12/29/on-reading/ .இது, இன்னும் சில விளக்கங்களையும்,கேள்விகளையும், கூட உங்களுக்குள் எழுப்பலாம் - அதே தோழர் மருதையன் எழுதியது. :-)

At Thursday, 12 April, 2012, சொல்வது...

எதற்காக படிக்கிறோம் என்கிற கேள்வியோடு எதற்காக உழைக்கிறோம் என்கிற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது. படிப்பதும் உழைப்பதும் பொருள் ஈட்டுவதற்கானதாக அதாவது பிழைப்புக்கானதாக மாற்றப்பட்டுவிட்டன. அதனால் படிக்கிறோம்... மேலும் மேலும் படிக்கிறோம்...படித்துக்கொண்டே இருக்கிறோம்.. முடிவேதுமின்றி! அதே போல உழைக்கிறோம்... மேலும் மேலும் உழைக்கிறோம்... உழைத்துக் கொண்டே இருக்கிறோம்...முடிவேதுமின்றி!

உழைப்புச் சுரண்டல் இருக்கும் வரை என்னதான் படித்தாலும் எவ்வளவுதான் உழைத்தாலும் நமது தேவைகள் பூர்த்தியாவதில்லை. இறுதியில் சலிப்படைகிறோம்.

சுரண்டலிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான படிப்பும் உழைப்பும் தான் இன்றை தேவை. இத்தகைய படிப்பாளிகளே-உழைப்பாளிகளே புதிய சமுதாயத்தை படைக்கும் சிற்பிகளாவார்கள்.

சமூக அக்கறை இல்லாமல் படிக்கும் படிப்பு குப்பை தான். இந்தியாவில், படிப்பு அப்படி இல்லை; இங்கு எல்லாமே சமூகத்தை ஒட்டியுள்ளது.

At Thursday, 12 April, 2012, சொல்வது...

இந்த ஆறாவது அறிவே பிரச்சினையான ஒண்ணுங்க!

எதுக்கு பள்ளிக்கு சென்று பாடம் படிக்கிறாங்க?

அறிவை வளர்த்துக்கவா? இல்லை ஒரு நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையைப் பெற்று சம்பாரிச்சு பொழைப்பை ஓட்டவா?

டாக்டராவது உயிர்களை காப்பாத்தவா? இல்லை பணம் சம்பாரிச்சு கோடி கோடியா கறுப்பணம் வச்சுண்டு, தியானம், ஆண்மீகம்னு தேடல்ல இறங்கவா?

Let it be love or friendship or studies or politics or anything, they generally start out with good intention (ஆரம்பத்தில்). But as time goes on, people change, get corrupted, get carried away.

It is just like a child.. Later they end up becoming cunning old man who is depressed, perverted and jealous of everything. That is life!

Post a Comment

<< இல்லம்