செல்லமே செல்லம்
ஃபூ இனி ஞாபகம் இருக்கில்லையா? அவைகளை அழைத்துக் கொண்டு மாலை நடைக்கு சென்றிருந்தேன். பொதுவாய் ‘இனி” சமர்த்தாய் வரும். ஆனால் ஃபூ எல்லாரிடமும் வம்புக்குப் போகும்.
போன வாரம் ஃபூவுடன் போய் கொண்டு இருக்கும்பொழுது, கன்றுகுட்டி ஒன்று சாலை ஓரம் மேய்ந்துக் கொண்டு இருந்தது. ஃபூ அதைப் பார்த்ததும் வழக்கப்படி குலைத்து தள்ளிவிட்டு, கடிப்பதுப் போல அருகில் ஓட நான் அதை இழுக்க, கன்று“அம்மே” என்று அலறிக் கொண்டு பின் வாங்கி ஓடி அடுத்த தெருவில் மறைந்தது. ஃபூ அங்கங்கு சிறுநீர் கழித்துவிட்டு முன்னேற பார்த்தால் அத்தெரு திருப்பத்தில் ஓடிய கன்று அம்மாவை அழைத்து வந்துக் கொண்டு இருந்தது.
முந்தானையை இழுத்து, கட்டி யாருடா எம் புள்ளை மேலே கையை வைத்ததுக் கோலத்தில் பெரிய பசு, தப தப என்று ஓடி வர தப்பினோம், பிழைத்தோம் என்று பின்னால் திரும்பி வீட்டுக்கு ஓட்டம் பிடித்தோம். எனக்கு முன்னால் ஃபூ வீடு போய் சேர்ந்துவிட்டது.
இன்னும் ஒருமுறை, எதிரில் ஆட்டு கூட்டம் ஒன்று, தாத்தா,பாட்டி அப்பா அம்மாஅத்தை மாமா சித்தப்பா சித்தி என்று ஒரு ஏழெட்டு பெரிய ஆடுகள். நடுவில் மூன்று குட்டிகள். வழக்கப்படி ஃபூ அவைகளைப் பார்த்தாதும் தன் வழக்கமான கூப்பாட்டை ஆரம்பித்தது. ஆடுகள் முதலில் கண்டுக் கொள்ளவில்லை.
இது கடிப்பதுப் போல கயிற்றை இழுத்துக்கொண்டு முன்னேற, ஆடுகள் பின்வாங்கி,, தயங்கி நின்றன. ஒரு பெரிய ஆடு, முன்னால் கோபமாய் முறைத்து மே என்று அலறியது. ஒற்றை காலை முன் வைத்து முறைத்தது. அப்பபொழுது பார்த்தால், அந்த மூன்று பூக்குட்டிகளில் ஒன்று, மிக குட்டிகள், கால்கள் குச்சி குச்சியாய் பிறந்து ஒரு மாதத்திற்குள் இருக்க வேண்டும் என் கணிப்பு.உடம்பில் இருந்த முடிகளில் ஈரமான பளபளப்பு, ஆங் எங்கே விட்டேன், அதில் ஒரு பூக்குட்டி, இந்த பெரிசு எந்த மேனரிசத்தில் நின்றதோ அதே போல நின்று எங்களை முறைத்தது. பாரேன் என்று எனக்கு ஓரே ஆச்சரியம், அப்படியே அதை தூக்கி முத்தமிட்டு கட்டிக்கொள்ள வேண்டும் என்று இருந்தது. தலைமை குணம் வெகு இயல்பாய் அதற்கு வந்துள்ளது. மற்ற இரண்டு குட்டிகளை அம்மா பின்னால் ஒளிய இத்துணூண்டுக்கு
என்ன தைரியம்.
அழகு!

7 பின்னூட்டங்கள்:
ஒரு படம் எடுத்துப் போட்டிருக்கக் கூடாதோ? :)
கீதா, எவண்டா அவன்ன்னு ஓடி வந்த அம்மாவும், டிடிங்குன்னு முன்னால் வந்து முறைத்த குட்டியும் கண்ணுலையே இருக்கு. அதையெல்லாம் எப்படி
படம் எடுக்க :-( இனி, ஃபூ படம் போடுகிறேன் ;-)
மிகவும் ரசித்துப் படித்தேன்
எனக்கும் ஃப் வைப் பார்க்க ஆசையாக உள்ளது
பகிர்ந்தால் மகிழ்வேன்
வாழ்த்துக்களுடன்
அதுக்குத்தான் கேமெராவை இடுப்பில் கட்டிக்கிட்டே எங்கேயும் கிளம்பணும் என்பது:-))))
செல்லங்களோடு பழகப்பழக அவர்களின் உலகம் எத்தனை அழகாவும், வியப்பாவும் இருக்குன்னு புரியுது இல்லையா!!!!
ரொம்பப்பிடிச்சு பதிவு!
அடடா என்ன அனுபவம் உஷாம்மா.:)
இனிமேல் காமிராவையும் கழுத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.!!
படம் எடுத்தபிறகு ஓடலாம்.சுவையாக இருக்கிறது.நினைக்கவே. கீதா கேட்டதுபோல படங்கள் பதிவேற்றவும் ப்ளீஸ்.
/யாருடா எம் புள்ளை மேலே கையை வைத்ததுக் கோலத்தில் பெரிய பசு, தப தப என்று ஓடி வர /
கற்பனை செய்ய முடிகிறது:)! பூக்குட்டியும் ஃபூவின் லூட்டியும்.. இரசித்தேன்.
திரு.ரமணி நன்றி.
துளசி, செல்லம் என்று டைப் அடிக்கும்பொழுதே உங்க நினைவு வந்துவிட்டது. இதுங்கள் அடிக்கும் லூட்டி இனி எழுத வேண்டியதுதான் :-)
வல்லி, சான்சே இல்லை. உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடி வரும்பொழுது, போட்டோ எடுக்கவா தோணும். அதைத்தான் வாசிப்பவர்களே
விஷூவலாய் கற்பனை செய்யும் படி எழுதியதாய் நினைத்திருக்கிறேன், ஆமாம் என்கிறார் ராமலஷ்மி. நன்றி ராமி :-)
Post a Comment
<< இல்லம்