Tuesday, August 28, 2012

நீங்க நான் ராஜாசார்

நம் ஊருக்கு திரும்பியதும் நான் செய்ய நினைத்த வேலைகளில் ஒன்று, ஒரு டிரான்சிஸ்டர் வாங்க வேண்டும் என்பது. வழக்கமாய் தரமான, நியாயமான விலை கடை என்றால் என்னுடைய தேர்வு “விவேக்” தான். சரி வாங்கிடலாம் என்றுப் போனால், டிரான்சிஸ்டர் எல்லாம் வருவதே இல்லை மேடம் என்று வாயால் சொல்லிவிட்டு, எம் பி 3 பிளேயர், ஐபாட் என்று உலகமே முன்னேறிக்கிட்டு இருக்கு, இப்ப போய் டிரான்சிஸ்டராம் என்று கண்ணால் சொல்லி முடித்தான். சைனா மேக் கிடைக்கும் மேடம்என்று அவன் தந்த மேலாதிக்க தகவலை ஓரே வரியில் நிராகித்தேன். நாங்க எல்லாம் சைனா பொருள்களை வாங்குவதில்லை என்றேன் உறுதியுடன். டிரான்சிஸ்டர், டிரான்சிஸ்டர் என்று அலைந்ததில், ஒரு மின்னணு கடையில், சோனி இம்போர்டட் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் ஆகும்என்றார். அங்கிங்கு சுற்றியதில் ஒன்றும் தேறவில்லை. சரி, அந்த சோனியே வாங்கி தொலைக்கலாம் என்று திரும்ப அந்த கடைக்கு நுழையும்பொழுதும் ஞானோதயம் ஏற்பட்டது, தானிக்கு தீனீக்கு பேர் ஏமி என்று  இத பாருங்க மேடம், நூத்தி முப்பது ரூபாய் சைனா மேக் என்று அழகாய் கையடக்கமாய் காட்டிய ஒன்றை மீண்டும் தேடிப் பிடித்து கொள்கையை எல்லாம் ஏறக்கட்டிவிட்டு, அதே டிரான்சிஸ்டரை எடுத்து வந்தேன். ஆயிற்று, கடந்த ஒரு வருடமாய் இரவு காதோரம் பண்பலை 98.3 ரேடியோ மீர்ச்சியில் “நீங்க நான் ராஜா சார்” கேட்டுக் கொண்டே தான் தூக்கம். மற்ற அலைவரிசைகள் என்ன நிகழ்ச்சிகள் என்றுக்கூட பார்க்க தோன்றுவதில்லை. பதினென் வயதுகளில் மனம் கவர்ந்த பாடல்கள், அதை தாண்டி அன்றைய எம்.எஸவி க்கோ இன்றைய ஹாரீஸ், ரகுமான் இசையிலோ மனம் ஒன்ற மறுக்கிறது. நிகழ்ச்சி நடத்தும் செந்தில் அதீதஆங்கிலமும், அலட்டலும் இல்லாமல் இயல்பான பேசுவது நன்றாக இருக்கிறது. அதே சரவணன் மீனாட்சி ஈரோ! பல அற்புத பாடல்களை இன்று கேட்டும்பொழுது, ராஜா , மலேஷியா வாசுதேவனுக்கு பல அருமையான பாடல்களை பாட வாய்ப்பு தந்திருக்கிறார். போன வாரம் (23-8-2012)நண்டு படத்தில் வரும் “அள்ளி தந்த பூமி அன்னையல்லவா” கேட்டதும் மனசு அப்படியே பின்னோக்கி ஓடியது. இதைவிட அமைதியான , சுகமான தூக்கத்துக்கு மருந்து இருக்கா என்ன? வளையோசை கல கல வென என்று எஸ்பிபி ஆரம்பிக்க, “கொஞ்சம் பெரிசாய் வையேன்” என்று பக்கத்தில் குரல் கேட்டது. அமலா  அந்தகால மனம் கவர்ந்தவ நாயகி, மலரும் நினைவு வந்திருக்கும்  “ராகங்கள் தாளங்கள் நூறு ராஜா உன் பேர் சொல்லும் பாரு” லதா பாட அடிசக்கை பாடல் யாரு நம்ம வாலியாக்கும்  பி.கு இளையராஜா ஸ்பெஷல் வானொலி இணையத்தில் கேட்க http://tunein.com/station/?stationId=166196 இணைப்பு அனுப்பிய பாலராஜன் கீதாவுக்கு நன்றி

19 பின்னூட்டங்கள்:

At Tuesday, 28 August, 2012, சொல்வது...

உண்மைதான். ரேடியோ கேட்பதில் உள்ள சுகம் வேறெதிலும் இல்லை. அது ட்ரான்சிஸ்டராக இல்லாவிட்டாலும். இப்போ ரெண்டுமே தூங்குது. போட்டுக் கேட்க முடியலை. நீங்க சொல்லும் பாடல்கள் எல்லாம் நான் கேட்டதில்லை. பழைய பாடல்கள் தான்! :))))))

 
At Wednesday, 29 August, 2012, சொல்வது...

இது எப்போ நடந்தது? இப்பயா?

பொதுவா பதின்ம வயதில் கேட்கும் இசை, படிக்கும் புத்தகங்கள், பார்க்கும் படங்கள், போகும் இடங்கள், சாப்பிடும் உணவுகள், அணியும் உடைகள் நம்முடைய மிகப்பிடித்த பட்டியல்களில் சேர்ந்து விடும். பின்னாளில் அவைகளை மீண்டும் அனுபவிக்க நேரும் போது மனதில் ஒரு இன்பம் சிறகடிக்கிறது.

 
At Wednesday, 29 August, 2012, சொல்வது...

கீதா, இதோ உங்களுக்காக "அள்ளிதந்த பூமி அன்னையல்லவா" பாடல் யூ ட்யூப் காட்சி
http://www.youtube.com/watch?v=yFX7Jc8y5Ac நண்டு படம், மகேந்திரன் இயக்கியது. லக்னோ
வீதிகள் அழகு

 
At Wednesday, 29 August, 2012, சொல்வது...

ஆமாம் ஜீரா, சென்னைக்கு வந்து (செட்டில் ஆகிவிட்டேன் என்ற நம்பிக்கையுடன் :-) ஒரு
வருடம் ஆகிறது. இந்த "நீங்க நான் ராஜா" அடிக்கிட் ஆகி நாலைந்து மாதம் ஆகிறது. போன
வாரம் இந்த "அள்ளி தந்த பூமி" பாட்டை கேட்டதும், மனசு அப்படியே பழைய நினைவுகளில்
மூழ்கிவிட்டது. அந்த தாக்கத்தில் இந்த பதிவு

 
At Wednesday, 29 August, 2012, சொல்வது...

அட பதிவெல்லாம் எழுதறீங்க :)

 
At Wednesday, 29 August, 2012, சொல்வது...

நன்றி உஷா, இப்போல்லாம் அடிக்கடி எழுதறதில்லை போலிருக்கு! முடிஞ்சப்போ எழுதுங்க. நீங்க எழுதாமல் ஓர் வெற்றிடம் தெரியுது எனக்கு.

 
At Wednesday, 29 August, 2012, சொல்வது...

//சென்னைக்கு வந்து ...ஒரு
வருடம் ஆகிறது. //


welcome home ........

 
At Wednesday, 29 August, 2012, சொல்வது...

பின்னூட்டம் போட இன்னொரு எக்ஸ்ட்ரா வேலை கேக்குது.
எதுக்குங்க ...?

 
At Wednesday, 29 August, 2012, சொல்வது...

|| எம் பி 3 பிளேயர், ஐபாட் என்று உலகமே முன்னேறிக்கிட்டு இருக்கு, இப்ப போய் டிரான்சிஸ்டராம் என்று கண்ணால் சொல்லி முடித்தான். ||

அன்ட்ராய்டோ அல்லது ஐ-கருவிகளோ, எல்லாவற்றிலும் வானொலிக்கான மென்பொருள்கள் இருக்கின்றனவே...இதற்காக தனியாக வானொலி வாங்க வேண்டும் என்பதில்லை !

|| வலையோசை சல சல வென என்று எஸ்பிபி ஆரம்பிக்க, “கொஞ்சம் பெரிசாய் வையேன்” என்று பக்கத்தில் குரல் கேட்டது. அமலா  அந்தகால மனம் கவர்ந்தவ நாயகி, மலரும் நினைவு வந்திருக்கும் ||

நிசமா..நிசமா.. :))

 
At Wednesday, 29 August, 2012, சொல்வது...

வாழ்க்கையில எப்ப பாத்தாலும் முட்டி மோதி தட்டி தடவி.... எவ்ளோ நாள் தான் இந்த அக்கப் போர் அப்டீன்னு... விட்டு விலகி விடுதலையாகும் உணர்வு... இந்த மாதிரி மனசுக்குப் பிடிச்ச பாட்டுக்கள கேக்கறப்போ கெடக்கும்!

வேற ஒன்னுமில்ல... தாலாட்டுப் பாட்டு கேட்டு தூங்கிய... மழழை... எத்தினி வயசானாலும்... உள்ளுக்குள்ள முழிச்சிகிட்ட்டே இருக்கும்! அது இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்-ல வெளி வர்றது சகஜமாம்...! - உளவியல்.

 
At Wednesday, 29 August, 2012, சொல்வது...

ராமசந்திரனுஷாவும் முசிக்மாபியாவாஆஆ பதிவு எழுதியிருக்காங்க! http://nunippul.blogspot.com/2012/08/blog-post.html
ராசாவானொலிகேக்கிறேன் இவங்களால இப்ப: http://tunein.com/station/?stationId=166196

ட்விட்டரில எழுதினது.

 
At Wednesday, 29 August, 2012, சொல்வது...

இளா, இனிமேல் அடிக்கடி "நுனிப்புல்" பார்க்கலாம் :-)

கீதா, வெற்றிடம் வாசிப்பவர்களுக்காக என்று தெரியவில்லை, ஆனால் பதிவு போடாமல்
எனக்கு நுனிப்புல் வெற்றிடமாய் இருக்கு. இனி அவ்வப்பொழுது எழுதுவதாய் உத்தேசம்

தருமி சார், நன்றி. அது என்ன இன்னொரு வேலை, சரியாய் புரியலை.???

 
At Wednesday, 29 August, 2012, சொல்வது...

அறிவன், என்னுடைய செல்பேசி ஒரு திராபை. இன்னும் ஒரு பிரச்ச்னை எனக்கு, காதில் ஐ போன்
எல்லாம் சரிப்படாது. காதோரம் சின்ன டிரான்சிஸ்டர் தான் செளகரியமாய் இருக்கு.

அமலா... புரியுது புரியுது ,,,, உங்க வயசும் தெரிஞ்சிடுச்சு :-)))

ஞான்ஸ், ஒரு நாள் முழுக்க குடும்ப சாகர குழப்பங்கள், மனசு அலை மோத ஆரம்பிக்கும்,
இரவின் அமைதியில் இந்த பாட்டு ஒரு அருமருந்து. அப்படியே கண் இழுத்துக்கிட்டு போகும்
பாருங்க, ஆஹா....

கெ.பி. கெ! பதிவு செய்யப்பட்ட பாடல்களை விட வானொலிதான் என் விருப்பம். நாம் பதிவு
செய்து வைத்தால் அடுத்தது என்ன என்று தெரிந்து விடுகிறது. சட்டென்று "கோடை கால காற்றே
பாடலில் ஆரம்ப இசை ஆரம்பித்ததும், மனசில் ஒரு துள்ளல் வரும் பாருங்க, அந்த அனுபவம்
சுகமானது இல்லையா?

 
At Thursday, 30 August, 2012, சொல்வது...

//வலையோசை சல சல வென//
அவங்கதான் பதிவெழுதற சந்தோசத்துல "வளையோசை கல கல" என்பதை "வலையோசை சல சல" வென எழுதுறாங்கனா அறிவன் சார் நீங்களும் அதை அப்படியே Ctrl+C மற்றும் Ctrl+V செய்தது சரியில்லை.

 
At Thursday, 30 August, 2012, சொல்வது...

Hello Usha!
Good to see you back

 
At Thursday, 30 August, 2012, சொல்வது...

சேக்காளி சரித்திர பிழையை திருத்திட்டேன் :-)

கல்வெட்டு நன்றி

 
At Friday, 07 September, 2012, சொல்வது...

இளையராஜா மலேஷியா வாசுதேவனுக்கு தந்த அருமையான பாடல்களில் ஒன்று நண்டு பாடல். சந்தேகமில்லை. இன்னும் கூட கி.போ.ர. பாடல், த.யு பாடல், னி.மா.பூ பாடல்கள் என்று கொஞ்சம் லிஸ்ட்டில் அடுக்கலாம்!

 
At Friday, 07 September, 2012, சொல்வது...

சென்னை வந்தாச்சா!!

 
At Monday, 15 October, 2012, சொல்வது...

|| எனக்கு, காதில் ஐ போன்
எல்லாம் சரிப்படாது. ||

ஹூம்..எனக்கும் உங்கள் வயது தெரிகிறது! :))

காதில் எல்லாம் வைக்க வேண்டியதில்லை,இப்போது எலுமிச்சை அளவுக்குள் அருமையான ஒலிப்பான்கள்-ஸ்பீக்கர்- கிடைக்கின்றன. ஒன்று வாங்கிக் கொண்டால் ஐபாட் பரம சுகமே. உலகின் அனைத்து ரேடியோக்களும் வருகின்றன.

என்ன,திருகித் திருகி நிலையம் பிடிக்கும் சுகம் வேண்டுமானால் தொலையலாம்!

|| அமலா... புரியுது புரியுது ,,,, உங்க வயசும் தெரிஞ்சிடுச்சு :-))) ||

அவர் வந்த சமயத்தில் 16 வயதிலிருந்து 40 வயது வரை அனைவரையும் அசைத்தவர் அமலா.

இரண்டாம் இலக்கத்தை இன்னும் கூட எட்டாத என்னைப்போய்...திஸ் ஸ் டூ டூ மச் மேடம்! :)

|| அறிவன் சார் நீங்களும் அதை அப்படியே Ctrl+C மற்றும் Ctrl+V செய்தது சரியில்லை.||

சேக்காளி, உண்மைதான். அதுவும் நான் போய் வாய்ப்பை(!)த் தவற விட்டதில் வருத்தமே. :))

 

Post a Comment

<< இல்லம்