Sunday, October 21, 2012

1 shop.co.in

1 shop.co.in சென்ற மாதக்கடைசியில் ஒரு நாள் நாழிதழுடன் ஒரு விளம்பர துண்டு சீட்டு. நீங்கள் எப்படி பொருள்களை வாங்குகிறீர்கள் என்று. அதில் இருந்ததுதான் இந்த தலைப்பு. முயற்சி செய்துப் பார்க்கலாமே என்றுப் பார்த்தால், மாச மளிகை சாமான்களை வாங்க மிக மிக செளகரியமாய் இருக்கிறது இந்த இணைய மளிகை கடை 1 shop.co.in அந்த இணைய முகவரியில் பதிவு செய்ததும், பின் கோட் வைத்து, வீட்டு அருகில் இருக்கும் பெரிய கடையுடன் லிங்க் செய்து விடுகிறது. எனக்கு கிடைத்தது நீல்கீரீஸ்” நான் அந்த பக்கம் போகும்பொழுது அங்கும் சாமான் வாங்குவது உண்டு. அதனால் அங்கு விற்கும் பொருள்களின் தரம் பற்றி தெரியும், விலை நாம் வாங்கும்பொழுது பட்டியலில் வருவதால் அதைக் குறித்தும் குழப்பமில்லை. இதில் மிக மிக நல்ல விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு பொருளுக்கும், பல பிராண்டுகளின் விலைப்பட்டியலும் கணிணி திரையில் வருகிறது. நாம் விலையையும், தரமான பிராண்டையும் பார்த்து தேர்வு செய்யலாம். நாம் கடையில் ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்ப்பது இயலாத காரியம். வீட்டில் இருந்தே கணிணி மூலம் ஆர்டர் செய்யும்பொழுது, நேரமும் மிச்சமாகிறது. வேலையும் சுலபமாகிறது. வேறு ஏதாவது தேவையா என்று கடையில் இருந்து தொலைபேசியும் வருகிறது. அவர்களின் பட்டியலில் இல்லாததை அப்பொழுது சொல்லிக் கொள்ளலாம், நீங்களும் முயற்சி செய்துப் பாருங்களேன்.

5 பின்னூட்டங்கள்:

At Sunday, 21 October, 2012, சொல்வது...

ரொம்ப நன்றி உஷா. கட்டாயம் முயற்சிக்கலாம். பெட்ரோல் மிச்சம்.

 
At Sunday, 21 October, 2012, சொல்வது...

இங்கே எங்கூர்லே எல்லா சூப்பர்மார்கெட்டும் ஆன்லைனில் வாங்கும் வசதி வச்சுருக்கு.

வீட்டுக்கு இலவசமா டெலிவரி வேற!

ஆனால் நாங்க கடைக்குப்போய்த்தான் வாங்குவோம்.

காரணம்: 1. அந்த சாக்குலேயாவது வீட்டைவிட்டு வெளியே போய் கொஞ்சம் நடக்கலாம்.

2. ரெண்டே ரெண்டு சாமான் வேணுமுன்னு போய் கண்ணில் பட்டதையும் அப்போதான் ஞாபகம் வர்றதையும் அள்ளிக்கிட்டு வர முடியும்:-))))

செல்ஃப் செக்கவுட் ஏராளமா வச்சுட்டாங்க இப்போ.

 
At Sunday, 21 October, 2012, சொல்வது...

வல்லி, இன்றைய தேதியில் நேரமும் மிச்சம், உங்கள் கணிப்பில் பெட்ரோல் மிச்சம். சென்னை
டிராப்பிக்கில் போய் வரும் சிரமும் இல்லை.

துளசி, வயிற்றெரிச்சலை கிளப்பாதீங்க, ரோடும், டிராப்பிக்கும் இருக்கும் அழகில் வெளிய கால் வைக்கவே யோசனையாய்
இருக்கும் அபாக்கியவாதிகள் நாங்கள்.

 
At Sunday, 21 October, 2012, சொல்வது...

சென்னை போன்ற போக்குவரத்துச் சிக்கல் மிகுந்த நகரங்களுக்கு இது வசதி. மாசு பட்ட காற்றையும் சுவாசிக்க வேண்டாம். மற்றபடி இங்கெல்லாம் வந்திருக்கானு தெரியலை. :)))

 
At Monday, 22 October, 2012, சொல்வது...

இது நல்ல ஐடியாவாத்தான் இருக்கு. ஆனா எங்களுக்கு ஏரியாக்குள்ளயே நல்லதா நாலஞ்சு கடைகள் இருக்கு. ரோடு டிராபிக் பத்திக் கவலைப்படாம போய் வாங்கிட்டு வந்துறலாம்.

அதுவுமில்லாம இன்னென்ன பொருள்தான் வாங்குறதுன்னே செட் ஆயிருச்சு. அதுக்கு மேல பெருசா ஒன்னும் வாங்குறதில்ல. முந்திதான் கண்ணுல பளிச்சுன்னு பட்டதெல்லாம் வாங்கத் தோணுச்சு. இப்பல்லாம் அப்படியில்ல.

ஷாப்பிங் போகனும்னா ஆஃப் பீக் அவர்ல போங்க. அது பெட்டர் ஆப்ஷன்.

ஜிரா,
gragavanblog@wordpress.com

 

Post a Comment

<< இல்லம்