Monday, October 24, 2005

ஆணுக்கும் உண்டு sexual harassment

இந்த வார்த்தையை பொதுவாய் பெண்கள் மீதான பாலுணர்வு வன்முறைக்கு பயன்படுத்துகிறோம். சமூகம் சில விஷயங்களில் பார்வையை எந்தளவு வேறுபடுத்திப் பார்கிறது என்பதை இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிந்தது.
தெரிந்தவர் வீட்டுக்கு சென்று வம்படிக்கும் பொழுது, விஷயம் தெரியுமா என்று ஆரம்பித்தார்கள். இது ஒரு கிராமம் போன்று, சின்ன விஷயங்கள் கூட ஊதி பெருசாக்கப்படும். விஷயங்களில் உண்மை எத்தனை சதவீதம் என்பது கேள்விகுறியே!

விஷயம் என்னவென்றால், விஜய் என்ற பையன் டாக்சியில் முன் சீட்டில் உட்கார்ந்து தனியாய் பயணிக்கும்பொழுது, டாக்சி டிரைவரின் முறை கேடான தொடல், அதனால் அந்த பையன் பயந்து அலறி கீழே குதிக்கப் போகிறேன் என்று கத்தியதும், டாக்சி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு ஓடிவிட்டானாம். இந்த கதை ஒரு வாரமாய் என் மகன் உட்பட பலர் சொல்லிவிட்டதால், நான் முகத்தில் காட்டிய நம்பிக்கையின்மை கண்ட அவர், தன் மகனை அழைத்தார்.

வந்த பையன் படிப்பது எட்டாவது. வந்தவன் " விஜய் என் கிளாசில்தான் படிக்கிறான். அவன் அம்மா அவனுக்கு மொபல் வாங்கி கொடுத்துவிட்டார். நா கூட இனிமேல ட்யூஷன் போகும்பொழுது, பின் சீட்டில் உட்கார்ந்து மொபைலில் பேசிக் கொண்டே போகப்போகிறேன்" என்று பாதுகாப்பு நடவடிக்கைகளை சொன்னவன், திடீரென்று விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினான்.

'ஆண்ட்டி, இன்னைக்கு காலைல பாவம் விஜய், வயிறு சரியில்லைன்னு வாமிட் செஞ்சானா, ஷபீங்கர பையன் விஜய் பிரக்னட் என்று கத்தினான். எல்லாரும் சிரிச்சோம். கொஞ்ச பேரூ விஜய்க்கு கங்கிராஜீலேஷன்ஸ்ன்னு சொல்ல அவனுக்கு பயங்கர கோபம்" சொல்லிக் கொண்டே போக, அவனின் தாயின் முகம் போன போக்கைப் பார்த்து, நானும் இன்னொருத்தியும் எப்படி ரியாக்ஷன் காட்ட வேண்டும் என்று தெரியாமல் பேசாமல் இருந்தோம்.

பதிமூன்று வயது பிள்ளை, இந்த விஷயங்களில் இந்த அளவு ஞானமா? எல்லா தாய்களின் முகத்திலும் பயமே தென்பட்டது. மகனை உள்ளே அனுப்பிவிட்டு, "இந்தகால பிள்ளைகள்!" என்று நீண்ட பெருமூச்சு விட்டவரை சமாதானப்படுத்த "எல்லாம் இந்த டீவியால" என்றேன்.

தொடர்ந்து பேச்சு, இதே பிரச்சனை ஒரு பெண் குழந்தைக்கு ஏற்பட்டு இருந்தால், அதை சிரிக்கும் விஷயமாய் பார்க்கப்படுமா என்ற கேள்வியுடன் ஆரம்பித்தது. அந்த பையன் விஜய்க்கு இதனால் பெரிய மன உளச்சல் இருக்காது, சாதாரண சம்பவமாய் எல்லோராலும் பார்க்கப்படுவதால், பிரச்சனையில்லை என்று சொல்லப்பட்டது.

பேச்சு ஆண்களுக்கான பாலூணர்வு தாக்குதலைப் பற்றி பேச்சு திரும்பியது. அவரவர் காதில் விழுந்த கதையை சொல்ல ஆரம்பித்தோம் கல்லூரியில் ஒரு மாணவிக்கு ஒரு ஆசிரியர் மீது காதல். தான் அவரை கல்யாணம் செய்துக் கொள்ளப்போவதாய் மற்ற மாணவிகளிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள். ஆனால் ஆசிரியர் முடியாது என்று மறுத்தவுடன், ஆசிரியர் மீது S.H என்று புகார் கொடுத்து விட்டாளாம். பெண் கொஞ்சம் பெரிய இடம் என்றதும், நிர்வாகம் ஆசிரியரை வேலையில் இருந்து நீக்கவிட்டதாம்.

என் பங்கிற்கு எனக்கு தெரிந்த கதையை சொன்னேன். என் உறவினரின் தோழி ஒருத்தியின் மேலதிகாரி, வேலைக்கு வரும் நேரம், வேலை செய்வது, ஒழுங்கு, விடுமுறை என்று மிக கண்டிப்பானவராம். அவரின் கண்டிப்பை பற்றி சொல்லிவிட்டு அவள், " இப்படியே இந்த ஆளு இருந்தா, பேசாம கைய பிடிச்சி இழுத்துட்டாருன்னு கம்பளைண்ட் கொடுத்துடப்போறேன். அப்பத்தா அடங்குவான்" என்று வெகு சாதாரணமாய் சொன்னார். பின்பு அப்படி புகார் கொடுத்தாரா இல்லையா என்று தெரியாது, ஆனால் பெண்கள் இந்த விஷயத்தை பல இடங்களில் தங்களுக்கு சாதகமாய் பயன் படுத்திக் கொள்கிறார்கள் என்பது உண்மை.

விவாகரத்து வழக்கில் மருமகள், பல்கலை துணைவேந்தரான மாமியார் மீது இதே புகாரை சொன்னார். பிறகு சமாதானமாகிவிட்டது. நடந்தது உண்மையோ அல்லது வழக்கிற்காக சொல்லப்பட்ட பொய்யோ அவரால் பிறகு, தந்தைக்கு சமமான மாமனாரை எப்படி சகஜமாய் பார்க்க முடிந்தது?

ஒரு முறை ஆனந்தவிகடனில் எயிட்ஸ் நோயாளியின் துயர கதை போட்டு இருந்தார்கள். இருபதின் ஆரம்பத்தில்சாவை நோக்கி முன்னேறி கொண்டிருந்தார். காரணம் கல்லூரி ஹாஸ்டலில் முதல் வருடம் ராகிங்கிற்கு மூத்தமாணவர்கள், தொழில் பெண்களை ஹாஸ்டலுக்கு அழைத்து வந்து, முதலாண்டு மாணவர்களுடன் வலுக்கட்டாயமாக உறவு வைத்துக் கொள்ள செய்திருக்கிறார்கள். அந்த பெண்களிடமிருந்து இந்த மாணவனுக்கு எச். ஐ.வி கிருமி பரவியுள்ளது.
பதினாறு வயது மாணவன், படிக்கும்பொழுது பயத்தில் உடம்பே நடுங்கியது. பிள்ளைகளை பெற்று இருக்கிறோமே,ஆண் என்ன பெண் என்ன? பொத்து பொத்து வளர்த்த குழந்தைகள், என்றாவது ஒரு நாள் உலகின் பயங்கர முகத்தைப் பார்த்துதானே ஆக வேண்டியுள்ளது?

பேச்சு அடுத்து இந்த விஷயத்தை வைத்து எடுக்கப்பட்ட சினிமா பற்றி பேச்சு திரும்பியது. எனக்கு பழைய ஸ்ரீவித்யா, ஜெய்சங்கர் நடித்த "நூற்றுக்கு நூறு" ஞாபகம் வந்தது. ஆனால் அனைவரும் பேசியது அக்ஷய் கன்னா, ப்ரியங்கா சோப்ரா, கரீனா கபூர் நடித்த "Aitraaz"க்கு திரும்பியது.

தொடரும்.

23 பின்னூட்டங்கள்:

At Monday, 24 October, 2005, சொல்வது...

2 முதல் 15 வயதுக்குள்ளான பருவத்தில் இந்த வகை தாக்குதல் ஏதோனும் வகையில் எல்லா டீனேஜு பசங்களுக்கும் வந்திருக்கும் என்று தோன்றுகிறது.(ஆணாக இருந்தாலும்)
வள்ர்நதவர்களுக்கு வேறுவிதம்.

 
At Tuesday, 25 October, 2005, சொல்வது...

ஆண்களின் பலவீனத்தைப் பெண்கள் நிறைய நேரத்தில் இதுபோல் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஜெயலட்சுமி முதல், ஜீவஜோதி வரை யாருடைய கூற்று உண்மையானது என்று தமிழ்நாடே குழம்பிக் கொண்டிருப்பது இதனால்தான்.

ஆணாதிக்கத்தை எவ்வளவு வேரறுக்க வேண்டுமோ அதே அளவு இந்த FEMALE EXPLOITATIONS உம் களையப் பட வேண்டியதுதான். நீங்க சொன்ன துணைவேந்தர் விஷயத்தில் பாதிக்கப்பட்டது அவர்களின் சொந்தமான இரு மருத்துவர்கள். அவங்க ரெபுடேஷன் ரொம்ப சரிந்துவிட்டது.
ஆண்களிடையே ஓரினச் சேர்க்கையும் தமிழ்நாட்டில் செழித்தோங்குகிறது. கல்லூரி மாணவர்களிடம் அது பரவலாகக் காணப்படும் விதம் கவலை தருவதாகவே இருக்கிறது.
ஒரு மருத்துவ மனையில் காதல் தோல்வியில் தற்கொலை செய்துகொண்ட நர்ஸ் காரணமாக சந்தேக வலையில் விழுந்த நண்பர் மிகவும் நொந்து போனார். `வீக்கர் செக்ஸ்' என்ற பதத்தைத் தங்களின் தேவைக்காகத் திரித்தாளும் பெண்களூம் கண்டனத்துக்குரியவர்களே.

 
At Tuesday, 25 October, 2005, சொல்வது...

முத்து, தாணு இந்த உண்மை சம்பவத்தைக் கேட்ட பொழுது, பெண் குழந்தைகளுக்கு நேரும் இத்தகைய விபரீதங்களுக்கு நாம்
ஓவர் ரியாக்ட் செய்கிறோமா, அதை தவிர்க்கலாமா என்று தோன்றியதின் விளைவே இப்பதிவு.
அன்புள்ள கணேஷ்,
உங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி. ஆனால் சில கேள்விகள்
1) இங்கு எழுதும் எல்லா பதிவாளர்கள் எல்லோராலும் பாராட்டப்படுகிறார்களா? அவர்கள் அனைவரும் யாராலும் பரிகசிக்க அல்லது
கேலி செய்யப்படுவதேயில்லையா?
2) ஜல்லி அடித்தல் என்றால் என்ன?
3) நீங்கள் உங்கள் பதிவில் போட்டது எல்லாம் ( உம் தரவில்லை) "ஆழமான" பதிவுகளா?
அன்பு நண்பரே, நான் எழுதுவது என்னவென்று நன்கு அறிந்தே எழுதுகிறேன். படித்ததை, நல்ல
படங்களைப் பற்றி நான் எழுதி நீங்கள் படித்ததில்லையா?
சுஜாதாவில் இருந்து இன்றைய காசிவரை பரிகாசத்துக்கு உள்ளாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி இருக்க நான் எல்லாம்
ஜூஜூபி. .அதற்கு எல்லாம் பயப்பட முடியுங்களா? ஆனாலும் உங்கள் மேலான அறிவுரைக்கு நன்றி

 
At Tuesday, 25 October, 2005, சொல்வது...

ஆங்ங்ங் இந்த ஜல்லியடிப்பதைப்பற்றி எனக்கும் சந்தேகம் உண்டு, சாரும் அடிக்கடி உப்யோகப்படுத்தி பார்த்திருக்கிறேன். ஆனால் அர்த்தம் அவ்வளவு சரியாக விளங்கவில்லை. தெரிந்தால் சொல்லவும். :D. மற்றபடிக்கு ஆழமான பதிவுகள் போடுவது அவரவர் விருப்பம்.

மோகன் தாஸ்.

 
At Tuesday, 25 October, 2005, சொல்வது...

சிறுவர் பாலில் துஸ்பிரயோகங்கள் தற்பொழுது ஆண் பெண் வேறுபாடின்றி நடக்கிறது. ( பல தடவை வெளிநாட்டு பயணிகள் ஆசிய நாட்டுக்குழந்தைகளை பன்படுத்துதாய் கேட்க முடிந்தது) இப்படியா கோரச்சம்பவங்களில் இருந்து குழந்தைகளைக்காக்க பெற்றோர்கள் அவர்களுக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்தி இதுபற்றி விளக்கி அறிவுரை கூறி வைக்கவேண்டும். தங்களைப்பாதுகாப்பதற்கு உரி வழிகளை பிள்ளைகள் அறிந்திருக்கச்செய்யவேண்டும்.

 
At Tuesday, 25 October, 2005, சொல்வது...

மோகன் தாஸ், ஜல்லி அடித்தல் பற்றி ஒரு பதிவே எழுதலாம் :-)
கயல்விழி அறியா பிள்ளைகளிடம் எந்தளவு, எப்படி சொல்லலாம் என்பது என் கேள்வி. இதைப்பற்றி நிறைய பேசியாகிவிட்டது.
மருத்துவர் தாணு, என்ன சொல்கிறார்? பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் என்ன சமாதானம் சொல்ல வேண்டும்?

 
At Tuesday, 25 October, 2005, சொல்வது...

ஆமாம் உஷா, கயல்விழி சொன்னதுபோல சின்னப் பையன்களைக் குறிவச்சு ஒரு வெளிநாட்டுக்கூட்டம் பாண்டிச்சேரியிலே சுத்துதுன்னும் கேள்விப்பட்டேன்.

மரவண்டு என்ன இப்படி கேட்டுட்டார்?

ஜல்லி உடைச்சுவச்சுக்கிட்டுத்தானே தாரே காய்ச்சணும், ரோடு போட?:-)))

உஷா,

இது நல்ல பதிவுதான். நீங்கபாட்டுக்கு எழுதுங்க.

பாலியல் குற்றம் இப்ப ரெண்டுபேருக்கும் பொதுவாயிருச்சு.

 
At Wednesday, 26 October, 2005, சொல்வது...

கற்பனை கதைகளை விட வாழ்க்கையில் நடக்கும் விசயங்களை
விவாதிப்பது உபயோகமானது. நீங்கள் எழுதுங்கள்.

 
At Wednesday, 26 October, 2005, சொல்வது...

உஷா
ரொம்ப நாட்கள் முன் நான் இதை பற்ரி எழுதியதாக நினைவு. குழந்தைகள் எப்படி தற்காத்து கொள்ளாவேண்டும், பெற்ரோர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பது பற்ரி இங்கே மனநில கவுன்சிலிங்களில் ச்ல்வதை தமிழாக்கம் செய்து எழுதி இருந்தேன்.

 
At Wednesday, 26 October, 2005, சொல்வது...

இதுபோன்ற பல தாக்குதல்கள் இப்போது அதிகமாகி வருவது உண்மை. இதைச் செய்யும் பெரும்பாலோனோர் ஆண்கள் தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 
At Thursday, 27 October, 2005, சொல்வது...

கணேஷ், உங்கள் நேர்மையான விமர்சனத்துக்கு நன்றி.
பொழுது (என்ன பேருங்க இது?) துளசி, பத்மா, தங்கமணி இதை எழுதிய முக்கியகாரணம், அந்த பதிமூணுவயதின் ஞானம். அந்தளவு இக்கால பிள்ளைகளுக்கு எல்லாம் தெரிந்து இருக்கிறது. அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய "கொழுத்தாடு பிடிப்பேன்" சிறுகதை படித்திருக்கிறீர்களா?

 
At Thursday, 27 October, 2005, சொல்வது...

கணேஷ், உங்கள் நேர்மையான விமர்சனத்துக்கு நன்றி.
பொழுது (என்ன பேருங்க இது?) துளசி, பத்மா, தங்கமணி இதை எழுதிய முக்கியகாரணம், அந்த பதிமூணுவயதின் ஞானம். அந்தளவு இக்கால பிள்ளைகளுக்கு எல்லாம் தெரிந்து இருக்கிறது. அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய "கொழுத்தாடு பிடிப்பேன்" சிறுகதை படித்திருக்கிறீர்களா?

 
At Thursday, 27 October, 2005, சொல்வது...

கணேஷ், பதிமூணு வயதில் அந்த பிள்ளைக்கு தெரிந்த விவரம், அந் நாளில் நமக்கு தெரிந்ததா? அத்தனைக்கு காரணம் நடு வீட்டில்
உட்கார்ந்து எல்லாவற்றையும் காட்டும் தொலைக்காட்சி. அக்கதையிலும் சின்ன பெண், டீவி பார்த்து கண்டதையும் கற்றுக் கொள்ளும்.
இது ஜல்லியா? தார் ஊற்றி ரோடு போடுவதா என்றெல்லாம் தெரியவில்லை. தயவு செய்து உங்கள் இலக்கிய அறிவு திறனுடன்
என்னுடைய மிக சாதாரண எழுத்தை எடைப் போடாதீர்கள்.
"அவரவர் பூத்ததுப் போல"- வாக்கிய உதவி லா.சா.ரா ( இந்த எடுத்துக்காட்டு பல முறை சொல்லிவிட்டேன்). கதைதானே திண்ணையில
தேடிப் பாருங்க :-)

 
At Thursday, 27 October, 2005, சொல்வது...

http://thinnai.com/st0112032.html

 
At Thursday, 27 October, 2005, சொல்வது...

அன்புள்ள உஷா

ஜாலியா எடுத்துக்குவிங்கன்னு நினைச்சேன்
நான் சொன்னதை தப்பா எடுத்துக்கிட்டிங்க , மன்னிக்கவும்
நான் யாரையும் அப்படி சொன்னதில்லை , உங்களை நல்லாத் தெரியும்குற
உரிமைலதான் சொன்னேன் , அதுவும் தொடரும்னு போட்டிருந்திங்கள்ளா
எனக்கு செமகடுப்பு :-) . ஹ்ம் நானும் தனிமடலில் சொல்லி இருக்கலாம்
எனது முந்தைய கருத்துக்களை நானே நீக்கிவிட்டேன்
அப்புறம் இன்னொன்னு ஜல்லியடிக்கிறது என்ற வார்த்தையின் பூர்வீகம் சுஜாதாவாமே

என்றும் அன்பகலா
மரவண்டு

 
At Thursday, 27 October, 2005, சொல்வது...

இது நுனிப்புல் பதிவும் அல்ல. ஜல்லியடித்தலும் அல்ல. எல்லாவற்றையும் தாண்டி ஆழமான பதிவு தான் போட வேண்டும் என சட்டமல்ல. உங்கள் வலைப்பதிவில் நீங்கள் சிந்துபாத் படக்கதை கூட போடலாம். பிடத்தால் வருபவர்கள் படிக்கலாம். இல்லாவிட்டால் பேசாமல் போகலாம். அதை விட்டு விட்டு எல்லாரும் ஆழமான பதிவு போட வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள் எனப் புரியவில்லை. முக்கியமான விடயம் பற்றி தான் எழுதி இருக்கிறார்கள். நடு வீட்டு சாட்டிலைட் டிவி பலத் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் 13 வயது பையனின் ஞானம் முழுதும் வருந்தத்தகது அல்ல. நாளை அவனுக்கு இப்படி ஒன்று நேரும் பட்சத்தில் தன்னை எப்படி தற்காத்துக்கொள்வது என்றும் தெரிந்து வைத்திருப்பான். அப்புறம், முத்து சொன்னது மாதிரி எல்லா பையன்களுக்கும் இப்படி நேர வாய்ப்பில்லை. மற்றபடி இளைஞர்களிடம் ஓரின வழக்கம் அதிகரிப்பதாக கூறுவது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. என் சிற்ற்றிவுக்கு எட்டிய வரை கம்மி தான். இது பற்றி அடுத்த வருடம் இந்தியா டுடே சர்வே போட்டால் நன்றாக இருக்கும்

 
At Thursday, 27 October, 2005, சொல்வது...

மிக்க நன்றி உஷா & ஜெயஸ்ரீ. இப்போதுதான் அந்தக்கதையைப் படித்தேன்.

 
At Friday, 28 October, 2005, சொல்வது...

கணேஷ், ஏன் அந்த பதிலை எடுத்தீர்கள்? தவறாய் ஒன்றுமில்லை, எனக்கு கோபமெல்லாம் வரவில்லை. எரிச்சல்தான் வந்தது :-)
ரவிசங்கர், தொலைக்காட்சி என்று இல்லை, எதிலுமே நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.
ஜெயஸ்ரீ, தங்கமணி அருமையான கதையில்லையா? புலம்பெயர்தலின் சோகம், அவர்களின் மன உளச்சல், பாத்திர படைப்புகள் என்று
அனைத்துமே சிறப்பாக அமைந்துவிட்டது. அ. முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளின் வழக்கமான பாணியில் இருந்து
இந்த கதை பெரிதும் மாறுப்பட்டு இருப்பதுப் போல எனக்கு தோன்றியது.

 
At Friday, 28 October, 2005, சொல்வது...

அன்புள்ள உஷா

பதிவில் எழுதவேண்டிய முக்கியமான செய்திகளை comments ல் எழுதுகிறீர்கள் . இதைக் காணும் போது எனக்கு பத்திக் கொண்டு வருக்கிறது :-)

 
At Friday, 28 October, 2005, சொல்வது...

:)

 
At Saturday, 29 October, 2005, சொல்வது...

ஆமாம். அருமையான கதை. அவர் தனது குழந்தைகளைப் பற்றி சொல்லுமிடங்கள் ஒரு கவிதையைப்போலுள்ளது. நான் படித்த முத்துலிங்கத்தின் கதைகளில் இருந்து மாறுபட்டதுதான். மிக்க நன்றி!

 
At Sunday, 30 October, 2005, சொல்வது...

சிங்கையில் (ஓசியில்) கிடைக்கும் டுடே tabloid-ல் இன்று ஒரு செய்தி. இச்செய்தி உங்களில் பதிவுக்கு சம்பந்தப்பட்டதாக நான் நினைத்ததால் அதன் சுட்டியை தருகிறேன்.

http://www.todayonline.com/articles/81301.asp

 
At Monday, 26 February, 2007, சொல்வது...

//என் உறவினரின் தோழி ஒருத்தியின் மேலதிகாரி, வேலைக்கு வரும் நேரம், வேலை செய்வது, ஒழுங்கு, விடுமுறை என்று மிக கண்டிப்பானவராம். அவரின் கண்டிப்பை பற்றி சொல்லிவிட்டு அவள், " இப்படியே இந்த ஆளு இருந்தா, பேசாம கைய பிடிச்சி இழுத்துட்டாருன்னு கம்பளைண்ட் கொடுத்துடப்போறேன். அப்பத்தா அடங்குவான்" என்று வெகு சாதாரணமாய் சொன்னார்.//

உஷாஜி, என் கணவருக்கு நான் அவ்வபொழுது சொல்லும் அறிவுரை இதுவே.. மிகவும் கடுமையாக அலுவலக பெண்களிடம் நடந்து கொள்ளாதீர்கள், நிச்சயம் நீங்கள் ஏதாவது அவர்களை செய்து விட்டதாக வதந்தி பரப்பி வேலைக்கே வேட்டு வைத்து விடுவார்கள், அப்புறம் வாயை வாழ்நாள் முழுதும் திறக்க முடியாது என்று சொல்லி உள்ளேன். நிச்சயம் பெண்கள் சில விஷயங்களை தங்களுக்கு சாதகமாக ஆக்கி கொள்வார்கள்.

 

Post a Comment

<< இல்லம்