அன்புள்ள தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு,
அன்புள்ள தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு,
தமிழ் மணம், வெறும் பதிவுகளின் திரட்டி அல்ல, இதற்கென்று சில சட்டதிட்டங்கள், வரைமுறைகள் உண்டு என்பதை செல்வராஜ் அவர்களின் சமீபத்து பதிவில் கூட கண்டேன். பாராட்டுகள், சுதந்திரமான எழுத்துக்கு என்னுடைய ஆதரவு உண்டு என்றாலும், பிறரை தாக்கவும், அவர்களின் பெயரைக் கெடுக்க செய்யும் முயற்சிகளுக்கு தடைப் போடவும் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியே!
பல இடங்களில், தமிழ்மண கட்டுப்பாடுகளைக் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டப்பொழுது, என் மனதில் தோன்றியது ஒன்றேதான். ஒருவர் தன் முழு முயற்சியில், தன் வேலைகளை, நேரத்தை செலவிட்டு செய்யும் காரியத்தில் தவறு கண்டுப்பிடிப்பது சுலபம், தேவையில்லை என்றால் விலகிவிடலாமே, இலவச சேவையை உபயோகித்துக்கொண்டு, அதில் இது சரி இல்லை, அது சரியில்லை என்று ஏன் குத்தம் கண்டுப்பிடிக்க வேண்டும் என்று? இதே கேள்வி என்னை நானே இன்றுக் கேட்டுக்கொண்டேன்.
ஒரு சாதியில் பிறப்பது என்பது அவரவர் தலைவிதி. இது உயர்ந்த சாதி என்ற பெருமையோ அல்லது தாழ்ந்த சாதி என்ற அவமானம் கொள்வதோ தேவையே இல்லை. ஆனால் ஒரு சாதியில் பிறந்ததன் தலைவிதியாய், "கூட்டிக்கொடுப்பது, மாமா வேலை செய்வார்கள், பெண்கள் கேவலமானவர்கள்" என்றெல்லாம் தொடர்ந்து எழுதப்படுவதைப் பார்த்தும் அனைவரும் பேசாமல் இருப்பது மனதிற்கு வேதனையாய் இருக்கிறது. நான் விரும்பி படிக்கும் பதிவாளர் ஒருவர் தன் பதிவில் லிங்க் கொடுத்திருப்பதையும் கண்டேன்
(இந்த லிங்க் யார் வேண்டுமானாலும், சம்மந்தப்பட்ட பதிவாளர்களுக்கு தெரியாமலும் கொடுக்கலாம் என்று குமரன் சொன்னதும் புரிந்தது. தமிழினி முத்து அவர்களே, இந்த தவறான புரிதலுக்கு மன்னிக்கவும்)
தமிழ்மணத்தில் இணைத்துக்கொள்ளும் பதிவாளர்கள், சொந்த பெயரில் எழுத விரும்பாவிட்டால், நிர்வாகிகளுக்கு தங்களைப் பற்றிய விவரங்களை தந்து அவற்றை ரகசியமாய் வைத்துக் கொள்ள சொல்லலாம். அனானிமஸ் பின்னுட்டங்களை முழுமையாய் ஒழிக்கலாம். காரணம், மிக வீரமாய் எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கேவலப்படுத்த உபயோகப்படுகிறதே!
இதை கேட்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்றுக் கேட்டு இப்பொழுதும் தமிழ் மண நிர்வாகிகள் பேசாமல் இருக்கலாம் அல்லது இதைக் கேட்டது தவறு என்று நினைத்து என் பதிவை தடை செய்யலாம் ! என்ன செய்யப் போகிறீர்கள் என்பது இனி உங்கள் முடிவு.
89 பின்னூட்டங்கள்:
என்ன ஆச்சு உஷா?
மீண்டும் போலிகள் தொல்லையா? (-:
உங்கள் கேள்வி மிக நியாயமானது உஷா. நானும் நீங்கள் குறிப்பிடும் பதிவினைப் பார்த்தேன். அந்தப் பதிவாளர் மட்டுமின்றி பலரும் இப்படித் தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சொந்தப் பெயரில் எழுத விரும்பாதது அவர்கள் விருப்பம். ஆனால் அதனைக் கொண்டு கண்ட மாதிரி எழுதிக் கொண்டு இருக்கிறார்களே. அது சரியில்லை.
நீங்கள் சொன்ன 'நீங்கள் விரும்பிப் படிக்கும் பதிவாளர்' அவர் பதிவில் லிங்க் கொடுக்கவில்லை. நீங்கள் விரும்பிப் படிக்கும் பதிவாளரின் பதிவை அந்த இன்னொருவர் சுட்டிக் காண்பித்திருக்கிறார். அது இங்கே இவர் பதிவில் வந்து தெரிகிறது. அவ்வளவே. நீங்களும் இப்போது நீங்கள் விரும்பிப் படிக்கும் பதிவாளரின் பதிவிற்குச் சுட்டியை இந்தப் பதிவில் கொடுத்தால் இந்தப் பதிவும் அங்கே தெரியும்.
நல்ல நேரத்தில் தந்துள்ளீர்கள் இந்தப் பதிவை. இதனால் என்ன மாறும் எனத் தெளிவில்லை. ஆனால் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
This comment has been removed by a blog administrator.
This comment has been removed by a blog administrator.
//அது இங்கே இவர் பதிவில் வந்து தெரிகிறது. //
தெளிவு படித்தியமைக்கு நன்றி குமரன்.
/நான் விரும்பி படிக்கும் பதிவாளர் ஒருவர் தன் பதிவில் லிங்க் கொடுத்திருப்பதையும் கண்டேன்.//
//மிக வீரமாய் எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கேவலப்படுத்த உபயோகப்படுகிறதே!//
என் பதிவில் அனானி ஒருவர் கேட்ட கேள்வியை இது குறித்தால் நீங்கள் அவசரப்படுகிறீர்கள் என்று அர்த்தம். மேலே நான் குறிப்பிட்ட முதல் வாக்கியத்தை நீங்கள் எடுக்க வில்லை என்றால் நீங்கள் பொதுவில் மன்னிப்பு கேட்கவேண்டி வரும். நான் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பேன்.
நீங்கள் உங்கள் பதிவில் என் பதிவுக்கு லிங்க் தந்தால் அது என் பதிவில் தெரியும்.நான்தான் அதற்கு பொறுப்பு என்று சொல்லமுடியுமா?
எது வேண்டுமானாலும் எழுதுங்கள்.கோரிக்கை வையுங்கள்.உங்களுக்கு உரிமை உள்ளது.ஆனால் நீங்கள் எழுதி நான் இங்கு போட்டுள்ள இரண்டாவது வாக்கியத்தை நீங்கள் செய்கிறீர்கள் எனக்கு....
(இதை பிரசுரிக்கலாம்.அல்லது அந்த வாக்கியத்தை எடுக்கலாம்.உங்கள் சாய்ஸ்.பிரசுரித்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை.ஆனால் மெதுவாக படித்து நான் என்ன சொன்னேன் என்று பார்த்து முடிவேடுங்கள்.இல்லை இது உன் பதிவை குறித்து அல்ல என்றால் எந்த பதிவு என்று எனக்கு சொல்லுங்கள்)
மாதெரெஸ்ஸி நேரில் சொன்னார்; முட்ட முடிந்தது. அனானிமஸ் சொல்வதற்கு எங்கு போய் முட்டிக் கொள்வது ?
முத்து,
நான் மட்டுமல்ல், பலரும் இப்படித்தான் நினைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. குமரன் சொன்னதும் எனக்கு புரிந்தது.
அபாரம், அற்புதம், சுவையான பதிவு!
அடிச்சு ஆடுங்க!!!
சரி ஆனது ஆச்சு..
பதிவை எடுக்க போறீங்களா..அல்லது என் பெயரை கெடுப்பது போல் உள்ள வரிகளையும் பின்னூட்டங்களையும எடுக்க போறீங்களா?
(நான் இப்பல்லாம் டென்சன் ஆவறில்லை.பழக்கம் ஆயிடுச்சி :))
(அந்த முகமூடி போட்டு எழுதும் ஆட்களை நீக்க வேண்டும் என்று நீங்கள் சொன்ன கருத்து எனக்கும் பிடித்திருந்தது)
என்னைப் பொறுத்த வரையில் குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்.
சொல்ல வந்த கருத்தை நாகரீகமாகச் சொல்லும் வழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. நாம் தப்புகள் நமக்குத் தெரியாமல் அடுத்தவர் தப்புகள் மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
பெயரை போட்டுக்கொள்ளாமல் எழுதுகிறவர்களைப் பற்றி என்னதான் சொல்வது. சொல்வது நேர்மையான கருத்தென்றால் நேராகச் சொல்வதே உத்தமம். அவ்வளவுதான். நாம் எழுதுகிற எழுத்துகள் நம்முடைய வீட்டில் இருப்பவர்களும் படிக்கும் தரத்தில் இருக்க வேண்டும். அவ்வளவே.
தங்களின் ஆதங்கம் புரிகிறது. அதற்கேற்றாற்போல் தமிழ்மணம் எடுத்துவரும் நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியதே.
இருந்த போதும் உங்களைப் போன்ற ஒரு சிறந்த எழுத்தாளர் பின்னூட்டங்களைக் கண்டு விரக்தி கொள்வது வியப்பளிக்க வைக்கிறது. காய்கிற மரத்திற்குதான் கல் எறி விழும் என ஒரு பழமொழி உண்டு.
ஒரு கருத்தை நேரம் செலவு செய்து எழுதி பிரசுரிக்க உங்களுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே போன்று பின்னூட்டம் இடுபவர்களிற்கும் உண்டு என்றே எண்ணுகின்றேன். அதனைத் தாங்கள் தான் சரியான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்பதே என் கருத்து.
//தமிழ்மணத்தில் இணைத்துக்கொள்ளும் பதிவாளர்கள், சொந்த பெயரில் எழுத விரும்பாவிட்டால், நிர்வாகிகளுக்கு தங்களைப் பற்றிய விவரங்களை தந்து அவற்றை ரகசியமாய் வைத்துக் கொள்ள சொல்லலாம்//
இவ்விடையம் தொடர்பி்ல் தமிழ்மண நிர்வாகிகள் சிந்தித்திருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. எனினும் பதிவாளர்களின் விபரங்கள் என்பது, தாங்கள் நினைப்பது போல் தாக்கல் பின்னூட்டங்களை தவிர்ப்பது என்ற ஒரு சிறு காரணத்திற்காக(*எழுத்தாளர்களுக்கும் பலவிதத்தில் அச்சுறுத்தல்கள் உள்ளன என்பதையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்) பெற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல என்பதும் வளங்கப்பட்டாலும் அவ்விபரங்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதில் உள்ள அசெளகரியங்களையும் தமிழ்மண நிர்வாகம் பரிசீலித்த பின்பே தற்போதய நிலைப்பாட்டை எடுத்திருக்கும் என நினைக்கிறேன்.
//ஒரு சாதியில் பிறப்பது என்பது அவரவர் தலைவிதி//
நான் இதுவரை பார்வையிட்டவரை இங்கே வலைப்பதிவுகளில் எவரும் ஒருவர் இன்ன சாதியில்(தமிழின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு "சாதி" என்ற பாகுபடுத்தல் பிரயோத்தினையே தவிர்க்க விரும்புகின்றேன்) பிறந்தார் என்று குற்றம் கூறவில்லை என்றுதான் நினைக்கின்றேன்.
அவர்களின் எழுத்துக்கள், கருத்துக்கள் சில வேளைகளில் அவர்களின் உள்த்தோற்றத்தை அல்லது அவர்களின் உண்மை முகத்தினைக் காட்டும் போது அதற்கெதிரான தாக்குதல்களே இவ்வாறு பிரதிபலிக்கின்றன என எண்ணுகிறேன்.
ஒரு பிரிவு மக்கள் மீதான எழுத்து மூலமான தாக்குதல்கள் குறித்து மிகவும் வேதனைப்படும் நீங்கள், குறிப்பிட் பிரிவினரால் பல பிரிவு மக்கள் நிஜமாகவே/நடைமுறை வாழ்விலேயே படுபயங்கரமாக ஒடுக்கப்பட்ட நிகழ்வுகள் கூட தங்களுக்கு வேதனையைத் தந்திருக்க வேண்டும்.
(இந்த ஒடுக்கு முறைக்கெல்லாம், ஏதோவெரு நீதி என்று சொல்லப்படுகின்ற, மனிதனாலேயே மனிதனை ஒடுக்க எழுதப்பட்டு இல்லாத மாயையைக் கொண்டு நலிந்தவர்களை பயங்காட்ட உள்ள விடயங்களை சாட்சிக்கெடுத்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது)
ஓ மன்னிப்பு கேட்டுட்டீங்களா? இதைவிட அந்த வரிகளை எடுத்திருந்தாவே போதும் எனக்கு...
நன்றி உஷா
////ஒரு சாதியில் பிறப்பது என்பது அவரவர் தலைவிதி. இது உயர்ந்த சாதி என்ற பெருமையோ அல்லது தாழ்ந்த சாதி என்ற அவமானம் கொள்வதோ தேவையே இல்லை. ஆனால் ஒரு சாதியில் பிறந்ததன் தலைவிதியாய், "கூட்டிக்கொடுப்பது, மாமா வேலை செய்வார்கள், பெண்கள் கேவலமானவர்கள்" என்றெல்லாம் தொடர்ந்து எழுதப்படுவதைப் பார்த்தும் அனைவரும் பேசாமல் இருப்பது மனதிற்கு வேதனையாய் இருக்கிறது./////
ஆனால் ஒரு சாதியில் பிறந்தவர்கள் தொடர்ந்து இந்தியை ஆதரிப்பது, சமஸ்கிருதம் தான் மூத்த மொழி என்பது... இடஒதுக்கீடு என்றாலே உடனே கச்சைக்கட்டி ஓடிவந்து எதிர்ப்பது.... திராவிடம் என்றாலே வாந்தி எடுப்பது.... இதையெல்லாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்களே...
அதற்காக அதை மோசமான மொழியில் விமர்சிப்பது நியாயம் என்று வக்காலத்து வாங்கவில்லை.... இரு தரப்புக்கும் பொதுவான கருத்தாக இதை நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்பினேன்....
விழி,
பதிவில் எழுதுபவர்களைப் பற்றி நான் எழுதியுள்ளேன். எனக்கு வரும் பின்னுட்டங்களைப் பற்றி அல்ல, பொதுவாய் அனானிமஸ்
பின்னுட்டங்களைக் குறிப்பிட்டுள்ளேன்.
முத்து,
இருக்கட்டும், என்னைப் போல பலரும் இப்படி தவறாய் புரிந்துக் கொள்கிறார்கள். என்ன சொல்றீங்க? பின்னுட்டங்களும் புதியதாய் படிப்பவர்களுக்கு குழப்பத்தை தரும்
மன விகாரங்களை பின்னூட்டங்கள் பிரதிபலிக்கின்றன போலும்.
பெயரிலி (இந்த தமிழ் வார்த்தை என்க்கு சிவஞானம் ஐயா சொன்னது...) பின்னூட்டங்கள் இந்த திரை போட்டு இந்த மன விகாரங்களை இன்னும் உற்சாகப்படுத்துகின்றன.
இவர்கள் மனதின் கருப்பும் வெறுப்பும் இவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. இவர்களை வைது என்ன பயன்?
ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய முடியும் என்றால் அது நல்லதுதான். அதனால் இந்த பதிவுகளின் துர்நாற்றம் நம் வரை எட்டாமல் இருக்கும். அவ்வளவுதான்.
இம்மாதிரி பதிவுகள் புறக்கணிக்கப்பட தக்கவை. இவற்றை மதித்து மனம் புண்பட்டு வேகப்பட்டு நாம் தவறிழைத்தால் அது அவர்கள் செய்யும் அதே தவறை நாமும் செய்ததாகும். அதாவது, இம்மாதிரி பதிவுகளின் தாக்கத்தை அவர்கள் அதிகமாக எடையிடுகிறார்கள். அதுதான் அவர்கள் செய்யும் தப்பு. அதையே நாமும் செய்து இதை பெரிது படுத்த வேண்டாம்.
இது ஒரு கையாலாகாத பதில் போல தோன்றலாம். (நான் எழுதும்போது எனக்கு அப்படித்தான் படுகிறது....) ஆனால், இதுவே நம் நிரந்தர தீர்வு என்று தோன்றுகிறது.
என்னையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி தமிழ் மணத்தது, மண்க்கிறது. ஆனால், பெயரிலி பின்னூட்டங்கள் நான் எந்த சூழ்நிலையிலும் இட்டதில்லை, இடவும் மாட்டேன். எத்தனை விவாதமான விஷயமாக இருந்தாலும் அது என் பெயர், புகைப்படம் தாங்கியே வரும். இந்த நேர்மை பல பேருக்கு இருக்கிறது, சிலருக்கு இல்லை. இதுவே இவர்களின் கருத்துக்கு இவர்களிடம் உள்ள நேர்மையை சுட்டுகிறது. இம்மாதிரி பிறவிகளை மேலும் புண்படுத்துவானேன்.
தமிழ்மணத்துக்கு நான் மிகவும் புதியவன். இங்கு நடக்கும் ஆரோக்கியமற்ற விவாதங்கள் இந்த நிர்வாகிகளால் எவ்வித எதிர்மறை விளைவையும் காட்டவில்லை என்பது எனக்கே ஒரு ஆச்சரியகரமான விஷயம். இதில் என்ன மர்மமோ, அறியேன்!!!
இறுதியாக பார்த்தால், இம்மாதிரி இமேஜ் இந்த அழகான வெப்சைட்டுக்கு இருப்பது மிகவும் வருந்தத் தக்கது.
கொஞ்சம் பழகியதும் இந்த வெப்சைட்டில் இருக்கும் மேடு பள்ளம் புரிகிறது என்று நினைக்கிறேன்.
இந்த தமிழ்மணம் தங்கள் ஊரின் ஃஸபா பார்க் இல்லை உஷா, இது எங்கள் ஊரின் பனகல் பார்க். இங்கு வேலையற்றோரும், ஊனமுற்றோரும், விகார மனதில் வடிகால் தேடுவோரும், பிச்சைக்காரர்களும், பிக்பாக்கெட்டுகளும் நிறைய படுத்து தூங்குகிறார்கள். இங்கு குழந்தைகளை அழைத்து குடும்பத்தோடு போவது கவனமாக செய்ய வேண்டிய காரியம்.
நன்றி
ஷ்ரீநிதி அவர்களே,
தங்களின் பார்ப்பன விசுவாசத்திற்கு மிக்க நன்றி.
உஷா,
//என்னைப் போல பலரும் இப்படி தவறாய் புரிந்துக் கொள்கிறார்கள். என்ன சொல்றீங்க? பின்னுட்டங்களும் புதியதாய் படிப்பவர்களுக்கு குழப்பத்தை தரும் //
இல்லைங்க..அந்த லிங்க் விவகாரம் பலபேருக்கு தெரியும்...ஏற்கனவே இந்த பிரச்சினை வந்திருக்கு...
பிளாக்கரின் இந்த வசதியைப்பற்றி பத்ரியும் எழுதியிருக்கார்...
ஒரு அனானி நம்ப srinidhi எழுதின அதே கேள்விகளை srinidhi மாதிரியே ஆங்கிலத்தில் வைத்துள்ளார்.நான் பதிலும் தந்துள்ளென்.நீங்கள் அதை படித்திருக்கலாம்.நீங்கள் வழக்கம் போல் அவசரப்பட்டு விட்டீர்கள் ):
***********
srinidhi,
உங்கள் நகைச்சுவை உணர்வு எனக்கு ரொம்ப பிடிக்கும்.என் பதிவுகளில் இப்போதெல்லாம் உங்கள் பெயர் வருவதே இல்லையே? ஏன்?
இந்தப் பதிவு முத்து அவர்கள் பற்றியதா அல்லது தொடர்ந்து ஆபாசமாக எழுதப் பட்டுவரும் கருத்துக்கள் பற்றியதா என்று எனக்கு தெரியவில்லை. நான் ஆபாசமாக எழுதப் பட்டு வருகிற எழுத்துக்கள் என்று விடாது கறுப்பு அவர்களின் பதிவு பற்றி மட்டும் குறிப்பிடவில்லை வஜ்ரா ஷங்கர் தன்னுடைய ஒரு பதிவில் இஸ்லாமிய மதத்தைப் பற்றி குறிப்பிடும் சமயம் அரக்கன் என்று குறிப்பிட்டிருந்தார், உங்களுக்கு மாமாத் தொழில் என்பது குறிப்பிடுவது தவறாக தெரிந்தால் எனக்கு வஜ்ராவின் இந்தக் கருத்து இதனை விட ஆபாசமாக தெரிகிறது.
Butterfly Effect என்று சொல்வார்கள் இவர்களின் கருத்துக்கள் எங்கெங்கு என்னென்ன பிரச்சனைகளை உண்டு செய்யும் என்று யாராலும் சொல்ல இயலாது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்வதற்குதான் பதிவுகள். ஆனால் தமிழ்மணம் போன்ற திரட்டிகள் சரியான முறையில் செயல்பட எல்லா பதிவுகளும் தணிக்கை சரியான முறையில் செய்யப்பட வேண்டும். விடாது கருப்புகள் நீக்கப்படும் அதே சமயத்தில் பாலிஷான முறையில் மற்றவர் நம்பிக்கைக்களை கேவலப்படுத்தப்படும் கருத்துகளும் தணிக்கை செய்யப்பட வேண்டும்.
ஒரு சிறிய விண்ணப்பம்
இங்கு தனிப்பட்ட தாக்குதல், நக்கல், கேலி, சாதி குறிப்பிட்டுதல் போன்றவைகளை உங்கள் சொந்த பதிவில் வைத்துக்
கொள்ளுங்கள். இங்கு வேண்டாம்.
லக்கி லுக்,
தமிழ் மண சென்சார்போர்ட் அதிகாரம் என்னிடம் இல்லை.
கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி. ஏதோ இன்று கண்ணில் பட்டது, சொல்ல வேண்டும் என்று தோன்றியது சொல்லிவிட்டேன்.
மற்றப்படி இதன் சார்ப்பான விவாதங்களில் இன்று எனக்கு விருப்பமில்லை. காரணம் நாம் விவாதித்து எதுவும் ஆகப்போவதில்லை
முத்து தமிழினியிடம் ஒரே ஒரு மின்மடல் தட்டி உங்கள் சந்தேகங்களை கேட்டுவிட்டு பிறகு அவரை பற்றிய கருத்துகளை எழுதியிருக்கலாம், முத்து தமிழினி என்ன அணுகமுடியாதவரா?
பிரேக்கிங் பாயிண்ட் வரும்போது நம்மால் யோசிக்கவெல்லாம் இயலாது...
நம் ஒவ்வொருவருக்கும் பிரேக்கிங் பாயின்ட் என்பது உள்ளது சிலருக்கு அது உடனே, சிலருக்கு கொஞ்சம் நேரமாகும் அவ்வளவே
லக்கி லுக், வாந்தி வருவதை போல் தோன்றினால் எலுமிச்சை, இஞ்சிமொறப்பா போன்றவை உபயோகப்படுமா என்று பார்க்க வேண்டும்.. தோன்றிய உடனே கண்ட இடத்திலும் எடுக்கக்கூடாது... இந்த பதிவு பேசுவது என்ன, நீங்கள் பேசுவது என்ன?
பிறப்பில் கிடைக்கும் அட்டாச்மெண்ட்டான சாதியின் காரணமாக "கூட்டிக்கொடுப்பது, மாமா வேலை செய்வார்கள், பெண்கள் கேவலமானவர்கள்" என்றெல்லாம் தொடர்ந்து எழுதப்படுவதைப் பார்த்து இதற்கு எதாவது தீர்வு உண்டா என்று கேட்கிறார் பதிவாளர்.
அந்த இடத்தில் வந்து "இதற்கு வருத்தப்படுகிறீர்களே, அப்படியே ஒரு சாதியில் பிறந்தவர்கள் தொடர்ந்து இந்தியை ஆதரிப்பது, சமஸ்கிருதம் தான் மூத்த மொழி என்பது... இடஒதுக்கீடு என்றாலே உடனே கச்சைக்கட்டி ஓடிவந்து எதிர்ப்பது, திராவிடம் என்றாலே வாந்தி எடுப்பது என்பதற்கும் வருத்தப்படுங்கள்" என்று சொல்கிறீர்கள்... (நம் மதிப்பீடுகளுக்கு எதிர்ப்பதமாக இருக்கிறது என்பதால் அது பாவகரமானது, கேவலமானது என்பது போன்ற கருத்துத்திணிப்புகளை அப்புறம் பார்ப்போம்)
யார் என்ன பேசினாலும் தனக்கு தோன்றிய வகையில் செக்கூலரிஸத்தை தூக்கி பிடிக்கும் உம்மை மாதிரி மலமண்டைகளை குறித்துதான் இந்த பதிவே பேசுகிறது... ஒன்று செய்வோம்... நீர் பிறந்த ஜாதியை சொல்லும்.. இல்லை உம்ம பேரை சொன்னால் கூட போதும் சில இணைய *சுக்கள் பேரை வைத்து ஜாதியை கணிக்கிறார்களாம், அவர்களிடம் உம்ம ஜாதி என்ன என்று கேட்போம். பிறகு உம்ம ஜாதிக்கு உண்டான பொதுப்புத்திகளை எல்லாம் பட்டியல் போட்டு, உம்ம சிந்தனைக்கு எல்லாம் ஜாதிதான் காரணம் என்று சொல்லி அப்படியே உம்ம குடும்பத்தையும் உம்ம வீட்டு பெண்களையும் போர்னோ விமர்சனம் பண்ணி ஒரு பதிவு போடுவோம்... அதற்கு பதில் சொல்லி நீர் போடும் இழவு பதிவில் ஒப்பாரி வைக்கும்போது அப்படியே பக்கத்து வீட்டு பூனை செத்த்தற்கும் சேர்த்து வருத்தப்பட்டு ஒப்பாரி வைக்கலாம்...
உஷா,
இம்மாதிரி வக்கிரமான முறையில் பின்னூட்டமிட்டு, செயல்படுவதை உளவியலாக எனது பதிவான
பாகம்-2 "அரசியல் திரா'விட'ப் "பெத்தடின்"
http://harimakesh.blogspot.com/2006/07/14-2.html
இதில் பதிந்திருக்கிறேன். கருத்துக்கள் மாறுபட்டாலும் நாகரீகம் எழுத்தில் வேண்டும். சிலர்க்கு வருவதில்லை.
நல்ல படைப்பு, எழுத்து எழுதும் போது நம் பாரதியின் அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை என்பதே... இச்சகத்தில் உள்ளோரெலாம் எதிர்த்து நின்றபோதிலும் அச்சமென்பதில்லையே!
என்ற வரிகளை நினைவு கொள்ளுங்கள். தேவைப்படும் மன உறுதியை தடையின்றி கிடைத்திடும்.
This comment has been removed by a blog administrator.
நான் இங்கு வஜ்ரா ஷங்கர் என்று ஒரு உதாரணத்திற்காக குறிப்பிட்டேன், அது போல வரும் பல கருத்துக்களை சொல்ல விரும்பி குறிப்பிட்டது. ஆனால் நான் எழுதியது அவரை குறிப்பிட்டு எழுதியது போல வந்துள்ளது அது என் பிழையே அவரை தனியாக தாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை எனக்கு. நான் குறிப்பிட வந்தது அவர் சொன்னது போன்ற கருத்துக்களை. என்னுடைய பின்னூட்டம் படித்துப் பார்த்த பொழுது தவறாக தெரிந்ததால் இந்த விளக்கம்.
முகமூடியின் நாகரிகமில்லாத மலமண்டை பின்னூட்டத்தை அனுமதித்த உஷாவுக்கு நன்றி!
முகமூடி மாதிரி ஜாதிவெறியர்கள் இருக்கும்வரை அதை எதிர்க்கும் ஜாதிவெறியர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.... என்ன அவரவர் விரும்பும் வழிமுறையில் எதிர்த்துக் கொள்கிறார்கள்....
படித்த முகமூடி தன் ஜாதிவெறியை நாகரிகமான வார்த்தைகளில் பதிகிறார்.... படிக்காதவன் அவனுக்கு தெரிந்த மொழியில் பதிக்கிறான்....
முகமூடியும் சரி.... போலியார் மற்றும் விடாது கறுப்பும் சரி.... எல்லோருமே சமமான நிலையில் தான் இருக்கிறார்கள்.... வார்த்தைகளில் நாகரிகம் இருப்பதால் மட்டும் இவர் ஒன்றும் மகாத்மா அல்ல....
லக்கி, உங்கள் பின்னுட்டத்தில் இருக்கும் தளமுகவரியை நீக்கியிருக்கிறேன். மன்னிக்கவும்
//// Luckylook, you are not second to vidathu Karuppu when it comes to
defaming brahmins.There can be different view points.They can be discussed in a decent way.You learn that first and then suggest something to Usha. ////
ஸ்ரீநிதி ஏதோ போலியார், கறுப்பு மட்டுமே அதுபோல எழுதுவதுபோல பம்மாத்து காட்ட முயற்சிக்க வேண்டாம்.... இதோ பாருங்கள் ...... இது யாருடைய வலைப்பூ.... போலியாருடையதா அல்லது விடாது கறுப்புடையாருடையதா? இருபக்கமும் தவறு உண்டு என்பதை சொல்வதில் உங்களுக்கு என்ன நோபாளம்....
///லக்கி லுக்,
தமிழ் மண சென்சார்போர்ட் அதிகாரம் என்னிடம் இல்லை./////
உஷா, தமிழ்மணத்தில் இருக்கும் எல்லாப் பதிவுகளையுமா உங்களைப் போய் திருத்தி விட்டு வரச்சொல்கிறேன்... உங்கள் பதிவில் ஏதோ ஒரு சாதியை மட்டுமே வலைப்பூக்களில் குறிவைத்து தாக்குவதாகக் கூறினீர்களே... அது தவறு என்பதைத்தான் சுட்டிக் காட்டினேன்.... இரு தரப்புக்கும் உங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தால் அது நடுநிலையான பார்வையாக இருந்திருக்கும்.
முகமூடி,
//இந்த பதிவு பேசுவது என்ன, நீங்கள் பேசுவது என்ன?//
செம தமாசு. இப்படி சொல்லிவிட்டு நீங்களே போலியார் பற்றி பேசுகிறீர்கள். இங்கு விவாதிக்கப்படுவது கறுப்புவின் பதிவு பற்றி. அவர் எந்த குடும்பத்தை பற்றி போர்னோ எழுதினார் என்று சொல்வீர்களா?
சிலர் எழுதும் பதிவுகளை/பின்னூட்டங்களைப் பார்த்தால் கருப்புவின் பதிவுகள் அவசியமான ஒன்று என தோன்றுகிறது.
This comment has been removed by the author.
லக்கி லுக்,
உங்கள் கருத்தை உங்களிடமே பிரயோகித்தால் எனக்கு நீங்கள் தரும் சர்டிபிகேட் ஜாதிவெறியன்.. தமாஷாக இல்லை? எதை வைத்து எனக்கு ஜாதி சர்டிபிகேட் தருகிறீர்கள் என்று சொல்ல முடியுமா? (உஷாவுக்கு பின்னூட்டம் அளித்ததால் / உங்கள் பிராமண எதிர்ப்பு கருத்துக்கு எதிர் கருத்து சொன்னதால் / உங்கள் கருத்துக்கு எதிர்கருத்து சொன்னதால் என்ற காரணங்களில் ஒன்று என்பது உங்கள் பதிலானால் அதை சொல்லக்கூட வேண்டாம்...) இல்லையெனில் சொல்லலாம்... சும்மா உங்கள் எண்ணவோட்டத்தை புரிந்து கொள்கிறேன்... ஒரு குறிப்பிட்ட ஜாதியின் மீது பொது அபிப்பிராயம் வைத்துக்கொண்டு அலையும் நீங்கள் ஜாதி வெறியரா, அல்லது நானா என்பதை முடிந்தால் சிந்தித்துப்பார்க்கவும்...
hard core திராவிட skin heads யாராவது உங்கள் கருத்தை சொல்லியிருந்தால் வழக்கம் போலவே சும்மா போயிருப்பேன்.. ஏனோ உங்களிடம் சொல்ல தோன்றியது... மற்றபடி உங்களை 'திருத்தும்' எண்ணமெல்லாம் இல்லை... You are what you are... Be yourself.
உஷா,
என் பின்னூட்டம் ஒன்று மிஸ் ஆகிறது.அதையும் போட்டுவிடுங்கள்.
முகமூடி!
என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு(?)க்கு நன்றி!
தயவுசெய்து ஒரு முறை உங்கள் தனிப்பட்ட கண்ணோட்டத்தை மறந்துவிட்டு உங்களது முந்தையப் பின்னூட்டத்தைப் படித்துப் பாருங்கள்.... நான் ஏன் உங்கள் மீது ஜாதிவெறி முத்திரை பதித்தேன் என்பது புரியும்....
நான் வேறு ஒரு Blog முகவரியைப் பதித்திருந்தேன்... உஷா அதை நீக்கிவிட்டார்.... போலியார் வீட்டுப் பெண்களை நீங்கள் கூறியது போலவே மோசமாக விமர்சிக்கும் Blog அது.... அதை உருவாக்கியது யார் என்று பெரியதாக ஊகிக்க வேண்டியதெல்லாம் இல்லை.... தவறு இருபுறமும் இருக்கிறது என்று சுட்டிக்காட்டினால் ஒரு புறம் தவறு செய்து கொண்டிருக்கும் உங்களுக்கு கோபம் வருவது இயல்பானதே....
எப்படியாயினும், உங்களிடம் மோசமான மொழியில் பதில் அளித்ததற்கு வருந்துகிறேன்.... உங்களது 2வது பின்னூட்டம் போலவே முதல் பின்னூட்டமும் நாகரிகமாக இருந்திருந்தால் இது நேர்ந்திருக்காது.....
நன்றி!
// ஒரு சக பெண்வலைப்பதிவரை "அருக்கானி" என்று முகமூடி எழுதியபோது பெண் என்ற முறையில் நீங்கள் ஏன் வெகுன்டு எழவில்லை? //
இதற்கு ஏற்கனவே பதில் தெரிந்தும் வழிப்போக்கன், வெள்ளைப்பூண்டு என்று பல விதங்களில் சலிக்காமல் கேள்வி கேட்கலாம்... அதற்கு எதற்கு பெண் குலத்தை எல்லாம் இழுத்துக்கொண்டு... அருக்காணி என்று குறிப்பிடப்பட்டவர் யார் என்று உங்களுக்கு தெரிந்தால் அந்த காலகட்டத்தில் எங்களுக்கிடையில் என்ன ப்ரச்னை இருந்தது என்று அறிந்து கொள்ள முயற்சிக்கவும்.. பொதுவில் நடந்த விஷயமென்றாலும் இருவருக்கு இடையில் நடக்கும் தனிப்பட்ட அரசியலை உலகமயமாக்கி குளிர் காய்வதை விட்டு வேறு ஏதாவது புதிதாக கண்டுபிடித்தால் பேசவும்...
உஷா,
உங்கள் பதிவ காலையில அவசரமாக பார்த்தேன்..நீங்கள் குறிப்பிடும் பதிவை பற்றியோ, பின்னூட்டம் பற்றியோ தெரியவில்லை.. ஆனால் யொசிக்க வேண்டிய கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள் என நினைத்தேன்...இப்பொது வந்து பார்த்தால் இது வேறு எப்படியோ போய் கொண்டு இருக்கிறது...சில பின்னூட்டங்களை ஏன் அனுமதிக்கிரீர்கள் என தெரிய வில்லை/புரியவில்லை..இதனை நான் எதிர்பார்க்கவும் இல்லை.
சரி.. பின்வரும் இந்த கருத்துக்களுக்கு நான் முழுதும் உடன்படுகிறேன்..
//பிறரை தாக்கவும், அவர்களின் பெயரைக் கெடுக்க செய்யும் முயற்சிகளுக்கு தடைப் போடவும் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியே!//
//ஒரு சாதியில் பிறப்பது என்பது அவரவர் தலைவிதி. இது உயர்ந்த சாதி என்ற பெருமையோ அல்லது தாழ்ந்த சாதி என்ற அவமானம் கொள்வதோ தேவையே இல்லை. //
//தமிழ்மணத்தில் இணைத்துக்கொள்ளும் பதிவாளர்கள், சொந்த பெயரில் எழுத விரும்பாவிட்டால், நிர்வாகிகளுக்கு தங்களைப் பற்றிய விவரங்களை தந்து அவற்றை ரகசியமாய் வைத்துக் கொள்ள சொல்லலாம். //
//அனானிமஸ் பின்னுட்டங்களை முழுமையாய் ஒழிக்கலாம்.//
கூடவே அந்த other optionஐயும்.
நன்றி..
உஷா,
தமிழ்மணத்தில் பல சண்டைகள்/சச்சரவுகள் (இவை என்றும் தீராது).
இந்து vs முஸ்லிம்
இந்து vs கிருத்துவர்
ஆரியர் vs திராவிடர்
திராவிட எதிர்ப்பாளர் vs திராவிடர்
ஆத்திகர் vs நாத்திகர்
இந்துத்வியாதிகள் vs முஸ்லிம்,கிருத்துவர்,திராவிடர்,கம்யூனிஸ்டுகள்
நம்மை எரிச்சல்படுத்தும் (அ) வருத்தப்படவைக்கும் பதிவாளர்களாக இருப்பின் அவற்றை தாண்டிசெல்லுங்கள்.
வன்னிய இனப்பெண்ணுக்கு முன்பு நீங்கள் பணமும் உதவியும் செய்ததாக எழுதி வாங்கிக் கட்டிக் கொண்டீர்களாமே? கருப்பு அவரின் பதிவில் எழுதி இருக்கிறார். உண்மையா?
"ஒரு சாதியில் பிறப்பது என்பது அவரவர் தலைவிதி."
பதிவிலேயே இருக்கு நக்கல் நழினம் எள்ளல் யார் விதித்த விதி. மனிதனே உருவாக்கிவிட்டு அதையே விதி என பகருவது வேடிக்கை இல்லையா?
///பதிவிலேயே இருக்கு நக்கல் நழினம் எள்ளல் யார் விதித்த விதி. மனிதனே உருவாக்கிவிட்டு அதையே விதி என பகருவது வேடிக்கை இல்லையா?////
சூப்பரப்பு.... இதை எடுத்துச் சொல்ல வந்தா என்னை ஜாதி வெறியன்னு சொல்லுறாங்கப்பா....
அனைவருக்கும் நன்றி, வழக்கமான முறையில் பதிவின் நோக்கம் எங்கோ போய் கொண்டு இருக்கிறது.
குழலியின் பதிவில் உதவி வேண்டியும், பிறகு தனிமடலில் அப்பெண்களுக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டும், குழலி நேரமின்மையால் மறந்துவிட்டார் போல இருக்கு.
வழிப்போக்கன்,என்னுடைய நேர்மையையும், தைரியத்தையும் நீரூபிக்க வேண்டிய கட்டாயம் எனக்கில்லை. காரணம்,
மூன்று வருட இணைய குப்பை கொட்டலில், வாசகர்களுக்கு அதை பலமுறை நீரூபித்துள்ளேன்.
நன்றி
பிறந்த சாதியை சொல்லிக்காட்டி கேவலப்பட்டு நிற்கும்பொழுது தலைவிதியைதானே நொந்துக்கொள்ள வேண்டும்? இன்று
நான் அந்நிலையில் இருக்கும்பொழுது, வார்த்தைகள் கேலி செய்பவர்களுக்கு நக்கல்தான் இருக்கும்.
//குழலியின் பதிவில் உதவி வேண்டியும், பிறகு தனிமடலில் அப்பெண்களுக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டும், குழலி நேரமின்மையால் மறந்துவிட்டார் போல இருக்கு.
//
அதெல்லாம் மறக்கலைங்க, பேசியிருக்கேன்... சென்ற வாரம் கூட நினைவு படுத்தினேன், தகவல் கேட்டிருக்கேன், நம்ம அவசரத்துக்கு அவங்க இருக்க மாட்டேங்குறாங்க, அவங்களுக்கு பல வேலைகள், யாருகிட்ட பேசியிருக்கேன்னு தனிமடல்ல போடுறேன்....
அய்யோ உஷா ..
தமிழினி விளக்கம், உங்களது மன்னிப்பு எல்லாம் முடிந்தது.
இன்னும் எதற்கு இந்தப் பதிவு. பின்னூட்டங்களையாவது நிறுத்திவிடுங்கள். (இந்தப் பின்னூட்டம் உட்பட).
//பிறந்த சாதியை சொல்லிக்காட்டி கேவலப்பட்டு நிற்கும்பொழுது தலைவிதியைதானே நொந்துக்கொள்ள வேண்டும்? இன்று
நான் அந்நிலையில் இருக்கும்பொழுது, வார்த்தைகள் கேலி செய்பவர்களுக்கு நக்கல்தான் இருக்கும்//
தயவு செய்து நொந்து கொள்ளாதீர்கள், மனிதர்களை மனிதர்களா நாம் பார்க்கும் வரையில் இது இப்படி தான் இருக்கும்.. ஊர் வாயை மூட முடியாது.. மேலும் தமிழ் மண்த்தில் ஏகப்பட்ட அரசியில், நிறைய குழுக்குள், நிறைய போலிகள், நிறைய நிஜ போலிகள் என்று சொல்லி கொண்டே போகலாம். பெண்கள் படிக்க முடியாத அளவுக்கு மூன்றாந்தர பதிப்புகளை இடும் மனிதர்களுக்கு இடையில் இது ஒன்றும் பெரிதல்ல என எடுத்து கொள்ள வேண்டியது தான்
ramachandranusha@rediffmail.com என்ற முகவரிக்கு மடல் அனுப்பியுள்ளேன்...
//இதை கேட்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்றுக் கேட்டு இப்பொழுதும் தமிழ் மண நிர்வாகிகள் பேசாமல் இருக்கலாம் அல்லது இதைக் கேட்டது தவறு என்று நினைத்து என் பதிவை தடை செய்யலாம்
//
கடைசியாக ஒன்றே ஒன்று, நீங்கள் எழுதிய இந்த வரிகளை வைத்து, சந்தடி சாக்கில் தமிழ்மணம் மீது நீங்கள் சேறு வீசுவதாக கருத எனக்கு இடமுள்ளது எனொபதை
This comment has been removed by the author.
முத்து உங்கள் பின்னுட்டம் எதுவும் நிறுத்தப்படவில்லை. கமெண்ட் மாடரேஷனிலும் இல்லை.
ராபின் ஹூட், நீங்கள் அனுப்பிய பின்னுட்டத்தை நிறுத்திவிட்டேன். மன்னிக்கவும். பதிவுக்கு சம்மந்தமில்லாததுப் போல தோன்றியது.
குழலி, உங்களிடம் கேட்ட உதவி, ஏறத்தாழ ஒரு வருடம் முன்பு என்று நினைக்கிறேன். அதனால்தான் நீங்கள் மறந்து
விட்டீர்கள் என்று நினைத்தேன். கல்கி பத்திரிக்கையில் படிப்புக்கு உதவுகிறார்கள்,கேட்டுப் பாருங்கள் என்று சொல்லியிருந்தேன்.
நீங்கள் வன்னிய சாதியைப் பற்றி எழுதப் போகிறேன் என்றதற்கு வாழ்த்து நானும் எனக்கு தெரிந்ததை சொல்லலாம்
என்று ஆரம்பித்தேன் பாருங்கள்,..... இப்பொழுது அனைத்துமே நன்கு புரிகிறது. அந்த சுட்டியை தேடுகிறார்களாம், எடுத்துக்
கொடுங்கள்.
உங்கள் கடைசி பின்னுட்டம், முழுக்க முழுக்க நான் தமிழ் மணத்தை வம்புக்கு இழுக்கிறேன் என்ற தொனியில் இருக்கிறது.
பதிவின் முதல் பாராவில் தெளிவாய் சொல்லிவிட்டே ஆரம்பித்துள்ளேன்.
வாழ்க்கையில் தினம் தினம் புது பது பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம் என்பது உண்மை. இன்றைய பாடம் என்னவென்றால், சொல்லவும் வேண்டுமா :-)))))
//ஏறத்தாழ ஒரு வருடம் முன்பு என்று நினைக்கிறேன்.//
சென்ற டிசம்பர், மின் மடல் படித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன், முதல் பத்தி எல்லாம் சரிதாங்க அதுக்கு நான் என்ன சொல்ல முடியும், அந்த கடைசி பத்தியை பற்றி நான் சொன்னது தான் அங்கே, இதுக்கு முன்னாடி ஒரு பின்னூட்டம் அனுப்பியிருந்தேனே ஆட்சேபகரமான பதிவுகள் தொடர்பாக தமிழ்மணத்தை அனுகுவதற்கு தமிழ்மணம் கொடுத்திருக்கும் வாய்ப்பு பற்றி, அதையும் கொஞ்சம் வெளியிட்டிங்கனா எல்லோருக்கும் உதவியாக இருக்கும்
அந்த பின்னூட்டத்தை உங்களுக்கு வெளியிட விருப்பமில்லையென்றால் பிரச்சினை ஒன்றுமில்லை.... நான் வெளியிட்டுக்கொள்கிறேன், குறைந்தபட்சம் அடுத்த முறை தமிழ்மணத்தை கை நீட்ட ஆரம்பிப்பவர்களுக்கு தகவல் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்
ஓ...என் பின்னூட்டம் காணாமல் போய்விட்டதா?
பிளாக்கர் சொதப்பிவிட்டது என்று நினைக்கிறேன் :)) சரி விடுங்கள்..
கவிதா மேடம்,,,
//மனிதர்களை மனிதர்களா நாம் பார்க்கும் வரையில் இது இப்படி தான் இருக்கும்.. //
இதுல ஏதோ சரியில்லாதது மாதிரி தோணுது. என்னன்னு புரியல.
உஷா,
ஒரு போலியன் எனது பெயர், போட்டோ பயன்படுத்தி போலியாக
www.harimahesh.blogspot.com
வலைப்பூ ஆரம்பித்து இருக்கிறான்.
தங்கள் பதிவில் போலிப்பின்னூட்ம் இட்டு இருக்கிறான். அதை நீக்கிவிடவும்.
எனது ஒரிஜினல்
வலைப்பூ
www.harimakesh.blogspot.com
பின்னுட்ட பெட்டியில் மடல்களைப் பார்க்க பார்க்க பயமாய் இருக்கிறது. பதிவுக்கு சம்மந்தமில்லாமல்,
அன்றைக்கு இதைக் கேட்டியா போன்ற மடல்களும், சம்மந்தமில்லாத நபர்களைப் பற்றிய விமர்சனங்களும், போலி பெயரில் சிலதும், நீண்ட மடலை தட்டிவிட்டு, போடாதீங்க பர்சனல் போன்றவையும் போதுங்க. எனக்கு நூறு பின்னுட்டம் பெற வேண்டும் என்ற லட்சியம் எல்லாம்
இல்லை :-)
இனி நான் கேட்ட கேள்விக்கு பதில் வந்தால் மட்டும் போடுகிறேன். மற்றவர்கள் மன்னிக்க.
ஆறுதல்கள், அறிவுரைகள், எனக்கே தெரியாத என் குணாதிசியங்களை வெளிச்சமிட்டவர்கள், பதிவை மிக நுணுக்கமாய் ஆராய்ந்து, புது புது சங்கதிகளை கண்டுப்பிடித்தவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
முத்து உங்க பின்னுட்டம் போட்டுவிட்டேன். இதுவா நீங்க சொன்னது?
வழிப்போக்கன், குழலி உங்கள் பர்சனல் மெயில்கள் கிடைத்தன. நன்றி
மதிப்பிற்குரிய உஷா அவர்களுக்கு,
தமிழ் மணத்தின் வாசகர்களில் ஒருவன்.வலைப் பதியாவிட்டாலும் எல்லாருடைய பதிவுகளையும் படிப்பவன்.சில சமயங்களில் பின்னூட்டமும் இடுவதுண்டு.
உங்களது மனநிலை புரிகிறது..ஆனால் நீங்கள் பார்பன சம்பிரதாகங்களை பின்பற்றாமல் இருக்கிறீர்கள் என்பதும்..உங்கள் குழந்தைகள் கடவுளை கும்பிடாதவர்கள் என்பதும் அதற்காக நீங்கள் எவ்வளவு பெருமைப் படுகிறீர்கள் என்பதும் உங்களை பார்ப்பன அடையாளம் காட்டுபவர்களுக்குப் புரியப் போவதில்லை.
இருந்தாலும் நீங்கள் முன்பு எழுதிய பதிவின் ( ) சிறு பகுதியை கீழே தருகிறேன்.
நன்றி.
அன்புடன்
மாயா.
Posted on Wednesday, March 15, 2006
Title of your post :
நாலே நாலுதானா & ஊருக்கு கிளம்பிக்கிட்டு இருக்கேன்!
/என் மகனும், மகளும் என்ன தேர்வு, பிரச்சனை என்றாலும் கடவுளை கும்பிடாதது. அவர்கள் இந்த சுயசிந்தனை எனக்கு பெருமைதான். கடவுள் நம்பிக்கையை கேலி செய்ய நான் சொல்லிக் கொடுக்கவில்லை. நம்பிக்கை இல்லை என்பது வெறும் பேஷன் இல்லை. இந்த உறுதியைக் கடைப்பிடிப்பது மிக கடினம். பதினைந்து வயது மகனுக்கு ஏன் உபநயனம் செய்யவில்லை என்று கேட்டால், நாம் பிறந்த சாதி உயர்ந்த சாதி என்பதை பறை சாற்றுவதாக இந்த சடங்கு உள்ளது என்று அவன் மறுக்கும்பொழுது, இது போதும் என்று பெற்ற மனம் நெகிழ்ந்துப் போகிறது. நாளை அவர்கள் மாறினாலும் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். இவைகள் ஒருவரின் தனிப்பட்ட உணர்வுகள் என்று நினைக்கிறேன்.
/
உஷா வின் கருத்தை நான் ஆதரிக்கிறேன் அவ்வளவுதான் என்னால் சொல்லமுடியும்
சொன்னதன் முக்கிய நோக்கமே மாறிப்போய்,
தனிப்பட்ட நண்பர்கள் தனிமடலில் கேட்கவேண்டியதைப் பொதுவில் வைத்து,
மன்னிப்பு கேட்கச் சொல்லி மிரட்டி,
அங்கிருந்து, போகுமிடம் தெரியா நதி போல,
எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கும் இப்பதிவின்,.....
முதல் நோக்கத்துடன் ஒத்துப்போகிறேன்!
படித்து தேர்ந்தவர்களே இப்படி தவறான முறையில் ஊடகத்தை பயன்பட்டுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அன்புடன்
தம்பி
//மன்னிப்பு கேட்கச் சொல்லி மிரட்டி,//
எஸ்.கே என்னைக்கு உங்களுக்கு பக்குவம் வந்து திருந்த போகிறீர்களோ...(இனிமேலா:))
ஆண்டவா..எழுமலையானே..கோவிந்தா கோவிந்தா
உஷா,
அந்த பின்னூட்டம் தான் அது.ஜீமெயிலினால் வரும் பிரச்சினையில் அதுவும் ஒன்று.ஒரு மெயில் இன்னொரு மெயிலுடன் ஒட்டிக்கொள்ளும்.
நிர்வாகிகள் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
நாமக்கல் சிபி, துளசி நன்றி.
குமரன், எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி.
இலசவச கொத்தனார், என்ன மாறும் என்று தெரியாது ;-), இப்படியும் நடக்கிறது என்பதை அறிவித்துவிட்டேன். இனி அவர்கள்
பாடு.
முத்து, நன்மனமும் என்னைப் போல தவறாய் புரிந்துக் கொண்டு இருக்கிறார். அதனாலேயே தவறான வரிகளை நீக்கவில்லை.
உங்கள் அனைத்து பின்னுட்டங்களும் வந்துவிட்டன என நினைக்கிறேன்.
மணியன் நன்றி.
விடாது கருப்பு உங்கள் ஒரு பின்னுட்டம் நிறுத்தப்பட்டுள்ளது மன்னிக்க.
ராகவன், அதேதான். சாதிகள் மனிதகுலத்துக்கே அவமானம், இன்னும் இந்த நூற்றாண்டிலும் அதைப்பிடித்துக்கொண்டு
சாதி பெயர் சொல்லி தாக்கும்பொழுது வேதனையாய் இருக்கிறது. சாதி கொடுமையையும், காலக்காலமாய் நடந்துக்கொண்டுருக்கும்
அட்டுழியங்களையும் பேசுவது தவறில்லை. ஆனால் நாம் படித்தவர்கள். கணிணி என்பது கல்வெட்டுப் போல, எங்காவது
ஒரு இடத்தில் அனைத்துமே இருக்கும் ( நன்றி சுஜாதா)
ஆக இவை எல்லாம் பத்திரமாய் இருக்கும் என்னும்பொழுது, நாம் என்ன எழுதுகிறோம் என்ற சுயகட்டுப்பாடு தேவை.
தமிழ் மணத்தில் சில கட்டுப்பாடுகள் உண்டு என்பதை செந்தழல் ரவிக்கு, செல்வராஜ் பதிவில் வந்ததைப் பார்த்தே இந்த பதிவைப் போட்டேன்.
ஜோ, உங்களுக்கும் இதே பதில்தான். நேற்றயை நேரமின்மையில் எல்லாருக்கும் பதில் சொல்ல முடியவில்லை. பொறுப்பாளர்கள்,
பொதுவில் சில அறிவிப்பாவது செய்யலாம் இல்லையா என்பது என் ஆதங்கம். வார்த்தையில் தொனித்த ஆபாசத்தைக் காண சகிக்காது இந்த பதிவைப் போட்டேன். இது எந்த மதம், சாதி அல்லது தனிப்பட்ட தாக்குதல் இருந்தாலும் இதையே
செய்திருப்பேன். உதாரணம், நேசகுமார் , நபிகள் நாயக்த்தையும், குரானையும் தாக்கி எழுத ஆரம்பித்தப் பொழுதும், சமீபத்தில் இணைய குசும்பன் தமிழ் மண நிர்வாகிகளை ஆபாச தாக்குதல் நடத்தியப் பொழுதும் முதல் எதிர்வினை என்னுடையதுதான். அதையும் பொதுவிலேயே சொன்னேன். பொதுவில் நடப்பதை பொதுவில் சொல்வது முறை என்பது என் எண்ணம்.
ஸ்ரீ நிதி, விழி உங்கள் மறுமொழிக்கு நன்றி,
லக்கி லுக், சம்ஸ்கிருதம்/ ஹிந்தி உயர்ந்தது என்றும், தமிழ் கீழான மொழி என்றும் தமிழில் யாராவது பதிவு போட்டிருந்தால் லிங்க்
அனுப்புங்கள். மற்றப்படி இட ஒதுக்கீடு, திராவிடம் பற்றிய கருத்துமோதலுக்கும் ஆபாச தாக்குதலுக்கும் வித்தியாசம் உண்டு.
ஜெயராமன், கைலாகதனம் என்ற வார்த்தை என் அகராதியில் இல்லை. எது சரியில்லை என்று தோன்றினாலும், என் கண்ணில் பட்டால் அதை யார் போட்டிருந்தாலும் தவறு என்று சுட்டிக்காட்டாமல் விட்டதில்லை.
குமரன் எண்ணம் பின்னுட்டத்துக்கும் புரிதலுக்கும் நன்றி
குழலி, அனைத்துக்கும் நன்றி. உங்கள் ஒரு பின்னுட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அதை உங்கள் பதிவில் கண்டேன், ராபின்ஹ¥ட்,
அசுரன் உங்கள் பின்னுட்டங்களும், அவரவர் வலைப்பதிவில் போட்டுக் கொண்டதைப் பார்த்தேன். நிறுத்தப்பட்டதற்கு மன்னிகவும்.
முகமூடி, என் மனகுமறலை உங்கள் மொழியில் சொன்னதற்கு மிக்க நன்றி
ஹரிஹரன், மகேஷ் நன்றி. ஹரிஹரன் போலியான பெயரில் வந்ததை நீக்கிவிட்டேன்.
உஷா!
ஏற்கனவே நான் அனுப்பிய போலியன் என்ற லிங்கை நீங்கள் அனுமதிக்கவில்லை.... அதை யார் செய்திருப்பார்கள் என்று பெரிதாக எல்லாம் ஊகிக்க வேண்டாம்.... நான் குறிப்பிட்ட "திராவிட" எதிர்ப்பாளர்கள் தான்....
இருபுறமும் தவறு இருப்பதை ஏன் ஒத்துக்கொள்ளாமல் பிடிவாதம் பிடிக்கிறீர்களோ தெரியவில்லை.... உங்கள் தராசு ஒரு புறமே சாய்ந்து கொண்டிருப்பது வேதனையானது....
நான் அதர்-அனானி ஆப்ஷன் வைத்திருந்தபோது வந்த மெயில்களில் என்னையும், என் குடும்பத்தையும் ஆபாசமாக அர்ச்சித்து வந்த மெயில்களில் 5 சதவிகிதம் மட்டுமே போலி டோண்டுவிடம் இருந்து வந்தது.... மீதி????????
////யார் என்ன பேசினாலும் தனக்கு தோன்றிய வகையில் செக்கூலரிஸத்தை தூக்கி பிடிக்கும் உம்மை மாதிரி மலமண்டைகளை குறித்துதான் இந்த பதிவே பேசுகிறது... ஒன்று செய்வோம்... நீர் பிறந்த ஜாதியை சொல்லும்.. இல்லை உம்ம பேரை சொன்னால் கூட போதும் சில இணைய *சுக்கள் பேரை வைத்து ஜாதியை கணிக்கிறார்களாம், அவர்களிடம் உம்ம ஜாதி என்ன என்று கேட்போம். பிறகு உம்ம ஜாதிக்கு உண்டான பொதுப்புத்திகளை எல்லாம் பட்டியல் போட்டு, உம்ம சிந்தனைக்கு எல்லாம் ஜாதிதான் காரணம் என்று சொல்லி அப்படியே உம்ம குடும்பத்தையும் உம்ம வீட்டு பெண்களையும் போர்னோ விமர்சனம் பண்ணி ஒரு பதிவு போடுவோம்... அதற்கு பதில் சொல்லி நீர் போடும் இழவு பதிவில் ஒப்பாரி வைக்கும்போது அப்படியே பக்கத்து வீட்டு பூனை செத்த்தற்கும் சேர்த்து வருத்தப்பட்டு ஒப்பாரி வைக்கலாம்... /////
உஷா இந்தக் கருத்துக்களை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம் தொனிக்கும் வகையில் முகமூடிக்கு நன்றி சொல்லி பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள்....
இது உங்களுக்கு ஏற்புடையதா என்று தெளிவுப் படுத்துங்கள்....
அதாவது "உம்ம குடும்பத்தையும் உம்ம வீட்டு பெண்களையும் போர்னோ விமர்சனம் பண்ணி ஒரு பதிவு போடுவோம்..." என்பது உமக்கு ஏற்புடையது.... அதுமாதிரி விமர்சனம் பண்ணி ஒரு பதிவு போட்டால் நீங்கள் சந்தோஷப்படுவீர்கள் என்று ஒத்துக் கொள்கிறேன்....
உஷா ஒரு விஷயம்.... இத்தனை நாட்களாக இருந்த உங்கள் 'இமேஜ்' இந்தப் பதிவு மற்றும் பின்னூட்டங்களால் ரொம்பவும் மாறிப் போயிருப்பதையாவது உணருங்கள்.....
என்னது முகமூடிக்கு நன்றியா?
அப்படியென்றால் பேசுவதற்கு ஒன்றுமில்லை. லக்கிலுக் சொல்வதுபோல் இது பிடிவாதம்தான்.
விட்டுத்தள்ளுங்கள் நன்பர்களே.
லக்கி லுக், வழிப்ப்போக்கன் இன்றைய பாடம் என்னவென்றால் காலை நேர அவசரத்தில் கணிணியைத் திறக்காதே என்று!
மூகமூடி, நான் எழுதியவைகளில் தொனித்த ஆற்றாமையை புரிந்துக்கொண்டாரே என்பதற்கு நன்றியே தவிர, உங்களுக்கு இஞ்சி மொரப்பா தந்ததற்கு நன்றி இல்லைங்க . நல்ல வேளை எஸ்.கேவிற்கு மொத்தாம் பொதுவாய் நன்றி சொல்லியிருந்தால், முத்து என்னை கிரிட்டிசைஸ் செஞ்சதுக்கு நன்றி சொல்கிறீர்களா என்று கோபித்திருப்பார் ;-))))))
லக்கி, அப்புறம் காலங்கார்த்தால வயிற்றில் பால் வார்த்ததுப் போல இருந்தது நீங்கள் சொன்ன இமேஜ் . இமேஜ் என்றால் என்ன?
அதற்காக நாம் செய்ய வேண்டிய காம்ரமைஸ்களும் தெரியுமல்லவா? இன்றுவரை எந்த குழுவிலும் சேராமல், எனக்கு தோன்றுவதை, யதார்த்தமாய், சுதந்திரமாய் எழுதிக் கொண்டு இருக்கிறேன். இதை படிக்கும் அனைவருக்கு சொல்கிறேன்,
உஷா என்றால் இப்படி என்று கற்பனை செய்து வைத்திருந்தால், அதை அழித்து விடுங்கள். எந்த ஒரு இலட்சியமோ, குறிக்கோளோ இல்லாமல் எழுதுகிறேன். அதற்கு கிடைத்த பரிசு, யாரோ முன்பின் தெரியாத மாயா என்பவர் என்றோ நான் சாதி, மதம் பற்றிய எண்னங்களை எழுதியதை எடுத்துப் போட்டு இருக்கிறாரே அது போதும் எனக்கு. இப்படிப்பட்டவர்கள் தரும் ஊக்கம்தான் இன்றுவரை பல பிரச்சனைகளிலும் என்னை விடாமல் எழுத வைக்கிறே தவிர, ஒற்றை வரி சூப்பர் என்ற வார்த்தைகளுக்கு இல்லை.
ராபின் ஹூட், வழிப்போக்கன் என்னுடைய முகமூடியின் பதில் குறித்து என்னுடைய கருத்தை சொல்லிவிட்டேன்.கடைசியாய் நீங்கள்
இருவரும் என் மீது வைத்த எதிர்வினைக்கு நன்றி.
தம்பி,எஸ்.கே,என்னார், மாயா, ஜெயராமன், கவிதா, கல்வெட்டு,தமிழ், ஹரிஹர சேதுராமன்,மனதின் ஓசை அனைவருக்கும்
நன்றி (யாராவது பெயர் விட்டிருந்தால் மன்னிக்கவும்)
இறைநேசன்,
பதிவுக்கு சம்மந்தமில்லாத டோண்டுவின் கற்பு மேட்ட்ரை இங்கு எதற்கு போட்டீர்கள் என்று புரியவில்லை. நீங்கள் இப்பொழுது
எழுப்பிய கேள்விகளையே, ஆசிப்மீரானின் பதில் கேட்டு, அன்றே அதற்கு பதில் தந்துவிட்டேன். வலைப்பதிவில் எழுத்தப்படும்
அனைத்துக்கும் பாராட்டோ திட்டோ போட்டுக்கொண்டு இருக்க முடியாது. ஒற்றெ வரியில் "அபத்தம்" என்று சொல்லிவிட்டேன்,
எப்படி ரீயாக்ட் காட்டுவது என்பது அவரவர் செளகரியம்.
//உங்களுக்கு இஞ்சி மொரப்பா தந்ததற்கு நன்றி இல்லைங்க //
எதைச் சொல்றீங்க......
ஜோஸ்யம் பக்குறவங்கனு சொன்னதுக்கா? இல்ல வீட்டு பெண்களைப்பற்றி கதை எழுதுவோம்னு சொன்னதுக்கா??
நல்ல வார்த்தை விளையாட்டுதானுங்க :-)
ஏன் அவர்கள் வீட்டுப்பெண்கள் எல்லாம் உங்களுக்கு பெண்களாகத் தெரியவில்லை போலும். இந்த போலித்தனத்தைதான்(வேசத்தை) சுட்டிக் காட்டியிருந்தார்கள்.
என்ன சிரிப்பான் போட்டு மறைச்சிட்டா போச்சு.
:-))))))))))))))))))))
//மூகமூடி, நான் எழுதியவைகளில் தொனித்த ஆற்றாமையை புரிந்துக்கொண்டாரே என்பதற்கு நன்றியே தவிர, உங்களுக்கு இஞ்சி மொரப்பா தந்ததற்கு நன்றி இல்லைங்க . நல்ல வேளை எஸ்.கேவிற்கு மொத்தாம் பொதுவாய் நன்றி சொல்லியிருந்தால், முத்து என்னை கிரிட்டிசைஸ் செஞ்சதுக்கு நன்றி சொல்கிறீர்களா என்று கோபித்திருப்பார் ;-)))))) //
உஷா அவர்கள் தன்னுடைய முந்தைய ஒருபதிவில் "எனது பதிவுகளில் வெளியிடப் படும் பின்னூட்டங்களுக்கு நான் தான் பொறுப்பு" என்று சொன்னதாக ஞாபகம் சுட்டிதேடுகிறேன் கிடைத்ததும் தருகிறேன் :)
உஷா!
அந்த "மாயா" யார் என்ற சந்தேகம் எங்களுக்கு எழாமல் இல்லை... ஒருவேளை அது நானாகக் கூட இருக்கலாம்.... :-)))) இல்லையென்றால் நீங்களே கூட இருக்கலாம்.... இதுவரை எங்கேயும் அவரைப் பார்த்ததில்லை.... திடீரென்று இந்தப் பதிவுக்கு மட்டும் வந்து உங்கள் புகழ்பாடிச் சென்றதின் மர்மம் என்னவோ? யாமறியோம்.....
சரி... முகமூடியின் கருத்து உங்கள் கருத்தாக ஏற்றுக் கொள்ளலாமா என்பதற்கு நீங்கள் இதுவரை பதில் சொல்லவில்லை.... மவுனம் சம்மதம் என்றே எடுத்துக் கொள்ளலாமா?
மற்றபடி உங்களுக்கு இமேஜ் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறீர்கள்... அது உங்கள் விருப்பம்.... ஆனாலும் எங்கள் சிலர் மனதில் உஷா என்றால் இதுதான் என்ற ஒரு இமேஜ் இருந்தது.... அது உடைந்து சுக்கல் நூறாகி விட்டது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.....
//பின்னூட்டம் குறித்த உங்களின் முந்தைய கருத்துக்கு சுட்டி இங்கே//
http://nunippul.blogspot.com/2006/01/blog-post_07.html#c113670548011466727
முத்துகுமரன்,
முகமூடி - லக்கி லுக் மட்டுமல்ல, அதைத் தவிர இன்னும் எவ்வளவு பேர்கள் என்று எண்ணிப் பாருங்கள். இவர்களுக்கு நடுவில் புகுந்து பஞ்சாயத்து செய்ய எனக்கு விருப்பமும் இல்லை, நேரமும் இல்லை.
மகேந்திரன், வழிப்போக்கன், கோவிந்தசாமி 9பி, அனைவருக்கும் மிக்க நன்றி. என்னைப் பற்றி புரிதலுக்கு மனமார்ந்த
நன்றிகள். பதிவுக்கு சம்மந்தமில்லாதவை என்ற எண்ணத்தில் பின்னுட்டங்களை நிறுத்தி வைக்கிறேன். உங்களின் வலைப்பதிவில்
இங்கு இட்ட பின்னுட்டங்களை போட்டுக்கொள்ளுவாறு கேட்டுக்கொள்கிறேன்.
மகேந்திரன், பின்னுட்டத்திற்கு நானே பொறுப்பு என்று நான் எழுதியதை ஞாபகபப்டுத்தியதற்கு நன்றி
என்னுடைய பின்னூட்டம் பதிவிற்கு சம்மந்தமானது தானே?
என்னவோ இஞ்சி மொரப்பா, கஞ்சி மொரப்பா என்று நீங்கள்தானே சொல்லியிருந்தீர்கள்?
நான் என்ன சொன்னேன் என்பதை நீங்களே சொன்னபிறகு அதை(பின்னூட்டத்தை) மீண்டும் என்பதிவில் பதியவேண்டிய அவசியம் இருப்பதாய் தெரியவில்லை நன்றி உஷா.
நன்றாகவே தப்பிக்கிறீர்கள்.... நான் போட்ட லேட்டஸ்ட் பின்னூட்டம் முழுக்க முழுக்க உங்கள் பதிவு மற்றும் பின்னூட்டங்கள் சம்பந்தப்பட்டது....
அனேகமாக உங்கள் வேஷம் கலைந்துவிடுகிறது என்று பயந்து பின்னூட்டங்களை நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்....
//பதிவை மிக நுணுக்கமாய் ஆராய்ந்து, புது புது சங்கதிகளை கண்டுப்பிடித்தவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
//
நுணுக்கமாகவெல்லாம் ஆராய வேண்டிய வேலையெல்லாம் நீங்கள் வைக்கலையே நேரடியாகத் தானே எழுதியிருந்தீர்... :-)))) ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா ஸ்மைலி போட்டாச்சேய்...
சரி அதை விடுங்க.... இந்த பதிவில் தமிழ்மணம் தொடர்பான கருத்துகளுக்கு என் கருத்து இங்கே
http://kuzhali.blogspot.com/2006/07/blog-post_12.html
அன்புள்ள சகோதரி உஷா அவர்களுக்கு,
என் பின்னூட்டத்தை அனுமதிக்காமல் ஏன் போட்டேன் எனக் கேட்டிருக்கிறீர்கள்.
நான் ஏதோ பதிவுக்கு சம்பந்தமில்லாமல் அதை போட்டதாக வேறு கூறியிருக்கிறீர்கள்.
நான் அதில் என்ன எழுதினேன் என்பதை முழுமையாக படித்து தான் இவ்வாறு கூறுகிறீர்களா எனத் தெரியவில்லை.
என் பின்னூட்டத்தை அனுமதித்து விட்டு இதனை நீங்கள் கூறியிருந்தால் மற்றவர்களுக்கு நீங்கள் கூறுவது சரி தானா என்பது தெரிந்திருக்கும்.
அந்த பின்னூட்டத்தின் கடைசியில் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டு இதன் பதிலில் இந்த பதிவுக்கான பதில் அடங்கியுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தேன்.
இது இப்பதிவுக்கு சம்பந்தமில்லாதது இல்லையா.
டோண்டு அவர்களின் கற்பைக் குறித்த பதிவு உங்களுக்கு ஆபாசமாக தெரியவில்லை. ஆனால் "மாமா" போன்ற வாசகங்கள் உங்களுக்கு ஆபாசமாக தெரிகிறது.
இது என்ன நிலைபாடு விளக்குவீர்களா?
மேலும் அந்த பின்னூட்டத்தின் முதல் வரியில் ஒரு முக்கியமான வாசகத்தை வைத்திருந்தேன். அதுவும் இப்பதிவுக்கு சம்பந்தம் இல்லாததா?
//ஒரு சாதியில் பிறப்பது என்பது அவரவர் தலைவிதி.//
சகோதரி உஷா அவர்களே! உங்களிடமிருந்து இதனை நான் எதிர்பார்க்கவில்லை.
மேற்கண்ட இந்த வாசகம் இப்பதிவுக்கு சம்பந்தம் இல்லாததா?
என் பின்னூட்டம் பதிவுக்கு சம்பந்தம் உள்ளதா இல்லையா என்பதை இங்கு பின்னூட்டுபவர்கள் தீர்மானிக்கட்டும்.
அந்த பின்னூட்டத்தை அனுமதிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
வருத்தத்துடன்
இறை நேசன்
உஷா. உங்கள் இமேஜைப் பற்றி நீங்கள் கவலைப்படுபவர் இல்லை என்பது நான் அறிந்ததே. ஆனால் இந்தப் பதிவால் உங்கள் இமேஜ் சுக்குநூறாய் போய்விட்டதா என்ற கேள்வி வந்ததால் சொல்கிறேன். உங்களைப் பற்றிய என் மனதில் இருக்கும் இமேஜ் அப்படியே தான் இருக்கிறது. ஒரு மாற்றமும் இல்லை. இமேஜ் உடைந்துவிட்டது என்று சொல்வதெல்லாம் சும்மா பூச்சாண்டி காட்டுவதற்காக.
அதே போல் மாயா என்ற பெயரில் வந்து உங்களுக்குப் பின்னூட்டம் இட்டவர் நீங்களே தான் என்று கற்பனை செய்வதும் அதே போல் தான். என்னமோ ஒரு சிலருக்கு மட்டுமே பாராட்டாய் பின்னூட்டம் வரும் என்பது போலவும், நாம் ஒருவரை (சரி மாற்றிவிடுகிறேன்... ஒருவரின் கருத்தை) எதிர்த்துப் பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்கும் போது இன்னொருவர் வந்து அந்த ஒருவரைப் பாராட்டிப் பின்னூட்டம் இட்டால் அது அந்த ஒருவரே மற்ற பெயரில் வந்து இட்டிருக்கிறார் என்று சொல்வது எத்தனை அபத்தம்?
சொல்லப்பட்ட காரணம்: பாராட்டியவரை வேறு பதிவுகளில் பார்த்ததில்லை. அதனால் நீங்களே அந்த பாராட்டுப் பத்திரத்தை வாசித்துக் கொண்டீர்கள்.
1. தமிழ்மணத்தில் எத்தனையோ வலைப்பூக்கள் இருக்கின்றன. இப்படிக் குற்றம் சாட்டியவர் எல்லா வலைப்பூக்களையும் படிக்கிறவரா? என் வலைப்பூக்களில் பின்னூட்டம் இடுபவர்கள் யார் யார் என்று தெரியுமா? தமிழ்மணத்தில் எல்லா வலைப்பூக்களையும் கூட படிக்கவேண்டாம். என்னுடைய 20 வலைப்பூக்களையாவது படித்திருக்கிறாரா? அதில் பின்னூட்டம் இடுபவர்கள் யார் என்று தெரியுமா? அது போக தமிழ்மணத்தில் சேராமலேயே தமிழ் வலைப்பதிவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் பதிவுகளை எல்லாம் படித்துவிட்டாரா? பதில்கள் என்னவாக இருக்கும் என்று தெரியும். அப்படி இருக்க ஏதோ க்குற்றம் சொன்னவர் எல்லாப் பதிவுகளையும் படிப்பது போல எழுதுவது நகைப்பிற்குரியது.
2. இதுவரை பின்னூட்டங்கள் இடாதவர் என்று சொல்லப்பட்ட மாயாவின் ப்ரொபைலைப் பார்த்தவர்கள் அது செப்டம்பர் 2004ல் உருவாக்கப்பட்டது என்று சொல்லிவிடுவார்கள். அந்த வலைப்பதிவர் தன் வலைப்பதிவை 2004லேயே தொடங்கிவிட்டார். ஆனால் வலைப்பதிப்பதைத் தொடரவில்லை போல் இருக்கிறது. அதனால் அவர் நீங்களே இன்னொரு பெயரில் வருவது என்பது 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பதை வலியுறுத்துவதாகத் தான் இருக்கிறது.
இன்னொரு காரணத்தையும் சொல்லி அவர் நீங்கள் இல்லை என்று சொல்ல முடியும். ஆனால் என் பெயரில் கூட நீங்களே இந்தப் பின்னூட்டத்தை இட்டுக்கொண்டீர்கள் என்றும் சொல்லலாம். குமரன் என்ற ஒருவர் பதிவுகளோ பின்னூட்டங்களோ இட்டுப் பார்த்ததில்லை என்றும் சொல்லலாம். :-)
குமரன்!
நன்றாக Groupism செய்யத் தெரிந்திருக்கிறது உங்களுக்கு.... வரிசையாக எல்லாப் பின்னூட்டங்களையும் பாருங்கள்.... யார் சொல்லி இருக்கிறார்கள் மாயா தான் உஷா என்று.... அப்படி நீங்களே நினைத்துக் கொண்டு பின்னூட்டம் போடுவது ஏற்புடைய செயலா?
சும்மா ஒருத்தருக்கொருத்தரே இதுமாதிரி பரபரப்பாக அறிக்கை விட்டு Cheap Publicity தேடுவதை கடுமையாக கண்டிக்கிறேன்.....
2004ல் மாயா Profile ஆரம்பித்திருந்தால் அதை உஷாவே 2004ல் ஆரம்பித்திருக்கக் கூடாது என்று ஏதாவது விதி இருக்கிறதா என்ன?
என்ன பேசுகிறோம் என்று தயவுசெய்து ஒருமுறை யோசித்துப் பேசுங்கள்....
உஷா!
என்னுடைய "அந்த" பின்னூட்டத்தை இதுவரை நீங்கள் ஏன் வெளியிடவில்லை என்பதற்கு எந்த விளக்கமும் சொல்லவில்லை....
என் பக்குவத்தைப் பற்றி நீங்கள் சொல்லி அறிந்துகொள்ள அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை, மு. தமிழினி.! உங்கள் முதுகைப் பார்க்க முடியாதே என்ற தைரியத்தில்தானே பேசுகிறீர்கள்?
இது என்ன தொனி என தயவு செய்து விளக்குவீர்களா?
//நான் குறிப்பிட்ட முதல் வாக்கியத்தை நீங்கள் எடுக்க வில்லை என்றால் நீங்கள் பொதுவில் மன்னிப்பு கேட்கவேண்டி வரும்.//
????????????
இத்துடன் 'தோழி உஷாவிற்கு' என்னும் உங்கள் பதிவிற்கு நான் அனுப்பிய பின்னூட்ட்த்தை இணைத்திருக்கிறேன்.
இப்போதாவது புரியும் என நம்பிக்கையையும் மீறி நம்புகிறேன்!
//"மிகச் சிறப்பாகவும், பொறுமையாகவும் சொல்லியிருக்கிறீர்கள், மு. தமிழினி,
ஆனால், இன்னும் ஒன்றையும் சேர்த்துச் சொல்லியிருந்தால் நேர்மையானதாகவும் இருந்திருக்கும்.
"நானும் உங்களுக்குத் தனிமடல் அனுப்பி இப்பிரச்சினையை விளக்கியிருக்கலாம், நண்பர் [தோழி]என்ற முறையில்" என்பதையும் சொல்லியிருந்தால், மற்றவர்கள் பாய்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்காமலும், இதனைப் பெரிதாக்காமலும் போயிருக்கலாமோ?
உடனே உணர்ச்சிவசப்பட்டு பொது மன்னிப்பு என்றெல்லாம் சொன்னவுடன் மக்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள் என நினைக்கிறேன்.
அப்பதிவின் முக்கிய நோக்கம் உங்களைக் குறைத்து மதிப்பிடுவதில்லையே!
தவறாகப் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்.
நன்றி.
எனக்கும் பக்குவம் இல்லை தான் போலிருக்கு. நானும் எப்பத் தான் பக்குவம் வந்து திருந்தப் போகிறேனோ? :-)
ஒன்னும் இல்லை எஸ்.கே. நீங்க சொன்ன மாதிரி தான் எனக்கும் சில பின்னூட்டங்களைப் படிச்சப்பத் தோணிச்சு. நானும் உங்களை மாதிரி ஏதாவது சொல்லியிருந்தா எனக்கும் இதைத் தானே பதிலா சொல்லியிருப்பாங்க. அதான் நானே முதல்ல எடுத்துக்கிட்டேன். :-)
மாயா: உஷா. நீங்கள் முன்பு இந்தப் பதிவில் இப்படிச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.
லக்கிலுக்: உஷா. நான் இதுவரை மாயா என்பவரின் பதிவோ பின்னூட்டங்களோ பார்த்ததில்லை. அதனால் அது நீங்களாகவே கூட இருக்கலாம். இந்தப் பதிவுக்கு மட்டும் வந்து உங்கள் புகழ் பாடிச் சென்றதன் மர்மம் என்னவோ?
குமரன்: விளக்கம் 1, விளக்கம் 2, விளக்கம் 3....
லக்கிலுக்: குமரன். நன்றாகவே Groupism செய்யத் தெரிந்திருக்கிறது உங்களுக்கு....
????? என்னங்க இது? இருக்கலாம்ன்னு சொல்லிட்டு 'புகழ் பாடி' 'மர்மம்' என்றெல்லாம் எழுதிவிட்டு 'நான் எங்கே சொன்னேன்?' என்று கேட்டால்? அதற்குப் பதில் சொன்னால் அது 'Groupism'?
'தன்னைப் போல் பிறரை எண்ணும்' உத்தமர் நீங்கள் என்று உறுதிபடுத்துகிறீர்கள் லக்கிலுக். தான் சிந்திப்பது மாதிரியே தான் செய்வது மாதிரியே மற்றவர்களும் சிந்திக்கிறார்கள்; செய்கிறார்கள் என்று முடிவு செய்துவிட்டுப் பின்னர் வந்து இங்கே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களின் 'தன்னைப் போல் பிறரையும் எண்ணும்' தகைமைக்கு என் வாழ்த்துகள்.
அன்புள்ள இனைய நண்பர்களுக்கு,
இது வரை நான் மற்றவர்களின் பதிவுகளில் இட்ட சில பின்னூட்டங்களின் இனைப்பைத் தருகிறேன்.
திரு குமரன் அவர்களே உங்களின் அனைத்துப் பதிவுகளையும் நான் படித்தவன் தான் ,ரசிகனும் கூட..நானும் மினிசோட்டாவில் 1 வருடம் இருந்திருக்கிறேன்..
இதற்கு மேலும் 'நான் அவளில்லை' என்பதை நீங்கள் நம்பவில்லை என்றால்..bad'luck' உங்களை நினைத்துப் பரிதாபப் படுகிறேன்..
http://gragavan.blogspot.com/2006/06/14.html
http://gragavan.blogspot.com/2005/11/blog-post_21.html
http://geethamsangeetham.blogspot.com/2006/05/blog-post_30.html
http://srimangai.blogspot.com/2006/05/blog-post.html
http://gganesh.blogspot.com/2005/11/i-am-software-engineer.html
http://penathal.blogspot.com/2005/12/01-dec-05_01.html#114505159988262640
http://domesticatedonion.net/blog/thenthuli.php?item=648
http://dondu.blogspot.com/2005_11_06_dondu_archive.html
http://www.desikan.com/blogcms/?item=104
http://uncerta.in/blog/?feed=rss2&p=138
http://kirukkals.com/wp/?p=21
http://reallogic.org/thenthuli/?p=161
http://dubukku.blogspot.com/2005/11/12.html
http://gganesh.blogspot.com/2005/11/blog-post_09.html
http://murugapoopathi.weblogs.us/archives/80/feed/
http://kurangu.blogspot.com/2005/11/blog-post_08.html
http://pranganathan.blogspot.com/2005/07/blog-post_25.html
http://thoughtsintamil.blogspot.com/2005/11/blog-post_10.html
http://ennulagam.blogspot.com/2005/11/10.html
அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்.
இன்னிக்குள்ளே சென்சுரி அடிப்பீங்கன்னு நெனச்சேன்.
நூறாவது பின்னூட்டத்திற்கு ஒரு துண்டு போட்டு வெக்கிறேன்.
மாயக்கூத்தன் கிருஷ்ணன். உங்களின் மிக விளக்கமான பின்னூட்டங்களை என் பதிவில் படித்த நினைவு எனக்கு நன்றாக இருக்கிறது. அதனைத் தான் மேலே ஒரு பின்னூட்டத்தில் 'இன்னொரு காரணத்தையும் சொல்லி அவர் நீங்கள் இல்லை என்று சொல்ல முடியும். ' என்று சொன்னேன்.
நீங்கள் நேர்மையாக இட்ட ஒரு பின்னூட்டத்திற்காக இப்படிப்பட்டக் கேள்விகள் எழுந்து நீங்கள் இதுவரை எங்கெல்லாம் பின்னூட்டம் இட்டீர்களோ அவற்றில் சிலவற்றின் சுட்டிகளை எடுத்துத் தரும் சிரமத்திற்கு ஆளானது துரதிருஷ்டம்.
//அதனைத் தான் மேலே ஒரு பின்னூட்டத்தில் 'இன்னொரு காரணத்தையும் சொல்லி அவர் நீங்கள் இல்லை என்று சொல்ல முடியும். ' என்று சொன்னேன்.
//
இதை இன்னும் தெளிவாச் சொல்லிட்றேன். என் பேரைப் பாத்தாலே பயந்து எஸ்கேப் ஆயிடுவாங்க உஷா. எப்பவாவது தப்பித் தவறி உள்ளே வந்தா உண்டு. மாயக்கூத்தன் தொடர்ந்து படிக்கிறதாலயும் அப்பப்ப பின்னூட்டம் போடறதாலயும் அது உஷா இல்லைன்னு சொல்ல வந்தேன்.
சரிதானே உஷா? :-) வழக்கம் போல இனிமேலும் என் பதிவுகளைப் பார்த்தால் 'உஷா'ராக ஒதுங்கிப் போய்விடுங்கள். என்ன?! :-)
/////லக்கிலுக்: உஷா. நான் இதுவரை மாயா என்பவரின் பதிவோ பின்னூட்டங்களோ பார்த்ததில்லை. அதனால் அது நீங்களாகவே கூட இருக்கலாம். இந்தப் பதிவுக்கு மட்டும் வந்து உங்கள் புகழ் பாடிச் சென்றதன் மர்மம் என்னவோ? /////
- நான் சொன்னதாக கூறி குமரன் திரித்து வெளியிட்டிருக்கும் பின்னூட்டம்
///அந்த "மாயா" யார் என்ற சந்தேகம் எங்களுக்கு எழாமல் இல்லை... ஒருவேளை அது நானாகக் கூட இருக்கலாம்....:-)))) இல்லையென்றால் நீங்களே கூட இருக்கலாம்.... இதுவரை எங்கேயும் அவரைப் பார்த்ததில்லை.... திடீரென்று இந்தப் பதிவுக்கு மட்டும் வந்து உங்கள் புகழ்பாடிச் சென்றதின் மர்மம் என்னவோ? யாமறியோம்.....///
- நான் உண்மையாகவே சொன்னது
நண்பர் குமரன்!
உத்தமனாக இருப்பது தான் கஷ்டம்.... உத்தமன் போல நடிப்பது ரொம்பவும் எளிது.... உங்களுக்கு நடிப்பு நன்றாக வருகிறது....
லக்கிலுக். உங்கள் பின்னூட்டத்தைத் திரித்து எழுதியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். :-) :-)
அவ்வளவு தானேங்க. நான் திரிச்சேனா இல்லையாங்கறது படிக்கிறவங்க எல்லாருக்கும் தெரியும். ஆனா நீங்க நான் திரிச்சேன்னு உறுதியா நம்புனா நான் உடனடியா கேட்டுக்கிறது 'மன்னிப்பு' தான்.
எப்படிங்க உத்தமன் போன்ற நடிப்பு நல்லா வருதா எனக்கு? எல்லாம் வாத்தியார் ஐயா சொல்லிக் கொடுத்தது தானுங்க. :-)
Post a Comment
<< இல்லம்