Friday, June 16, 2006

கேள்விகளும் பதில்களும்

கேள்விகளை எழுப்பிக்
கொண்டே இருக்கிறார்கள்
பதில்களும் வந்துக்
கொண்டே இருக்கின்றன
கேள்விக்கான பதில்
இது இல்லையே என்று வினவ
கேள்வி கேட்டாய்
பதில் சொல்லிவிட்டோம்
சரியில்லை என்றால்
எங்கள் பதிலுக்கான
கேள்வியை கேள் என்றார்கள்
மீண்டும் மீண்டும் கேள்விகள்
வந்துக் கொண்டே இருக்கின்றன
ஆனால் பதில் மட்டும்
அதற்கானது இல்லை
பதில்கள் ஒருநாள் தானே
தெரிந்து விடும்
கேள்விகளைக் கேட்பதை
நிறுத்திவிட்டால்!

37 பின்னூட்டங்கள்:

At Friday, 16 June, 2006, Blogger Boston Bala சொல்வது...

உடனடி உல்டாக் கவிஞரின் ஆக்கம் :-)

பதிவுகளைத் தந்து
கொண்டே இருக்கிறார்கள்
பாராட்டுகளும் வந்து
கொண்டே இருக்கின்றன
கேள்விக்கான பதில்
இது இல்லையே என்று வினவ

பதில் கேட்பாய்
பாராட்டி விட்டோம்
புரியவில்லை என்றால்
எங்கள் பாராட்டுக்கான
நன்றியைச் சொல் என்றார்கள்

மீண்டும் மீண்டும் பதிவுகள்
வந்துக் கொண்டே இருக்கின்றன
ஆனால் பாராட்டு மட்டும்
அதற்கானது இல்லை

பாராட்டுகள் ஒருநாள் தானே
கிடைத்து விடும்
சப்பைகளை
ஜல்லிவிட்டால்!

 
At Friday, 16 June, 2006, Blogger PKS சொல்வது...

உஷாஜி,

இந்தக் கவிதையைப் பொருத்திப் பார்க்கிற சூழல்கள், நபர்கள் என்று என் சிற்றறிவுக்கு "உள்குத்தாக" பல தோன்றினாலும் (ஸ்மைலி), அதையெல்லாம் மீறி, நீங்கள் வழக்கம்போல அவசரத்தில் எழுதிய கவிதை என்றாலும் (இந்த உள்குத்தைக் கவனியுங்க :-) ), கவிதை நன்றாக இருக்கிறது.

அன்புடன், பி.கே. சிவகுமார்

 
At Friday, 16 June, 2006, Blogger fhygfhghg சொல்வது...

பெட்டையின் பின் தெருவிலே போன நாய்

வீட்டினுள்ளே நுழைந்தது -திருடித்திண்ணதான் வேறென்ன!

அறியாமையே உருவமான பாட்டாளி மக்கள்

அசதியில் தூங்கிக் கொண்டிருந்த நேரம் அது.

பட பட என பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு விழித்துக்கொண்டனர் மாந்தர்

என்ன ஆச்சர்யம்; கெள்விகேட்கதுவங்கிவிட்டது நாய் - இன்றைக்கு ஏன் ரசம் சமைக்கவில்லை? அஜீரனமாகாது?

நல்ல வேடிக்கை.

என்ன செய்வது, ஈரமனம் கொண்டவர்கள் கல்லாலடிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான்!

ம்ம்ம்...கிடந்து தொலையட்டும், அவையும் ஜீவராசிதானே.

சீறினால் ஓடிவிடும்.

 
At Friday, 16 June, 2006, Blogger Unknown சொல்வது...

பதில்களை தேடும்
முயற்சியிலே
பாதியாய்
தேயுது என்வயசு
கேள்விகள் மட்டும் இல்லை
யென்றால் பதிலை தேட
வேலையில்லை
ஒரு நாள் தெரியும்
பதிலுக்காய்
ஓராயிரம்நாள் காத்திருப்போம்
பதில்கள் அதுவரும்
போகும்
கேள்விகள் மட்டும்
குறைவதில்லை

 
At Friday, 16 June, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

பாபா, இது ஞாயமா? முதல் முறையாய் மிக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, இதை கவிதை என்று வகைப்படுத்தியிருக்கிறேன். அதை இப்படி குதற வேண்டுமா?

 
At Friday, 16 June, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

பி.கே.எஸ்ஜி, படைப்பில் உள்குத்து என்றெல்லாம் கொச்சைப்படுத்தாதீர்கள் :-), கவிதையின் உட்பொருள் என்று அழகாய் சொல்லுங்கள் :-)))))))))))
மற்றப்படி, (அவசர) கவிதை என்றதற்கும், பாராட்டுக்கும் நன்றி

 
At Friday, 16 June, 2006, Blogger PKS சொல்வது...

உஷாஜி,

ஆஹா, உள்குத்துக்கு இலக்கியத்தரமான வார்த்தையெல்லாம் கண்டுபிடிச்சிட்டாங்களா? :-) "இலக்கிய"த்திலிருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால், பிடிக்கவே முடியாத மாதிரி, ராக்கெட் வேகத்திற்கு அது ஓடிவிடும் என்பது இதுதானா? :-) உட்பொருள் என்பது நல்லா இருக்கே. உட்பொருள், மறைபொருள், உள்ளுறை உவமம் ஆகியன ஒளிந்து நின்றாலும், கவிதை என்பதால் நிற்கும் கவிதைகளை நீங்கள் தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

 
At Friday, 16 June, 2006, Blogger fhygfhghg சொல்வது...

என்னக்கா என் கவிதயை வெளியிட மாட்டீர்களா? நான் தமிழ்மனத்தில் இன்னும் சேரவில்லை. உங்கள் பதிவை ரெகுலராகப் படிப்பது உண்டு.

மற்றபடி தவராக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

 
At Friday, 16 June, 2006, Blogger manasu சொல்வது...

//யப்பா.. எல்லா பின்னூட்டத்ற்கு அப்புறம் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதா!!!!!!!//

உங்களின் "இந்து என்ற சொல் தவறா" விற்கு நான் இட்ட மறுமொழியின் ஒரு பகுதி மேலே


யாரோ சொன்னதாய் நினைவு.

"தேடுவதை நிறுத்தியபோது
தேடியது கிடைத்தது"

 
At Friday, 16 June, 2006, Blogger fhygfhghg சொல்வது...

வெளியிட்டதற்கு நன்றி.

உள்குத்துக்கு மன்னிப்பீர்களாக.

:-))

 
At Friday, 16 June, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

தீ, உங்களுடைய கவிதை மெயில் பாக்சில் வராமல், கமெண்ட் மாடரேஷனுக்குப் போய்விட்டது. அதனால்தான் தாமதம். இரண்டாவது கமெண்ட்டைப் பார்த்ததும், புரிந்தது.

இன்னும் ஒரு நாய்கவிதை, அது என்ன எல்லாருக்கும் கவிதையா கொட்டுது :-)

மகேந்திரன்,கேள்விகள் அதிகரிக்க, பதில்கள் குறையும்.

மனசு! கேள்விகளுக்கு உரிதான, சரியான பதில் கிடைப்பது அபூர்வம். கேள்விகளுக்கு பதில் எங்கும் தேடியலைய வேண்டாம்
நம்மிடமே உள்ளது என்பதை சமீபத்தில் உணர்ந்துக் கொண்டேன். கேள்வி கேட்பதை நிறுத்தவும் முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறேன் :-)))

 
At Friday, 16 June, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

தீ, உங்களுடைய கவிதை மெயில் பாக்சில் வராமல், கமெண்ட் மாடரேஷனுக்குப் போய்விட்டது. அதனால்தான் தாமதம். இரண்டாவது கமெண்ட்டைப் பார்த்ததும், புரிந்தது.

இன்னும் ஒரு நாய்கவிதை, அது என்ன எல்லாருக்கும் கவிதையா கொட்டுது :-)

மகேந்திரன்,கேள்விகள் அதிகரிக்க, பதில்கள் குறையும்.

மனசு! கேள்விகளுக்கு உரிதான, சரியான பதில் கிடைப்பது அபூர்வம். கேள்விகளுக்கு பதில் எங்கும் தேடியலைய வேண்டாம்
நம்மிடமே உள்ளது என்பதை சமீபத்தில் உணர்ந்துக் கொண்டேன். கேள்வி கேட்பதை நிறுத்தவும் முயற்சி செய்துக் கொண்டு
இருக்கிறேன் :-)))

 
At Friday, 16 June, 2006, Blogger முகமூடி சொல்வது...

பதில்கள் தானாய் தெரியட்டும் என்று
கேள்விகளை நிறுத்தியபின்னே
பொருத்தமில்லா பதில்களாய்
வந்துகொண்டிருந்த பதில்கள்
கேள்விகளாய்
உருமாற்றம் அடைந்தன...
இந்த கேள்விகளில் ஏதும்
அர்த்தம் உள்ளதா
என்ற கேள்வியை மட்டுமாவது
கேட்கலாம் என்றால்
கேள்விக்கான பதில்களை நிறுத்தி
கேட்பவனுக்கு மட்டுமே
பதில் சொல்வதாய் இருப்பதால்
கேட்பதற்கான அருகதையை
வளர்த்துக்கொண்டு வா என்றார்கள்
இப்போது கேள்வி கேட்டவர்கள்
கேள்வி கேட்டது போய்
கேள்விகளை கேட்டுக்கொண்டு நிற்கிறார்கள்!

 
At Friday, 16 June, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

முகமுடியாரே!
என்னமோ இலக்கியதரமா சொல்லியிருக்கீங்க, எனக்கு புரியலை :-)
(இது என் பதில்)

 
At Friday, 16 June, 2006, Blogger பெருசு சொல்வது...

உஷாக்கா

கேள்வி+பதில்=வாழ்க்கை
வாழ்க்கை-பதில் =கேள்வி
வாழ்ககை-கேள்வி = பதில்

இதுல எது கேள்வி எது பதில் அப்படின்னு
தேடறதுதான நம் வாழ்க்கை.

கேள்வி கேட்டு பதில் பெறுவதைவிட பதில்கேள்வி
கேட்டு அதற்கான பதிலை பெறுவதும் சரியா.

கேள்வி கேட்பவருக்கே பதில் தெரிந்திருந்தாலும்,
மறுகேள்வி கேட்கும்போதுதான் சரியான பதில்
கிடைக்கும் என்பதும் சரியா.

ஒரு கேள்விக்கு பதில்கள் பல இருக்கலாம் என்பதும்
பல பதில்களுக்கு கேள்வி ஒன்றாக இருக்க முடியாது
சரியா, என்பதுதான் என் கேள்வி.

ஐயோ எனக்கே குழம்பிருச்சே.

 
At Friday, 16 June, 2006, Blogger Unknown சொல்வது...

ஒண்ணுமே புரியலே உலகத்திலே.. என்னமோ ஒதைக்குது மர்மமா இருக்குது..

 
At Friday, 16 June, 2006, Blogger Muthu சொல்வது...

உஷா,

கவிதை முதல் பாதி முழுமை பெற்றுள்ளது. இரண்டாம் பாதியில் கொஞ்சம் பிரச்சினை.

மற்றபடி இதில் உள்ள உள்குத்து கூறு உள்ளதே அது பெரிய தமாஷ். யார் வேணா யார் மேல வேணா போட்டு பார்த்துக்கலாம்.

அங்க இருக்கு இந்த கவிதையின் வெற்றி.

 
At Friday, 16 June, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

பெரூசு, கவலையே படாதீங்க. கவிதைகளுக்கு பொருள் கண்டுப்பிடிப்பதில் நாங்கள் எல்லாம் கில்லாடிகள்:-)

ரமணி, இதுல என்ன குழப்பம் இருக்கு? உங்க வீட்டுல, கோபமா உங்க மனைவி உங்களை கேட்கிறாங்க. நீங்க பதில் தரீங்க. வழக்கப்படி மாட்டாம இருக்க, ஒரு சால்ஜாப்பு. ஆனா அவங்க ஒத்துப்பாங்களா? அப்புறம்.... இப்ப கவிதைய படிச்சிப்பாருங்க. முத்து கொடுத்த விளக்கத்தையும் ஒருக்கா, படிச்சிடுங்க.

முத்து, முடிஞ்சா, இரண்டாவது பகுதியில் இருக்கும் குறைகளை சொல்லுங்கள்.

//மற்றபடி இதில் உள்ள உள்குத்து கூறு உள்ளதே அது பெரிய தமாஷ். யார் வேணா யார் மேல வேணா போட்டு பார்த்துக்கலாம்//

அதுதானே :))))))))))))))))))))))))))))

 
At Saturday, 17 June, 2006, Blogger Gnaniyar @ நிலவு நண்பன் சொல்வது...

சன்டிவியில அரட்டை அரங்கம் நடத்திய விசு விலகிட்டாராம் உஷா..
கேள்விப்பட்டீங்களா..?
:)

 
At Saturday, 17 June, 2006, Blogger Muthu சொல்வது...

உஷா,

கேள்விகள் கேட்பதை நிறுத்தி விட்டால் பதில்கள் தானே "கண்டிப்பாக" தெரிந்துவிடும் என்ற தொனி தெரிகிறதே... அதைத்தான் சொன்னேன்..

கேள்விகளை கேட்பதை நிறுத்திவிட்டால் பதில்கள் தெரியலாம் தெரியாமலும் போகலாம்...

(மற்றபடி கவிதாயினியின் கருத்து சுதந்திரத்தை நான் மதிக்கிறேன்:)

 
At Saturday, 17 June, 2006, Blogger Vyas Bharghava சொல்வது...

Sorry, I do not have a Tamil Unicode font on my system... So cannot post in Tamil.

Usha, "Vandu konde" or "Vanduk konde"? edu sari?

I think it's "Vandu konde".

PS: Sorry, did not have enough time to write a post than can value-add. All I could do is point out a bug (I'm a software enginner ;)) in your kavithai.

Regards, Vyas

 
At Sunday, 18 June, 2006, Blogger Unknown சொல்வது...

hmmmm நான் வேலை பாக்குற ஆபீஸ்ல தான் நீங்களும் வேலை பாக்குறீங்களோ? இவ்வளவு கரெக்டா சொல்றீங்களே?

 
At Monday, 19 June, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

அன்புள்ள வியாச பார்கவா,
சந்தி பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. eKalappai - இதை டவுன்லோட் செஞ்சா, தமிழில் டைப் அடிக்கலாம். இங்கையும் போய் பாருங்க.
http://www.suratha.com/
டவுன் லோட் செஞ்சிட்டு, உங்க கவிதையை நீங்களே தமிழில் போடுங்க பார்ப்போம் :-)
உங்க கவிதையை இங்க போட்டு இருக்கேன்.

Usha,
Please kindly post the below in Tamil:

Suyatheadl padilgalai konarumo?
Muyandudaan paarpomae ena
Suyamay sindithal
Payamay irukkiradu

Avai allikkum padilgalukku
Nanbarin thalaiyaatugal thevai padukindrana

Naanay badil alithal
Enadu pinnani alasappadugiradu
Vambu vendam ena
Badil alikkum velaiyai
Nanbarkallukku thandu vittu
Kelivigalai ketkindrean

Innum badil varak kannom
Enra pulammbal than micham.

 
At Monday, 19 June, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

நிலவு, WA! இப்படி கவித்துவமாய் பேசினா எப்படி? புரிகிறாமாதிரி சொல்லுங்க (திட்டுங்க)

முத்து,
பிறரைப் பார்த்து கேட்கும் கேள்விகளுக்கு சந்தேகங்களுக்கும் என்றுமே நாம் எதிர்பார்க்கும் பதில் வராது. அதனால் கேள்விகளை
எழுப்புவதை விட்டு விட்டு, அவர் நிலையில் இருந்து யோசித்தால், பதில் நமக்கே புரியும்.

 
At Monday, 19 June, 2006, Blogger G.Ragavan சொல்வது...

கவிதாயினி ஆயிட்டீங்களா உஷா. இதெல்லாம் சொல்றது இல்லையா?

எங்கும் இருப்பதை
எங்கோ தேடினால்
அங்கே இருப்பது
அங்கேயே கிடைக்குமா!
(இது என்னோட பதில். இதுல இருக்குற இலக்கிய, இளக்கியத் தரமெல்லாம் கண்டுக்காதீங்க...)

 
At Monday, 19 June, 2006, Blogger enRenRum-anbudan.BALA சொல்வது...

உஷா,

ஜிட்டு, ரமணர் ரேஞ்சுக்கு இருக்கு ஒங்க கவிதை :) அதாவது, philosophical !!!

Getting serious, கவிதை நல்லாவே இருக்கு.

மற்றபடி, GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 4
படித்தீர்களா ?

என்றென்றும் அன்புடன்
பாலா

 
At Monday, 19 June, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

ராகவா, நெனப்பு பொழப்ப கெடுக்குதுன்னு சும்மாவா சொன்னாங்க?

பாலா சார், நிஜமாகவே கவிதைக்கு விளக்கம் தரும் பொழுது, ஒரு ஆனந்தா ப்லீங்க் வந்தது :-)

 
At Monday, 19 June, 2006, Blogger Unknown சொல்வது...

யக்கா க்ளியரா எல்லாரையும் குழப்புறா மாதிரி தானே பின்னூட்டம் போட்டேன்? எங்க ஆபீஸ்ல தினமும் நடக்குற கதைய இங்கே சொல்றீங்களேன்னு ஆச்சரியமா இருந்துச்சு அவ்வளவுதான்.

கவிதை சூப்பர்னு தான் எனக்கு தோணுது

 
At Monday, 19 June, 2006, Blogger Vyas Bharghava சொல்வது...

உஷா,

இதோ நான் தமிழில்...


சுய தேடல் பதில்களைக் கொணருமோ
முயன்றுதான் பார்ப்போமே என
சுயமாய் சிந்தித்தால்
பயமாய் இருக்கிறது

அது அளிக்கும் பதில்களுக்கு
நண்பர்களின் தலையாட்டுதல் தேவையாகிறது

நானாய் பதில் பகர்தால்
நாலும் பேசுவார் என
பதில் பகரும் வேலைதனை
நண்பர்களுக்கு தந்து விட்டு
கேள்விகளைக் கேட்கின்றேன்

இன்னும் பதில் வரக் காணோம்
எனும் புலம்பல் தான் மிச்சம்.

 
At Tuesday, 20 June, 2006, Blogger மணியன் சொல்வது...

கேள்வியின் நாயகியே, உன் கேள்விக்கு பதில் ஏதம்மா ?

 
At Tuesday, 20 June, 2006, Blogger Dubukku சொல்வது...

யக்கா...நம்மள மாதிரி ஏழைப்பாழைக்கெல்லாம் ஒரு கோனார் நோட்ஸ் போடக்கூடாதா? எனத்தப் பத்தி எழுதிருக்கீங்கன்னு எவ்வளவு நேரம் தான் மண்டையப் பிச்சிக்கிறது??

 
At Tuesday, 20 June, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

wA, இப்ப புரியுது :-), வீட்டுலையும் ஒர்க் அவுட் ஆகுதா?

மணியன், அதுதான் பதிலையே எதிர்ப்பார்க்காதீங்கன்னு சொல்லிட்டேனே :-)

வியாஸ், ஈ-கலப்பைல உழ ஆரம்பிச்சாச்சா? அப்படியே வலைப்பதிவு தொடங்கிடுங்க.

டுப்புக்கு, கவிதையை நல்லா படிச்சிக்குங்க. அடுத்த முறை வீட்டுல தங்கமணி, நிக்க வெச்சி கேள்வி
கேட்டு மடக்குவாங்க இல்லே, அப்ப வாய்க்கு வந்த பதில சொல்லுவீங்க இல்லே, அப்ப இந்த அக்காவை நெனச்சிக்குங்க... அப்கோர்ஸ் கவிதையையும்தான் :-)

 
At Tuesday, 20 June, 2006, Blogger பொன்ஸ்~~Poorna சொல்வது...

உஷா,
கவிதை சூப்பர்.. உங்க விடைக்கு அலைந்த கேள்விகள் தான் எனக்கு நினைவுக்கு வருது :)

இதே மாதிரி கேள்விகளைப் பார்த்து நான் பயந்து போனது இங்கே :)

 
At Wednesday, 21 June, 2006, Blogger Unknown சொல்வது...

மேடம், ஆறு பதிவு எங்கே?

 
At Wednesday, 21 June, 2006, Blogger Vyas Bharghava சொல்வது...

உஷா,

தமிழில் வலைப்பதிவு இப்பொழுது தான்.
எல்லாம் “நுனிப்புல் மேய்ததின்” விளைவு. :)
நன்றி.

வியாஸ்

 
At Wednesday, 21 June, 2006, Blogger Vyas Bharghava சொல்வது...

உஷா, புது வலைப்பதிவு துவங்கியுள்ளேன். அழைப்பதழ் இங்கே

 
At Thursday, 22 June, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

ரமணி, "ஆறு" போட்டாச்சு? நீங்க படிச்சாசா?

வியாஸ், பார்த்தேன், படித்தேன், கமெண்ட்டும் போட்டேன்

பொன்ஸ், ST, அது என்ன கவிதைக்கு கவிதையாலே அடிக்கணும் என்று ஏதாவது சாஸ்திரம் இருக்கா என்ன
:-))))

 

Post a Comment

<< இல்லம்