Thursday, June 22, 2006

"ஆறு" அது ஆழமில்லே!

நான் சிறுமியாய் இருந்த காலத்துல வீட்டுக்கு ஒருநாள் தபால் கார்ட்டு வந்தது. எங்கப்பா அதைப் படித்துப் பார்த்துவிட்டு, சின்ன கெட்ட வார்த்தையில் அதை திட்டி விட்டு கிழித்துப் போட்டார். என்னப்பா என்று ஆவலுடன் விசாரித்ததில் தெரிந்துக்கொண்டேன் திருப்பதி பெருமாளின் சங்கலி தொடர் மிரட்டல்கள். இப்பொழுது வெங்கடாசலபதிகளும், சமீபத்தில் பிள்ளையாரும், தொழில்நுட்ப வளர்ச்சியால் கணிணி மூலம் உலகை வலம் வரத் தொடங்கியுள்ளார்கள். அவ்வப்பொழுது இத்தகைய மெயில்களைப் பார்க்கும்பொழுது, மனிதன்
மாறவில்லை என்று பாட தோன்றும். இந்த சங்கிலி தொடர்களே மேலும் அலர்ஜியானதுக்கு காரணம் அடுத்து பார்த்த, உட்கார்ந்த இடத்திலேயே பணம் தானா கொட்டும் என்ற சங்கிலி தொடர் மோசடிகள்.

வெங்கட் ரமணி, அதேப் போல, ஆறு சங்கிலித் தொடரில் என்னை இழுத்துவிட்டு விட்டார். போதாதற்கு சங்கிலி தொடரை கட் பண்ணிடாதீங்கன்னு மிரட்டல் வேற! மிரட்டலைப் பார்த்து பயந்துப் போன எனக்கு போதாகுறைக்கு இந்த சம்பவம் வேறு நினைவில் வந்தது.

ஒருதடவை, ரொம்ப பழக்கமானவங்க, வீட்டுல பூஜை கட்டாயம் வாங்கன்னு கூப்பிட்டாங்க. பொதுவாய் அழைப்பு வந்தால், பெரியாரிசம் பேசாமல், பவ்யமாய் போய் கொடுப்பதை வாங்கி வருவது வழக்கம். என்ன பூஜை என்று போய்ட்டு வந்தப்பிறகா இல்லை, முதலிலேயே
கேட்டேனா என்று நினைவில்லை.

அதுவும் ஒரு சங்கிலி தொடர்தான். அதாவது நானும் ஐந்து வாரம் பூஜை செய்து, ஐந்து பேருக்கு வெற்றிலை பாக்கு இத்தியாதிகள் தர வேண்டுமாம். என்னால முடியாது என்றதும், அந்த அம்மாளுக்கு வந்ததே கோபம், இந்து சமயத்தை வேரறுக்க வந்த கோடாலியே என்ற ரேஞ்சுக்கு ஸ்பீச் கொடுத்துவிட்டு, கோபமாய் போனவர், அன்றிலிருந்து அவரை சந்திக்கும் பொழுதெல்லாம், லேசாய் குத்திக்காட்டவும் மறுக்க மாட்டார்.

என்ன எழுதுவது முழித்துக் கொண்டே எழுதப்பட்ட அனைத்து ஆறையும் வலம் வந்தேன். என்னத்த சொல்ல?எல்லாருக்கும் இயற்கை பிடிச்சிருக்கு, காலை, மாலை சூரியன், நிலா, கடற்கரை, பாட்டி வீடு அல்லது சின்ன வயதில் வளர்ந்த வீடு, கருவாட்டு குழம்பு இல்லை என்றால் இடியாப்பம், ஜெயகாந்தன்/ஜானகிராமன்/ பொன்னியின் செல்வன், அன்பே சிவம், மகாநதி, ஜெயசந்திரன், ஜேசுதாஸ் ஏறத்தாழ எழுத நினைப்பவர்களின் எண்ணங்களில் ஒற்றுமை அதிகம். (ஆனா பசங்கள் மட்டும் ஒண்ணாங்கிளாஸ் டீச்சரை மறக்கவில்லை)

இப்படி நொந்து நூலாய் வரும்பொழுது, எதாவது நக்கலாய் , ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்தலாம் என்றுப் பார்த்தால், அதிலும் மண்ணைக் கொட்டி புண்ணியத்தைத் தேடிக் கொண்டார் டூபுக்கு.

என்னத்தான் எழுதுவது எல்லாம் வலைப்பதிவுகளையும் வலம் வரும்பொழுது, புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானோதயம் ஏற்பட்டதுப் போல சில விஷயங்களில் ஒரு தெளிவு ஏற்ப்படது. என்னுடைய புரிதல் சரியா தவறா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். சங்கலி அறுப்படாமல் இருக்க ஆறை மட்டும் எடுத்து விடுகிறேன்.

சில வர்த்தமானங்களும், உண்மைகளும்!

1- பெண்கள் ஒண்ணுமில்லாத விஷயங்களை மணிக்கணக்காய் பேசி நேரத்தை வீண்டிப்பார்கள்- கொஞ்சம் மதம், கட்சி, தலைவர், அரசியம், குரு சார்ந்த புல்லரிப்பு பதிவுகளைப் பாருங்கள்

2- பெண்களுக்கு வம்பு, அக்கப்போர் என்ற மத்தவங்களோட சொந்த விஷயங்களை அலசுவது என்றால் அல்வா- யாரூக்கு பெண்களுக்கு மட்டுமா? எங்கோ என்றோ போட்ட இருவரிகளை எடுத்து இந்தா ஆதாரம் என்று காட்டி கதிகலங்க வைப்பது யாருங்க?

3- சாமீ, பூஜை, பக்தி, ஆன்மீகம் ஆகியவைகளில் பெண்களுக்கு ஆர்வம் அதிகம்- அப்படியா?

4- பெண்கள் சரியான பயந்தாங்கொள்ளிகள்- பெயரை மறைத்துக் கொண்டு வீராவேசமாய் வலைப்பதிவில் அட்டை கத்தியைக் காற்றில் வீசுபவர்களில் ஆண்கள் அதிகமா பெண்கள் இருக்கிறார்களா?

5- குழாயடி சண்டையில் பெண்களுக்கு என்னத்தான் ஆவலோ? இரண்டு பெண்கள் சேர்ந்தால் போதும், சண்டை வந்துவிடும். ஒற்றுமையே கிடையாது- வெல்கம் டூ தமிழ்மணம்

6- பெண்கள் பொறுமையில் பூமா தேவிக்கு சமமானவர்கள்- ஐயகோ, உப்பு பெறாத விஷயத்துக்கு மாங்கு மாங்கு என்று பொறுமையின் பூஷணமாய், ஒற்றை விரலில் (இது தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்கு) , பக்க பக்கமாய் தட்டச்சுபவர்களையும், இணையமெல்லாம்
தேடி லிங்கு பிடித்து அளிப்பவர்களையும் என்ன சொல்ல?

இத்தோடு நிறுத்திக் கொண்டுவிடுகிறேன்.

சங்கிலித் தொடர் அறுப்படாமல் இருக்கு, யாரைக்கூப்பிடலாம்???

இதோ என் பட்டியல்!

1- நேசமுடன் வெங்கடேஷ்
2- எழுத்தாளர் பாரா
3- இரா முருகன்
4- எஸ்.ரா
5- அண்ணாகண்ணன்

இவங்க எல்லாருமே பெரிய ஆட்கள், ஆனால் இணையத்தை விட்டு வனவாசம் போனவர்கள். அவர்கள் மீண்டும் வர வேண்டும். புதிது புதியதாய் நாளும் வலைப்பதிவுகள் ஆரம்பிக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு இவர்களின் படைப்புகள் மிக உபயோகமாய் இருக்கும் ராமுவும், அண்ணாகண்ணனும் தங்கள் வலைப்பதிவை, தங்கள் எழுதுக்களைப் போட்டு வைக்கும் கிடங்காய் உபயோகிக்கிறார்கள்.

இன்னும் ஒருவர் வேண்டுமே.....

6- கல்வெட்டு என்ற பலூன்மாமா- வித்தியாசமாய் சிந்திப்பவர்.

அது என்ன ஆறு அது ஆழமில்லை என்ற தலைப்பை யோசிப்பவர்களுக்கு,
"ஆறு அது ஆழமில்லை
அது சேரும் கடலும ஆழமில்லை
ஆழம் எது ஐயா
அந்த பொம்பளை--- மன்னிக்கவும் மனுஷங்க மனசு தாய்யா -- என்று மாற்றி படிக்கவும்.

25 பின்னூட்டங்கள்:

At Thursday, 22 June, 2006, சொல்வது...

LOL. உங்களை எல்லாம் விளையாட கூப்பிட்ட மனுஷர் நொந்து நூலாயிருப்பாரு இந்நேரம் :)

 
At Thursday, 22 June, 2006, சொல்வது...

//"ஆறு அது ஆழமில்லை
அது சேரும் கடலும ஆழமில்லை
ஆழம் எது ஐயா
அந்த பொம்பளை--- மன்னிக்கவும் மனுஷங்க மனசு தாய்யா -//

சரண்டர்.. :)

(ஏன்யா.. இப்படி மானத்தை வாங்கரீங்க?)

 
At Thursday, 22 June, 2006, சொல்வது...

//5- குழாயடி சண்டையில் பெண்களுக்கு என்னத்தான் ஆவலோ? இரண்டு பெண்கள் சேர்ந்தால் போதும், சண்டை வந்துவிடும். ஒற்றுமையே கிடையாது- வெல்கம் டூ தமிழ்மணம்//
நெத்தியடி குடுத்திட்டிங்களே, பெண்ணியம் பற்றி பதிவு போடலாம் என்று இருந்தேன். உங்களால கெட்டுப்போச்சு. இந்த பெண்களே இப்படித்தான் காரியத்தை கெடுத்திடுவாங்க :):):)

 
At Thursday, 22 June, 2006, சொல்வது...

இந்த சங்கிலி தொடர் மெயில்களை கண்டால் எனக்கு அலர்ஜி.நேத்து ஒரு நண்பர் அனுப்பிய மெயிலில் இத்தாலியில் ஒரு தாய் தன் இறந்த பெண் குழந்தையை "மம்மி"யாக மாற்றி பாதுகாத்து வருவதாக இருத்தது.ஆச்சரியத்துடன் வாசித்து கொண்டு இருத்தேன்,ஆனால் கடைசியில் கீழ்க்கண்டாவாறு இருந்தது.
Believe or not...

Are you unlucky recently??

I'm a engineer, I was promoted as supervisor in one week after I forward this message.

I'm a stroked man, and I can walk one month later after I forward this message.

I'm areca vendor in Taipei, I sold two or three times as usual after I send this to my friend.

I'm student of Minxin college(Taipei),I pass all the exam afer I send this message ??

Welcome for your approve, should rather believe it~~~J

Good luck will be your house five days later you send this short message to 20 friends!

வெந்து சுண்ணம்பாகி போனேன்... என்னிடம் 19மெயில் முகவரி இருக்கு... 20வதாக உங்க ID என்னா.... :-)

 
At Thursday, 22 June, 2006, சொல்வது...

WA, என்ன அப்படி சொல்லிட்டீங்க? ரமணிக்கு "இன்னா செய்யாரை" குரளை டெடிகேட் செய்கிறேன் :-)

ராசா,

//(ஏன்யா.. இப்படி மானத்தை வாங்கரீங்க?)//

இப்படி எல்லாம் உண்மையை பொதுவுல ஒத்துக்கக்கூடாது :-)

கோவி கண்ணன்

//இந்த பெண்களே இப்படித்தான் காரியத்தை கெடுத்திடுவாங்க :):):) //

அதுதானே:-)

ராம், தாராளமா அனுப்புங்க, பார்க்காமலேயே டெலிட் செய்துவிடுகிறேன் :-))))

 
At Thursday, 22 June, 2006, சொல்வது...

ஸ்ரீதரன்,
சுஜாதா ஞாபகம் வருகிறார் என்று நீங்கள் குறிப்பிட்டதைப் பார்த்து எனக்கு கமல் ஞாபகம் வந்தது :-)
சிவாஜியின் தாக்கம்,இந்த தலைமுறை நடிகர்கள் அனைவரிடமும் இருக்கும் என்றார். அதுப் போலவே, இன்றைய எழுத்தாளர்களிடமும் சுஜாதாவின் தாக்கம் இருப்பதில் அதிசயமில்லை. ஆனால் இதுவரை என்னை யாரும் சொன்னதில்லை. முதல் முறையாய் நீங்கள் சொன்னது மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

 
At Thursday, 22 June, 2006, சொல்வது...

'முதல் மரியாதை' படத்தில் ஒரு வசனம் வரும்;
'பேருதான் பெருசு..பேச்சைப் பாரு பேச்சை.....'ன்னு.

அதுபோல,
பேருதான் நுனிப்புல்;
எழுத்தைப்பார் எழுத்தை!

அம்மா! எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டுபண்ணுகிறது.

நீங்கள் சொல்லியிருப்பது அத்தனையும் 'அடிப்புல்'!

சும்மா வேரோட பிச்சிட்டீங்களே!

இது ஆழமில்லைன்னா, வேறு எது ஆழமாம்!?

 
At Thursday, 22 June, 2006, சொல்வது...

ஒவ்வொரு பாய்ண்ட்டும் புல்லட்டைப் போடுகிறது. சிக்ஸர் அடிச்சிருக்கீங்க...

(அதே படத்தின் ரம்யா க்ருஷ்ணன் எசப்பாட்டு நினைவிருக்கிறதா ;-)

 
At Thursday, 22 June, 2006, சொல்வது...

ஏனோ, நீங்க பெண்களைப் பற்றி மேற்சொன்ன ஒரு பாயின்டைக் கூட இதுவரை என்கிட்ட யாரும் சொன்னதில்லை.

தமிழ்மணத்தைப் பொறுத்தவரை பட்டியலில் உள்ள பல சமாச்சாரங்களைப் பார்த்து ஆச்சரியமும் வருத்தமும் பட்டிருக்கேன். இது வேறு உலகம்..

சிரிப்பியா அழுகாச்சியான்னு எது வரும்னு தெரியலை..

 
At Thursday, 22 June, 2006, சொல்வது...

S.K, நுனிப்புல் என்ற பெயர் ஒரு சேப்டிக்குத்தான் :-) என்னத்த எழுதுகிறே என்று யாராவது கேட்டா,
பதிவின் பெயரில்தான் தெளிவா இருக்கே என்று சொல்லிவிடலாம் இல்லையா?

பாபா, தர்ம அடி விழுமோன்னு கொஞ்சம் பயமா இருந்தது

பொன்ஸ், நம் முகத்தின் நேராக இப்படி பேச மாட்டார்கள். ஆனால் காலக்காலமாய் பெண்களை
இப்படி க்ரிடிசைஸ் செய்வது சாதாரண விஷயம். மற்றப்படி பதிவாளர்கள் பற்றி நீ சொன்னதற்கு பதில், பதிவிலேயே இருக்கு :-)

 
At Thursday, 22 June, 2006, சொல்வது...

உஷா,

பெரிய ஆளுங்களை விளையாட்டுலே இழுத்துருக்கீங்க.

படா தில்லுதான்:-)))

 
At Thursday, 22 June, 2006, சொல்வது...

துளசி, பதிவிலே எழுத ரொம்ப "தைரியம்" வேணுமா என்ன
:-))

 
At Friday, 23 June, 2006, சொல்வது...

//துளசி:பெரிய ஆளுங்களை விளையாட்டுலே இழுத்துருக்கீங்க.

படா தில்லுதான்:-)))//

அவங்க லெவலே வேற :))

உஷா: சீரியசாக உங்கள் எழுத்துக்களும் எண்ணங்களும் அடுத்த வட்டத்திற்குறியனவே.

 
At Friday, 23 June, 2006, சொல்வது...

லிங்க் குடுக்காம பெயர மட்டும் போட்டுட்டு அப்புறம் காசு குடுன்னா குடுக்கமாட்டேன் தெளிவாச் சொல்லிட்டேன் ஆமா... :))

 
At Friday, 23 June, 2006, சொல்வது...

உஷா ம்...ம்...ம்.. நடக்கட்டும்.
உங்க பாயிண்டுகளைப் பார்த்தால் கொஞ்சம் பயமாத்தான் இருக்குது. உள்குத்து எதுவும் இல்லாம வெளிக்குத்தா போட்டுத் தாக்கிட்டீங்க ....
அழைப்புக்கு நன்றி!

உங்களின் அழைப்பை ஏற்று....
http://kalvetu.blogspot.com/2006/06/blog-post_23.html

 
At Friday, 23 June, 2006, சொல்வது...

லிங்க் குடுத்தா காசு உண்டா? அடாடா அண்ணே எத்தன தபா உங்க ப்ளாகுக்கு லிங்க் குடுத்துருக்கேன். காசு விஷயத்த இத்தனை நாள் சொல்லாம விட்டுட்டீங்களே? சரி சரி அடுத்த தடவையும் சென்னை தோசைல நீங்களே பில் கட்டீருங்க.

 
At Friday, 23 June, 2006, சொல்வது...

//(ஆனா பசங்கள் மட்டும் ஒண்ணாங்கிளாஸ் டீச்சரை மறக்கவில்லை)//


முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர்....

எல்லாம் ஒரு குருபக்தி தான்
-:))))

 
At Friday, 23 June, 2006, சொல்வது...

உஷா,

துபாய்ல வெயில் அதிகமோ? கொதிச்சுப்புப்போயிருக்கீங்க :)) கொஞ்சம் லெமன் ஜூஸ் சாப்பிடுங்க. சரியாயிடும். அப்புறம் நல்லா ஒரு கருவாட்டுக் குழம்பு வைச்சு சாப்பிடுங்க. ரெசிபி வேணும்னா நம்மகிட்ட தனிமெயில் அனுப்புங்க. ;))

 
At Friday, 23 June, 2006, சொல்வது...

//வெங்கட் ரமணி, அதேப் போல, ஆறு சங்கிலித் தொடரில் என்னை இழுத்துவிட்டு விட்டார். போதாதற்கு சங்கிலி தொடரை கட் பண்ணிடாதீங்கன்னு மிரட்டல் வேற!//

ஐயய்யோ நான் மிரட்டினேனா.. 'மேடம், ஆறு பதிவு எங்கே'னு அப்பிராணியா தானே கேட்டேன். ஏற்கனவே நம்ம இமேஜை டேமேஜாக்க பாக்கறாங்க. நீங்கவேற இப்படியெல்லாம் எழுதாதீங்க. தயவுசெய்து இந்த வரியை 'அன்பு மிரட்டல்'னு மாத்திடுங்க.

 
At Friday, 23 June, 2006, சொல்வது...

மணியன் சரியா சொல்லுங்க, அடுத்த வட்டமா அல்லது அடுத்த கட்டமா :-) ( ஒரு வட்டத்துக்குள்ள சுழல விருப்பமில்லை :-)))

மனசு, ஒண்ணாங்கிளாஸ் மல்லிகா டீச்சர்-- சரி,சரி புரியுது :-)))

டுபுக்கு, பேமண்ட்பேசிட்டு சுவிஸ்பேங்க் அக்கவுண்ட் நம்பர் தரேனே :-)

WA, பழைய பாக்கியை விடாதீங்க. பவுண்டுல குடுக்கப் போகிறவரை, தோசைக்கு பில் கட்ட சொல்வது நியாயமா :-))

பிரேமலதா, எப்பவுமே கொஞ்சம் கூல்தான் . நம்ம முதல் அறிமுகம் இதே மேட்டரில் கமெண்ட்
போடுவதில் ஆரம்பித்ததை, நினைவிருக்கா?

ரமணி, இதெல்லாம் எங்களைப் போன்ற இலக்கிவாதிகளின் உயர்வு நவிர்ச்சி பேச்சுக்கள்
:-))))))))))))))))))))
டென்ஷன் ஆகாதீங்க

 
At Friday, 23 June, 2006, சொல்வது...

கல்வெட்டு நன்றி. உங்க பதிவைப் படித்தேன். ஆனால் கமெண்ட் என்ன போடுவது என்று தெரியவில்லை.

 
At Friday, 23 June, 2006, சொல்வது...

ஆண்கள்: ஆழம் எது ஐயா. அது பொம்பளை மனசு தான்யா....

பெண்கள்: ஆழம் எது ஐயா. அது மனுசங்க மனசு தான்யா...

ஏன்? இதுக்கு காரணம் ஆண்களா பெண்களா? ஆண்கள் பெண்களைப் புரிந்து கொள்ள தேவையான அளவு முயல்வதில்லையா? இல்லை பெண்கள் ஆண்கள் புரிந்து கொள்ளும் படி நடந்து கொள்வதில்லையா? ஏன்? ஏன்? ஏன்?

 
At Saturday, 24 June, 2006, சொல்வது...

குமரன், ஆண் மனம் பெண் மனம் என்றெல்லாம் பேதம் பிரிக்காமல், பொதும் மனுஷ மனம் என்றேன். மனத்தில் (எண்ணங்களில்) ஏது பேதம்?
ஒன்னொரு மனமும் கடலுக்கு ஈடானது. மேலே தெரிவது நாமே நம்மை பற்றி எண்ணிக்கொள்வது. பேச்சில் செயலில் தெரிவதை
வைத்து மற்றவர்கள் ஒவ்வொரு மாதிரியாய் நம்மைப் பற்றி கணிக்கிறார்கள். ஆனால் உள்ளே குவிந்துகிடப்பவைகளை என்ன
சொல்வது?

பச்சோந்தியார் கேட்டால் சொல்லுவாரா :-))))

 
At Sunday, 25 June, 2006, சொல்வது...

//சில வர்த்தமானங்களும், உண்மைகளும் //

இந்த உண்மைகள் எப்படி காலம்காலமாக சொல்லிக் கொடுக்கப்பட்டு மறக்காமல் பின்பற்றப்படுகின்றன ?

பெண்ணீயம் பேசுபவர்கள் இதற்குப் பல விளக்கங்கள் அளித்தாலும், இவை தொடர்ந்து நின்று நிலைபெறுவது வியப்பு தான்.

 
At Sunday, 25 June, 2006, சொல்வது...

//இவை தொடர்ந்து நின்று நிலைபெறுவது வியப்பு தான். //

Really?

பூனைக்கண்ணை மூடுவது வியப்பா?

 

Post a Comment

<< இல்லம்