Sunday, June 25, 2006

தேன்கூட்டிற்கு நன்றி.

பரிசு பெற்ற இளவஞ்சி, நிலா, ராசாவுக்கு வாழ்த்துக்கள்

பின்னுட்ட பெட்டியில் கதையைப் பாராட்டியவர்களால் மனம் நிறைந்தது என்றால், வோட்டும் போட்டு இரண்டாவது பரிசு பெற வைத்தவர்களுக்கு மிக்க நன்றி.

இம்முறை போட்டியில் வந்த படைப்புகளில் பெரும்பான்மையானவை பரிசுக்குரிய தகுதியை
உடையது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வித்தியாசமாய் எழுதிய சுரேஷ் கண்ணன், மனதை நெகிழ வைத்த ஆசாத், தேர்ந்த நடைக்கு
சொந்தமான ஹரன் பிரசன்னா, கவிதையில் (என்னையும்) கவர்ந்த வவ்வால், நான்கவது பரிசு பெற்ற ராசா இவர்களின் படைப்புகள் அனைத்தும் முதல் பரிசுக்கு தகுதியானவர்கள் என்பது என் கணிப்பு. (கொஞ்சம் தட்டி சரி செய்திருந்தால் பரிசு பெற்றிருக்கலாம் என்று நினைத்த தேவ் உட்பட)

போட்டி ஏற்பாடு செய்த தேன்கூடுவிற்கும், தமிழோவியத்திற்கும் பாராட்டுகள். படைப்புகளை விமர்சிக்கவே ஒரு பதிவு ஆரம்பித்து அழகாய் ஒவ்வொரு படைப்புகளை அலசி
ஆராய்ந்த முன்றாவது கண் விமர்சன குழுவிற்கு பாராட்டுகளும் நன்றியும்சூப்பர் தலைப்பு
கொடுத்த பினாத்தலாருக்கு ஸ்பெஷல் டாங்ஸ்.

மனசாட்சி- என்னமோ பரிசு என்றால் அஞ்சு பத்து தருவார்கள். வாங்கிக் கொண்டு சந்தோஷமாய்
போகலாம் என்றால் பரிசு என்பதும் வெலவெலக்க வைக்கும் விஷயம் என்று ஆக்கிட்டாங்களே! சிறப்பு ஆசிரிய பதவியாம். தூக்கம் போச்சு! என்ன எழுதுவது என்று தலையை உடைத்துக் கொள்ள வேண்டியதுதான். கடவுளே! கடவுளே!

32 பின்னூட்டங்கள்:

At Sunday, 25 June, 2006, Blogger துளசி கோபால் சொல்வது...

வாழ்த்து(க்)கள் உஷா.

சிறப்பு ஆசிரியர்? ஜமாயுங்க.

 
At Sunday, 25 June, 2006, Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொல்வது...

வாழ்த்துக்கள் பரிசு பெற்றமைக்கும், பரிசு பெற்ற பெறாத அனைவரையும் நினைவு கூர்ந்தமைக்கும் அந்த பண்புக்கும், சிறப்பு ஆசிரியரை சரியாகத்தான் தேர்தெடுத்திருக்கிறார்கள்.

 
At Sunday, 25 June, 2006, Blogger Unknown சொல்வது...

All the best usha.congrats

 
At Sunday, 25 June, 2006, Blogger கோவி.கண்ணன் சொல்வது...

இரண்டாவது பரிசு பெற்றதற்கு நல்வாழ்த்துக்கள். வெற்றிப் பயணம் தொடரட்டும் !

 
At Sunday, 25 June, 2006, Blogger Pavals சொல்வது...

வாழ்த்துக்கள்..

 
At Sunday, 25 June, 2006, Blogger G.Ragavan சொல்வது...

வாழ்த்துகள் உஷா. எப்ப டிரீட்டு...சிறப்பாசிரியர் வேற...பேசாம ஒரு செக் போட்டு எனக்கு அனுப்பீருங்க...ஒங்க பேரச் சொல்லி நானே என்னைய டிரீட்டிக்கிறேன்.

சிறப்பாசிரியராகவும் கலக்க எனது வாழ்த்துகள்.

 
At Monday, 26 June, 2006, Blogger நெல்லை சிவா சொல்வது...

வாழ்த்துக்கள், உஷா. கலக்குங்க!

 
At Monday, 26 June, 2006, Blogger siva gnanamji(#18100882083107547329) சொல்வது...

வாழ்த்துகிறேன்
கலக்குங்க

 
At Monday, 26 June, 2006, Blogger Unknown சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா.

 
At Monday, 26 June, 2006, Blogger ilavanji சொல்வது...

உஷா,

வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்! :)

 
At Monday, 26 June, 2006, Blogger இப்னு ஹம்துன் சொல்வது...

வாழ்த்துக்கள் உஷாஜி!
தொடர்ந்து கலக்குங்க!

 
At Monday, 26 June, 2006, Blogger Geetha Sambasivam சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா,
இம்முறை இரண்டாவது பரிசு பெற்ற நீங்கள் அடுத்த முறை முதல் பரிசு பெற வாழ்த்துக்கள். சிறப்பு ஆசிரியர் பதவியையும் செவ்வனே நிறைவேற்ற வாழ்த்துக்கள்.

 
At Monday, 26 June, 2006, Blogger மனதின் ஓசை சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா...

 
At Monday, 26 June, 2006, Blogger Dubukku சொல்வது...

வாழ்த்துக்கள் மேடம்!!!

 
At Monday, 26 June, 2006, Blogger நாமக்கல் சிபி சொல்வது...

சிறப்பு ஆசிரியரா! ஆண்டவா!
:))

ம்ம் கலக்குங்க மேடம்!

 
At Monday, 26 June, 2006, Blogger Premalatha சொல்வது...

வாழ்த்துக்கள்.:)

 
At Monday, 26 June, 2006, Blogger பத்மா அர்விந்த் சொல்வது...

congratulations Usha.

 
At Monday, 26 June, 2006, Blogger VSK சொல்வது...

வாழ்த்துகள், உஷா.ரா!

உஷாராக் கலக்குவீங்க, சிறப்பு ஆசிரியர் பணியையும்!

 
At Monday, 26 June, 2006, Blogger Boston Bala சொல்வது...

Vaazthukkal Usha

 
At Monday, 26 June, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

துளசி, குமரன் எண்ணம், சிவஞானம்ஜி, ஜிரா, தேன் துளி, பிரேமலதா, எஸ்.கே, இலவசகொத்தனார், நாமக்கல் சிபி, டுபுக்கு, கீதா சாம்பசிவம், மனதின் ஓசை, இப்னு ஹம்துன், இளவஞ்சி, தேவ், நெல்லை சிவா, ராசா, சிவராமன் கணேசன், கோவி கண்ணன், செல்வன் ... அனைவருக்கும் நன்றி

நாமக்கல்லாரே, அது என்ன கடவுளை கூப்பிடுவது ... மாட்டிகினீயான்னு சிரிக்கிறது, நல்லா இல்லே சொல்லிட்டேன் :-)))))))))

 
At Monday, 26 June, 2006, Blogger ரவியா சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா,

 
At Monday, 26 June, 2006, Blogger குமரன் (Kumaran) சொல்வது...

வாழ்த்துகள் உஷா.

 
At Monday, 26 June, 2006, Blogger இராம்/Raam சொல்வது...

வாழ்த்துக்கள் உஷாக்கா, தொடர்ந்து கலக்குங்க....! (ஆமா எதை)

 
At Monday, 26 June, 2006, Blogger நிலா சொல்வது...

/மனசாட்சி- என்னமோ பரிசு என்றால் அஞ்சு பத்து தருவார்கள். வாங்கிக் கொண்டு சந்தோஷமாய்
போகலாம் என்றால் பரிசு என்பதும் வெலவெலக்க வைக்கும் விஷயம் என்று ஆக்கிட்டாங்களே! சிறப்பு ஆசிரிய பதவியாம். தூக்கம் போச்சு! //
:-))

வாழ்த்துக்கள் உஷா

 
At Monday, 26 June, 2006, Blogger சிறில் அலெக்ஸ் சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா..
யான் பெற்ற இன்பம் நீஇங்களும் பெறுக.

 
At Monday, 26 June, 2006, Blogger  வல்லிசிம்ஹன் சொல்வது...

ஞாள்ள் படைப்புக்குக் கிடைத்த பரிசு. அதற்கும் உங்கள் புதுப் பதவிக்கும் நல் வாழ்த்துக்கள்.

 
At Monday, 26 June, 2006, Blogger வவ்வால் சொல்வது...

வாழ்த்துகள் ராமச்சந்திரன் உஷா! இன்னும் பல வெற்றிகள் அடைவீர்கள்.

 
At Monday, 26 June, 2006, Blogger Unknown சொல்வது...

அட இன்னிக்கு முடிவுநாள்கிறது மறந்தே போச்சு. வாழ்த்துக்கள் உஷாஜி. பரிசு உங்களுக்கு கிடைக்கும் என்று முன்னமே எனக்கு தெரியும். :))

 
At Monday, 26 June, 2006, Blogger Ravichandran Somu சொல்வது...

உஷா மேடம்,

தேன்கூட்டில் பார்த்துவிட்டு இப்பத்தான் கதையைப் படித்தேன். நல்லா கதை சொல்லிருக்கீங்க.

வாழ்த்துக்கள்!

 
At Tuesday, 27 June, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

ரவி, நிலா, வெங்கட்ரமணி, ரவியா (ஊர்ல இருக்கீங்களா ),வவ்வால். மனு, சிரில், ராம், குமரன் வாழ்த்துகளுக்கு
நன்றி

 
At Tuesday, 27 June, 2006, Blogger ╬அதி. அழகு╬ சொல்வது...

"நீங்க ஊரு சுத்தப் போனாலே எங்களையும் கூட்டிப் போவீங்க"ன்னு ஒருமுறை தமிழோவியத்தில் பின்னூட்டியிருந்தேன், நினைவிருக்கிறதா?

சிறப்புலேயும் எங்களைச் சேர்த்துக்கணும்.

வாழ்த்துகள்.

 
At Tuesday, 27 June, 2006, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

நன்றி அழகு, அப்படியே நவக்கிரக யாத்திரையும் (குஸ்கா முடிச்சிட்டீங்களா :-)

 

Post a Comment

<< இல்லம்