ஒரு சம்பவம்- முடிவு
கடைசியாய் அனைவரும் அங்குக் கொண்டு வைக்கப்பட்ட, இளம் சூடான நீர் நிரம்பிய கோப்பைகளில் எலுமிச்சை துண்டங்களை பிழிந்து கைக் கழுவும்பொழுது, சாப்பிட கணக்குக்கு பில் கொண்டு வந்து வைக்கப்பட்டது.
அதே நேரம், மேஜைக்கு அருகில் இரண்டு மனிதர்கள் வந்தார்கள். எங்களைப் பார்த்து லேசாய் புன்னகைக்க, நானும் ஒரு அரைகுறை புன்னகையை சிந்திவிட்டு, முகத்தை தாழ்த்திக் கொண்டு, ஐஸ்கிரீமை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
அந்த பெண்களின் சாதாரணமாய் ஏதோ கேட்டுக் கொண்டே, ரூபாய் நோட்டுக்களை பில் வைத்திருந்த அட்டையில் லாகவமாய் ஒருகை வைத்தது என் கண்ணில் நன்றாக பட்டது. அவர்களும் அங்கிருந்து நகர்ந்தனர். இவை அனைத்தும் சில நொடிகளில் நடந்து முடிந்தன.
பெரியவள், பேரர் என்று கையை அசைக்க, அவரும் பில்லும் பணமும் அடங்கிய அட்டையை எடுத்துக் கொண்டு நகர நாங்களும் கிளம்பினோம். ஒருவகையான அதிர்ச்சியில், இப்படியும் நடக்குமா என்ற எண்ணத்தில் மனதில் ஆயிரம் கேள்விகள் எழ முகத்தை சாதாரணமாய் வைத்துக் கொள்ள முயன்றேன்.
அந்த பெண்கள் பேச்சில், அவர்கள் ஏறத்தாழ வாரம் ஒரு முறைக்கு குறையாது நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிடுவார்கள் என்பதும் தெரிந்தது. அங்கு வந்த மனிதர்கள் யார், அவர்கள் ஏன் பில்லுக்கு பணம் தர வேண்டும், என்ன நடந்தது என்பதை புரிந்துக்கொள்ள அதிக மெனக்கெட வேண்டியதில்லை. இப்படிக்கூட நடக்குமா என்ற அங்கலாய்ப்பும், கோபமும், எரிச்சலும் மட்டுமே மிஞ்சியது. இந்த கதையை சொந்தபந்தங்களிடம் சொல்லும்பொழுது, அனைவரும் இதையேதான் சொன்னார்கள்.
கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு ஓரளவு நல்ல சம்பளம் தர வேண்டும். மேல் மட்ட அதிகாரிகளுக்கு எவ்வளவு தந்தாலும், அதிகார போதையும், நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற இறுமாப்பும், லக்சரி வாழ்க்கையில் காணும் சுவையும், சுகங்களும் அவர்களை
ஊழல் செய்ய வைக்கிறது. இன்று நாம் செய்யும் செயல்கள், செலவுகள், பயணங்கள் அனைத்திலும் கணிணியின் தொடர்ப்பு உண்டு. ஆக, இவைகளைக் கண்டுப்பிடிப்பது ஒன்றும் கடினமான வேலையில்லை. சட்டங்களை கடுமையாக்கி, தண்டனைகளை நடைமுறைப்
படுத்த வேண்டும்.
(முற்றும்)
16 பின்னூட்டங்கள்:
இந்த ஸ்டார் ஓட்டல்ல எப்படித்தான் அடிக்கடி சாப்புடுறாங்களோ...........ஒவ்வொரு எடத்துல நல்லாருக்கு. ஒவ்வொரு எடத்துல சுமாராயிருக்கு. இவ்வளவுதாங்க tax deducted at sourceன்னு வாங்குற நான் சொல்ல முடியும்.
ஜிரா, சென்னையில் ஜி.ஆர்.டி என்ற மூன்று நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டுப்பாருங்கள். சூப்பர் சுவை.ஒரு வேளை சொந்த காசில் சாப்பிட்டதால் சுவையாய் இருந்திருக்குமோ :-)
ராகவன்,
'ஹோட்டல் ரெஸிடன்ஸி' தி.நகர்லேயும் சாப்பாடு அருமையா இருக்கு.
உஷா,
அந்தப் பொண்கள் அப்பாவுக்குக் கொடுக்கற லஞ்சமா இது?
வரவர சந்தேகம் எதுக்கெடுத்தாலும் கேக்கறேன்னு கோச்சுக்காதீங்க. பூடகமாச் சொன்னாப் புரியமாட்டேங்குது.
என் தலைக்குதான் சுகமில்லாமப்போச்சோ?
பாவம்பா
நிம்மதியா சாப்பிட விடல்லே
துளசி, பார்த்தவைகளை சொல்லி விட்டேன். மற்றவைகள் எல்லாம் என் அனுமானங்களே! அந்த இரண்டு பேர்கள் வந்து பேசியது' பிசினஸ் லைக்"காய் இருந்தது. சைலண்டாய் பணம் வைக்கப்பட்டது. அந்த பெண்களும் கண்டும் காணாமல் இருந்து
விட்டார்கள். இப்ப நீங்களே சொல்லுங்க
ம.ஓ ???? :-))
சிவஞானம்ஜி, சாப்பாடும் நிம்மதியாய் சாப்பிடவில்லை, தின்னும் ஜீரணம் ஆகவில்லை:-)
ஆஹா! இது வெல் அரேன்ஞ்டு, ப்ரீ ஆர்கனைஸ்டு "க்ளையண்ட்" என்டர்டெயின்மெண்ட் வகை லஞ்சம் ஆச்சே!
//பார்த்தவைகளை சொல்லி விட்டேன். மற்றவைகள் எல்லாம் என் அனுமானங்களே! //
சறுக்கிவிடீர்களே உஷா! நீங்கள் சந்தேகப்படும் பட்சத்தில் அவர்களிடமே கேட்டிருக்கலாம். கேட்பது தர்மசங்கடமானதுதான். இல்லை என்று சொல்லவில்லை.இருந்தாலும் பொதுவில் குற்றச்சாட்டை வைப்பதற்குமுன்.....
மற்றபடி இலஞ்ச விஷயத்தில் மேல்மட்டத்தில் இது போல் நடப்பது சகஜம். நேரடியாக பணமாக இல்லாமல் பொருளாகக் கொடுப்பதும்,இது போல் அதிகாரவர்க்கத்தின் அன்றாட செலவுகளுக்கு Bill Settlement செய்வதும் நாகரீக வகை இலஞ்சம்.
இனிய உஷாஜி,
இந்த மேட்டர் ஜுஜுபி.
கல்யாணத்துல ஒருசில செலவுங்க ஏத்துக்கறவரைக்கும் மேட்ட்ருங்க போவும்.
க்ளப்புக்குப் போயி ப்ராக்ஸிகிட்ட சீட்டாடி வேணுமின்னே தோத்துப்போயி காசு குடுக்ற மேட்டரெல்லாமும் இருக்குங்களே.
அதாவது ப்ராக்ஸிகிட்ட தோக்ற காசு போவவேண்டிய எடத்துக்கு லஞ்சமா அனுப்புரார்ன்னு அர்த்தம்
அன்புடன்
ஆசாத்
இலஞ்சம் எத்தனை இலஞ்சமடி !!
உஷா
மா.சிவகுமாரின் பதிவை ஒட்டி என்று சொன்னபோதே இலஞ்சம் என்றூ ஊகித்து விட்டேன். அதனால்தான் pre arranged என்று சொன்னேன். அதையும் மீறி உயர் அதிகாரிகள் வீட்டு பெண்களானால் சில நடுத்தர வீட்டு ஆண்/பெண்கள் கொஞ்சம் சபல புத்தியை தூண்டிவிட்டு செல்வதும் நடைமுறையில் காணக்கிடைக்கும்:)
யக்கோவ்,
இப்பிடிக் கவுத்தீட்டீங்களே! கல்வெட்டு சொல்றாப்புல அனு'மானத்தை' மீறி ஒரு சின்ன கன்பர்மேஷன் செஞ்சிருக்கலாம்.
புனைவாயிருந்திருந்தா கடேசி வரிகளை கொஞ்சம் நகாசு வேலை பண்ணினா அருமையா வந்திருக்கும்.
ஏதோ எமக்குத் தோன்றியது...
இதுக்குத்தான் இம்புட்டு பில்ட்-அப்பா ;-) சப்புனு முடிந்து விட்டது :-)
(i.e. very much along expected lines; I was assuming the ending is 'something' else)
கல்வெட்டு, சறுக்கிவிட்டேனோ அல்லது ஸ்டெடியாய் நிற்கிறேனோ :-)
இது உண்மை சம்பவம், நான் பார்வையாளினி அவ்வளவே. இது குற்றசாட்டும் இல்லை. நடந்தது என் அனுமானம் என்றாலும் உண்மைதானே அது?
குசும்பன், பாபா! நான் என்ன கதையா விடுகிறேன்? உண்மை சுவாரசியமாய் இருக்குமே தவிர ஏகப்பட்ட டிவிஸ்டுகளுடன் முடிக்க இது ராஜேஷ்குமாரின் து. கதையா என்ன?
ஆசாத்ஜி, கல்யாணம் என்ன வருடா வருடம் வெட்டிங் டே கூட கொண்டாடுகிற பிரக்ஸ்பதிகள்
உண்டு. ஆனால் இதற்கெல்லாம் பரிசுகளை கொண்டு வந்துக் கொட்டுபவர்கள் மனநிலமையை அவர்கள் எண்ணிப் பார்த்தால், வாங்க கை கூசாது? இதுல நடுவுல கமிஷன் அடிக்கிற ஆளுங்க கதை வேற!
ஊரு, பேரூ சொல்ல மாட்டேன். கல்யாணத்துக்கு நூத்தி ஓரு பவுன் வைக்க சொன்னா, நடுவுல இருக்கிற
ஆசாமிகள் நூத்து ஒரு கிராம் மொய் வெச்சிட்டு மிச்சத்த சுருட்டிட்டாங்க. என்ன ஏது என்று விசாரித்தா, கைய காட்டின ஆளு எப்பவோ வேலைய விட்டுட்டுப் போயிட்டாரூ. இதுல நதிமூலம், ரிஷிமூலம் பார்க்க முடியுமா?
தேன் துளி/பத்மா! மத்தியவர்க்கத்தின் வழக்கமான புலியைப் பார்த்து பூனை சூடுப்போட்டுக் கொண்ட கதை.
நீங்க கண்டுப்பிடிச்சீட்டீங்கன்னு எனக்கு புரிஞ்சிது. அதுக்குதான் சிவகுமாரின் பதிவுக்கு லிங்க் கொடுத்திருந்தேன்.
ஸ்ரீதரன், மணியன் படிக்கும்பொழுது வயிறு எரியலை :-) இவனுங்களை எல்லாம் ......பிறகு ரோடு
சரியில்லை, பாலம் இடியுது என்றால் காண்டிராக்டர் என்ன செய்வார் பாவம்!
உஷா அவர்களே,
உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நேற்றைக்கு ஒரு கல்யாணத்துக்காகப் பேருந்தில் போகும் போது வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் படித்துக் கொண்டே போனேன். இன்று அதிகாலையில் திருமணத்துக்காக சிதம்பரம் அருகில் ஒரு கிராமத்துக்குப் பயணம். படித்ததையும், பார்த்ததையும் ஒப்பிட்டு அத்தகைய கிராம மக்களுக்குச் சேவை செய்வதற்காக நியமிக்கப்பட்ட அரசு அதிகாரிகள் ஆடம்பர வீடுகளிலும், ஐந்து நட்சத்திர சாப்பாடுகளிலும் கொள்ளை அடிப்பவர்களை கொடுந்தண்டனைக்கு ஆளாக்க வேண்டும் என்ற வெறி எழுகிறது. மனசாட்சி இல்லாத பாவிகள்! கேட்டால் இந்திய போன்ற நாடுகளில் வறுமை இருக்கத்தான் இருக்கும், நாம் என்ன செய்ய முடியும் என்று சப்பைக்கட்டுக் கட்டுவார்கள்.
நீங்கள் சொல்லா விட்டாலும், இதை உறுதிப்படுத்தாவிட்டாலும், தில்லியில் மட்டுமே இது மாதிரியான மானம் கெட்ட பிறவிகள் வாழ முடியும் என்று தோன்றுகிறது. அதிகாரம் குவிந்து அதற்கான பொறுப்பு இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு அசிங்கமான உதாரணம் தில்லி மாநகரம்.
அன்புடன்,
மா சிவகுமார்
சிவகுமார், தில்லி என்ற உங்கள் கணிப்பு தவறு. துபாயில் இருந்து டில்லி சென்று சென்னை செல்வதற்கு இரண்டு, மூன்று மடங்கு பணமும் செலவாகும்.
மேலும் ஊழல் அரசு அதிகாரிகள் எல்லாம் ஓரே வர்க்கம். இதில் வடக்கு என்ன தெற்கு என்ன :-))))
நானும் தில்லி என்றுதான் நினைத்தேன்!!!!
தலைநகரில் வசித்தபொழுது இது மாதிரியான அநுபவங்கள் அதிகம். நான் அநுமானித்த/அநுபவித்த முடிவு பில் காசைச் செலுத்த தேவையில்லைதான். ஏனெனில், காரோட்டி உணவக மேலாளரிடம் அதிகாரியின் பூர்வாங்கத்தைச் சொல்லியிருப்பார்.
Post a Comment
<< இல்லம்