Thursday, July 13, 2006

அன்புள்ள மாயா அவர்கள் பார்வைக்கு!

மாயா உங்களுக்கு ஒரு வேண்டுக்கோள், நீங்கள் இட்ட பின்னோட்டம் என்னை நானே போற்றி பாராட்டிக் கொண்டு இட்டது என்ற கருத்து உருவாகிவிட்டது. இத்தனை நாட்கள் நேர்மையானவள் என்று பெயர் வாங்கிய எனக்கு இந்த அவமானம் வேண்டுமா? தயவு செய்து நீங்கள் யார் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

49 பின்னூட்டங்கள்:

At Thursday, 13 July, 2006, சொல்வது...

இது சம்பந்தமாக உங்களது முந்தையப் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்வதன் மூலம் என் சந்தேகம் இப்போது இரட்டிப்பாகுகிறது....

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

மோதிலால் நேரு ஒரு முறை ஜவஹர்லால் நேரு செலவு அதிகம் செய்வதாக எண்ணி கணக்கு கேட்டு கடிதம் எழுதினாராம்.

ஜவஹர்லால் நேருவின் பதில்

என் மீது நம்பிக்கை இருந்தால் கணக்கு கேட்காதீர்கள், என் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் நான் கொடுக்கும் கணக்கில் மட்டும் எப்படி நம்பிக்கை இருக்கும் என்று பதில் அளித்தாராம்.

ஏனோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

[*** இத்தனை நாட்கள் நேர்மையானவள் என்று பெயர் வாங்கிய எனக்கு இந்த அவமானம் வேண்டுமா? ***]

யார் சொன்னது.

நிறைய பேர் இதுபோல் கிளம்பி இருக்கிறார்கள்.

ஒரு பதிவு போடவேண்டியது.

வேறொரு பெயரில் வந்து ஓராயிரம் பின்னூட்டங்களை பதிவை புகழ்ந்து இட்டுக்கொள்வது

என்ன பொழப்போ.......

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

ST, சும்மாவா சொன்னார்கள் நினைப்பு பொழப்ப கெடுக்குது என்று! சொந்த பெயரில் தைரியமாய் கருத்தோ அல்லது எதிர்வினை
செயவதையோ நேர்மையான செயல் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.

குமரன் எண்ணம் கதை நல்லா இருக்கு. நேர்மை மட்டுமல்ல உண்மையை நீரூபிப்பது என்பதே மிக கடினமான காரியம். இதற்கு முன்பு
என் பதிவில் கூட மாயா என்ற பெயரைப் பார்த்ததாய் ஞாபகமில்லை. காத்திருக்கிறேன். நான் அவளில்லை என்பதற்கு ஏதாவது ப்ரூப் கிடைக்குமா என்று!

லக்கி லுக், குமரனுக்கு எழுதியதை ஒருமுறை படித்துவிடுங்கள்,

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

உஷா...என்ன ஆச்சு...எல்லாவற்றையும் மிக லைட்டாக எடுத்துக்கொள்பவராயிற்றே நீர்...

விட்டுத்தள்ளுங்கப்பா...நீங்க யாருக்கும் உங்களை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை...நீங்கள் நீங்கள்தான்...

லக்கிலூக் பின்னூட்டத்தை வெளியிடாததும் / வெளியிடுவது உங்கள் விருப்பம்தான்..ஆனால் தரமான சொற்கள் மட்டும் இருக்கும் பட்சத்தில் அதை வெளியிட்டுவிடுங்களேன்...புரிந்துகொள்வார் என்று நினைக்கிறேன்...

இதில் எதுவும் அவமானம் இல்லை என்று கருதுகிறேன்...

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

உங்கள் கடந்த இரு பதிவுகள் நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறீர்கள் எனக் காட்டுகின்றன. நம் நேர்மைக்கு நம் மனசாட்சியே அத்தாட்சி. பொது இடத்தில் நான்குபேர் நான்குவிதமாகத்தான் சொல்வார்கள், டேக் இட் ஈஸி, மேம்!

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

அந்த மாயா profile பார்த்தேன்.. அது 2004 லில் தொடங்கப்பட்ட ப்லாக்தளம்..

உஷாவை வேறு பெயரில் பின்னூட்டம் இட்டுக்கொள்கிறார் என்பதும், அவருக்கு சாதி முலாம் பூச முயல்வதும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது...
எனக்கு தெரிந்த வரை அவர் நேர்மையாகத்தான் இருந்து இருக்கிறார்..அவருடைய கருத்துக்களில் சாதிய கருத்துக்களையும் பார்த்தது இல்லை...என்னுடைய குறுகிய கால அனுபவத்தில் நான் மதிப்பளிக்கும் ஒரு சில பதிவர்களில் இவர் முக்கியமானவர்..அதே போல்தான் தமிழினி முத்துவும் குழலியும்..அவர்கள் மேலும் எனக்கு நல்ல மரியாதை உண்டு...

அதே சமயம், போன பதிவையும் அதன் பின்னூட்டங்களையும் பார்த்த பொழுது அது உஷா பதிவு போலவே தெரியவில்லை..தனிப்பட்ட முறையில் பதிக்கப்படும்பொழுது நிர்வகிக்கும் திறமைகள் குறைந்து விடுமோ என நினைத்தேன்...இன்னும் நல்ல முறையில் அவர் அந்தப்பதிவை கொண்டு சென்று இருக்கலாம் என தோன்றியது...

எது எப்படியோ, அவர் கூற வந்தது திசை மாறி எங்கேயோ சென்று கொன்டு இருக்கிறது... அவருக்கு என் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. நான் அவரை முழுவதும் நம்புகிறேன்..நிச்சயமாக சொந்தப்பெயரில் அவர் பின்னூட்டம் பொட்டுக்கொள்ள்பவர் அவர் அல்ல. இதுவே என் கருத்து.

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

உஷா!

மாயா என்ற பெயரை இதற்கு முன் பார்த்ததில்லை... அவர் உங்கள் சாதி சார்பற்ற சிந்தனைகளை மெய்ப்பிப்பதற்காக உங்களது பழைய பதிவு எதிலிருந்தோ என்றோ நீங்கள் சொன்ன சொற்களைத் தேடி எடுத்து புதியதாக ப்ளாக்கர் அக்கவுண்ட் தொடங்கி பின்னூட்டம் இடுகிறார் என்றால் கொஞ்சம் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது....

மற்றபடி குமரன் எண்ணம் சொன்ன கதை நன்றாக இருந்தது.... ஏனோ இதுபோன்ற கதைகள் நடைமுறைக்கு ஒத்துவர மாட்டேன் என்கிறது.....

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

மணியன், நன்மனம், செந்தமிழ் ரவி! நேற்றிலிருந்து ஆச்சரியத்தில் மூழ்கிப் போயிருக்கிறேன். எத்தனை விதமான மனிதர்கள்.
மனமாச்சரியங்கள் (ஸ்பெல்லிங்க் சரியா?)உணர்வுகளை, எழுத்துக்கள் சுலபமாய் காட்டிக்கொடுக்கின்றன. எழுத்தாளி/கவிதாயினி
க்கு இதைவிட வேறு தீனி வேண்டுமா? என்றாவது ஒருநாள் படைப்பில் இவைகள் வெளி வரும்.மணியன் உணர்ச்சிவசப்படவில்லை,ஆனால் கொஞ்சம் எரிச்சல் வந்தது :-)
எல்லாவற்றையும் கொஞ்சம் மூட்டைக்கட்டிவிட்டு, நிதானமாய் கொஞ்சம் உள்மன பயணம் செய்ய வேண்டும். நம்மைக்குறித்து
நாமே நினைக்கும் எண்ணங்கள், இமேஜ் இருப்பதாய் சொல்லப்பட்டவைகளை (இந்த இடத்தில் இமேஜ்ஜை தக்க வைத்துக்
கொள்ள படாத பாடுபடும் திருப்பதி அஜித் நினைவில் வருகிறார்), நன்மனம் சொன்னவைகள் எல்லாவற்றையும் நினைத்துப்
பார்க்க வேண்டும்.

நன்மனம், சந்தேகத்துக்கு மருந்து கிடையாது ;-)

லக்கி, சந்தேகம் என்று வந்துவிட்டால், அதை தீர்ப்பது சம்மந்தப்பட்டவரால் முடியாத காரணம், தற்சமயம் சொல்ல எதுவுமில்லை.

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

மாயா என்பவர் எனக்குப் பலமுறை பின்னூட்டம் இட்டிருக்கிறார். குறிப்பாக, சிதம்பர ரகசியம் தொடட் பற்றிய விமர்சனத்தில் இருமுறை பின்னூட்டம் இட்டிருக்கிறார்.

அதிலும் ஒருமுறை சிதம்பர ரகசியம் தற்போது செல்வது பற்றி அவர் நகைச்சுவையாக இட்டிருந்த பின்னூட்டம் என்னை மிகவும் கவர, அந்தப்பின்னூட்டத்தைத் தனிப்பதிவாகவும் இட்டு, சமீபத்தில் தமிழோவியத்தில் என்னைக்கவர்ந்த நகைச்சுவைக் கட்டுரைகளிலும் சுட்டி கொடுத்திருந்தேன். சோதித்துப் பார்த்துவிட்டேன், இரண்டும் ஒரே ப்ரொஃபைல் எண்தான்.

எப்போதாவது பின்னூட்டங்களில் மட்டும் தென்படுபவர் மாயா. இப்போது இதற்காக மீண்டும் அந்தப்பின்னூட்டத்தைத் தேடிப்பிடித்து மீண்டும் சிரித்தேன்.

இதோ சுட்டி:

http://penathal.blogspot.com/2005/12/01-dec-05_01.html#114505159988262640

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

//நன்மனம் சொன்னவைகள் எல்லாவற்றையும் நினைத்துப்
பார்க்க வேண்டும்.//

????

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

மனதின் ஓசை சரியா ;-)) இது இரண்டாவது முறை இல்லையா?

சுரேஷ், ... ஏதோ சொல்ல தோணுகிறது, ஆனால் வேண்டாம் என்று அறிவு சொல்கிறது :-)

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

உங்களுக்கு என்ன சொல்லத் தோணுதுன்னு எனக்கு கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு;

அதுக்கு ஒரே பதில்தான்!

ஆளை விடுங்க சாமி!

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

/மனதின் ஓசை சரியா ;-)) இது இரண்டாவது முறை இல்லையா?//

ஆமாம்.. :-) அப்படித்தான் இருக்கும் என நினைத்தேன்.. (ஒரு வேளை அவர் தனி மடல் எதுவும் அனுப்பி அதனை குறிப்பிடுகிறீர்களோ என நினைத்து கெட்டு வைத்தேன்...)

//சுரேஷ், ... ஏதோ சொல்ல தோணுகிறது, ஆனால் வேண்டாம் என்று அறிவு சொல்கிறது :-) //
//எல்லாவற்றையும் கொஞ்சம் மூட்டைக்கட்டிவிட்டு, நிதானமாய் கொஞ்சம் உள்மன பயணம் செய்ய வேண்டும்.//

அதுவே சரி.. ஒரு சிறிய இடைவெளி விட்டு பிறகு வாருங்கள்..இதனை இத்தோடு விட்டு விடுங்கள்..மேலும் இதனை இழுக்க வேண்டாம்..
நீங்கள் சொல்லும் பதிலால் பெரிதும் யாரும் மாறப்போவது இல்லை.. இதுவரை நீங்கள் நடந்து கொண்ட விதமும் இனி நடந்து கொள்ளப்போகும் விதமும் தான் உங்கள் பற்ற்ய மதிப்பீடை அடுத்தவருக்கு கொடுக்கும்...

//தனிப்பட்ட முறையில் பதிக்கப்படும்பொழுது//

தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படும்பொழுது என படிக்கவும்...

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

///ஏதோ சொல்ல தோணுகிறது, ஆனால் வேண்டாம் என்று அறிவு சொல்கிறது :-) ///

பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. இதுக்கு அர்த்தம் என்னாக்கா? நான் ரொம்ப சிறியோன் என்பதல் இதன் அர்த்தம் என்னவென்று விளங்கவில்லை.... கொஞ்சம் சொல்வீர்களா?

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

//இதுக்கு அர்த்தம் என்னாக்கா? நான் ரொம்ப சிறியோன் என்பதால்//

லக்கி,
சமாதானக் கொடி மாதிரி தெரியுது :-))))

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

This comment has been removed by the author.

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

உஷா, கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே அதுவாய் விடவோ!

இன்னும் ரொம்பவும் எளிமையாச் சொன்னா...."சும்மா இரு சொல்லற".

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

என்னாது - சமாதானமா - நமக்கா...அதெப்படி...நாங்க எல்லாம் சொன்னது சொன்னது தான்...

அப்படி எல்லாம் இப்போ லக்கியால சொல்ல முடியாது...அதனால நான் சொல்லிப்புட்டேன்...

ஹி ஹி

அது சரி...இவ்வளோ பிரச்சினைக்கும் காரணமான அந்த ஆயா யாருங்க...

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

வழிப்போக்கன் சில பின்னுட்டங்கள் கமெண்ட் மாடரேஷன் பாக்சில் இருந்தது. யார் யாருடையது நிறுத்தியிருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். உங்களுடையது எதையும் நிறுத்தவில்லை. போலி டோண்டு பெயரில் ஒன்று உள்ளது. அதை படித்துப் பார்க்க விருப்பமில்லாததால் விட்டுவிட்டேன்.

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

/////லக்கி,
சமாதானக் கொடி மாதிரி தெரியுது//////

நண்பரே ஸ்டோன்வெட்டு!

அக்கா ரொம்ப மன உளைச்சலில் இருப்பதால் கொஞ்சம் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறேன்.... என்னைப் பொறுத்தவரை அவர் இந்தப் பதிவு போட்டதே சும்மா பரபரப்பான ஒரு சீப் பப்ளிசிட்டிக்குத் தான் என்பது என் எண்ணம்.....

அவங்க ஏன் நான் முந்தைய பதிவில் இட்ட ஒரு பின்னூட்டத்தை மட்டுறுத்தி இருக்கிறார் என்று கேட்டு அதற்கு மட்டும் சரியான பதிலை வாங்கிக் கொடுங்கள் பார்ப்போம்.....

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

உஷா,
மாயாதான் உஷான்னு ஒருத்தர் சொன்னா, அதுக்காக ஒரு பதிவா?!! சொல்றவங்களுக்கு அதுல ஏதோ ஒரு திருப்தி கிடைக்குதேன்னு விட்டிருக்கலாம்..
போன பதிவும் சரி, இந்தப் பதிவும் சரி.. கொஞ்சம் அவசரப் பட்டுட்டீங்களோன்னு தோணுது..

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

////மாயாதான் உஷான்னு ஒருத்தர் சொன்னா, அதுக்காக ஒரு பதிவா?!! சொல்றவங்களுக்கு அதுல ஏதோ ஒரு திருப்தி கிடைக்குதேன்னு விட்டிருக்கலாம்..
போன பதிவும் சரி, இந்தப் பதிவும் சரி.. கொஞ்சம் அவசரப் பட்டுட்டீங்களோன்னு தோணுது.. ////

அதுமாதிரி யாராவது சொல்லி இருந்தா பரவாயில்லையே? யார் சொன்னாங்கன்னு காமிக்கச் சொல்லுங்க பார்ப்போம்....

இந்தப் பதிவு ஒரு Publicity Stunt என்பது என் தாழ்மையான எண்ணம்....

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள்' என கலைஞர் ஒரு வசனம் சொல்லுவார் அடிக்கடி.

அதுபோல புற்றீசல் போலக் கிளம்பிய சமீபத்திய வலைப்பதிவாளர்கள் எல்லாம்,[என்னையும் சேர்த்துதான் சொல்லுகிறேன்] 4 - 5 ஆண்டுகள்ளய் நேர்மையான, தரமான பதிவுகளைப் போட்டுவரும் சகவலைப் பதிவாளர்களைத் தரக்குறைவாக சீப் பப்ளிசிடி என்றெல்லாம் இகழ்வது [இது நான் செய்ய மாட்டேன்] வருந்தத்தக்கது!

ரா.உஷா, என்ன ஆச்சு உங்களுக்கு!
சமீப காலமாக கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சிவசப்படுவது போலத் தெரிகிறதே!
ஜி.ரா. சொல்வதைக் கேளுங்கள்!
லைட்டா எடுத்துகோங்க!

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

//அதுமாதிரி யாராவது சொல்லி இருந்தா பரவாயில்லையே? யார் சொன்னாங்கன்னு காமிக்கச் சொல்லுங்க பார்ப்போம்....
//

//அந்த "மாயா" யார் என்ற சந்தேகம் எங்களுக்கு எழாமல் இல்லை... ஒருவேளை அது நானாகக் கூட இருக்கலாம்.... :-)))) இல்லையென்றால் நீங்களே கூட இருக்கலாம்.... //

லக்கிலுக்,
சும்மா பொத்தாம் பொதுவா பதிவு படிச்சிட்டு கருத்து சொல்லவில்லை என்பதற்காக மட்டுமே இந்த வரியைக் கண்டு பிடித்துக் கொடுத்தேன்.. மத்தபடி நீங்களாச்சு, உஷாவாச்சு, மாயாவாச்சு..

லக்கியும் முத்துவும் ஒரே ஆள் தான்னு ஒரு அனானி சொன்னதுக்கு நீங்க பதிவு போட்டிருந்தாலும் இதே தான் சொல்லி இருப்பேன்.

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

வணக்கம் பொன்ஸ்!

"இருக்கலாம்" என்பதற்கும் "நீங்கள்தான்" என்று சொல்வதற்கும் இருக்கும் வித்தியாசம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.... அதில் "நானாகக் கூட இருக்கலாம்" என்று கூறி இருப்பதிலேயே அது வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற தொனி இருப்பதை வசதியாக மறந்தது ஏனோ? மற்றபடி "நான் தான் முத்து" என்று ஒரு அனானி சொன்னதை கேட்டு நானும் சரி, முத்துவும் சரி சிரித்துக் கொண்டோம்... அவ்வளவுதான்.... தனிப்பதிவு எல்லாம் போட்டு பரபரப்பு ஏற்படுத்தவில்லை....

ஹலோ எஸ்.கே.!

நாகரிக மன்னா.... உங்கள் தரம் என்னவென்பது ஏற்கனவே தெரியும்... தயவுசெய்து நாகரிகம் பற்றியெல்லாம் பேச வேண்டாம்.... மாற்று மதத்தினரை எந்த வார்த்தை கொண்டு தாக்குவீர்கள் என்பதெல்லாம் ஏற்கனவே எல்லோருக்கும் தெரியும்.... எனவே... Please....

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

Ushaji, When your conscience is clear and clean, you need no other
proof, nor a certificate from others .Just keep away from blogs for a day or two.Dont waste your time and energy is reading Vidathu Karuppu and similar blogs.There is
more to life and world than the expressions of some perverted minds and their supporters. Realx and be cool.Perhaps you can plan for the next trip :)

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

லக்கி,
//"இருக்கலாம்" என்பதற்கும் "நீங்கள்தான்" என்று சொல்வதற்கும் இருக்கும் வித்தியாசம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.... அதில் "நானாகக் கூட இருக்கலாம்" என்று கூறி இருப்பதிலேயே அது வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற தொனி இருப்பதை வசதியாக மறந்தது ஏனோ? //
ஏங்க உங்களுக்கு இன்னிக்கி?!!! ஒரு பின்னூட்டம் போட வந்தா என்னைப் பிடிச்சி வார்றீங்க.. :)

// மற்றபடி "நான் தான் முத்து" என்று ஒரு அனானி சொன்னதை கேட்டு நானும் சரி, முத்துவும் சரி சிரித்துக் கொண்டோம்... அவ்வளவுதான்.... தனிப்பதிவு எல்லாம் போட்டு பரபரப்பு ஏற்படுத்தவில்லை....//
இப்போ நான் மட்டும் வேற ஏதாவது சொல்லிட்டேனா?

சரி, உங்க திருப்திக்காக என்னோட கமென்டைக் கொஞ்சம் மாத்தறேங்க:

// உஷா,
உஷாவே மாயாவா இருக்கலாம்னு ஒருத்தர் சொன்னா, அதுக்காக ஒரு பதிவா?!! சொல்றவங்களுக்கு அதுல ஏதோ ஒரு திருப்தி கிடைக்குதேன்னு விட்டிருக்கலாம்.. //

சந்தோஷமா? ஸ்ஸ்.. அப்பா.. நெசமாவே கண்ணைக் கட்டுது..

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

உண்மையைச் சொல்லணும்னா, எனக்குக் கூட உஷாதான் பொன்ஸோ என்ற சந்தேகம் இருந்தது. அதை பெரிசா நினைக்காதீங்க, எதிலும் குற்றம் கண்டுபிடிக்கும் டீச்சர் வீட்டு பழக்கதோஷம், அது மட்டுமல்லாமல் சர்வர் மெயின்பிரேம் எல்லாம் ஒழுங்கா இருப்பதற்காக கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி பக்ஸ் தேடுவதால் வந்த வினையும் கூட.

வலைபதிவு உலகத்தில் இவர் அவராயிருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு நிறைய பேரின் மீது உண்டு( என் மீது எத்தனை பேருக்கோ யாருக்குத் தெரியும். ) சிலரை கேட்டிருக்கிறேன். அதில் சில சமயம் பதில் வரும் சில சமயம் பதில் வராது. ஆனால் அனைத்தும் தனிமடல்களில் அதனால் நான் வழிந்தது பெரும்பாலும் தெரியாது.

இதையெல்லாம் ஏன் இங்க புலம்புறேன்னுதான் தெரியலை. :-(

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

உஷாவின் தவிப்பு புரிகின்றது. மற்றவர்கள சொல்வது போல எளிதாக எடுத்து கொள்வது என்பது சரியாக வராது. அவதூறுகள் மனதை பாதிக்கும் வலிமை கொண்டவை. உஷாவின் நேர்மையை நான் நம்புகிறேன்.

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

oru vishayam miss aaydussi, athu, neenga pons illaingiRathu.

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

நண்பர்களே,
முதல் கமெண்ட் வந்தப்பொழுது நான் கண்டுக் கொள்ள்வில்லை. ஏதோ அவருக்கு தோன்றினால் நாம் என்ன ப்ரூப் சொடுக்க முடியும் என்ற எண்ணத்தில் பேசாமல் இருந்துவிட்டேன். அடுத்து பயந்து ஓடுகிறேன், வேஷம் கலைந்துவிட்டது என்று தாக்குதல்.
அதற்கு பதில் சொல்லாமல், மாயாவிற்கு வேண்டுகோள் விடுத்தேன்.உண்மையில் என்ன பதில் சொல்வது? நானும் மாயா
என்ற நபரும் வீடு வீடாய் போய் நாங்கள் வேறு வேறு என்று சொன்னால் உண்மை நீரூபிக்கப்படுமா?
இணையம் என்ற மாயசூழலில் யார் என்ன என்று நீரூபிப்பது மிக கடினம். அந்த மாயா இதற்கு முன்பு எனக்கு பின்னூட்டம் போட்டதாய் நினைவில்லை. அதிகம் யாருக்கும் போட்டும் நான் பார்த்ததில்லை.
ஆக, நான் எப்படி பட்டவள் என்ற உங்கள் கணிப்பை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எழுதுவது அபத்தம், முதுகுசொறிதல் என்ற எண்ணம் ஏற்பட்டால் "என்னுடைய வலைப்பதிவைப் படிக்காதீர்கள்", "எனக்கு உங்களிடமிருந்து எந்த பின்னுட்டமும் வேண்டாம்"
சில விஷயங்கள் நமக்கு விருப்பமில்லாவிட்டாலும், செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படும் சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது.
இங்கு பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி

எனக்கு என்னிடம் ஒருகாசு இருக்கு யாருக்கு வேண்டும்_ என்ற குருவி கதை விரைவில் போடுகிறேன்.

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

/////"என்னுடைய வலைப்பதிவைப் படிக்காதீர்கள்", "எனக்கு உங்களிடமிருந்து எந்த பின்னுட்டமும் வேண்டாம்"////

கடைசியாக இதைத்தான் உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன்....

"தமிழ் மணத்தின் போக்கு பிடிக்கவில்லையென்றால் தமிழ்மணத்தில் ஏன் உங்கள் வலைப்பூவை இணைத்திருக்கிறீர்கள்.... நீக்கி விட்டுப் போவது தானே? எதற்கு தமிழ்மண நிர்வாகிகளுக்கு என்று ஒரு தனி பதிவு?" - இந்தக் கேள்விக்கு உங்களால் விடை அளிக்க முடியுமா?

அதுபோல தான் இருக்கிறது நீங்கள் சொல்வதும்.... ஒரு பிரச்சினையை எவ்வளவு அழகாக திசை திருப்ப முடியுமோ அவ்வளவு அழகாக திருப்பி இருக்கிறீர்கள்....

முகமூடி என்னைப் பற்றி இட்ட கமெண்ட் (அதாவது என் வீட்டுப் பெண்களைப் பற்றி அசிங்கமாக பதிவு போடுவேன் என்று) ஒன்றை நீங்கள் வரவேற்றதுக்கு... அது தான் உங்கள் உண்மையான நிலைப்பாடா என்று கேட்டிருந்தேன்.... அதற்கு பதில் சொல்ல அஞ்சியே இந்தப் பிரச்சினையை "மாயா" பக்கம் திருப்பி இருக்கிறீர்கள்.... யார் அந்த மாயாவோ? யாம் அறியேன் பராபரமே.....

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

http://gganesh.blogspot.com/2005/11/i-am-software-engineer.html

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

அன்புள்ள உஷா அவர்களுக்கு ,

முதலில் என்னால் ஆன குழப்பங்களுக்கு என்னுடைய வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் உங்களுக்கு இட்ட பின்னுட்டத்திலேயே சொல்லியெருக்கிறேன் ,,நான் வலைப்பதிவாளன் அல்ல..எப்ப்போவது பின்னுட்டம் இடுவதுண்டு..இதை பினாத்தல் சுரேஷ் சொல்லியிருந்தார்.ஆம் அவருடைய சிதம்பர ரகசியம் பற்றிய பதிவில் பின்னுட்டம் இட்டது நாந்தான்.அது மட்டுமிலாமல் ராகவன்,டி.பி.ர் ஜோசப் அவர்கள்,கணேஷ்,தங்கமணி,சிவா(கீதம் சங்கீதம்),டோண்டு ராகவன் அவர்கள்..போன்றோர்கள் பதிவிலும் பின்னூட்ங்கள் இட்டதுண்டு..

இத்ற்கு மேலும் என்னைப் பற்றி தகவல்கள் வேண்டுமென்றால் தர தயாரக இருக்கிறேன்.
வசிப்பது டாலசில்..

நான் அவசரமாக் இதை எழுதுகிறேன்..
பி.கு:
வலைப்பதிவாளராக் இருந்தால் இந்த தொல்லை எல்லாம் வரும் என்பதற்காதான் பின்னூட்டம் அதுவும் எப்பாவது தான்..அதற்கும் ???

அன்புடன்

மாயக்கூத்தன் கிருஷ்ணன்

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

அட்றா.... அட்றா.... அட்றா.... அட்றா.... :-))))))))))

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

தாஸ்,

//oru vishayam miss aaydussi, athu, neenga pons illaingiRathu. //
"நண்பர் மோகன் தாஸ் அவர்களுக்கு"ன்னு இப்போ தானே பாதி பதிவு தட்டி வச்சேன்.. இப்படிப் பண்ணிட்டீங்களே!!!

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

/////"நண்பர் மோகன் தாஸ் அவர்களுக்கு"ன்னு இப்போ தானே பாதி பதிவு தட்டி வச்சேன்.. இப்படிப் பண்ணிட்டீங்களே!!!/////

வாங்க பொன்ஸ்!! நீங்களும் சீக்கிரமா ஜோதியில் ஐக்கியமாயிடுங்க.... :-)

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

pons, anththa pinnUddaththOda oru kaappiya vavaasa ngkaththil thavaRuthalaa pOdduddEn, nEnga avanga delete pannalaiyinnaa padissu paarungka,

athil muthalilEyE solliyirunththEn, inththa vishayaththaip paRRi, thirumpavum ezuthiyathaal kavanikkaamal vidduviddEn.

:-)

ippOkkUda onnum pirassanai illai nEngal ezutha ninaiththathai ezuthalaam. ;)

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

மாயா கிருஷ்ணன் வாங்க, வாங்க. விவரங்களுக்கு நன்றி!

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

மீண்டும் மாயா....

நான் பின்னூட்டமிட்ட சில பதிவுகளின் இனைப்புகளைத் தந்துள்ளேன்..நானும் திருமதி உஷா அவர்களும் வேறு என்பதை நீங்கள் இன்னும் நம்பவில்லை என்றால்...ம்ம் bad'luck'...பரிதாபப் படுகிறேன்..

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்.

http://gragavan.blogspot.com/2006/06/14.html
http://gragavan.blogspot.com/2005/11/blog-post_21.html

http://geethamsangeetham.blogspot.com/2006/05/blog-post_30.html

http://srimangai.blogspot.com/2006/05/blog-post.html

http://gganesh.blogspot.com/2005/11/i-am-software-engineer.html

http://penathal.blogspot.com/2005/12/01-dec-05_01.html#114505159988262640

http://domesticatedonion.net/blog/thenthuli.php?item=648

http://dondu.blogspot.com/2005_11_06_dondu_archive.html

http://www.desikan.com/blogcms/?item=104

http://uncerta.in/blog/?feed=rss2&p=138

http://kirukkals.com/wp/?p=21

http://reallogic.org/thenthuli/?p=161

http://dubukku.blogspot.com/2005/11/12.html

http://gganesh.blogspot.com/2005/11/blog-post_09.html

http://murugapoopathi.weblogs.us/archives/80/feed/

http://kurangu.blogspot.com/2005/11/blog-post_08.html

http://pranganathan.blogspot.com/2005/07/blog-post_25.html

http://thoughtsintamil.blogspot.com/2005/11/blog-post_10.html

http://ennulagam.blogspot.com/2005/11/10.html

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

/////நான் பின்னூட்டமிட்ட சில பதிவுகளின் இனைப்புகளைத் தந்துள்ளேன்..நானும் திருமதி உஷா அவர்களும் வேறு என்பதை நீங்கள் இன்னும் நம்பவில்லை என்றால்...ம்ம் bad'luck'...பரிதாபப் படுகிறேன்..//////

தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி இந்த டாபிக் நீளுவதால் இனிய நண்பர் ஒருவர் சொன்ன ஆலோசனையின் பேரில் இத்தோடு முடித்துக் கொள்ள விரும்புகிறேன்....

உண்மையிலேயே நீங்கள் தான் மாயா எனும் பட்சத்தில் (பேரே ஏடாகூடமாக இருக்கிறதே) நான் சந்தேகப்பட்டது தவறு என்று கூறிக் கொள்கிறேன்....

உஷா அக்கா நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் :-)

 
At Thursday, 13 July, 2006, சொல்வது...

லக்கிலுக்,
உங்களுக்கு ஏற்பட்ட அதே சந்தேகத்தைப் போல எனக்கும் சிலரின் வலைப்பதிவுகளில் மட்டும் கமெண்ட்
போடுபவர்களைப் பார்த்து ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்களே போட்டுக்கொள்ளுகிறார்கள் என்று
இல்லை, அவர்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் என்று? சரி, உற்ற நட்பாய் இருக்கும், தெரிந்த, உறவினர்களாய் இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன்.

நானும் திரு. மாயா அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பாவம், இனி பின்னுட்டம் இட கூட யோசிக்கும் மனநிலமைக்கு வர வைத்துவிட்டதற்கு :-)

இத்துடன் இந்த விஷயத்துக்கு முற்றுபுள்ளி வைத்துவிடலாம் என்று நினைக்கிறேன்.

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

உஷா அக்கா!

ஆனாலும் இவ்வளவு பிடிவாதம் கூடாது... என்னை இன்னமும் மன்னிக்கவில்லை... தம்பி பாவம் இல்லையா?

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

லக்கி லுக்! மன்னித்தல் என்ற வார்த்தைக்கே இங்கு இடமில்லை. நான் எந்தவகையிலும் உங்களால் பாதிக்கப்படாதப் பொழுது, மன்னித்தல் எங்கு வந்தது? நீங்கள் செய்த தவறை உணர்ந்தீர்கள், தவறு என்பது தவறி செய்வது, அவ்வளவே அத்துடன் விட்டு விடுங்கள். தவறு செய்யாத மனிதனே இல்லை.
நாம் இருவரும் மாயாவிடம்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் போட்ட பின்னுட்டத்தை நான்
ஹைலைட் செய்தது என் தவறு இல்லையா :-)

இன்னும் மன்னிப்பு என்ற வார்த்தை என்னிடம் இருந்து வேண்டும் என்றால் மன்னித்தேன் :-)

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

சுபம்.

சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க.
இல்லை திரும்ப திரும்ப இதையே படிக்க வேண்டி இருக்கும் :-))

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

அப்பாடா..பிரச்சினை முடிந்ததே...அக்காவும் தம்பியும் என்னாமா பாசத்த பொழிஞ்சுக்கறாங்க டோய்...

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

அனைவருக்கும்,

பிரச்சினை முடிந்ததில் மகிழ்ச்சி..

/நாம் இருவரும் மாயாவிடம்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். /

பதில்
/மன்னித்தல் என்ற வார்த்தைக்கே இங்கு இடமில்லை. நான் எந்தவகையிலும் உங்களால் பாதிக்கப்படாதப் பொழுது, மன்னித்தல் எங்கு வந்தது? /

ஏதோ இணையத்தில் அங்குமிங்குமாக இருந்தவனை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி உஷா அவர்களே...

திரு லக்கிலுக் (பேரே நன்றாக இருக்கிறதே)..
/'உண்மையிலேயே நீங்கள் தான் மாயா எனும் பட்சத்தில் (பேரே ஏடாகூடமாக இருக்கிறதே) /
என்னை இன்னும் நீருப்பிதற்கு பெயர் காரணம் எல்லாம் வேணுமா...

/நான் சந்தேகப்பட்டது தவறு என்று கூறிக் கொள்கிறேன்..../
தவறை உணர்தது குறித்து மகிழ்ச்சி..

மன்னிப்பு கேட்பவன் மனிதன்..மன்னித்தவன் பெரிய மனி(ஷி)தன்..(நன்றி விருமான்டி)..தயவு செய்து இதையெல்லாம் திருச்சிராதீங்க்ப்பா..அது எப்படிங்க எது யார் எழுதினாலும் கரெட்டா தப்பா புரிஞ்சுட்டு வாதாட திறமை உங்களில் நிறைய பேருக்கு இருக்கு..உபயோகமான வழியில் அதை புகுத்தவும்..வீணான விவாதவத்திற்கு உபயோகப் படுத்த வேண்டாம்..
(கடைசிலே ஒரு நீதி சொல்லனுமுலே..அதற்குதான்....)

உஷா அவர்களே உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்....முடிந்தால் எங்கயாவது பஸ்ஸாண்டு பக்கம் பெரியார் சிலை இருந்தால் மாலை போட்டு ஒரு போட்டா எடுத்துக் கொள்ளவும்(பெரியார் சீடை(தின்கறது இல்ல) என்பதை நீருப்பிக்க)..ஏன்னா நீங்க ஒரு பதிவில்,...
அய்யோ மறுபடியுமா...ESCAPE ESCAPE

/இத்துடன் இந்த விஷயத்துக்கு முற்றுபுள்ளி வைத்துவிடலாம் என்று நினைக்கிறேன்./
வழி மொழிகிறேன்..

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

 

Post a Comment

<< இல்லம்