Friday, July 14, 2006

நேற்றையப்பொழுது.....

நேற்று மாலை ஏழு மணி இருக்கும். மாயா அவர்களின் பதிலைப் படித்துவிட்டு நிம்மதியாய் உட்கார்ந்திருந்தேன். வாசல் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே வந்த என் கணவர், "என்ன உடம்பு சரியில்லையா?" என்றுக் கேட்டார். அந்த கேள்வியின் தாத்பரியத்தை உள் வாங்கிக் கொள்ளும்முன், தவப்புதல்வன், "ஆமாம்பா! நேத்துல இருந்து ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை டென்த் வந்தாச்சு, டீவி பார்க்காதே, காம்போசிஷன் எழுதினியா? ஒன்லைன் ஆன்சர் எழுதித்தீயா, அட்வைஸ் எல்லாம் இல்லே. அம்மா திருந்திட்டாங்கன்னு நெனைக்கிறேன்" என்றான்.

கோபத்துடன் திட்டலாம் என்றுப் பார்த்தால், ஒரு கையில் பீஸா அட்டை. மறு கையில் பெப்சி.

"எப்ப பீசா வாங்கினே?' என்று ஸ்லோ கதியில் ஆரம்பிக்க, பையன் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே!

"என்னமா? உங்களைக் கேட்டுத்தானே பீசா ஆர்டர் செஞ்சேன். பர்சல இருந்து காசு எடுத்தேன். கேட்டப் போ, கம்ப்யூட்டர் பார்த்துக்கிட்டே ம்ம்ம் ந்னு சொன்னீயே" என்றான்.

அதற்குள் தலைவர், "நைட்டுக்கு பீசாவா?" எடுத்து ஆனந்தமாய் தின்றுக் கொண்டே, "அதுதானே, ஆறுமணியானா, அஞ்சு நிமிஷத்துக்கு ஒருகால் செஞ்சி, இன்னும் புறப்படலையான்னு கத்திக்கிட்டு இருப்பா! அதனாலதான் ஒடம்பு சரியில்லையான்னு கேட்டேன்"

பாரூங்க, ரெண்டு நாளு கணிணியைப் பார்த்துக் கொண்டு இருந்ததால் வந்த வினையை? இப்படியே போனால், குடும்பம் என்னவாகும்? இனி 'உஷா'ராய் இல்லாவிட்டால் அவ்வளவுதான்!

பையனிடம் டீவியை அணைத்துவிட்டு, படிக்க சொன்னேன். பீசா தின்னவரை
எக்ஸ்ட்ராவாக, இன்னும் பதினைந்து நிமிடம் டிரெட் மில்லில் ஓட சொல்லிவிட்டு, பாத்திரம் விளக்கி வைத்துவிட்டு, தோய்த்த துணியை எடுத்துக் காயப் போட்டுவிட்டு வந்தேன்.

படிக்கிறேன் பேர்வழி என்று பையன், டிரெட் மில்லில் ஓடிக் கொண்டே இருந்தவரிடம் அம்மா பழையப்படி ஆயிட்டா என்று சொல்லிக் கொண்டு இருப்பதைக் கண்டுக்காமல் இரண்டு பேரிடமும் நுனிப்புல் கதையை சொன்னேன்.

"ஒழுங்கா எழுதுவதை விட்டு விட்டு, சும்மா எதுக்கு இந்த அக்கப்போர்?" என்று திட்டு விழுந்தது.

எல்லாம் தெரியுது, ஆனா சில சமயம், உடன்பிறந்த குணம் சும்மா இருக்க முடியவில்லையே! ஆயிற்று ஊருக்கு கிளம்பும் நாளும் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இம்முறை சென்னை- மாயவரம்- காரைக்குடி- கோவை- (ஒரு வாரம் கோவையில் - நடுவில் பொள்ளாச்சி, ஈரோடு, மூணாறு) - மதுரை- திருநெல்வேலி- சென்னை என்று திட்டம் தயாராகிக்கொண்டு இருக்கிறது.

மூட்டை கட்டுவது அல்லாமல், சில மாற்றக்கள் இருப்பதால் ஊருக்குப் போவதற்கு முன்னால் செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் இருக்கிறது. பதிவோ பின்னுட்டமோ குறைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன் ( ஹ¥ம்! இதை எத்தனை முறை சொல்லி விட்டாய் என்று மனசாட்சி சொல்லிக் காட்டுகிறது)

மீண்டும் சில பின்னுட்டங்களை நிறுத்திவிட்டேன். மீண்டும் மீண்டும் பேசியதையே பேசிப் பேசி பலன் என்னவென்று புரியவில்லை.மிகப்பெரிய பின்னூட்டம் மீண்டும் முகமூடியிடமிருந்து. போதும் ஐயா ஆளைவிடுங்கள்.

இறைநேசன் ஐயா, மீண்டும் என் கேள்விக்கு என்ன பதில் என்றுக் கேட்டு இருக்கிறீர்கள். சாதி என்பது தலைவிதி என்று சொன்னதற்கு முன்பே பதில் சொல்லிவிட்டேன். பெரியாரின் கொள்கைகளில் ஈடுப்பாடு உள்ள என்னையும், நான் பிறந்தசாதி வைத்தே என் எழுத்துக்களும் பார்ப்படும், நான் இகழப்படுவேன் என்பதே அதற்கு பொருள்.

அடுத்து அதே மீண்டும் டோண்டுவின் கற்பு மேட்டர். உண்மையில் அயர்ச்சியாய் இருக்கிறது. ஒருவரின் பதிவை குறித்த எதிர்வினைக்கும், சம்மந்தப்பட்ட நபரை தாக்குவதற்கும் வித்தியாசம் உண்டு ஐயா! உங்கள் இருவரின் இடையே என்ன பிரச்சனை என்பது எனக்கு தெரியாது, தெரிந்துக் கொள்ளவும் விருப்பப்படவில்லை. மற்றும் யாரை பற்றிய தனிப்பட்ட விஷயங்கள் எனக்கு தேவையும் இல்லை.

தனிப்பட்ட நபரை சொல்வதற்கும் பொத்தம் பொதுவாய் ஒரு சாதி, குலத்தை, இனத்தை, நாட்டினரை குற்றம் சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு இல்லையா? எஸ்.கே அவர்களிடமிருந்த வந்த பின்னுட்டம், அவர் அனுப்பியதா அல்லது போலியா என்றும் தெரியவில்லை. எஸ்.கே மன்னிக்கவும், அனைத்துமே பதிவுக்கு சம்மந்தமில்லாத விஷயங்கள். எஸ்.கே அந்த பின்னுட்டத்தை நிறுத்திவிட்டேன். இதுதான் என் நிலைப்பாடு.

சரி, இந்த கதைகள் போதும். "மரணம்" தலைப்பு போட்டி சூடாய் போய்கொண்டு இருக்கிறது. வித்யாவின் கவிதையை நன்றாக இருக்கிறது என்று சொல்ல நா எழவில்லை. நிஜத்தின் கோரமான முகம் நம்மை தாக்குகிறது. என் கணிப்பில் அதற்கு முதல் பரிசு, இரண்டாவது டுபுக்குவிற்கு. ரொம்ப சிம்பிளாய், அதே சமயம் மனதை நெகிழ வைக்கும், புது பார்வை. எப்பொழுதும் காமடி செய்துக் கொண்டு இருப்பவரிடம் இந்த கதையை எதிர்ப்பார்க்கவில்லை.
மூன்று, நான்காம் பரிசுக்கு பலரும் இருக்கிறார்கள்.

ஊரூக்குப் போகும் சந்தோஷம். வித்யா, தாணு போன்ற பெரிய ஆள்களைப் பார்க்கப் போகிறேன். தமிழ் புத்தகங்கள் கிடைக்கும், கோவை இணைய மாநாடும், சென்னையில் மகளிர் மாநாடும் கட்டாயம் நடக்கும் (நானும் மதுமிதாவும் சந்தித்தால் மாநாடுதானே???) வர்ட்டா!!!!

18 பின்னூட்டங்கள்:

At Friday, 14 July, 2006, சொல்வது...

//சென்னையில் மகளிர் மாநாடும் கட்டாயம் நடக்கும் (நானும் மதுமிதாவும் சந்தித்தால் மாநாடுதானே???) வர்ட்டா!!!! //

உஷா நானு?!!!!:(((((

ம்ம்ம்.. எப்போ திரும்புவீங்க?

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

உஷாக்கா எப்போ இந்தியா வருவிங்க.பெங்களுருக்கும் வாங்க.போன ஞாயிற்றுக்கிழமை வலைப்பதிவர் கூட்டம் நடத்தி புது தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.அது என்வெனில் உங்களை போன்று விருந்தாளிகள் வரும் பொழுது வரவேற்பு மற்றும் சிறப்பு வலைபதிவர் கூட்டம் நடத்துவதாக.

மற்றொன்று உங்களுக்கு முன்னாடியே வித்யாவை நான் மதுரைக்கு போயி சந்திக்கப்போறேன்.இன்னிக்கு மதியம்தான் தொலைப்பேசினேன்.சனிகிழமை(15-7-2006) மாலை சந்திக்கலாமுனு மேடம் அப்பாயின்மெண்ட் கொடுத்து உள்ளார்.சந்தித்து விட்டு வந்து சொல்லுறேன்.

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

தயவு செய்து தவறாகப் புரிந்து கொண்டீர்களோ என நினைக்கிறேன்.
ல.லு. என்னைப் பற்றிய ஒரு கருத்துக்கான பதில் அது.
நான் தான் இட்டேன்.
நீங்கள் எழுதியதை வைத்து என்னைத் தவறாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
இஸ்லாமிய அன்பர்களை நான் அதில் குறைத்துச் சொல்லவே இல்லை.
அனைத்துத் தீவிரவாதிகளையும்தான், இந்துக்களையும் சேர்த்தே சொல்லியிருந்தேன்.
அதைப் பிரசுரிப்பது உங்கள் பாடு.
ஆனால், திரித்துக் கூறியிருப்பதைத் தான் மறுக்கிறேன்.
நன்றி.
இந்த விளக்கத்தை மட்டுமாவது அனுமதிக்கவும்.

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

//மும்பை குண்டு வெடிப்பில் ஆரம்பித்து அனைத்து முஸ்லீம்களையும் சாடியுள்ளார். எஸ்.கே மன்னிக்கவும், அனைத்துமே பதிவுக்கு சம்மந்தமில்லாத விஷயங்கள். எஸ்.கே.//

I didn't expect this from you, Ms. Usha!
It is totally false!
Pl. read it again.
Now that you have patched up with Lucky Look, you need not have slandered me.
Thanks.

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

எஸ்.கே, நீங்கள் முன்னும் பின்னும் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்று யாரும் படிக்கப் போவதில்லை. வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்குவது இணையத்தில் புதியது இல்லையே. தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள். இதை
ஏன் இந்த பதிவில் போட்டீர்கள் என்றும் புரியவில்லை. எத்தனை பின்னூட்டங்களை நிறுத்தியிருக்கிறேன் தெரியுமா? எத்தனை பேர்கள் அவர்கள் சொந்த பிரச்சனைகள், நக்கல்,
நையாண்டு, திட்டு என்று போய் கொண்டே இருந்தால் எப்படி ஐயா?

இணையத்துக்கு கும்பிடு போட்டுவிட்டு நாம் என்றுப் போகப் போகிறேனோ?

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

உஷா...எத்தைத் தின்றாவது பித்தம் தெளிவது என்பார்கள். எப்படியோ..நீங்கள் பழைய நிலமைக்கு வந்தால் சரி.

இந்தியா வரவேற்கிறது. சென்னை வருகையில் சொல்லுங்கள். உங்களுக்கு வசதிப்படுகையில் சந்திக்கலாம்.

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

///
I didn't expect this from you, Ms. Usha!
It is totally false!
Pl. read it again.
Now that you have patched up with Lucky Look, you need not have slandered me.
Thanks.
///
எனக்கு சனி கினி மேல எல்லாம் நம்பிக்கை கிடையாது ஆனா சனி ஒண்ணு இருந்தா அது உங்களை நல்லா கெட்டியா புடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.....

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

நீங்கள் நிறுத்தியதை நான் குறை கூற வில்லை.
அந்தத் தவறான விளக்கத்தைத் தவிர்த்திருக்கலாமே எனத்தான் சொன்னேன்.
என்னவோ செய்யுங்கள்!
வாழ்க வளமுடன்!
நன்றி.

[அந்தப் பதிவில் வந்ததெல்லாம் பதிவுக்கு சம்பந்தமானவைதான?! இதைக்கூட பிரசுரிக்க வேண்டும் எனச் சொல்ல மாட்டேன்.]

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

குமரன் தலைக்கு மேல் வெள்ளம் போயாச்சு. அழுவா சிரிப்பதா என்று தெரியாமல் சிரித்துக் கொண்டு இருக்கிறேன். நான் கன்னிராசி என்பதுமட்டும் தெரியும். இதுவரை ஜோசியம் பார்த்ததில்லை. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன், சனி
பகவான் என்னை பார்க்கிறாரா என்று :-)

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

அதாவது டென்ஷன் வந்து விட்டாலே எல்லாருக்கும் எல்லாமே தவறாகத்தான் தெரியும். எஸ் கேவிற்கு நீங்கள் கூறியது தவறாக தெரிந்தால் ஒரு மன்னிப்பு கேட்கிறேன் என்று கேட்டு விடுங்களேன். அவரும் டென்ஷன் குறைந்து வந்தால் எல்லாம் சரியாகி விடும். நீங்களும் டென்ஷன் ஆகாதீர்கள். நாளைய பொழுது நல்ல பொழுதாக விடியும் அதில் அனைத்துமே நல்லதாகவே முடியும்.
///
இணையத்துக்கு கும்பிடு போட்டுவிட்டு நாம் என்றுப் போகப் போகிறேனோ?
///
இதெல்லாம் வேண்டாம் இது போன்ற விஷயங்களுக்காக வருந்தக் கூடாது.

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

கன்னி ராசிக்கு இப்ப நேரம் அமோகமா இருக்கறதா சொல்றாங்க. (னொ உள்குத்து... வெளிகுத்து)ஆனா அப்ப அப்ப பிரச்சனை வரும் ஆனா பெருசா ஒன்னும் இருக்காது.

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

ஹை திருநெல்வேலியா? எப்போ?? அங்க ஒரு வலைப்பதிவர் சந்திப்பு நடத்தால்ம்னு ஆகஸ்டு 12 ப்ளான். ஒத்துவருமா??

எனக்கு ஏதோ பரிசு தரேன்னு சொல்லியிருக்கீங்க...எப்போ தரப் போறீங்க..நீங்க இந்தியா வரும் போது வாங்கிக்கிறேன் :P

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

அய்யோ பரிசுக்கு நன்றி சொல்ல மறந்துட்டேனே... மிக்க நன்றி!!!

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

மகளிர் மாநாடா? யக்கோவ் எங்களுக்கு எல்லாம் அழைப்பு?

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

// மீண்டும் மீண்டும் பேசியதையே பேசிப் பேசி பலன் என்னவென்று புரியவில்லை.மிகப்பெரிய பின்னூட்டம் மீண்டும் முகமூடியிடமிருந்து. போதும் ஐயா ஆளைவிடுங்கள் //

உஷா... அந்த பின்னூட்டம் சச்சரவு நட்ந்து கொண்டிருந்த போதே (ஜூலை 13, காலை 10:00 மணி) எழுதப்பட்டது... நான் எழுதியது ஏதோ பெரிய பாவகர விஷயம் என்பதை போல, சொல்ல வந்ததை வேண்டுமென்று திரித்து மீண்டும் மீண்டும் உங்களிடம் நீதி கேட்டு நெடும்பயணம் ஆரம்பித்திருந்த லக்கிலுக்குக்கும் அதை வழிமொழிந்த அடையாளம் தெரியாத அறிவு ஜீவிகளுக்கும் எழுதிய விளக்கம் அது... இதுவரை நான் எழுதி வெளியாகாத பின்னூட்டங்களை பற்றி அலட்டிக்கொள்ளாதது மாதிரியே, இது வெளிவராதததையும் நான் கண்டுகொள்ளவில்லை... வெளியிடாதது உங்கள் உரிமை...

ஆனால் எல்லாம் முடிந்து அனைவரும் சமாதானம் ஆகிய நிலையில் சம்பவங்களின் செய்திக்குறிப்பை வெளியிடும் நேரத்தில் "மீண்டும் முகமூடியிடமிருந்து" என்று காலத்தை குறிப்பிடாமல் எழுதப்படும் செய்தி அமைதியான குளத்தில் நான் கல்லெறிய முயற்சிப்பது போன்ற ஒரு தோற்றத்தை தருகிறது...

பி.கு :: உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியை புரிந்து கொள்கிறேன். இது தவறு என்று நான் எண்ணவில்லை... இதை மாற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை... எனக்கு இமேஜ் ப்ரச்னை எல்லாம் இல்லாததால் மற்றவர்களிடம் இது தரும் தோற்றம் குறித்த அக்கரை எனக்கு இல்லை... இது உங்களிடம் நான் சொல்ல விரும்பியது... அவ்வளவுதான்.

 
At Friday, 14 July, 2006, சொல்வது...

மூகமூடி அவர்களே,
எல்லாம் முடிந்தது என்ற நிம்மதி வந்தப்பொழுது உங்க பின்னுட்டம் வந்தது. இப்ப போய் பார்த்தால்
இங்கத்திய நேரம் 13ம் தேதி இரவு ஒன்பது மணி. அதனால்தான் எல்லாம் பிடிந்த பிறகு முகமூடியின் நீண்ட மடல் என்றுக் குறிப்பிட்டேன். அதே இமேஜ் என்ற பயம் எனக்கும் இல்லாததால் உங்க சமீபத்து
கமெண்டைப் போட்டுவிட்டேன் :-)
எஸ்.கே, இறைநேசன் உங்கள் இருவருக்க்மே விளக்கம் அளித்துவிட்டேன். செய்வது எல்லாம் சரி என்ற பிடிவாதம் எனக்கில்லை. சில சமயங்கள் நம் எண்ணங்கள், கருத்துக்கள் பிறருக்கு புரியாமல் போய்விடுகிறது என்று என்னை நீங்கள் நினைத்துக் கொள்ளலாம்.
நேற்றுவரை இருந்த சாதாமனநிலைமை குறைந்து வருகிறது. எழுத்து தரும் போதையும் வேண்டாம்,
குழப்பங்களும் வேண்டாம். இவை எல்லாம் எனக்கு ஒத்துவராது. அதற்காக, வில்லங்கம் இல்லாத
பதிவு மட்டும் போட வேண்டும் என்றால் எழுதுவதையே நிறுத்திவிடுவேன்.
இது என்னுடைய கருத்துக்களை சுதந்திரமாய் வெளிப்படுத்த உதவும் இடம். பதிவில் சொன்னதுப்
போல கொஞ்ச நாட்களுக்கு லீவ்.

 
At Saturday, 15 July, 2006, சொல்வது...

இணைய பதிவாளர்கள் மாநாடு சம்மந்தமாய் வரும் பின்னுட்டங்களை தனிமடலாய் பாவிக்கிறேன்.
மெயில் ஐடி தந்தால் விவரம் சொல்கிறேன்.

டுபுக்கு, திருநெல்வேலியை மேப்பில் பார்த்ததுதான் (இல்லை இல்லை மணி ரத்தினம் படத்திலும் பார்த்திருக்கிறேன்)

WA, சென்னையிலா இருக்கீங்க?

ராம், வரவேற்புரை, நன்றியுரை சமாச்சாரங்கள் எல்லாம் ஏன்? சாதாரணமாய் போண்டா தின்றுக்
கொண்டு பேசக்கூடாதா? ஆனால் இம்முறை பெங்களூர் பட்டியலில் இல்லை.

ஸ்ரீநிதி, உங்க கேள்விக்கு பதில் நாயகன் ஸ்டைலில் "தெரியலையே பா!" :-)))

நன்மனம்! கன்னிராசிக்கு பெருசா பிரச்சனை வராதா? சரிதான் :-))))

குமரன் எண்ணம், அப்படியே :-)

 
At Saturday, 15 July, 2006, சொல்வது...

இல்லிங்க. ஆனாலும் சொல்லீருந்தீங்கனா ஆகா மாநாட்டுக்கு போறதுக்கு முயற்சித்தேனாக்கும் போக முடியாம போச்சேன்னு எதாச்சும் ஸீன் போட்டிருப்பேன்.

 

Post a Comment

<< இல்லம்