Monday, July 17, 2006

நடராஜனும், பெருமாளும்!

தனிப்பட்டவர்களின் நம்பிக்கையை தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ளும் வழக்கம் பல இடங்களிலும் உள்ளது. அப்பொழுதெல்லாம் பிலாக் ஆரம்பிப்பேன் நானும் எழுதுவேன் என்றெல்லாம் தெரியாததால், பல விஷயங்கள் ஞாபகத்தில் வந்தாலும் முழுவிவரம் தெரியவில்லை.
சிதம்பரம் மேட்டரை படித்துக் கொண்டிருந்தப்ப்பொழுது ஒரு விசித்திர செய்தி நினைவில் வந்தது.

என் வீட்டிற்கு பக்கத்தில் குடியிருந்தவர், ஒருமுறை தன் தங்கை குடும்பத்திற்கு திருப்பதி பெருமாள் கோவிலில் பாத்யை (உரிமை) உண்டு என்று சொன்னார். அதன் காரணமாய் உண்டியலில் சேரும் பணத்தில் அவர்களுக்கு கால் அரைக்கால் பைசா வருமானம் வீடு தேடி வரும் என்றார். ஆ வென்று வாய் பிளந்த எங்களிடம், இது என்ன அதிசயம் இன்னொரு உறவினருக்கு கால்பைசா வரும் என்றார். அதாவது கோடிகளில் கால், அரை என்று சதவீத பங்கு ! தங்கம், வைரம், வைடூரியம் இவைகளில் பங்கு கிடைக்குமா போன்ற மேல் விவரங்களை அன்று கேட்கவில்லை :-)

இந்த நடைமுறை எப்படி ஆரம்பித்தது? கோவிலைக் கட்டியவர்கள் தமிழர்களா? வழக்குப்போட்டு பங்கு வாங்கிக் கொண்டார்களா? எப்பொழுது நடந்தது? பல வருடங்களுக்கு முன்பு காதில் விழுந்த செய்தி, இன்னும் தொடர்கிறதா என்றும் தெரியவில்லை!

பெருமாள் குபரனிடம் கல்யாணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திண்டாடுகிறார் என்று புராண கதை சொல்வார்கள். ஆனால் உண்டியலில் குவியும் செல்வத்திற்கு பங்குதாரர்கள் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு பேர்களுக்கு தெரியுமோ ???? இப்படி பல கோவில்களில் பல விஷயங்கள் நடக்கின்றன. திருப்பதி பெருமாள் கோவில் உண்டியலில் பணத்தையும் பொருளையும் கொட்டுவது என்பது மீஞ்சிப் போனால் ஐம்பது வருட பழக்கமாய் இருக்கும். அக்காலத்தில் திருப்பதி மலை ஏறுவதே பெரும்பாடு. அந்தளவு பணத்தை உண்டியலில் போடுவது வெகு குறைவு. பெரும் செல்வந்தர்கள் சொத்து எழுதி வைப்பார்களே தவிர உண்டியலில் போடுவது சமீபத்து பழக்கமாய்தான் தோன்றுகிறது.

இந்த சங்கதியும் எப்பொழுதோ காதில் விழுந்தது. சொன்னவர் பொய் சொல்ல வேண்டிய தேவையில்லாததால் உண்மையான தகவல் என்ற நம்பிக்கையில் இதைப் போடுகிறேன். மேலாதிக்க விவரங்கள் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

சுதந்திரத்திற்கு பிறகு புது சட்டங்களும், சட்டதிருத்தங்களும் செய்துக் கொண்டே இருக்கிறார்கள். தனிபட்ட சிலர்களுக்கு சாதகமான சட்டங்களை திருத்த அரசு முன்வரக்கூடாதா என்ற ஆதங்கத்துடன் முடிக்கிறேன்.

(ஹ¥ம்! ஆரம்பிச்சா-மன சாட்சி)

10 பின்னூட்டங்கள்:

At Tuesday, 18 July, 2006, சொல்வது...

marupadiyuma????

 
At Tuesday, 18 July, 2006, சொல்வது...

samayal kuripu poodattaa :-)

 
At Tuesday, 18 July, 2006, சொல்வது...

இப்படி வேறு இருக்கிறதா? பேசாமல் நம் கோவில்களை எல்லாம்
மும்பை பங்கு மார்க்கெட்டில் லிஸ்ட் செய்துடலாம்.

 
At Tuesday, 18 July, 2006, சொல்வது...

ஆகா....பேசாமல் பெங்களூரில் யாரும் போகாத இடத்தில் ஒரு சின்னக் குன்றைக் கண்டு பிடித்து அதில் ஒரு முருகன் கோயிலைக் கட்டி சுவாமி ராகவானந்தடிகள் என்று உக்காந்து விட்டால்....ஒரு பத்து வருடங்கள் கழித்து எவ்வளவு கோடிகள் கிடைக்கும் என்று நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறதே....அப்பொழுது மருத்துவமனை, அனாதையில்லம், முதியோர் இல்லமெல்லாம் தொடங்கி விட்டால்...ஆகா ஆகா...ஆகா...

 
At Tuesday, 18 July, 2006, சொல்வது...

இன்னும் ஊருக்குக் கிளம்பலையா? :-)

 
At Tuesday, 18 July, 2006, சொல்வது...

அதிலயும் யாரவது நீங்க வத்தகுழம்பு, தயிர்சாதம் பற்றியே குறிப்பு போடுறதா உள்குத்த போறாங்க -:))))))

சும்மாதான் publish பண்ணலன்னாலும் ok.

 
At Tuesday, 18 July, 2006, சொல்வது...

ராமச்சந்திரன் உஷா

இப்படியெல்லாம் வேற நடக்குதாங்க.

 
At Tuesday, 18 July, 2006, சொல்வது...

சமையல் குறிப்பா? போடுங்களேன், நாங்களும் கொஞ்சம் கத்துக்குறோம்.

 
At Tuesday, 18 July, 2006, சொல்வது...

உஷா,

மசால்வடை ரெஸிபி ஒண்ணு ரொம்பநாளா எதிர்பார்க்கறென்.
அதைப் போடுங்கப்பா.

 
At Wednesday, 19 July, 2006, சொல்வது...

ஆதிரை, தம்பி, ராகவன், மனசு, Wa, துளசி வேலை அதிகம். பதில் போட முடியவில்லை. பதில் என்னவா? ஆங்காங்கு அலசல் நடந்துக்கிட்டுதானே இருக்கு :-)

குமரன், துளசி, Wa புரியுது :-)

மனசு, எது தெரியுமோ அதைதானே போட முடியும் :-)

 

Post a Comment

<< இல்லம்