Wednesday, September 13, 2006

பயணம் - சில செய்திகள்

எல்லாரும் நல்லா இருக்கீங்களா? எப்பொழுது சுறாவளி சுற்றுபயணமாய் இருக்கும் பயணம் இம்முறை வெள்ளைகார பொம்பளைங்க பேரை போட்டு வருமே, அந்த சூப்பர் சுறாவளி பயணமாய் அடித்துவிட்டு, கழுத்துவலியுடன் திரும்பினேன்.

ஊரிலேயே கழுத்துவலி தாங்காமல், கண்ணில் படும் மருத்த்துவர்களிடம் தற்காலிக நிவாரணமாய் சில மருந்துகளை தின்று வாய் புண்ணும், தூக்கமில்லாமல் கண்ணை சுற்றி கருவளையமுமே மிச்சம். இப்பொழுது பிசியோதிரபி எடுத்துக் கொண்டு வலி குறைந்துள்ளது.

ஆனால் இதன் காரணமாய் ஈரோடு சென்றும், தாணுவிடமும், சித்தனிடமும் சரியாய் பேச முடியவில்லை. அன்று வலி மிக அதிகமாய் இருந்தது.

முதல் நாள் கோவையில் சந்தித்த திரு&திருமதி நாமக்கல் சிபியாரிடம் பேசியது சொந்தபந்தம் போன்ற தாக்கத்தை தந்தது. பக்கத்தில் வீட்டுக்காரரும், மகனும் வேறு! பெங்களூரில் நேரமின்மையால் சக்தி மற்றும் ஷைலஜா (மரத்தடி நண்பிகள்) சந்திக்க திட்டமிட்டும் முடியாமல் போனது. நாமக்கல்லாரின் செல்போனில் பேசிய இளாவுக்கு ஸ்பெஷல் நன்றி.

செல்பேசி எண் தந்திருந்த மோகன் தாஸ்சுடன் பேச முடியவில்லை. கொங்கு ராசாவுக்கு ஒரு தடவை முயற்சித்தேன். லைன் கிடைக்கவில்லை. வெகு சிலருடனேயே போனில் பேசினேன். பலருடன் பேச வேண்டும் என்று நினைத்திருந்தாலும், ஹச் தொடர்ப்பு ஒரு சொதப்பல் மற்றும் வேற வாய் புண் கொடுத்த டார்ச்சர்தான்!

ஆனால் நிர்மலா, மதுமிதாவுடன் அவர் வீட்டில் (மகளிர் அணி) அடித்த அரட்டைகளும், வழக்கமான உட்லண்ட்ஸ் மீட்டிங்கும் சுவாரசியமாய் இருந்தன.

அதாவது எனக்கு! இலக்கியம் எல்லாம் பேசாமல் எல்லாரும் வம்படித்துக்கொண்டு இருந்தோம். அதனால் என்ன பேசினோம் என்றுக் கேட்டால், ஹி, ஹி, ஒன்னுமே இல்லைங்க! ( நிர்மலா, மதுமிதா, திரு&திருமதி பாலராஜ், ஜிரா, மரவண்டு என்ற கணேஷ், பினாத்தலார் மற்றும் ரோசா வசந்த்) . நடுவில் போனில் பேசிய சுரேஷ் கண்ணன். ஏற்பாடு செய்த ரஜினி ராம்கி கூட்டத்திற்கு வரவில்லை.

இம்முறை வாங்கிய, கிடைத்த புத்தகங்கள் அனைத்துமே அருமையானவை. கிராவின் கோபல்ல கிராமம் மற்றும் அந்தமான் நாயகர் தொகுப்பு வாங்கி பரிசளித்த நிர்மலாவிற்கு நன்றி.

ஆசிப்மீரான், இரண்டொருமுறை குறிப்பிட்ட நாஞ்சில் நாடன் அவர்களின் சிறுகதை தொகுப்பு முழுவதும் வாங்கினேன். (மனுஷன் அவ்வளவு சுலபமா எதையும் நல்லா இருக்கு என்று சொல்ல மாட்டார்). இவ்வளவு நாள் எப்படி தவறவிட்டேன் என்ற வருத்தம், நாலு சிறுகதை படித்ததும்
மேல் ஓங்கியது. கதைகளம் என்பதைக் கையைப்பிடித்தல்லவா அழைத்து செல்கிறார்! கதா பாத்திரங்கள் கேட்கவே வேண்டாம், விரைவில் விமர்சனம் எழுத முயற்சிக்கிறேன்.

அசோகமித்திரனின் மானசரோவர், ஜெயமோகனின் கொற்றவை, நாஞ்சில் நாடனின் பிராந்து மற்றும் சிறுகதை மொத்த தொகுப்பு, சுஜாதாவின் என் இனிய இயந்திரா- இது என்னுடையதில்லை. நாமக்கல் சிபியின் பிராப்ரட்டி :-)

My Feudal Lord- Tehmina Durrani - இதைத்தான் முதலில் படித்துக்கொண்டு இருந்தேன். இருபது பக்கங்களில் நிற்கிறது. இவர்தான் பாகிஸ்தானில் முதன் முதலாய் கணவனை விவாகரத்து செய்த பெண். கணவன் அரசியலில் பெரிய புள்ளி. அப்பெண்ணின்
போராட்டங்களே புத்தகமாகியுள்ளது.

அடுத்து The Inscrutable Americans- Anurag Mathur இதுவும் சில பக்கங்களில் நிற்கிறது. கொஞ்சம் கிசுகிசு மூட்டும் நகைச்சுவை. இப்புத்தகங்களை படித்தவர்கள் கையை தூக்கவும் :-)

13 பின்னூட்டங்கள்:

At Wednesday, 13 September, 2006, சொல்வது...

வருக! வருக!!

 
At Wednesday, 13 September, 2006, சொல்வது...

சாரி மேடம்.. நீங்க பெங்களூரு வந்தப்போ ஜீவ்ஸ் போன் பண்ணிச் சொன்னார். ஆனா சனிக்கிழமை அதுவுமா வேலை இருந்தனாலே வந்து பார்க்கமுடியலே..... அடுத்த தடவை கட்டாயம் மீட் பண்ணலாம்,
ஹீ ஹீ அப்போ வேட்டையாடு விளையாடு ரிலிஸ் ஆகாதில்லே.

 
At Wednesday, 13 September, 2006, சொல்வது...

ஆகா பத்திரமா ஊரு போய்ச் சேந்தாச்சா....ரொம்ப நல்லது.

ஆமா..அன்னைக்குச் சந்திச்சுப் பேசினோம். ஆனா என்ன பேசுனோம்...பேசுனோம்ல அது சரிதான்.

சூறாவளிப் பயணம் முடிந்து ஓய்வும் முடிந்து வந்திருக்கும் உங்களை மீண்டும் தமிழ்மணத்திற்கு வருக என வரவேற்கிறேன்.

 
At Wednesday, 13 September, 2006, சொல்வது...

ஒரு வழியாக சூறாவளி சுற்றுப்பயணம் முடிந்ததா?

//முதல் நாள் கோவையில் சந்தித்த திரு&திருமதி நாமக்கல் சிபியாரிடம் பேசியது சொந்தபந்தம் போன்ற தாக்கத்தை தந்தது.//

நாங்களும் இதையேதான் உணர்ந்தோம்.

// சுஜாதாவின் என் இனிய இயந்திரா- இது என்னுடையதில்லை. நாமக்கல் சிபியின் பிராப்ரட்டி :-)
//

மிக்க நன்றி. பத்திரமாக வைத்திருங்கள். அடுடத்த முறை நீங்கள் வரும்போது பெற்றுக்கொள்கிறேன்.

*மறக்காமல் எடுத்து வரவும்.

:-)

 
At Wednesday, 13 September, 2006, சொல்வது...

நல்வரவு உஷா.

கழுத்து வலி தேவலையா?

 
At Wednesday, 13 September, 2006, சொல்வது...

வாங்க உஷா
பார்ம்-க்கு வந்தாச்சா. ரெஸ்ட் எடுத்து உடல்நிலையை கவனித்துக்கொள்ளுங்கள்.

முருகனையும்(கடவுள்),
ஜீராவையும்
பணியாரம் சாப்பிட்டுக் கொண்டே நினைவு கூர்ந்தது நினைவுக்கு வந்தது.

உங்க மூன்று மரமேறும் பொம்மையை ஒப்படைச்சாச்சுங்க. தகவல் வந்தாச்சா?

 
At Wednesday, 13 September, 2006, சொல்வது...

//நாமக்கல்லாரின் செல்போனில் பேசிய இளாவுக்கு ஸ்பெஷல் நன்றி//

சந்தோசம்தாங்க, ஒரு வருத்தம், நீங்க பெங்களூர் வந்தப்போ ஒரு வார்த்தையாவது சொல்லி இருக்கலாம்.

 
At Wednesday, 13 September, 2006, சொல்வது...

வருக வருக :)

 
At Wednesday, 13 September, 2006, சொல்வது...

உங்கள் பதிவை மீண்டும் காண மகிழ்ச்சி!
இந்தியப் பயணத்தின் இனிமையான நினைவுகளைப் பகிரப் போகிறீர்கள் என்று வந்தால், இங்கு உடல் நலம் சிரமம் கொடுத்தது என்று அறிய வருத்தமாயிருந்தது. :(
இப்பொழுது எவ்வாறு உள்ளது ? தமிழ்மணத்தால் கழுத்துவலி அதிகமாகிவிடப் போகிறது--தொடர்ந்து மானிடரைப் பார்ப்பதால் :))

 
At Thursday, 14 September, 2006, சொல்வது...

கழுத்த பாத்துக்கோங்க..

 
At Thursday, 14 September, 2006, சொல்வது...

பாக்கனும் பேசனும்னு நெனச்சிட்டு இருந்தேன் போன முறையே!
இந்தமுறையும் முடியவில்லை!
பார்க்கலாம் அடுத்த முறை!
உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்!
நிறையப் பேசுவோம் வலைப்பூக்களில்!

 
At Thursday, 14 September, 2006, சொல்வது...

கல்வெட்டு வந்தாச்சில்லே :-)

ராம், இளா! ஒன்றரை நாள் பயணம். நேரமின்மையால் எண் தேடி போன் செய்யவும் முடியவில்லை.
அடுத்த முறை கட்டாயம் சந்திப்போம்.

ராம், ஸ்டேஷனுக்குப் போகும் வ்ழியில் ஒரு தியேட்டரில் வே. வி ஓடிக்கொண்டிருந்தது. ஹ¥ம்!
ராஜ்குமார் பவர் நீர்த்துவிட்டது என்று நினைத்துக்கொண்டேன். அப்புறம் இம்சை அரசன் கதை என்ன
ஆச்சு? ரிலீஸ் செய்ய விட்டார்களா?

லண்டன் கரன், ஸ்ரீதர்!அனுராக் மாத்தூர் எழுதியது பதினைந்து வருடத்திற்கு முன்பு. அப்பொழுது நம்மாட்கள் படிக்க/ வேலைக்கு செல்வது குறைவு. அந்த காலக்கட்ட கதை. ஆனால் இப்பொழுது அப்படி இல்லையே என்று நினைக்கிறேன். கொஞ்சம் கிரேசி மோகன் காமடியாய் கதை போகிறது.

ஜிரா, மதுமிதா, துளசி, கொடி, மணியன் கழுத்துவலி இருக்கு. கணிணி பக்கம் அதிகம் வரக்கூடாது
என்று இருக்கிறேன்.

சிபி, புத்தகம் உன்னுடையதுதானய்யா! பத்திரமா தந்துவிடுகிறேன் :-)

உதயா எனக்கு ஒரு மெயில் அடிங்களேன்
.

 
At Thursday, 14 September, 2006, சொல்வது...

//ராம், ஸ்டேஷனுக்குப் போகும் வ்ழியில் ஒரு தியேட்டரில் வே. வி ஓடிக்கொண்டிருந்தது. ஹ¥ம்!
ராஜ்குமார் பவர் நீர்த்துவிட்டது என்று நினைத்துக்கொண்டேன். அப்புறம் இம்சை அரசன் கதை என்ன
ஆச்சு? ரிலீஸ் செய்ய விட்டார்களா?//


மேடம்,
இம்சை அரசன் ரிலிஸ் அன்றே பார்த்து விட்டோம், ஆனா அதை மூணாவது நாளோ நாலாவது நாளோதான் தடைப் பண்ணங்கன்னு நினைக்கிறேன்.

 

Post a Comment

<< இல்லம்