Thursday, June 21, 2007

S.B. Adityan M.A., BAR-AT--LAW, M.L.C

என் தந்தை, தினத்தந்தியின் ஆரம்பக்காலத்தில் சுமார் பதினோறு ஆண்டுகள் செய்தி ஆசிரியராய் பணிப்புரிந்தார். தினத்தாள் என்ற பத்திரிக்கையை சேலம் மாவட்டத்தில் தொடங்கியப்பொழுது இருபத்தி மூன்று வயதான என் தந்தை அங்கு செய்தி ஆசிரியராய்
தேர்வு செய்யப்பட்டத்தை திரு. ஆதித்தனார் அவர்கள் தன் கைப்பட எழுதிக் கொடுத்ததும், வேலைக்கான சில சூட்சுமங்களை சொல்லிக் கொடுத்து இருப்பதையும் இந்த கடிதத்தில் காணலாம். ஆனால் சில மாதங்களிலேயே தினத்தாள் மூடப்பட்டு, சென்னையில் தந்தி- தினத்தந்தி ஆகிவிட்டது.

மெத்த படித்தவர், பொருளாதாரத்தில் மேட்டு குடி, ஆனால் சமூகத்தில் அடித்தட்டு மக்களும் உலக விஷயங்கள் அறிந்துக் கொள்ள செய்தது, தமிழ் பத்திரிக்கை உலகம் மறக்க முடியாத செயல்.



Image and video hosting by TinyPic


Image and video hosting by TinyPic

13 பின்னூட்டங்கள்:

At Friday, 22 June, 2007, சொல்வது...

//மெத்த படித்தவர், பொருளாதாரத்தில் மேட்டு குடி, ஆனால் சமூகத்தில் அடித்தட்டு மக்களும் உலக விஷயங்கள் அறிந்துக் கொள்ள செய்தது, தமிழ் பத்திரிக்கை உலகம் மறக்க முடியாத செயல். //

கண்டிப்பாக.
தினத்தந்தி படிச்சி தமிழ் கத்துகிட்டவுங்க நிறைய பேர்.
எங்க தாத்தா ஒரு எழுத்து விடாம ஊருக்கே கேக்கற மாதிரி தினமும் வாசிப்பார்.
என்னடா இந்தாளுகூட ஒரே கூச்சலா இருக்கேன்னு நினைப்பேன்.

பல விமர்சனங்கள் இப்ப இருந்தாலும் ஆரம்ப காலத்துல செய்தித்தாள் துறையில் செய்த சேவைகளை மறக்கவே முடியாது.

 
At Friday, 22 June, 2007, சொல்வது...

எப்படி இருக்கிங்க? ஊரெல்லாம் செட் ஆயிடுச்சா.
அடிக்கடி பதிவுகள் போடுங்க.

 
At Friday, 22 June, 2007, சொல்வது...

திரு சி.பா.ஆதித்தனார் தன் இளமை காலத்தில் சிங்கையில் இருப்பதா? வேண்டாமா? என்று துண்டுச்சீட்டு போட்டு பார்த்து தமிழகத்துக்கு வந்ததாக எங்கோ படித்திருக்கேன்.
அவர் கையெழுத்தை பிரதியை பிரசுரித்ததற்கு நன்றி.
ஃபயர் பாக்ஸில் படம் எல்லையை தாண்டி போகிறது.

 
At Friday, 22 June, 2007, சொல்வது...

தம்பி,
விமர்சனத்துக்கு என்ன, நாக்கு இருக்கு எதை வேண்டுமானாலும் பேசலாம்.ஆதித்தனார் தினத்தந்தி ஆரம்பித்தது, இன்றும்
அதிக படிப்பறிவில்லாதவரும் காலையில் எழுந்ததும் பேப்பர் படிக்கும் பழக்கத்தை உண்டாக்கியது இல்லையா?

அப்புறம் என்ன கேட்டீங்க, ஊரெல்லாம் செட்டில் ஆயிடுச்சான்னா? ஹூம் நம்ம ஊரூல இருக்கும்போது, புதுபுது தமிழ் படம்
என்ன, சரவணபவன் என்ன, காதில் விழும் தமிழ் என்ன என்று அனைத்தையும் இழந்து நொந்து நூலாய் இருக்கிறேன்.
பி.கு நம்ம ஊர் என்பது அமீரகம் ஐயா

குமார் சார்,
இப்பத்தான் செல்லாவின் புகைப்பட வகுப்பில் பெயர் கொடுத்துவிட்டு வந்துள்ளேன். இனி பாரூங்க சூப்பராய் படம் போடுகிறேன்.

 
At Saturday, 23 June, 2007, சொல்வது...

எழுத்துக்கூட்டியாவது படிக்கும் பழக்கத்தைப் பலருக்குக் கொண்டுவந்தது,
இந்த 'தினத்தந்தி' தாங்க.


ஆமாம்........ 'சிந்துபாத்' முடிஞ்சுருங்களா?

 
At Saturday, 23 June, 2007, சொல்வது...

துளசி,அந்தக்காலத்தில் சினிமாவில் நடிக்க சென்னை வரும் நடிகைகள் முதலில் செய்யும் வேலை, தினத்தந்தி வாங்கி, தமிழ் படிக்க கற்றுக் கொள்வது.

 
At Sunday, 24 June, 2007, சொல்வது...

நல்ல செய்தியைப் படிக்கக் கொடுத்ததற்கு நன்றி உஷா.
தினமணிதான் எங்க பாட்டி படிக்கும் பத்திரிகை. ஆனலும் மாமா வாங்கிவரும் தினத்தந்தியையும் பார்த்தால்தான் அவருக்குப் படித்த திருப்தி கிடைக்கும். அவ்வளவு சுவாரஸ்யம் அதில்.

 
At Sunday, 24 June, 2007, சொல்வது...

தமிழ் பதிப்புலகில் பல கட்டுடைப்புகள் நிகழ இவர் காரணாமாக இருந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.இவர் வக்கீலுக்குப் படிச்சவர் என்பது புது தகவல்.

கடிதத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்னி...

ஆமா ஆண்டியாருக்கு எவ்வளவு வயசு இருக்கும்?

 
At Wednesday, 27 June, 2007, சொல்வது...

வல்லிம்மா, தினத்தந்தியில் மட்டும் அனைத்து லாட்டரி சீட்டு முடிவுகளும் வரும். அதனால் எங்கள் வீட்டுக்கு வரும் தினத்தந்திக்கு அக்கம் பக்கத்தில் ஏக கிராக்கி.

சுதர்சன், ஒருமுறை ஆதித்தனார் பார் அட் லா (இங்கிலாந்தில் படித்தவர்) என்று நண்பர் ஒருவரிடம் சொல்லியப்பொழுது அவர் நம்பவேயில்லை. தினத்தந்தியை
அதிகப்படிப்பறிவு இல்லாதவர்களுக்காக உருவாக்கியவரும் படித்தவர் இல்லை என்று நினைத்திருந்தாராம். இப்படி பலரும் நினைத்திருக்கலாம் இல்லையா, அதனால்தான் எதையோ தேடும்பொழுது கிடைத்த ஆவணத்தைப் போட்டு விட்டேன்.

 
At Wednesday, 27 June, 2007, சொல்வது...

இந்த மாதிரி அந்தகால கடிதங்கள்,ஆவனங்களை பார்க்கும் போது ஒருவிதமான உணர்வும்,சிந்தனையும் ஏற்படுகிறது…

அந்த உணர்வையும்,சிந்தனையையும் மீண்டும் ஒருமுறை ஏற்படுத்திய உஷா அவர்களுக்கு நன்றி!

 
At Sunday, 01 July, 2007, சொல்வது...

ஆமாங்க, பாபு மனோகர்.எனக்குக்கூட கால இயந்திரத்தில் பின்னால் போன உணர்வு ஏற்படும்.புது புத்தகங்களைவிட பழைய பைண்ட் புத்தகங்கள் மிகவும் பிடிக்கும்.
கதையை விட, அதில் உள்ள துணுக்கு செய்திகள், அந்தக்கால விளம்பரங்கள் என்று அனைத்தையும் படிப்பேன்.

 
At Monday, 02 July, 2007, சொல்வது...

Dear Usha,
As I could infer, your dad should be Mr. K.V. Ramachandran, who was in Daily Thanthi, when I was also there in Madras. If I remember correct, he joined Dinamani later.
I have happy memories of him. He used to teach us the intricacies of daily newspaper journalism. We were greatly benefited by his advice and instructions.
Mr. Adityan was a pioneer in newspaper journalism and used to train youngsters by appreciation.
Regards
S. Krishnamoorthy

 
At Tuesday, 03 July, 2007, சொல்வது...

கிருஷ்ண மூர்த்தி சார்,
இப்பொழுதுதான் சென்னைக்கு போன் செய்து அப்பாவுடன் பேசினேன். நீங்கள் தந்தியில் ரிப்போர்ட்டராய் இருந்தீர்கள் என்றார். சரியா? அவருக்கு வயது எண்பத்தி நான்கு ஆகிறது. நினைவு குழப்பம் கொஞ்சமாய் சமீபக்காலங்களில் காணப்படுகிறது.
எப்படியோ உங்களைப் போன்றோர்களும் என் பிளாக் படிக்கிறார்கள் என்பது மிக மகிழ்ச்சியான விஷயம்.வருகைக்கு நன்றி.
அன்புடன்,
உஷா

 

Post a Comment

<< இல்லம்