Thursday, May 31, 2007

கிழட்டு நாயகனும், இளம் வயது நாயகியும்

தலை வழுக்கையை மறைக்க விக்கு, வயதுக்குப் பொருந்தாத மட்டுமல்ல, யாருக்குமே அசட்டு களையை தரும் ஜுகு ஜூகு உடைகள், வயது ஒத்துழைக்காததால் உடலை அலுக்காமல் பாட்டுகளில் நடன அசைவுகள், ஆனால் இந்த பிரச்சனையில்லாத சண்டை காட்சிகள் அதுக்குத்தான் டூப்பும், காமிராவின் ஜிகிடிதனமும் இருக்கே. இப்படி ஒரு படம்! அரை மணி நேரத்துக்கு மேல் பார்க்க முடியவில்லை.

இந்த அறுவைகளை எல்லாம் உலகமே கொண்டாடுகிறது என்று ஆச்சரியமாய் இருக்கிறது. இந்த அழகில், கிழட்டு கதாநாயகன் திரும்பி பார்க்காவிட்டாலும், அவன் மீது மோகித்து அவனையே சுற்று வரும் இளம் நாயகி. ஜெயசுதா என்ன அழகு? என். டி.ராமராவ் காரூவின் கடைசிக்கால படம் போல, என்ன படம் என்று தெரியவில்லை, முந்தா நாள் தேஜாவோ
அல்லது ஜெமினியிலோ போட்டிருந்தார்கள். ஸ்ரீதேவிக்கூட அவரூக்கு ஈரோயினாய் நடித்தார். சிவாஜி ஐ மீன் சிவாஜிகணேசனுக்குக்கூட ஸ்ரீதேவி ஜோடியாய் நடித்தார் இல்லையா? சகிக்கவில்லை.

எப்படியும் முப்பது வருஷத்துக்கு முன்னால் வந்த படமாய் இருக்கும், காலம் மாறிப் போச்சுன்னு என்று யார் சொன்னது :-)

40 பின்னூட்டங்கள்:

At Thursday, 31 May, 2007, சொல்வது...

எங்கேயோ உதைக்கிறதே

ஜாக்கிரதை ரசிகர்கள் கொதித்தெழப் போகிறார்கள்

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

ஆஹா எனக்கு புரியுது.

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

ஜூன் 15 ரிலீஸ்!!

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

ஸ்ரீசரண், ராமராவ்காரூவின் தீவிர ரசிகர்கள் தமிழ் பிலாக் படிப்பாங்களா என்ன? ஐய்யயோ பயமா இருக்க்கே.

பிரசன்னா, கடைசி வரியை தூக்கிடட்டா :-))))))))))

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

//இந்த அழகில், கிழட்டு கதாநாயகன் திரும்பி பார்க்காவிட்டாலும், அவன் மீது மோகித்து அவனையே சுற்று வரும் இளம் நாயகி. ... ... ... ஜோடியாய் நடித்தார் இல்லையா? சகிக்கவில்லை.//
ஆமாம். கேட்டாலே சகிக்கவில்லை.

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

ஏனுங்க அம்மனி...

இங்கன ரசினிகாந்த்..ரசினிகாந்துன்னு ஒருத்தரு ஆக்டு குடுக்கறாரே, அவரும் நீங்க சொல்ற இந்த லிஸ்ட் வருவார்தானே...அவர ஏன் விட்டுட்டீங்க...ஹி..ஹி...ஹி...

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

ஹாலிவுட்ல ஹாப்கின்ஸ் தாத்தா கிட்மேன் பேத்தியுடன் ஆட்டம் போட்டத சொல்றீங்களா...பாலிவுட்ல அமிதாப் தாத்தா குட்டிப் பொண்ணோட ஆட்டம் போட்டத சொல்றீங்களா இல்ல கோலிவுட்ல ....எதுக்கு வம்பு?

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

ராமச்சந்திரன்,
சிவாஜி ராவின் ரசிகர்கள் படிப்பார்கள் இல்லையா??

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

நீங்க பழசை ஞாபகப்படுத்தினாலும், இப்போதுவரும் முதிய நாயகர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கு.

விக்கும், மேக்கப் மேன்களும் இருக்கும் வரை நாமெல்லாம் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டியதுதான் போலும் !
:(

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

//பிரசன்னா, கடைசி வரியை தூக்கிடட்டா :-)))))))))///

கடைசி வரியைத் தூக்கினா மட்டும் புரியாதா என்ன?.... :)))))

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

அபி அப்பா, ஹூன் 15 ஆ? ஆனா நாப்பது வருஷத்துக்கு முன்னாடி இருக்கும் இல்லே?

சுல்தான், ஆமாங்க, படத்துல, கனவுல் காட்சில அரை டிரவுசர் போட்டுக்கிட்டு ஈரோயினி இவுங்க கூட ஆட்டம் போடுவாங்களே தவிர, இவுங்க தாய் குலத்தை நிமிர்ந்தே பார்க்காம, அம்மா பார்க்கிற பொண்ணைத்தான் கல்யாணம் செஞ்சிப்பாங்க.

பங்காளி, இப்ப பேசுவது தெலுங்கு படத்த பற்றி :-)

வக்கீல் ஐயா, இப்படி பாயிண்ட அடுக்கினா எப்படி? ஆணாதிக்க சமூகம் ஐயா இது!

சரண், யார் யார் படிப்பாங்கன்னு நா எப்படி சொல்ல முடியும்?

கோவி, ஆனாலும் நீங்க ரொம்ப இன்னசெண்டுங்க :-)))

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

என் கிட்ட மோதாதே, நான் ராஜாதி ராஜனடா, வம்புக்கு இழுக்காதே, நான் வீராதி வீரனடா ;-))

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

பிரசன்னா, அதேதான், கடைசி வரியை எடுத்துவிட்டாலும், பிள்ளைங்களுக்கு புரியாதா என்ன :-)

பாலா இந்தப்பாடலை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன் :-)
"போடா போடா புண்ணாக்கு
போடாதே தப்பு கணக்கு"

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

புதுப் பொலிவுடன் ஆரம்பிப்பதாகக் கூறினீர்கள், ஆரம்பமே கிழத்துடன் ஆரம்பித்திருக்கிறீர்களே :)

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

ம்! அதான பார்த்தேன்!

தப்பிச்சீங்க!

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

இருங்க உங்களை தேவ்கிட்டேயும் ரஜினிராம்கி கிட்டயும் போட்டு குடுக்கறேன்:-)

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

உங்க காலத்துப் படம். ரசிச்சுப் பார்த்திருப்பீங்க இல்லையா?!! :))

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

மணியன், profile மாத்தியிருக்கேன். இன்னும் கை வைக்க பயமா இருக்கு.

அபி அப்பா, அவுங்க ரெண்டு பேரூம் ராவ்காரூக்கு விசிறியா?

சிபி, நீங்களாவது ஒழுங்கா படிச்சி புரிஞ்சிக்கிட்டீங்களே நன்னி நன்னி நன்னி

இலவசம், விக்கு தலையுடன் கோட்டு போட்டுக் கொண்டு வயதான சிவாஜி சின்ன பொண்ணுங்க கூட டூயட் ஆடிக்கிட்டு இருந்த காலம், புயல் போல கமலும் ரஜினியும் வந்து எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டனர்.
அன்றும் இன்னும் வயசான பார்ட்டிகள் சின்ன பசங்களாய் ஆக்ட் கொடுத்தால்
அலர்ஜி.

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

ஒரு வாரமா "சிவாஜி" ட்ரெய்லர் தொல்லை தாங்க முடியலை. மனசு நொந்து போய் உங்க பதிவுக்கு வந்தேன். ஹிஹிஹி ஆறுதலா இருக்கு. நன்றிகள். :D

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

உஷா நலமா? ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவைப் பார்க்கறேன்.

அதுசரி. ஏதாச்சும் சொ.செ.சூ. வச்சுக்கற முடிவோட இதை எழுதிருக்கீங்களா? :-)

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

வாழ்த்துக்கள்...

அன்புடன்
மாயா

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

When I saw some of the pictures of "Sivaji", the same feeling went through my mind...

BTW, you should see Nageshwara Rao with Sridevi in one of the movies...Still splitting my side while thinking about that movie :)

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

உஷா!
இப்படி ஒரு விமர்சனத்தை பல வருடங்களுக்கு முன் விமர்சக வித்தகர் சுப்புடு அவர்கள் செய்யப்போய்; அவர் வீட்டுக்கு கல்லெறி விழுந்து; அத்துடன் அவர் திரைப்பட விமர்சனம் நிறுத்துனார்.
இன்னும் இக்கொடுமை தொடர்வது வருத்தமே!!!

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

நல்ல பதிவு உஷா:-))))))

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

எங்க ஏரியா உப்புமாவை பர்மிஷன் இல்லாமல் கிண்டியதற்காகவும்,

என் டி ராமாராவ் கடவுள் நிந்தனை செய்ததற்காகவும்,

உள்ளத்தில் உள்ளதைத் தெளிவாக, துணிச்சலாக சொல்லாததற்கும்,

அகில உலக உப்புமா கழகத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கப்படுகிறது.

 
At Thursday, 31 May, 2007, சொல்வது...

இப்படி எல்லாம் பதிவு போட்டு உள்குத்து வச்சு உலக நாயகனை தாக்குனீங்கன்னா.. நாடு நகரம் காடு கழனி எல்லாம் டென்சன் ஆயிரும்...

ஒலக நாயகன் யாருன்னு எல்லாம் கேட்டு என்னை டென்சன் பண்ணிராதீங்க.. வேணும்ன்னா கருத்துக் கணிப்பு வச்சுத் தெரிஞ்சுக்கங்க...

 
At Friday, 01 June, 2007, சொல்வது...

யோவ் நூனிப்புல், பாலகுமாரன் பதினைந்து வருஷத்துக்கு முன்னால சொன்னத சொல்றேன் 'ரஜினி தென்னாட்டின் ராஜராஜ சோழன்'யா. சிவாஜி ஒரு வருஷம் ஒடலை என் பேர மாத்திக்கிறேன்.

 
At Friday, 01 June, 2007, சொல்வது...

அதான் அவங்க ரஜினிய சொல்லலன்னு சொல்றாங்க இல்ல.. அவர்தான் இளமை துள்ளலோட கலக்கலா இருக்கரே சிவாஜில.. அவங்களுக்கு தெரியாதா என்ன? வேற யார்னு வேணா கண்டுபிடிங்க...

உஷாஜி,
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமான அலர்ஜி. நல்லது கூட அலர்ஜியா இருக்கும்.. பார்த்துங்க. அலர்ஜிப்பக்கம் ஆசைப்பட்டு போய்டாதீங்க.. அப்படி போனாலும் வெளில சொல்லி புலம்பாதீங்க.:-)))

 
At Friday, 01 June, 2007, சொல்வது...

துளசி, கீதா நன்னி

யோகன், ராஜ் சந்திராவுக்கான பதிலைப் பார்க்கவும்

சுந்தர், சொ.செ.சூ எல்லாம் எனக்கு பளக்க வளக்கமுங்க.

மாயா எதுக்கு வாழ்த்துக்கள்? நல்லா இருங்கன்னு திட்டுகிறா மாதிரி இருக்கு :-)

பினாத்தல், உப்புமாக்களே சமய சஞ்சீவிகள், சமயத்தில் கைக் கொடுக்கும் என்றாலும் இதை உப்புமா பதிவு என்றுச் சொல்வதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.

தேவ், இதுல என்ன உள் குத்து :-)))))

செல்வேந்திரன் ஐயா, எழுத்து சித்தர் இப்படிக்கூட சொல்லியிருக்காரா? எப்ப பாட்ஷால வசனம் எழுத சான்ஸ் கிடைத்தவுடனேயா?

ஓசை, சின்ன ரகசியம், நான் தியேட்டருக்குப் போய் பார்த்த ஓரே படம் "பா" வில் ஆரம்பித்து "பா" வில் முடியுமே அதுதான். காரணம் ஏன் ஓடவில்லை என்று ஆராய :-)

 
At Friday, 01 June, 2007, சொல்வது...

ராஜ் சந்திரா, அதே அதே. டிரெயிலர் பார்த்து நொந்துப் போய் எழுதினேன். எத்தனை நாட்களுக்கு அரைத்த மாவையே அதே எம்.ஜி. ஆர் பாணி கதையை அரைப்பார்கள்? இதில் இதே பாணியை பார்த்து சூடு போட்டுக் கொள்ளும் இளைய தளபதிகள். அதே பிற்போக்குதனமான வசனங்கள், கலாச்சாரம், பண்பாடு இத்தியாதிகள், பஞ்சு டயலாக்குகள், கிராபிக்ஸ்
உத்தி சண்டைகாட்சிகள், மாயாஜாலங்கள், புது புது இள நடிகைகள்... இன்னும் எத்தனை படம் வரப்போகுதோ கொடுமை!!!

 
At Friday, 01 June, 2007, சொல்வது...

உள்குத்து...தமிழ் படங்களில் நிறைய கிழடுகள் இருக்கிறது!! என்ன கிழடு பத்தி சொல்லுரீங்க!!

 
At Saturday, 02 June, 2007, சொல்வது...

---இதுல என்ன உள் குத்து---
இன்னும் புரியலியா... அசினும் கமலும் ஜோடி கட்டுவதை சொல்றாங்க!

உஷா,
தசாவதாரம் ட்ரெயிலரை எங்கே பார்த்தீங்க?

எங்களுக்கும் சுட்டி கொடுத்தால் கான்டெக்ஸ்ட் புரியும் அல்லவா ;)

 
At Saturday, 02 June, 2007, சொல்வது...

குட்டி, பாபா! சூப்பர் ஸ்டாரில் இருந்து சூப்ரீம், எவர் கிரீன், ஆக்ஷன் கிங், கேப்டன், உ.நா என்று வரிசைக் கட்டி நினைவுக்கு வருதே :-))))

குட்டி, உமக்காக பழைய கதை ஒன்னு மீள் பதிவு போடுகிறேன் படித்து எஜ்ஜாய் !!!!

 
At Saturday, 02 June, 2007, சொல்வது...

கிழடோ, குமரனோ, சூப்பராக இருக்கும் நாயகனுடன் ஜோடியாக நடிக்க அலையும் குமரி நடிகைகள் ஜொள்ளுவிட்டு சுற்றும் வரை, இதில் குறை சொல்ல என்ன இருக்கு?

இதெல்லாம் இந்தப் பொண்ணுங்களுக்கு பணம் சம்பாதிக்க, தனக்கு ஒருதளம் அமைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு.

9ஸ்டாரைக் கேளுங்க, பக்கம் பக்கமா சொல்லுவாங்க!

:))

 
At Saturday, 02 June, 2007, சொல்வது...

VSK, நீங்கள் சொல்வது ஓரளவு உண்மை என்றாலும் பீல்டில் உச்சத்தில் இருப்பவர்கள் கூப்பிட்டு நடிக்க முடியாது என்று எந்த இள நடிகையும் சொல்லிவிட முடியுமா? ஐஸ் வேண்டுமானாலும் சொல்லலாம். அதனால் காற்று உள்ள பொழுதுதே
தூற்றிக் கொள் என்று, நடிக்க வந்தாகிவிட்டது,நாயகி என்பதெல்லாம் வெறும் கருவேப்பிலை பாத்திரம்தான் என்று நன்கு தெரிந்தும் நாலு காசு ஆச்சு, கொஞ்ச காலம் மீடியாவில் தொடர்ந்து பெயர் வரும் என்று நன்கு தெரிந்தே ஒத்துக் கொள்கிறார்கள்.

அது என்ன 9 ஸ்டார்ஸ்????

 
At Sunday, 03 June, 2007, சொல்வது...

நல்லவேளை சிவாஜி ஸ்ரீதேவி ரெண்டு படந்தான். தப்பிச்சோம். என்.டி.ஆர் விடலை. எல்லாச் சின்னப்பொண்ணுங்க கூடயும் நடச்சிட்டாரு..ஹி ஹி..அக்கினேனியும் அப்படித்தான். இப்ப ரஜினிகாந்து அதத்தான செய்றாரு. மகளுக்குக் கொழந்தை பெறந்து தாத்தாவாயாச்சு. மருமகன் ஜோடி போட்ட பொண்ணோட இவருக்குச் சோடி கேக்குது. இதெல்லாம் ஜகஜமுங்க. படத்தப் பாக்காம விடுறதுதான் நல்லது.

ஆனா பாருங்க...இதுல ரெண்டு கதாநாயகிகளைப் பத்திச் சொல்லனும். ஒருத்தரு ஸ்ரீதேவி. அக்கினேனி கூட டூயட்டுப் பாடீட்டு...ரொம்ப வருசம் கழிச்சு..அவரு மகன் கூடயும் டூயட்டு பாடுனாங்க. அப்படிப் போடுங்க ஸ்ரீதேவி. அடுத்தது கே.ஆர்.விஜயா. அறுபதுகள்ள சினிமாக்கு வந்தாங்க. மெல்லிசா அழகா இருந்தாங்க. அப்புறம் குண்டாயிட்டாங்க எழுபதுகள்ள. ஆனா பாருங்க...குண்டானப்புறமும் சிவாஜி கதாநாயகனா நடிக்கிற வரைக்கும் அவங்க கதாநாயகியா நடிச்சு நெறையப் படம் வந்தது.

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

//பீல்டில் உச்சத்தில் இருப்பவர்கள் கூப்பிட்டு நடிக்க முடியாது என்று எந்த இள நடிகையும் சொல்லிவிட முடியுமா? //

உஷா, இந்தப் பதிவின் பின்னூட்டங்களை இப்பத் தான் பார்த்தேன்.. எங்க யக்கா தங்கத் தலைவி ஜோதிக்கா 'ஜோடியா நடிக்க முடியாது'ன்னு ஆணித்தரமா சொல்லி, பட வாய்ப்பையே நழுவ விட இருந்தாங்க என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்..

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

9 ஸ்டார்ஸ் = நயன் தாரா!!
:))

 
At Thursday, 14 June, 2007, சொல்வது...

பொன்ஸ், ஜோ சந்திரமுகில ரிடையர் பிரபுவின் ஜோடி, கமலுடன் தெனாலி, வே. ஆ. விளையாடுவில். ரஜினி படத்துல
பேமண்ட், காரக்டர் சரிப்பட்டு வந்து இருக்காது. எனக்கு தெரிந்து, மறுத்தது எங்க ஐசு மட்டுமே!

வி.எஸ்.கே, புதிரை விடுவித்தற்கு நன்றி.சம்பாதிக்க நடிக்க வந்தாகிவிட்டது, இதில் கிழவன் என்ன குமரன் என்ன?

ராகவா, இத்தகைய படங்களை எல்லாம் மெல்ல டிவிடி, கேசட்டுன்னு மெதுவா வீட்டூல பார்க்கிறது.

 
At Sunday, 22 July, 2007, சொல்வது...

Ippadiye sollikkittu, naama padam paarppathai niruthuroma?

 

Post a Comment

<< இல்லம்