Friday, August 17, 2007

வேணாம்.. விட்டுடுங்க.. அளுதுடுவேன் to பா.க.ச போட்டிக்கு

இரவு ரயில் வேகமெடுக்கிறது. அந்த கம்பார்ட்மெண்டில் கூட்டமில்லை. இந்த புறம் ஒன்று அந்த புறம் ஒன்று என தலை முதல் கால்வரை போர்த்திக் கொண்டு இரு உருவங்கள் மட்டும் படுத்திருக்கின்றன.

முதல் உருவம் தூக்கம் வராமல் புரளுகிறது. உஸ் அப்பாடா, என்ன வலி என்ன வலி. முதுகு இப்படி வலிக்குதே. போட்டது எல்லாம் போறலையே... என்று புலம்பிக் கொண்டே எழுந்து உட்காருகிறது. அப்பொழுது எதிர் பக்கம் படுத்திருந்த உருவம் வேணாம்... விட்டுடு.. அளுதிடுவேன் என்று சொல்வதுக் கேட்டு, "ஆரூடா அது?" என்றுக் கேட்கிறது முதல் உருவம்.

அப்பொழுது, "எவ்வள அடிச்சாலும் தாங்குரான் இவன் ரொம்ப நல்லவன்ந்னு சொல்லிட்டாங்கம்மா " என்று அந்த குரல் தேம்புகிறது.

முதல் உருவம் ஆக்ரோஷமாய் "எவண்டா அவன், நக்கல் அடிக்கிறது?" என்று இரண்டாம் உருவத்தை பாய்ந்து தட்டுகிறது.

எழுந்து உட்கார்ந்து, கண்ணை கண்ணை தேய்த்துக் கொண்டு எதுவும் புரியாமல் முழிக்கிறார் தலை என்று அன்புடனும், பாசத்துடனும் தமிழ் வலைப்பதிவே அழைக்கும் பாலபாரதியார்.

"தம்பி, இது நல்லா இல்லே. எதுக்கு என்ன நக்கல் அடிக்கிறே?" என்றுக் கேட்கிறது முதல் உருவம்.

தல, "அண்ணே நீங்களா? நடிகர் வடிவேலுதானே நீங்க?" கேட்டதும், முதல் உருவம் தலையை ஆட்டியவாறு, "இதெல்லாம் நல்லா இல்லே" என்று மீண்டும் எச்சரித்தார் வைகை புயல்.

தல, "என்னண்ணே சொல்றீங்க? நல்ல தூக்கத்துல இருந்தேன். எழுப்பி திட்டுறீங்களே?"

வடி- தம்பி, நானே சிவனேன்னு படுத்திருந்தேன். நா படத்துல சொல்லுற டயலாக்கா நீ சொல்லிக்கிட்டு இருந்தே. நா யாரூன்னு தெரிஞ்சிதானே சொன்னே?

தல, பதில் சொல்லாமல் தேம்புகிறார்.

வடி- என்ன இது சின்ன புள்ளதனமா? நா இப்ப என்ன சொல்லிட்டேன்னு நீ அளுவுரே? கண்ண தொட மொதல்ல.

தல- அண்ணே! ஆளு ஆளுக்கு கும்முறாங்கண்ணே! தாங்கல... எத்தினி நாளுக்குதான் சிரிக்கிறா மாதிரியே நடிக்கிறது? நேத்து பய புள்ள, அவங்கூட ஆரம்பிச்சிட்டாண்ணே. ரூம் போட்டு அழுவலாம்னு பார்த்தா அங்கிட்டும் வந்துடராங்க. அதுனால ஊர்லையே தல காட்ட வேணாம்னு புறப்டூட்டேன். தூக்கத்துல என்னையறியாம என் துக்கத்த சொல்லி உங்களை டிஸ்டர்ப் செஞ்சிட்டேன் என்னிய மன்னிச்சிடுங்கண்ணே!

வடி- என்னபா இது எங்கத மாதிரியே இருக்கு? நா ஒருத்தன் தான் ஊரூ ஒலகத்துல வாரவங்க, போறவங்கக்கிட்ட அடி வாங்கிக்கிட்டு இருக்கேன்னு பார்த்தா, ஒங்கதை எந்தவிட மோசமா இருக்கே? அப்புறம்...

தல- அப்புறம் என்னண்ணே! என்னை நக்கல் அடிக்கவே ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்காங்கண்ணே! (தேம்பிக் கொண்டே) அதுல முதல் வருஷ கொண்டாட்டம்னு போட்டி வேற, ஆரூ நல்லா என்னை போட்டு தொவச்சி எடுக்கிறாங்களோ அதுக்கு பிரைசாம்.

அட கோராமையே ... வடிவேலு ஆச்சரியத்தில் வாயை பிளக்கிறார்.

தல- ஆளு ஆளுக்கு கிண்டல் ஓவரா போகுண்ணே! ஒருத்தரூ நா களவாளிபயன்னு கூட சொல்லி எல்லாரையும் சிரிக்க வைக்கிறாரூ. நானும் எத்தினி நாளுக்கு அவுங்ககூட சேர்ந்து, ஒண்ணுமே நடக்காத மாதிரி சிரிக்கிறது? மனசு தாங்கலைண்ணே!

வடி- அதுசரி! சினிமாலையாவது அடிக்கிறா மாதிரி ஆக்ட்டு கொடுப்போம். ஆனா நெஜத்துல அடிச்சா ஒடம்புதாங்குமா தம்பி?

தல- அண்ணே! உங்களுக்கு வெளக்கமா சொல்லுதேன். கணிணில இணையம் இருக்கு இல்லையா?

வடி- தம்பி, எதுனாச்சும் தமில்ல சொல்லு. அப்பத்தான் எனக்கு வெளங்கும்.

தல- கம்ப்யூட்டர்ல, நெட்டுல சங்கம்ண்ணே! அதுல என்னிய போறவங்க, வாரவங்க எல்லாம் நக்கல் அடிப்பாங்க.

வடி- கம்ப்பீட்டர்லையா? வீட்டுல எம்மவன் கூட அதுல பொழுதுக்கும் ஒக்காந்திருப்பாரூ. தம்பி!... (குரல் கம்ம) எம் மவனுக்குக்கூட ஈரோ சான்ஸ் தாரேன்னு எத்தினியோ பொட்ரூசரூங்க வாரங்க. ஆனா சொல்லி வெச்சா மாதிரி அத்தினி பேரூம், அப்பன
மகன் போட்டு போட்டு அடிக்கிற சீனு எந்த படத்துலும் வந்தே இல்லே, நீங்க ரெண்டு பேரூம் அப்படி நடிக்கணும்னு சொல்ராங்கப்பூ. அப்பா...நீ அடியே வாங்கியே சம்பாதிச்சி என்னிய வளர்த்தே, ஆனா உன்னிய அடிக்கிறா மாதிரி சீனுனா நா நடிக்க மாட்டேன்னு எம் மவன் சொல்லிட்டாம்பூ. பாசக்கார பய புள்ள!

தல- ஆனா நீங்க பேமண்ட் கரைக்டா பேசி வாங்க்கிட்டு ஒதை வாங்குறீங்க! ஆனா எனக்கு..... (முடிக்க முடியாமல் தேம்புகிறார்)

வடி- சரி சரி! எல்லாம் சரியாயிடும். ஆத்தாவ கும்பிட்டுட்டு படு. இந்த மிச்சம் கொஞ்சம் இருக்கு. போட்டுட்டு படு. நல்லா தூக்கம் வரும்.

தல வந்ததை ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று ஊற்றிக் கொண்டு படுக்கிறார். மெல்லிய குறட்டை ஒலிக் கேட்க ஆரம்பித்ததும். வைகை புயலும் தன் இருக்கையில் படுக்கிறார்.

ஆத்தா மீனாட்சி...ஏதோ இதுநாள்வர நாந்தேன் இப்படி அடி வாங்கிக்கிட்டு இருக்கேன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா இந்த தம்பி நெலம என்னிய விட மோசமா இருக்கே. ஏதோ
இம்புட்டு நாளா மனசுல ஒரு கொடச்சல் இருந்துச்சு. அது இன்னிக்கு சரியாயிடுச்சு. ஆத்தா.... என்று சொல்லிக் கொண்டே கண் மூடுகிறார்.

21 பின்னூட்டங்கள்:

At Friday, 17 August, 2007, சொல்வது...

பரவாயில்லையே உஷாக்கா!

தமாஷா கூட எழுதறீங்க!

வாழ்த்துக்கள்!

:)

 
At Friday, 17 August, 2007, சொல்வது...

:-(((

இப்படி எல்லாரும் சேர்ந்து கும்முனா அவரும் என்னதாங்க பண்ணுவாரு? வெளிய சொல்ல முடியாம இருக்கிற மனுசன இப்படியா நோகடிப்பீங்க? பாவம்ங்க... அவர விட்டுடுவோம்...

(நான் விட்டுடுவோம்னு சொன்னது வடிவேல ;))

 
At Friday, 17 August, 2007, சொல்வது...

//(நான் விட்டுடுவோம்னு சொன்னது வடிவேல ;)) //

:)

அ.பெ.கோ வாழ்க!

- பா.க.ச உண்மை ஊழியன்!

 
At Friday, 17 August, 2007, சொல்வது...

அடபாவி சிபி! அப்படினா நா இதுநாளுவரை தமாஷா எழுதினதே இல்லையா ;-)

அருட்பெருங்கோ, சிபி இது அநியாயம். ஒரு மனிதனின் கண்ணீர் காவியம் இது :-)

 
At Friday, 17 August, 2007, சொல்வது...

//அடபாவி சிபி! அப்படினா நா இதுநாளுவரை தமாஷா எழுதினதே இல்லையா ;-)//


அடக் கடவுளே!
அப்போ இத்தினி நாளா எழுதினது எல்லாமே தமாஷு பதிவுகள்தானா?

சொன்னாத்தான எங்களுக்குத் தெரியும்

நாங்க ஏதோ நீங்க பாலாபாய் மாதிரி சீரியஸான எழுத்தாளர்னல்ல நினைச்சிகிட்டி கும்மி அடிக்காம இருந்தோம்!

:(

 
At Friday, 17 August, 2007, சொல்வது...

//ஒரு மனிதனின் கண்ணீர் காவியம் இது :-)
//

ஆமாம்! பாவம்ல வடிவேலு!

அப்படித்தானங்க அருட்பெருங்கோ?

 
At Friday, 17 August, 2007, சொல்வது...

//அடபாவி சிபி! //

தவறு! திருத்திக் கொள்ளுங்கள்!

அப்பாவி சிபி என்றல்லவா இருக்க வேண்டும்!

 
At Friday, 17 August, 2007, சொல்வது...

உஷா நீங்களுமா!

'போட்டியினு வந்துவிட்டால் சிங்கம் '
பாட்டு உங்களுக்கு நல்லாவே பொருந்துது! ;))

 
At Friday, 17 August, 2007, சொல்வது...

சிபி, வேணாமய்யா! அஞ்சு பின்னுட்டம் யாராவது கண்ணுப்போட போறாங்க ;-)

பொன்ஸ், போட்டின்னு வந்துட்டா சிங்கினாலும், சின்ன பையன் அகிலன் கூட கலாய்த்தது என் சிந்தனை பொறியை
தூண்டிவிட்டது :-)))))))))))))

 
At Friday, 17 August, 2007, சொல்வது...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

 
At Friday, 17 August, 2007, சொல்வது...

//சிபி, வேணாமய்யா! அஞ்சு பின்னுட்டம் யாராவது கண்ணுப்போட போறாங்க ;-)//

எண்ணி எண்ணி பார்க்கையில் அழுகை முட்டுது!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

 
At Friday, 17 August, 2007, சொல்வது...

/சிபி, வேணாமய்யா! அஞ்சு பின்னுட்டம் யாராவது கண்ணுப்போட போறாங்க ;-)//

ம்ஹூம்!

அதர் ஆப்ஷன் மட்டும் இருந்திருந்தா இந்நேரம் 5 எல்லாம் எண்ணுறதுக்கு உங்களுக்கு நேரம் இருந்திருக்குமா என்ன?

 
At Friday, 17 August, 2007, சொல்வது...

பாவம்ங்க அந்த பேரிளம் வாலிபர். பா.க.ச. ஆட்களுக்குப் பயந்துகிட்டு அவர் ராமேஸ்வரத்துக்கே ஓடிப்போயிட்டாரு.. வங்கக்கடல் வழியா கடப்பாறை நீச்சலடிச்சு சென்னைக்கு வர்றாராம். விட்றாதீங்க.. காசிமேட்டுல வச்சு மடக்கிடுங்க.

 
At Friday, 17 August, 2007, சொல்வது...

அவ்வ்வ்வ்வ்வ்வ்........

இத படிச்சா தல அப்படி கத்துவாருன்னு சொல்ல வந்தேன் :-)

 
At Friday, 17 August, 2007, சொல்வது...

Usha,
paa.ka.sa pottikku super post thaan.
:0000))))
romba pavam Balabarathi))))

 
At Friday, 17 August, 2007, சொல்வது...

செம நக்கல் உஷாஜி.,...

அப்படியே டோண்டு சாரையும் நக்கல் அடித்து ஒரு பதிவு போடுங்களேன்.

 
At Friday, 17 August, 2007, சொல்வது...

யக்கோவ்வ்வ்.. நீங்களுமா!

:(

{பின்னூட்டங்களிலேயே தெரியுது.. நீங்களும் சங்கத்து பழைய ஆள் தான் என்று. நான் தான் தெரியாம இருந்துட்டேன். }

 
At Friday, 17 August, 2007, சொல்வது...

கண்ணுல தண்ணியே வந்துடுச்சி உஷாக்கா.

அப்டியே தலயோட மனசாட்சியா மாறிட்டீங்க.

நல்லாருங்க!

 
At Friday, 17 August, 2007, சொல்வது...

ஆஹா... சரியான தமாஸு... இதைப் படித்தால் வடிவேலுவும் பா.க.ச-வில் இணைந்து விடுவார். அதன் பிறகு தல-க்கு சினிமா சான்ஸ் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. யோசித்துப் பாருங்கள்... கவுண்டமணி - செந்தில் போல புதிய கூட்டணியாக வடிவேலு - தல! சும்மா அதிருதுல்ல...
நம்ம தல ஒண்ணும் பயப்பட வேண்டாம். அவருக்குதான் ஜெயா டி.வி.-யிலேயே கேமரா அனுபவம் கிடைத்து விட்டதே... இப்பவும் வித்லோகாவிலிருந்து கிளம்பி வேறொரு டி.வி-க்குதான் போய்விட்டதாகக் கேள்வி!

 
At Saturday, 18 August, 2007, சொல்வது...

இளா, ஆழியூரான், ஜெஸிலா, வல்லி, அழகு, கலைடாஸ்கோப், டாக்டரம்மா விமர்சனத்துக்கு நன்றி.

உண்மை தமிழன் போலி உ.த வா நீங்க? சந்தேகமா இருக்கு? நல்லா படிச்சிப்பாருங்க, இது
உண்மையில் பாலபாரதியை நக்கல் அடித்து நான் எழுதவில்லை.

தல, போலி உ.த வுக்கு சொன்னதை ஒரு தபா படிச்சிடுங்க. ஆமாம் நான் எப்போ பா.க. ச வில் சேர்ந்தேன்? எனக்கே தெரியலையே?????????

 
At Tuesday, 21 August, 2007, சொல்வது...

ரெண்டு முறை வ.வா.சங்கத்திலே உஷாவா? அது யாருங்க இன்னொரு உஷா? "ramachandranusha" veeRee, "ramachandran(உஷா)" veeReeyaa? :P

 

Post a Comment

<< இல்லம்