Sunday, July 22, 2007

துபாய் இஸ்லாமியர்கள் என் பார்வையில்

முன்பு ஒருமுறை, அமீரகத்தில் நான் பார்த்த இஸ்லாமியர்களைப் பற்றி என் வெளிப்படையான எண்ணங்களை, இந்தியாவுக்கு வந்தப்பிறகு எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன்.

பதினோறு வருடங்கள், துபாய் வாழ்க்கையை விட்டு விட்டு சூரத் வந்தாகிவிட்டது. ஒரு எழுத்தாளியாய் நான் பார்த்தவைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆவலில் நான் கேட்ட, பார்த்தவைகளை "கரையைத் தேடும் ஓடங்கள்" என்ற நாவலில் சொல்லியிருக்கிறேன்.
பிளட் மணி, விபசார வலை, ஏழை பெண்களை வேலைக்கு அனுப்பி, அந்த பணத்தில் சுக வாழ்க்கை வாழும் சொந்த பந்தங்கள் என்று சில விஷயங்களைச் சொல்ல முற்ப்பட்டிருந்தேன். கதைகளம் தமிழக இஸ்லாமியர்கள் சுற்றி என்பதால், அவர்களின் பேச்சு வழக்குகளை
இப்பொழுது படித்துப் பார்த்த ஆசிப் சரியாகவே இருக்கிறது என்று நற்சான்றிதழ் தந்துவிட்டார்:-)

அடுத்த திட்டமான, அங்குள்ள மெயிட்டுகளின் வாழ்க்கை, அன் ஸ்கில்ட் தொழிலாளர்கள் படும்பாடு இவைகளையும் ஒரு நாவல் வடிவில் எழுத வேண்டும் என்று பலரிடம் விஷயங்களை சேகரிக்க ஆரம்பித்தேன். பலரிடம் பேச்சுக் கொடுத்ததில் இந்துக்கள் யாரும் துபாய் வந்து
மதம் மாறுவதில்லை. காரணம் ஊரில் பெயர் கெட்டு விடும், குடும்பத்துக்கு பழி ஏற்படும் என்றார்கள். பல லேபர் குடியிருப்புகளில் ரபீக்கும், முருகன், சுப்பரமணி, அந்தோணிகள் சேர்ந்தே வசிப்பார்கள். ஆனால் அங்கும் சில தீவிர மத அபிமானிகள் இருந்தால்,
அவர்களிடம் இருந்து ஒதுங்கி விடுகிறார்கள்.

இஸ்லாமியராய் மாறுவதால் எந்த கம்பனியிலும் பிரமோஷன் தரப்படுவதில்லை. ஆனால் மத மாற்றம் இருக்கிறது. பில்லியனர் அரபுகளை வளைத்துப் போட மேற்கத்திய பெண்கள் மாறுகிறார்கள். இதுக்கூட தற்காலிகமாய்தான். ஓரளவு பொருளை தேற்றிக் கொண்டு, ஊர்
போய் சேர்ந்துவிடுகிறார்களாம். அடுத்து ஜெயில் கைதிகள், குரான் படித்து அதற்கான தேர்வுகளில் பாஸ் செய்தால், தண்டனை குறையும் என்பதும் செய்தி.

ஆக, அங்கு இல்லாத மதமாற்றம் இங்கு ஏன்?

பல இஸ்லாமிய பெண்களுடன் நட்பு இருந்தது. லோக்கல் அரபிகள் அதிகம் வெளியாட்களுடன் சேர மாட்டார்கள். மேல் மாடியில் குடியிருந்த பாலஸ்தீனர் முதல்,( என் வூட்டுக்காரருக்கு பெஸ்ட் பிரண்ட். இவரைப் பற்றி ஒரு பதிவே எழுதலாம். இன்று ஈழப் பிரச்சனைகளைப் படிக்கும்பொழுது அவர் நினைவு வந்தது. ஒவ்வொரு முறையும் சொல்லும் பாலஸ்தீன கதைகள் கேட்க கேட்க ஒன்றுமே பதில் சொல்ல முடியாமல், தொண்டை அடைத்துப் போகும்)
ஜோர்டான், பங்களாதேஷ், பாகிஸ்தானியர் வரை பல பெண்கள். யாரும் தங்கள் மதத்தைப் பற்றி என்னிடம் பேசியதில்லை. புர்க்கா மட்டுமல்ல, தலைக்கு ஸ்கார்ப் போடாத, பக்கத்தில் இருக்கும் மெக்கா மதினா போகாமல், மிக தைரியமாய் ரம்ஜான் மாதத்தில் உண்ணா நோம்பு கூட இருக்க மாட்டேன். ஆனால் நான் முஸ்லீம்தான், அல்லாவுக்கு மட்டும் பயப்படுவேன்
என்னைக் கேள்வி கேட்க யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாய் தன் கொள்கைகளை வெளியிடுபவர்களையும் பார்த்திருக்கிறேன். இவர்கள் சதவீதம் குறைவுதான், ஆனால் இருக்கிறார்கள்.

பெரும்பாலரிடம் காணப்படுவது அதீத மத அபிமானம். அதைப் போல இந்துக்களிடம் காணப்படுவது சாதி அபிமானம். இதில் எல்லா சாதியினரும் அடக்கம். தன் சாதியைவிட தாழ்ந்தவர்கள் வீட்டில் சாமிக்கு படைத்த (பொங்கல்) பிரசாதத்தைக்கூட நாசுக்காய் வாங்க மறுத்த சாதி வெறியைப் பார்த்து மனம் நொந்துப் போயிருக்கிறேன்.

சர்வைவல் - தானும் தன் சந்ததிகளும் பாதிக்கப்படுவார்கள் என்ற பயம் இன்றைய இஸ்லாமியர்களிடம் காண்கிறேன். மதங்களைவிட, மனிதம் சிறந்தது என்பதை பேச்சில் சொல்ல ஆரம்பித்துள்ளது இந்த பயத்தின் காரணமாய்தான். இது நல்ல அறிகுறி. இப்படி
சொல்பவர்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். இவை எல்லாம் சின்ன பொறிதான். ஆனால் பெரியதாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடம் பேச்சும் பொழுது அங்கு இங்கு சுற்றி தீவிரவாதம் பற்றி பேச்சு எழுந்து, எங்கோ சிலர் செய்வதால் எவ்வளவு பேர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற ஆதங்கம் வரும்.

கொலு வைத்தால் தெரிந்த இந்திய முஸ்லீம் குடும்பங்களும் வந்துவிடும். ஆயர்பாடி மாளிகையில் என்ற பாடலைப் பாடிய முஸ்லீம் நண்பரும், வீட்டு விசேஷத்துக்கு வந்தவர்களுக்கு குங்குமமும் தாம்பூலமும் தரும்போது, நீங்களும் சுமங்கலிகள் உங்களுக்கு தராமல் இருக்க மனசு வரவில்லை என்று வயதான மாமி ஒருவர், முஸ்லீம் பெண்களுக்கும் குங்குமம் தந்தப் பொழுது வெகு சாதாரணமாய் அதை வாங்கிக் கொண்டார்கள். இந்து என்றுத் தெரிந்து யாரும் என்னை இகழ்ந்ததில்லை. ஓரே ஒருமுறை நான் நெற்றியில் வைத்திருந்த திலகத்தை விமர்சித்தார் ஒரு அரபி டாக்டர்.

இந்திய முஸ்லீம்களிடம் கடைநிலை ஊழியர்களே அதிகம். எண்ணை கம்பனிகள், வங்கிகள் மற்றும் மல்டி நேஷனல் கம்பனிகளில் மிக உயர்ந்த உத்தியோகத்தில் இருப்பவர்களில் கணிசமானவர்கள் பிராமணர்கள்.

என்னிடம் எந்த புள்ளிவிவர கணக்கும் கிடையாது. . இது முழுக்க முழுக்க, சமூகத்தை நான் பார்த்த பார்வை, எதையும் யாரையும் விமர்சிக்க இல்லை.

29 பின்னூட்டங்கள்:

At Sunday, 22 July, 2007, சொல்வது...

நீங்கள் சொன்ன மதமாற்றம் என்பது இங்கு நடக்கிற விஷயம்தான் ஆனால் அரபிகள் யாரும் வற்புறுத்துவதில்லை. உடன் வேலை செய்யும் பாகிஸ்தானியர் முதலான வெற்று நாட்டவர் மட்டுமே மதம் மாற சொல்லி வற்புறுத்துவார்கள். எனக்கு தெரிந்த ஒரு தமிழர் இந்துவாக இருந்து முஸ்லீமாக மதம் மாறினார். ஒருமுறை அவரது வீட்டுக்கு சென்றிருந்தேன். ஊரிலிருந்து வந்து 37 வருடங்கள் ஆகிறது ஒருமுறை கூட ஊர் வந்துபோகவில்லை வசதியான வாழ்க்கை கிடைக்குமென்பதற்காக மதமாற்றம் செய்து கொண்டார். மதம் மாறுவதும் மாறாததும் அவரவர் விருப்பம் ஆனால் முஸ்லீமாக மாறியபிறகு முன்பிருந்த மதத்தை கேலியாக பேசக்கூடாது ஆனா அந்த மனுசன் ரொம்ப கேவலமா பேசி உறவுகள கூட கொச்சைப்படுத்தினார். ஏண்டா அந்தாள் போனோம்னு ஆச்சு.
எனக்கு தெரிஞ்சி மதத்தின் கொள்கைகள் பிடித்துதான் மதம் மாறுகிறார்கள் என்பது இல்லவே இல்லை, மாறாக மற்றவர்களின் வற்புறுத்தலுக்காகவும், பணத்துக்காகவும்தான் மாறுகிறார்கள்.

அமீரகத்தை விட்டு வெளிய போய்தான் இந்த கருத்தை சொல்லணும்னு இல்லயே இங்க இருந்தாலும் சொல்லலாம். :)

நாவலை பத்தி ஒண்ணுமே சொல்லலியே...
அச்சில் இருக்கிறதா அல்லது வெளிவந்துடுச்சா?

ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறிங்களே!

 
At Sunday, 22 July, 2007, சொல்வது...

தம்பி விவரங்களுக்கு நன்றி. நான் பல சாதாரண தொழிலாளிகளிடம் கேட்டு வாங்கிய விஷயங்கள் இது. எனக்கு தெரிந்து இரண்டு லவ் மேட்டரில் மட்டும் மதம் மாறினார்கள். கிருஸ்தவ மற்றும் இந்து பெண் முஸ்லீமாய் மாறினார்கள்.
பிறகு நாவல் கலைமகளில் வந்ததா என்றே தெரியவில்லை. நாளைக்கு போன் செய்துக் கேட்கலாம் என்று இருக்கிறேன்.
மெயில் ஐடி தந்தால் பிடிஎப் கோப்பு இருக்கிறது, அனுப்பி வைக்கிறேன்.

 
At Sunday, 22 July, 2007, சொல்வது...

இந்த இடுகை ஒரு ஆண்டுக்கு முன்பு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் :).

 
At Sunday, 22 July, 2007, சொல்வது...

உஷா,

இன்னும் சொல்லவந்ததைச் சொல்லலையோன்னு எனக்கொரு சந்தேகம்.
இது ஒரு 'முன்னுரை' மட்டும்தானே?

 
At Sunday, 22 July, 2007, சொல்வது...

உஷா!
சுவாரசியமான தகவல் தொகுப்பு.
பல அறியாத் தகவல்கள்.
குங்குமத்தைப் பற்றிய அரபு டாக்டரின் விடயம். அவர் டாக்டர் மாத்திரம், உலக அனுபவம் அற்றவர். என்பது என் கருத்து.
நம் பெண்கள் அன்றாடம் குங்குமம் வைக்கிறார்கள், என் பக்கத்து வீட்டு மொராக்கோ அரபுப்பெண் குங்குமம் போல் ஓர் பச்சை நெற்றியில் குற்றியுள்ளார்.
இதை என்ன? என்பது.

 
At Sunday, 22 July, 2007, சொல்வது...

லொடுக்கு, அங்கு வசிக்கும்பொழுது எழுதுவற்கும், டாடா காட்டிவிட்டு வந்தப்பிறகு எழுதுவதற்கும் வித்தியாசம் உண்டு என்று நினைக்கிறேன் :-)

துளசி, இல்லை. இவைகள் வெறும் செய்தி துணிக்கு அவ்வளவே.

யோகன், ஆம் நானும் அந்த அரபி டாக்டர் சொன்னதை தனி மனித உளரலாவே நினைத்தேன்.

திரு. அபுல், மெயில் அனுப்பியிருக்கிறேன் பாருங்கள்.

 
At Sunday, 22 July, 2007, சொல்வது...

நல்ல வேளை!! இங்கு அந்த மாதிரி எதுவும் இல்லை.நான் கேள்விப்பட்ட வரை.
மாறச்சொல்ல ஆளும் இல்லை,மாறுபவர்களும் அவ்வளவாக இல்லை,தேவையும் இல்லை.

 
At Sunday, 22 July, 2007, சொல்வது...

பணத்திற்காகவும்,சில சலுகைகளூக்காகவும் அதிகமாக மதம் மாறுபவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் இவர்களிலும் சிலர் சொந்த நாட்டிற்கு செல்லும் போது சொந்த மதத்திற்கே மாறிவிடுகிறார்கள். என்னை நினைவில் இருக்கும் எனும் நம்பிக்கையோடு,எனக்கும் ஒரு PDF கோப்பு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்

 
At Sunday, 22 July, 2007, சொல்வது...

வடூவூர் குமார், துபாயிலும் இந்துக்கள் மாறுவது இல்லை என்றே எழுதியிருக்கிறேன்

கூத்தாநல்லூராரே, அதைவிட நெருடலான விஷயம், பிலீப்பைன்ஸ் நாட்டு பெண்கள், தற்காலிகமாய் சேர்ந்து வாழ்வது மிக மிக
அதிகம். இந்த லிவ் இன் டூ கெதர் முழுக்க முழுக்க பணம் பண்ண என்றே பலரும் சொல்லியிருக்கிறார்கள். அது சரி, முதல்ல உங்க மெயில் ஐடி கொடுங்க, அனுப்பி வைக்கிறேன். நீங்க யாரூன்னு தெரியலையே????

ஏதோ நாலு பேராவது படிக்க கேட்கிறார்களே என்று மகிழ்ச்சியாய் இருக்கிறது

 
At Sunday, 22 July, 2007, சொல்வது...

//லொடுக்கு, அங்கு வசிக்கும்பொழுது எழுதுவற்கும், டாடா காட்டிவிட்டு வந்தப்பிறகு எழுதுவதற்கும் வித்தியாசம் உண்டு என்று நினைக்கிறேன் :-)// என்ன வித்தியாசம் உஷா? துளசி சொன்னது போல் எனக்கும் ஏதோ நிறைவு பெறாதது போல் தெரிகிறது. சொல்லவந்ததை எதுவுமே முழுதாக சொல்லாமல் விட்டிருப்பது போல் தோன்றுகிறது. ஒருவேளை நீளம் கருதி துண்டு துண்டாக இருக்கிறதோ?

 
At Monday, 23 July, 2007, சொல்வது...

உங்கள் பார்வையில் பட்டதை எழுதி இருக்கிறீர்கள்...

நிறைய விஷயங்கள் புதிய விஷயங்களாக இருந்தது.....!!!!!!!!

 
At Monday, 23 July, 2007, சொல்வது...

ஜெஸி, அமீரகத்தில் இருக்கும்பொழுது இதை எழுதியிருந்தால் உண்மையை மறைந்த்து பயந்து மற்றும் ஏதோ கால்குலேஷனில் எழுதுவதாய் பொருள் கொள்ளப்படும் சரிதானே :-) அதனால்தான் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அமீரக வாழ்க்கைப் பற்றி
எழில் என்பவரின் பதிவில் (என்று நினைக்கிறேன், சேமிக்கும் வழக்கமில்லை) ஒரு பின்னுட்டத்தில் , ஊரூக்கு திரும்பியதும் உண்மையை எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன்.
செய்திகளைச் சொல்ல
முற்பட்டதால் கட்டுரையாக வரவில்லை, டிட்பிட்ஸ்ஸாக அமைந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

ரவி, நன்றி

இல்யாஸ்,
அனுப்புகிறேன். பிற சமூகத்தைச் சார்ந்தவர்களின் வழக்கு பேச்சுகள் என்னத்தான் ஹோம் ஓர்க் செய்தாலும்,
எங்காவது சொதப்பி விடும். யாரிடமாவது கொடுத்து சரிப்பார்க்க சொல்லலாம் என்று நினைத்தும் நேரமில்லாமல் போய்விட்டது.
அதனால் குற்றம் குறை இருக்கலாம் என்று முன்னாடியே சொல்லிவிடுகிறேன்.

 
At Monday, 23 July, 2007, சொல்வது...

your views on emirates life is nearly correct. but in gulf countries, UAE life is better than other GCC.

 
At Monday, 23 July, 2007, சொல்வது...

please send me your naovel to my mail id

 
At Monday, 23 July, 2007, சொல்வது...

லஷ்மி, மன்சூர், இலியாஸ் அனுப்பியாச்சு.
rmslv உங்க மெயில் ஐடி இல்லை.

 
At Monday, 23 July, 2007, சொல்வது...

Please send me the novel in PDF format

 
At Monday, 23 July, 2007, சொல்வது...

பிளட் மணி, விபசார வலை, ஏழை பெண்களை வேலைக்கு அனுப்பி, அந்த பணத்தில் சுக வாழ்க்கை வாழும் சொந்த பந்தங்கள் என்று சில விஷயங்களைச் சொல்ல முற்ப்பட்டிருந்தேன். //

ரொம்ப அருமையான முயற்சியை எடுத்து செய்து விட்டு, ரொம்ப சாதாரணமாக சொல்றீங்க.

எனக்கும் ஒரு காப்பி அனுப்புங்கோவ் karthikprab at gmail.com

 
At Monday, 23 July, 2007, சொல்வது...

ஷாகுல், உங்க மெயில் ஐடி தரலையே ???

தெ.கா, தம்பி அனுப்பியாச்சு

 
At Monday, 23 July, 2007, சொல்வது...

எனக்கும் ஒரு பார்சல் ப்ளீஸ்:-)

 
At Monday, 23 July, 2007, சொல்வது...

enakku oru copy please.

anitharaam@yahoo.com

 
At Monday, 23 July, 2007, சொல்வது...

இளவெண்ணிலா, உங்களுக்கு அனுப்பியது பவுன்ஸ் ஆகிவிட்டது. மெயில் ஐடியை சரிப்பாருங்கள்.

துளசி, மரக்காயர் அனுப்பியாச்சு

 
At Tuesday, 24 July, 2007, சொல்வது...

எனக்கும் ஒரு பார்சல் ப்ளீஸ்:-)

 
At Sunday, 05 August, 2007, சொல்வது...

உஷா,


நன்றாக எழுதியுள்ளீர்கள், இருபக்கங்களையும் எவ்வித காழ்ப்புணர்வுமில்லாமல் எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து ஒரு தொடராகவே எழுதவேண்டும் இதை நீங்கள். நன்றி.

 
At Sunday, 05 August, 2007, சொல்வது...

நன்றி திரு.நேசகுமார். முழுக்க முழுக்க துபாய் முறை சாரா பணியாளர்கள் வாழ்க்கையைப் பற்றி நாவல் வடிவில் எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

திரு. அதியமான், உங்கள் இந்திய பொருளாதார பதிவு ஒன்றை காப்பி, பேஸ்ட் செய்து அனுப்பியிருக்கிறீர்கள். தவறாக இல்லை என்றாலும், பதிவுக்கு சம்மந்தமில்லாமல் இருப்பதாய் என் மனதிற்கு பட்டதால், அதை இங்கு பிரசுரிக்கவில்லை. மன்னிக்கவும்.

 
At Thursday, 23 August, 2007, சொல்வது...

Please send me the copy of novel @
vichuammu@gmail.com

 
At Monday, 03 September, 2007, சொல்வது...

நண்பருக்கு, நுனிப்புல் பதிவின் தலைப்பு அருமை. இதென்ன குதிரை மேயும் நுனிப்புல்லா...?
சென்ற வருடம் எனது நண்பர் ஒருவர் சென்னையிலிருந்து "தமிழ்கொடி" என்கிற உலகத்தமிழர்கள் நாட்டிய கொடி பற்றிய ஒரு தொகுப்பைக் கொண்டுவர என்னிடம் வனளகுடா நாடுகள் பற்றி எழுதித் தரும்படி கட்டுரை கேட்டார். அப்பொழுது எனக்கு வலைப்பதிவுகள் பற்றி ஒன்றும் தெரியாது. அதனால் இணையங்கள் வழிபெற்ற தகவல்களைக் கொண்டு "பணம் தேடிச் செல்லும் பாய்மரங்கள்" என்கிற கட்டுரை ஒன்று எழுதினேன். அது வருட மலர் எனபதான ஒரு பதிவை அவர் என்னிடம் உருவாக்கியதால் எழுதும்போது உருவாகும் ஆழ்மனதின் "பண்பாட்டு காவல் கண்காணிப்புகள்" மற்றும் வாசகர் பற்றிய புரிதல்கள் (நீங்கள் அதைதான் துபாயில் இல்லாமல் இந்தியாவில் வந்து எழுதுவதாகக் கூறியுள்ளீர்கள்) கட்டுரையை வெறும் புள்ளிவிபரங்களாக மாற்றியது. தரவுகளும் வளைகுடா நண்பர்கள் வழியாக பெற்ற அனுபவங்களும் இல்லாமல். பொய்கள் இரண்டுவகை ஒன்ற பொய் மற்றது புள்ளிவிபரம் என்பார்கள். நிற்க.. எதேச்சையாக உலவியதில் உங்களை இங்கு வந்து அடைந்தேன். எழுப்பியிருக்கும் பிரச்சனை ஒரு உண்மையான மனதின் வாக்குமூலம் போல் உள்ளது. "அதிகாரத்தின் முன் உண்மையை பேசு"-என்பது ஒரு பின் நவீணத்துவ நிலைப்பாடு.. நீங்கள் எல்லா உண்மைகளையும் முழுமையாக பேசுங்கள். போற்றலும் தூற்றலும் இருக்கத்தான் செய்யும். வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அவர்கள் குறித்து உருவாக்கப்படும் தவறான பதிவுகள் ஆகியவற்றை இனியாவது வெளிப்படுத்ததான் வேண்டும். இந்தியாவில் ஐரோப்பிய அமேரிக்க நாடுகளின் NRI-களுக்கு உள்ள மதிப்பும் மதிப்பீடும் வளைகுடா NRI-களுக்கு கிடைப்பதில்லை. காரணம், அது அரேபிய நாடுகள் பற்றிய தவறான புரிதலை உருவாக்கியுள்ள மேற்கத்திய நாடுகளின் விளைவு.. எட்வர்ட் சைத்தின் "ஓரியண்டலிஸம்" இதனை விரிவாக விளக்குகிறது. தமிழில் பெயர்க்கப்பட வேண்டிய ஒரு முக்கி நூல் அது. இது விடாமல் தொடரும்.. பின்னோட்டத்தில் இந்த விரிவு ரொம்பரொம்ப........ அதிகம்.. (ன மற்றும் ண வில் என்னால் ஒரு முடிவிற்கு என்றமே வரமுடியவில்லை எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும்.) நன்றி...

 
At Monday, 03 September, 2007, சொல்வது...

திரு.ஜமாலன், பதிவு எழுதி பல வாரங்களுக்கு பின்பு இன்று (3/9/2007) இதற்கு ஒரு பின்னுட்டம் கண்டு ஆச்சரியம் அடைந்தேன். நண்பர் ஒருவருடன் துபாய் வாழ்க்கையைப் பற்றி எழுந்த கருத்து வேறுப்பாட்டில் துபாயை விட்டு வெளியேறியவுடன்
"உண்மையை" எழுதுகிறேன் என்று விளையாட்டாய் சொன்னதை நினைவில் வைத்து, என் கருத்துக்களை எழுதினேன்.
என் கணிப்பில் எழுத்தாளர் எந்த சார்பு நிலையும் இல்லாமல் எழுத வேண்டும் என்பது என் எண்ணம். உண்மை என்பதைவிட, மனதிற்கு பட்டதை வெளிப்படையாய் சொல்லி வேண்டிய அளவிற்கு தூற்றலும் சிறிது போற்றலும் அடிக்கடி வாங்கிக் கொண்டு
இருக்கிறேன் :-)
நுனிப்புல் - பெயர் காரணம் எந்த சப்ஜெட்டிலும் பெரிய அறிவோ தெளிவோ கிடையாது என்பதுதான். உங்கள் நீண்ட பின்னுட்டம்
பல விஷயங்களை தொட்டு செல்கிறது. என்றாவது ஒரு நாள் தொடரலாம்.

 
At Monday, 03 September, 2007, சொல்வது...

எனக்கும் ஒரு பார்சல் ப்ளீஸ்:-)

 
At Monday, 03 September, 2007, சொல்வது...

விவேக், உங்களுக்கு அனுப்பிட்டேன். கிடைத்ததா பாருங்கள்.

தருமி சார், உங்க மெயில் ஐடி இல்லையே, அனுப்புங்க. பார்சல் வரும்

 

Post a Comment

<< இல்லம்