Tuesday, July 31, 2007

பிலாக்கோ போபியா

இடம் . மருத்துவமனை
நேரம் மாலை நேரம்
பாத்திரங்கள் மனநல மருத்துவர் மற்றும் எழுத்தாளினி ஏகாம்பரி


(அருமையான அறை. இதமான குளிர். கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல், பாசத்துடனும், அன்புட்னும், கருணைப் பொங்கும் பார்வையுடனும் புன்னகைத்தார் மருத்துவர்.)

மருத்துவர்- சொல்லுங்கம்மா உங்கள் பிரச்சனை என்ன?

ஏகாம்பரி- ராத்திரி சரியா தூக்கம் வரதில்லை. மண்டைக்குள்ள குடச்சலா இருக்கு டாக்டர்.

மரு- அப்புறம்...

ஏகாம்பரி- (குரலைக் கொஞ்சம் தாழ்த்திக் கொண்டு) டாக்டர் என்னை பலர் வாட்ச் செய்கிறார்கள்

மரு- ம்ம்ம்.. ஏன் அப்படி உங்களுக்கு தோணுது.

ஏகா- இது எந்த போபியாவும் இல்லை.நான் சொல்வது உண்மை. என்னிடம் புரூப் இருக்கிறது

மரு- சரி, சரி

ஏகா- நான் என்ன சொன்னாலும் விமர்சனம் செய்கிறார்கள். சாதாரண பேச்சுக்கூட இரட்டை, நான்கு அர்த்தங்கள் கண்டுப்பிடிக்கிறார்கள் கன்னா பின்னான்னு கேள்விக் கேக்குராங்க, பதில் சொல்லாம பேசமா இருக்கவும் முடியலை. மாட்டிக்காம பதில் சொல்லறதுக்குள்ள மண்டை காஞ்சி போகுது டாக்டர்..

மரு- நீங்க உங்க இன்லாஸ் கிட்ட கொஞ்சம் சுமுகமாய் நடந்துக்கிட்டா எல்லாம் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

ஏகா- இன்லாசா? என் கணவரோட பேரண்ட்ஸ் காலமாகி பல வருஷம் ஆச்சு. அவருக்கு ஓரே அண்ணன், அவரும் கானடால செட்டில் ஆயிட்டார். எனக்கு சொந்த பந்தங்களால ஒரு பிரச்சனையும் இல்லே.

மரு- நீங்க வேலை இடத்துல பிரச்சனையா?

ஏகா- இல்லே டாக்டர் நான் ஒரு ஹோம் மெக்கர். ஆனா நான் ஒரு ரைட்டர்.

மரு- வெரி குட் வெரி குட். இப்படி வீட்டுல சும்மா இல்லாமல், யூஸ்புல்லாக டைம்மை ஸ்பெண்ட் செய்யறது ரொம்ப நல்லது. என் ஓய்ப்க்கு கூட மங்கையர் மலர்னா ரொம்ப பிடிக்கும்...

(அவர் முடிக்கும் முன்பு சீறிக் கொண்டு எழுந்தது ஏகாம்பரியின் குரல்)
டாக்டர், பொம்பளைங்க எழுத்துனா சமையல், அழகுக்குறிப்புன்னு மங்கையர்மலர் வகையாதானா? நான் எழுதுவது எல்லாம் சுய சிந்தனை எழுத்துக்கள். விளிம்பு நிலை வாழ்க்கையில் இருந்து பெண்ணீயத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சி. பெண்களை
அடுத்த நிலைக்கு நகர்ந்தும் சிந்தனைகள்.

மரு- (ஒரு மாதிரி பேஸ்த்து அடித்த முக பாவனையுடன்) சரிங்கம்மா. ஆனா நீங்க பேசுகிற தமிழ்தான் புரியலை. சரி, இப்ப உங்க பிரச்சனைக்கு வருவோம்.

ஏகா- டாக்டர், நான் ஒரு முறை மார்சீச சிந்தனைகளில் பெண்ணீயம் என்று கட்டுரை எழுதினேன். அதற்கு பலராலும் பாராட்டப்பட்டதற்கு சிலருக்கு பொறாமை. அதனால் தான் என்னை கரம் வைத்து அவமானப்படுத்துகிறார்கள்.

மரு- இருங்க, இருங்க கம்யூனிசமா? இது எல்லாம் கொஞ்சம் ஆட் சப்ஜெட் ஆச்சே?

ஏகா- டாக்டர் சார், உங்கக்கிட்ட சொல்ல என்ன? இண்டர் நெட்ல கூகுளில் போய் சர்ச் போட்டா கடவுளே கூட கிடைப்பார். அப்படி இருக்க, மார்சீச சிந்தனைகளை அகப்படாதா என்ன? அப்படியே படிச்சி, அங்கங்க நம்ம சரக்கையும் தூவி, ரைட்டிங் ஸ்டைல மாத்தி எழுதினா ஆச்சு.

மரு- (யோசனையுடன்) உம்ம்ம்

ஏகா- கவிதைகள் கூட நிறைய எழுதியிருக்கிறேன் . அறுந்து தொங்கும் குறிகள்...

(டாக்டர், கையில் உருட்டிக் கொண்டு இருந்த பேப்பர் வெயிட் கீழே விழுகிறது..)
மரு- வாட்? அறுந்து.. கூ கூ கூ...

ஏகா- அறுந்துத் தொங்கும் முலைகள் என்று பெயர் வைக்கலாம்னு இருந்தேன். ஆனால் இது ரொம்ப காமன் ஆயிடுச்சு. அதனால பெயரை மாத்திட்டேன். இவை எல்லாம் மாஜிக்கல் ரியலிசம் வகையறா. அடுத்து தொடர்கவிதை இடானி பேய்களும் மூத்திரகடுப்பும் என்ற தலைப்பில் வரும்.

மூடி வைத்த டம்பளரில் இருந்த நீரை மடமடவென்றுக் குடிக்கிறார் டாக்டர். கைக்கூட்டையை எடுத்து அழுத்தி முகத்தைத் துடைத்துக் கொள்கிறார்.

மரு- முதல்ல கம்யூனிசம் இப்ப பேய் , மாஜிக் ...குழப்புறீங்களே..அது சரி, உங்களை யாரோ வாட்ச் பண்ணுராங்கன்னு சொன்னீங்களே??

ஏகா- ஆமாம் டாக்டர். நான் என்ன சொன்னாலும் கிரிட்டிசை செய்யராங்க. எப்போதும் என்னை வாட்ச் செஞ்சிக்கிட்டு இருக்காங்க.

மரு- யாரூமா

ஏகா- சக பதிவாளர்கள் டாக்டர்.

மரு- அப்படினா பப்ளிஷர்ஸா?

மரு- பிளாக்ர்ஸ் டாக்டர். இந்த இண்டர் நெட்ல பிளாக்ஸ் எழுதுவது...

மரு- ( நன்கு சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டு) பிளாக்கா? (குரலில் அலட்சியம்) அப்ப நீங்க எழுதுவது எல்லாம் பிளாக்குலையா? கொஞ்சம் எந்திரிச்சி உங்க பின்னால இருக்கிற ஜன்னல் ஸ்கீரினை திறந்துப் பாருங்க.

(ஏகாம்பரி அப்படியே செய்கிறாள்.)

மரு- இந்த பில்டிங்குக்கு பின் பக்கம் இன்னொரு என்ட்ரன்ஸ் இருக்கு. சைட்டு ரோடுல பார்த்தீங்களா எவ்வளவு கூட்டம்? எல்லாருக்கு உங்க வியாதிதான். பிளாக்கோ போபியா. என் ஓய்ப் இதுல ஸ்பெஷலிஸ்ட். இண்டர்னெட்டால ஏற்படும் அனைத்து வியாதிகளைப் பற்றி லண்டல பி.எச்.டி வாங்கியிருக்காங்க. அதை தவிர பேஸ்மெண்டில் என் மாமனார்,
அலோபதி மருந்தால இந்த போபியா குணமாகலைன்னா, தாயத்து, ரட்சை, தகடு எல்லாம் மந்திரிச்சி தரார். அதுக்கும் ஏகப்பட்ட டிமாண்ட். இந்தாங்க என்னோட கார்ட் நா அனுப்பினேன்னு சொல்லுங்க. அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கிட்டு போங்க.

ஏகாம்பரி எழுந்துப் போனதும், சே.. வர பேஷண்டு எல்லாம் ஓரே கேஸ். முதல்ல நாமும் இந்த சப்ஜெட்டுல ஏதாவது படிச்சி, நாமும் பொண்டாட்டி லைனுக்கே போயிடணும். இல்லாட்டி நம்ம கதை கந்தல்தான் என்று முணுமுணுத்துக் கொண்டு, வேறு பேஷண்ட் யாரும் இல்லாததால், கடையை முடுகிறார்.

59 பின்னூட்டங்கள்:

At Tuesday, 31 July, 2007, சொல்வது...

வழக்கம் போல கலக்கல்... :)

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

//நான் எழுதுவது எல்லாம் சுய சிந்தனை எழுத்துக்கள். விளிம்பு நிலை வாழ்க்கையில் இருந்து பெண்ணீயத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சி. பெண்களை
அடுத்த நிலைக்கு நகர்ந்தும் சிந்தனைகள்.//

தெரியும் தெரியும். :))))

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

//அறுந்துத் தொங்கும் முலைகள் என்று பெயர் வைக்கலாம்னு இருந்தேன். ஆனால் இது ரொம்ப காமன் ஆயிடுச்சு. அதனால பெயரை மாத்திட்டேன். இவை எல்லாம் மாஜிக்கல் ரியலிசம் வகையறா. அடுத்து தொடர்கவிதை இடானி பேய்களும் மூத்திரகடுப்பும் என்ற தலைப்பில்//

கியா ஹூவா!
லூஸ் ஜைஸா ஹஸ்தா தோ, ஆபீஸ்மே லோக் ஃபிர் கைஸா தேக்கே கா?
குச் போல்கே ஃபிர் ஹஸோ.

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

லஷ்மி, என்ன வழக்கம் போலே ன்னுட்டீக ??

இலவசம், இதுதானே வேணாங்கரது
:-) அது என்ன தெரியும் தெரியும்???

சுல்தான் பாய், திட்டுவது என்றால் நேரா திட்டிடுங்க. நானே குஜராத்தி படிக்கலாமா அல்லது ஸ்ரெய்டா இந்திக்குப் போயிடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன் ;-))))

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

இந்தப் பதிவை இன்னும் மோகன்தாஸ்
பார்க்கவில்லையாட்டம் இருக்குது.
இது மோகன் தாஸீக்கு உள்குத்தா, வெளிக்குத்தான்னு தெரியிலையே.

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

தாமோதர் சந்திரு, இது நல்லா இல்லே. அத்தனை புகழும் மோகன் தாஸ்க்கு என்றால் நான் ஒத்துக்க மாட்டேன். என்னமோ
வந்தோமா படிச்சமோன்னு இல்லாம, யதார்த்தமான என் படைப்புக்கு (!) இப்படி எல்லாம் அருஞ் சொற்பொருள் கண்டுப்பிடிப்பதை நான் வன்மையாய் கண்டிக்கிறேன். (தம்பி தா.சந்துரு ஓரே ஒரு ஸ்மைலி வெச்சிக்கிறேன் :-)

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

நீங்களும் பெண்ணீயமா.அடடா...

அடுத்த நிலைன்னா என்ன அர்த்தம். மைனஸா பிளஸ்ஸா...

இப்படியெல்லாம் லகலகக்க உஷாவுக்குத் தெரியுமா.
எல்லாத்துக்கும் ஸ்மைலி போட்டுக்கவும்.
இல்லை நானே போடறேன். இந்த ந்போபியாலேருந்து வெளில வந்தா நல்லதா. இல்ல குணா மாதிரி இப்படியே செட்டிலாகிடலாமா:))))))

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

//அப்படியே படிச்சி, அங்கங்க நம்ம சரக்கையும் தூவி, ரைட்டிங் ஸ்டைல மாத்தி எழுதினா ஆச்சு.//

// என்னமோ
வந்தோமா படிச்சமோன்னு இல்லாம, யதார்த்தமான என் படைப்புக்கு (!) இப்படி எல்லாம் அருஞ் சொற்பொருள் கண்டுப்பிடிப்பதை நான் வன்மையாய் கண்டிக்கிறேன்.//

//நான் எழுதுவது எல்லாம் சுய சிந்தனை எழுத்துக்கள். விளிம்பு நிலை வாழ்க்கையில் இருந்து பெண்ணீயத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சி. //

இப்போதைக்கு இந்த மூன்று முரண்பட்ட சிந்தனைகளையும் அவை சார்ந்த உள்குத்துக்களையும் மட்டும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

மேலும், இருபதாம் நூற்றாண்டில் உதித்து, இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பெருமையடைந்த ஒரு பெரும் புலவர் சொன்னார்:

பெண்
ஒரு நாவல்

முரண்படும் பல பாத்திரங்களை
முழுதாக உள்ளே கொண்டவள்

என்று.

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

ஓஹோ.... அப்படின்னா இது வியாதியா.. :)

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

என்னது இந்தப் பதிவை நான் படிக்கலையா?

ஹ ஹஹ ஹஹஹா

உஷாக்கா உள்குத்து பிரம்மாதம்! புரியவேண்டியவங்களுக்குப் புரிஞ்சிருக்கும்.

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

வல்லிம்மா, இந்த விளிம்பு நிலை, அடுத்த நிலைக்கு நகர்த்துவது போன்ற சொற்சொடர்களை சமீபத்தில் படித்து அறிந்துக் கொண்டது. புதுசா கத்துக்கிட்டதை காட்டிக் கொள்ள அவைகளை உபயோகித்துக் கொண்டேன். அஷ்டே :-)
மத்தப்படி போபியா அதிகம் தூக்கத்தைக் கெடுக்கவில்லை என்றால் அப்படியே விட்டுவிடலாம் :-)

பினாத்தலாரே! ஏதாவது கிளப்பாட்டி உமக்கும் உம்ம தோஸ்துக்கும் தூக்கம் வராதே, ஆரம்பிங்கையா ஆரம்பிங்க.

சென்ஷி, சிம்டம்ஸ் சீரியஸ்னா ஆம் வியாதியேதான் :-)))

தாசு, இது ஓவரூ. இல்லாதத ஊதி ஊதி பெருசாக்காதீங்கப்பூ

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

அய்யோ கலக்கலா இருக்குங்க..
:))

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

:-)

நெசமாவே இது மாதிரி ஃபோபியா எல்லாம் இருக்குதுங்களா?

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

//பெண்
ஒரு நாவல்

முரண்படும் பல பாத்திரங்களை
முழுதாக உள்ளே கொண்டவள்//

::இந்தப்பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம், வழக்கம் போல நானும் பினாத்தலாரும் போடும் கடலை இது::


முரண்படும் பல பாத்திரங்களை!
எதுவாகினும் சுத்தமாய்
கழுவி கமுத்த
Mr. White

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

:)))

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

கலக்கல் உஷா.

//டாக்டர், பொம்பளைங்க எழுத்துனா சமையல், //

ஆமா இப்படியெல்லாம் சிந்திக்கிற இந்த ஏகம்பரிக்கு, மொதல் மூணாவது வரியிலேயே
(சமையலுக்குத் தேவையான) பாத்திரங்கள் வந்துருதே:-)))))))

போதாக்குறைக்கு பின்னூட்டங்களிலும் அதே பா*****ள்.
இன்னொருத்தர் அதை கழுவியே கமுத்துட்டார்:-))))))))))))

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

பாவம் உஷா...
அந்த டாக்டர். ஹ்ம்ம்

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

முத்து லட்சுமி நன்றி

குழந்தாய் காட்டாறு, இது நம் டாக்டர் மேடத்தைக் கேட்க வேண்டிய கேள்வியில்லையா???

இளா! அடடா, இதுதானய்யா ஆண்"ஈயம்"

பாபா :-)

துளசி, அவங்க அவங்க நெனப்பு. ஆமாம், இது என்ன புதுசா **** எல்லாம் போட்டு கெட்ட வார்த்தையா :-))))

டெல்பின் மேடம், பாருங்க அவங்க அவங்க எண்ணம் எப்படி இருக்கும்ன்னு இப்பத்தான் சொன்னேன், யாருக்குமே நினைப்புக்கூட வராத டாக்டர் பாத்திரத்தின் மீது உங்களுக்கு மட்டுமே பரிதாபம் வருகிறது :-)

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

//பாவம் உஷா...
அந்த டாக்டர். ஹ்ம்ம்//

//டெல்பின் மேடம், பாருங்க அவங்க அவங்க எண்ணம் எப்படி இருக்கும்ன்னு இப்பத்தான் சொன்னேன், யாருக்குமே நினைப்புக்கூட வராத டாக்டர் பாத்திரத்தின் மீது உங்களுக்கு மட்டுமே பரிதாபம் வருகிறது :-)//

பாவம் உஷான்னு சொல்லி இருக்காங்க. பரிதாபம் டாக்டரைப் பார்த்து இல்லை!!!! :-D

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

இலவசம் நீரூ சொன்னா சரிதான். ஏதோ என்னைப் பார்த்தும் பரிதாபப்பட ஒரு ஜீவன் இருக்கே :-)

 
At Tuesday, 31 July, 2007, சொல்வது...

இதுக்கு பி.எச்.டி பட்டம் வேற இருக்கா...

சுத்தம்...

:)))

கலக்கல்.

 
At Wednesday, 01 August, 2007, சொல்வது...

:))

 
At Wednesday, 01 August, 2007, சொல்வது...

:))

 
At Wednesday, 01 August, 2007, சொல்வது...

உஷா

:))).உங்க வீட்டில ஏஸி வேலை செய்யறது தெரியுது.அதான் பதிவு கூலோ கூல்

 
At Wednesday, 01 August, 2007, சொல்வது...

ஜே. கே, மணியன், பாரி அரசு ஏதோ என்னால உங்களை புன்னகைக்க வைக்க முடிந்ததே அதுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன் :-)

பத்மா, ஏசி இருந்து என்ன புண்ணியம்? கரண்டு போயி போயி வருது.

 
At Wednesday, 01 August, 2007, சொல்வது...

மறக்காம அந்த மருத்துவர் கொடுத்த முகவரிக்கு போய் அவர் மனைவியை பார்த்துட்டு வந்திடுங்க. அதான் எங்களுக்கு நல்லது. :-)

கலக்குறீங்க (-:

 
At Wednesday, 01 August, 2007, சொல்வது...

//நான் என்ன சொன்னாலும் விமர்சனம் செய்கிறார்கள். சாதாரண பேச்சுக்கூட இரட்டை, நான்கு அர்த்தங்கள் கண்டுப்பிடிக்கிறார்கள் கன்னா பின்னான்னு கேள்விக் கேக்குராங்க//


//நான் ஒரு முறை மார்சீச சிந்தனைகளில் பெண்ணீயம் என்று கட்டுரை எழுதினேன். அதற்கு பலராலும் பாராட்டப்பட்டதற்கு சிலருக்கு பொறாமை. அதனால் தான் என்னை கரம் வைத்து அவமானப்படுத்துகிறார்கள்.//

//அறுந்து தொங்கும் குறிகள்...

(டாக்டர், கையில் உருட்டிக் கொண்டு இருந்த பேப்பர் வெயிட் கீழே விழுகிறது..)
மரு- வாட்? அறுந்து.. கூ கூ கூ...//

//அறுந்துத் தொங்கும் முலைகள் என்று பெயர் வைக்கலாம்னு இருந்தேன். ஆனால் இது ரொம்ப காமன் ஆயிடுச்சு. அதனால பெயரை மாத்திட்டேன். இவை எல்லாம் மாஜிக்கல் ரியலிசம் வகையறா. அடுத்து தொடர்கவிதை இடானி பேய்களும் மூத்திரகடுப்பும் என்ற தலைப்பில் வரும்.//


அடேங்கப்பா.... ஒரே பதிவில இத்தனை பிரச்சினையை தொட்டுட்டு போய்யிருக்கீங்களே....

கலக்கல் போங்க. இதற்கு கூடிய சீக்கிரம் ஒரு பதில் பதிவை எதிர் பார்க்கிறோம். யார்க்கிட்ட இருந்துன்னு கேக்காதீங்க.

அது படிக்கற எல்லாருக்குமே தெரியும்....

உஷா உங்களுக்கு தனியா ஒரு பெரிய்ய சல்யூட்.

http://blog.nandhaonline.com

 
At Wednesday, 01 August, 2007, சொல்வது...

என்ன ஜெஸிலா இப்படி சொல்லிட்டீங்க? நான் ஒரு சாதாரண எழுத்தாளினி. புரியாத கவிதை, பெண்ணீயம் எல்லாம்
நான் எழுதி நீங்க பார்த்து இருக்கீங்களா? அப்படி இருக்க, தூக்கம் வராமல் தவிக்கும் நிலை எல்லாம் எனக்கு வராது ..ஹூம்
பெருமூச்சுங்க.

நந்தா, இது அநியாயம். ஏதோ யதார்த்தமாய் நல்ல பாருங்க நகைச்சுவை, நையாண்டில வகைப்படுத்தி இருக்கிறேநன்
எழுதப் போக இப்படி எல்லாம் அர்த்தம் கண்டுப்பிடித்தால் எப்படி? அது சரி, எங்கோ, யாரோ தெரியும்னு சொல்றீங்களே, யாருங்க. எனக்கு தனிமடலிலாவது தெரியப்படுத்துங்க. சஸ்பென்ஸ் தாங்கலை :-)))

திராவிடா அவர்களே, பதிவுக்கு சம்மந்தம் இல்லாத உங்கள் பின்னுட்டத்தை அனுமதிக்காததற்கு மன்னிக்கவும்.

 
At Wednesday, 01 August, 2007, சொல்வது...

//சுல்தான் பாய், திட்டுவது என்றால் நேரா திட்டிடுங்க.//
ஆபிஸ்ல பதிவைப் படிச்சிட்டு திரும்பிப் பார்த்தா, பசங்க நம்மளை ஒரு மாதிரி பார்க்கிறாரனுங்க. யாருக்கும் தமிழ் தெரியாது. அதனால
கியா ஹூவா! - என்ன ஆச்சுங்கடா
லூஸ் ஜைஸா ஹஸ்தா தோ, ஆபீஸ்மே லோக் ஃபிர் கைஸா தேக்கே கா?
லூஸ் மாதிரி சிரிக்கிறவனை ஆபீஸ்ல மத்தவங்க பின்னே எப்டி பார்ப்பாங்களாம்
குச் போல்கே ஃபிர் ஹஸோ.
ஏதாவது சொல்லிட்டு சிரி

தமிழ் தெரியாதவன்ட்ட என்னத்தைச் சொல்றது.

உஷா மேடம் - திட்டிட்டேன்.

 
At Wednesday, 01 August, 2007, சொல்வது...

சுல்தான் பாய், எனக்கு மொழிபெயர்த்து சொன்னதுக்கு நன்றி. ஆனா எதுக்கு சிரிச்சீங்கன்னு அவங்களுக்கு மொழி பெயர்த்து
சொல்லிடாதீங்க. பயந்துட
போறாங்க :-)

 
At Wednesday, 01 August, 2007, சொல்வது...

உஷா,
உங்க அக்மார்க் பெண்ணாதிக்க உணர்வு புரியுது.. பின்ன பாருங்க, புது டெக்னாலஜிக்கலான மருத்துவரை டாக்டரம்மான்னும், ஈ ஓட்டிகிட்டு இருக்கும் ஆளை டாக்டர் ஐயான்னும் படைச்சிருக்கீங்களே..

(ஹி ஹி,.. இல்லாத உள்குத்தை தேடி பற்றவைக்க எல்லாரும் முயலும்போது, தவறவிடப்பட்ட ஒன்றை நானும்.. ;) )

 
At Wednesday, 01 August, 2007, சொல்வது...

என்னத்த சொல்ல:-))

 
At Wednesday, 01 August, 2007, சொல்வது...

என்ன பொன்ஸ் அப்படி சொல்லிட்டே? இதெல்லாம் சப்கான்ஷியஸ் மைண்டுல இருக்கு போல :-) பாரேன் ஈ ஓட்டுகிற
கேரக்டருக்கு ஆணையும், கூட்டமாய் தேடி வருகிற கேரக்டருக்கு பெண்ணையும் என்னையறியாமலேயே போட்டு இருக்கிறேன் ;-)
(உஷா, வேண்டாம் செ.செ. சூ இது)

சூரியன் தி பாஸ், நன்றி

 
At Wednesday, 01 August, 2007, சொல்வது...

//(உஷா, வேண்டாம் செ.செ. சூ இது)//

ஏற்கனவே கும்மியை கும்பி என எழுதி தமிழ் மொழிக்கே ஒரு புதிய சொல்லைத் தந்த பெருமை உங்களுக்கு உண்டு.

அப்படி இருக்கும் போது சொ.செ.சூ என்ற பதத்தை செ.செ.சூ என எழுதி மேலும் ஒரு சிறகை உங்கள் தொப்பியில் சூடிக்கொள்ள ஆசையா?

//இதெல்லாம் சப்கான்ஷியஸ் மைண்டுல இருக்கு போல :-) //

இப்படி எல்லாம் சொன்னாலும் கான்ஷியஸா எழுதினதுதான்னு எங்களுக்குத் தெரியாதா என்ன? :)

 
At Wednesday, 01 August, 2007, சொல்வது...

//என்னையறியாமலேயே போட்டு இருக்கிறேன்//

நம்பச்சொல்றீங்க!

 
At Wednesday, 01 August, 2007, சொல்வது...

இலவசம், ஸ்பெல்லிங் மிஷ்டேக் ஆயிடுச்சுபா. சொ.செ.சூ, போதுமா? (நா ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி)

பினாத்தல், அடுத்த முறை, புத்திசாலி கணவன், மக்கு பொண்டாட்டின்னு ஒரு கதை எழுதிடரேன் போதுமா? எழுதி
அதை உங்க ரெண்டு பேரூக்கும் டெடிகேட் செஞ்சிடரேன் :-)

 
At Wednesday, 01 August, 2007, சொல்வது...

:))))))))))))))

http://www.desipundit.com/2007/08/01/blogophobia/

 
At Thursday, 02 August, 2007, சொல்வது...

உஷா

போபியாவா..மேனியாவா...:-))..

என்னை இந்த ரெண்டாவது பேர் வச்சு தான் கூப்பிடறாங்க...ஒரு மாதிரி 'மேனிக்' (Manic) னு பேர் எனக்கு ஆபீஸ்ல..:-))..

இன்னைக்கு தான் அரிஸ்டாட்டில் பெண்களைப் பற்றி சொன்ன ஒரு கொடேஷன் படிச்சேன்.. அதை இங்க நான் போட விரும்பலை..உங்களுக்கு தனியா அனுப்பறேன்....:-))

 
At Thursday, 02 August, 2007, சொல்வது...

usha,
being a psychiatrist couldnot help laughing.
i used to think there must be a phenomenon called 'psychosis of a normal person'..particularly in india.following are some..
'parents control my thots'
'my neighbors may be watching me'etc.

 
At Thursday, 02 August, 2007, சொல்வது...

: )))

 
At Thursday, 02 August, 2007, சொல்வது...

//ஏகாம்பரி- (குரலைக் கொஞ்சம் தாழ்த்திக் கொண்டு) டாக்டர் என்னை பலர் வாட்ச் செய்கிறார்கள்//
இதை நீங்க குசுகுசுன்னு நேர்ல சொன்னா எப்படி இருக்கும்னு நெனச்சு பார்த்தேன். 5 நிமிஷத்துக்கு சிரிப்பை அடக்கவே முடியல. அப்போ எனக்கும் இப்படி போபியான்னு ஏதாவது இருக்குமா? நல்லாதான் கிளப்புறீங்க பீதிய.

 
At Thursday, 02 August, 2007, சொல்வது...

இந்தப் பதிவை வ.வா.சங்கம் பரிந்துரைக்குதுங்க.

 
At Friday, 03 August, 2007, சொல்வது...

டுபுக்கு, இளா இணைப்புக் கொடுத்ததற்கு நன்றி

மங்கை, மேனியா வேற, போபியா வேற. இரண்டாவது வியாதி :-) பிறகு அரிஸ்டாட்டில் என்ன சொன்னாரூ, சாணிக்கியரூ என்ன சொல்லியிருப்பாரூன்னு படிக்காமலையே தெரியாதா என்ன? (எதுக்கும் அனுப்பி வெய்யுங்க, படிச்சிட்டு திட்டுகிறேன்)

சீதா ,(புதுமுகமாய் தெரிகிறது) இந்த அக்கம் பக்கம் கவனிக்கிறார்கள் என்ற புலம்பல் பலரிடம் பார்த்திருக்கிறேன். அது சரி, நீங்களே ஒரு பிளாக் ஆரம்பித்து இந்த மேட்டர் எல்லாம் எழுதலாம் இல்லையா? அப்படியே உங்க முகவரியும் தந்திருந்தா யாருக்காவது உபயோகமா இருந்திருக்குமில்லே :-)

ஜெயஸ்ரீ :-)


//இதை நீங்க குசுகுசுன்னு நேர்ல சொன்னா எப்படி இருக்கும்னு நெனச்சு பார்த்தேன். 5 நிமிஷத்துக்கு சிரிப்பை அடக்கவே முடியல //

இளா,ஹூம்ம்ம் வருமே சிரிப்பு :-) நமக்கெல்லாம் கொஞ்சம் மேல் தோல் கெட்டி. அதனால டாக்டரிடமெல்லாம் போய் அழ மாட்டேன். ரொம்ப
கோபம் வந்தால் இப்படி எதாவது எழுதினா சரியாயிடும். (அய்யயோ தப்ப பொருள் கொள்ளாதீங்க. நா சொல்ல வந்தது பொதுவா எழுதுவது என்று. எந்த கோபத்திலும் இது எழுதப்படவில்லை. இது அக்மார்க் சுத்தமான நகைச்சுவையாய்
எழுதப்பட்ட ஒன்று)

 
At Saturday, 04 August, 2007, சொல்வது...

அம்மணி வணக்கமுங்க! நான் ரொம்ப ரசிச்சு மேஞ்ச நுனிப்புல்லுங்க இது. அந்த மருத்துவர் நெலமையில தான் நானும் பல தடவை இருந்துருக்கேனுங்க.
சாண்டில்யன் கதாநாயகிகள் அசைத்தும் குலுக்கியும் கிளர்ச்சியூட்டிய சமாசாரங்களை எல்லாம் நம்ப பெண்ணிய எழுத்தாளர்கள் வெட்டி எறிஞ்சு அதிர்ச்சி வைத்தியம்(?!)குடுக்கறாங்க.
கிரேக்க புராணத்து அமேசான் வீராங்கனைகள் அம்பு நல்லா விடணுங்கறதுக்காக இப்படி தான் பண்ணுவாங்களாம்!ஆனா அது வேற விஷயம் இல்லீங்களா?

எப்பவும் போகப் பொருளாய் மட்டும் பார்க்கக் கூடாது என்பது உண்மை தாங்க. ஆனா இந்த ஷாக் வேல்யூக்காக எழுதறது கொஞ்சம் ஓவருங்க!

//அறுந்துத் தொங்கும் முலைகள் என்று பெயர் வைக்கலாம்னு இருந்தேன். ஆனால் இது ரொம்ப காமன் ஆயிடுச்சு. அதனால பெயரை மாத்திட்டேன். இவை எல்லாம் மாஜிக்கல் ரியலிசம் வகையறா. அடுத்து தொடர்கவிதை இடானி பேய்களும் மூத்திரகடுப்பும் என்ற தலைப்பில்//

ரொம்ப அருமையான Satire! விழுந்து விழுந்து சிரிச்சேனுங்க!

 
At Saturday, 04 August, 2007, சொல்வது...

//
உங்க அக்மார்க் பெண்ணாதிக்க உணர்வு புரியுது.. பின்ன பாருங்க, புது டெக்னாலஜிக்கலான மருத்துவரை டாக்டரம்மான்னும், ஈ ஓட்டிகிட்டு இருக்கும் ஆளை டாக்டர் ஐயான்னும் படைச்சிருக்கீங்களே..

(ஹி ஹி,.. இல்லாத உள்குத்தை தேடி பற்றவைக்க எல்லாரும் முயலும்போது, தவறவிடப்பட்ட ஒன்றை நானும்.. ;) )

//
Four Ants are moving through a forest.
They see an LION coming towards them. Ant 1 says : we should KILL him.
Ant 2 says : No, Let us break his Leg alone. Ant 3 says : No, we will just throw him away from our path.
Ant 4 says : No, we will LEAVE him because he is ALONE and we are FOUR.

இது பபா சங்கத்தையோ அல்லது பீபா சங்கத்தையோ குறிப்பிடுவது அல்ல, அல்ல..., அல்ல
மங்களூர் சிவா

 
At Saturday, 04 August, 2007, சொல்வது...

வந்தியதேவன் ஐயா, நன்னி.

மங்களுர் சிவா, பொன்ஸ்க்கு என்னமோ சொல்றீங்க, ஆனா சிங்கம் சிங்கிளா வரும்னு எங்க தலைவர் கூட சொல்லியிருக்காரூங்க. ஆனா அவுரூ சொன்னது ஆண் சிங்கத்தையா, பெண் சிங்கத்தையா தெரியலைங்க.

 
At Sunday, 05 August, 2007, சொல்வது...

எனக்கே அந்த போபியா வந்துடுசோன்னு கொஞ்சம் பயமாதான் இருக்கு. ரொம்ப நேரம் ப்ளாக் படிக்கிறேன்.

எதுக்கும் முடிஞ்சா கீழே உள்ள தினமலர் நியூஸ் லிங்கை பார்க்கவும்.

http://www.dinamalar.com/2007aug05/general_ind1.asp

மங்களூர் சிவா

 
At Sunday, 05 August, 2007, சொல்வது...

மங்களூர் சிவா அண்ணாச்சி, எந்த பழக்கமும் அதீதமாய் நம் மன கட்டுபாட்டை மீறி நம்மை அடிமை படுத்துகிறதோ அது
நோயாக மாற வாய்ப்பு உண்டு. அதுக்கு தேவை மன கட்டுப்பாடு.ஆக, மருந்து உங்க கையிலேயே இருக்கிறது.
அடுத்து பதிவுக்கு சம்மந்தமில்லாத உங்க லிங்கு. ஐயா, என்று சமுகத்தில் கட்டுப்பாடு, திருமணம் உட்பட ஏற்பட
ஆரம்பிக்கப்பட்டதோ, அதை மீறுவதும் நடப்பதுதானே, இத்தகைய ஓழிங்கீனங்களுக்கு நெட்டும் ஒரு காரணம் அவ்வளவே

 
At Sunday, 05 August, 2007, சொல்வது...

மேற்கண்ட லிங்க் இந்த போபியாவின் பக்க விளைவாக் இருக்குமோ என நான் நினைத்தேன் அவ்வளவே.

மங்களூர் சிவா

 
At Tuesday, 07 August, 2007, சொல்வது...

usha,
thank you for the invitation. just learning to type in tamil. seems a hard task.adhilum, valaippadhivil ulla, 'mokkai' 'jalli' ponra vaarthaigalukaga enakku oru sol agradhi vendum pola.rangamaninna husband, thanagamaninna wife?
have been eating 'idlyvadai', and when i attempted eat 'grass' landed on your meadow.........

 
At Tuesday, 07 August, 2007, சொல்வது...

அடிப்படையா ஒரு தப்பு இருக்கு...கூகிள் பன்னி, காப்பி பேஸ்ட் பன்னுறது கூட சுலபம் இல்லை...சரியானத காப்பி அடிக்கனும்... ஹி!ஹி!...

Phobia : Phobia is also used in a non-medical sense for aversions of all sorts

 
At Sunday, 12 August, 2007, சொல்வது...

ஹை! இன்னிக்கு தான் வரேன் உங்க பதிவுக்கு! ரொம்ப நல்லாருக்கு.. :)

 
At Sunday, 12 August, 2007, சொல்வது...

நன்றி மங்களூர் சிவா.

சீதா, ஜோதியில ஐக்கியம் ஆகுங்க,எல்லாம் தன்னால வந்துடும் :-)

tbcd, நான் காப்பி, பேஸ்ட் என்ற வார்த்தைகளையே சொல்லவில்லையே. அதுதான் தெளிவா சொல்லியிருக்கேனில்லே :-)
மீண்டும் உங்க பார்வைக்கு

//இண்டர் நெட்ல கூகுளில் போய் சர்ச் போட்டா கடவுளே கூட கிடைப்பார். அப்படி இருக்க, மார்சீச சிந்தனைகளை அகப்படாதா என்ன? அப்படியே படிச்சி, அங்கங்க நம்ம சரக்கையும் தூவி, ரைட்டிங் ஸ்டைல மாத்தி எழுதினா ஆச்சு.//

காயத்ரி! நன்றி

 
At Saturday, 18 August, 2007, சொல்வது...

majaa che

 
At Friday, 18 January, 2008, சொல்வது...

ப்ளாக்கோபோபியாவின் சிம்ப்டம்ஸ் என்னன்னு சொல்றீங்களா?

சும்மா பின்னிட்டீங்க போங்க !!!
அருணா

 
At Friday, 18 January, 2008, சொல்வது...

மஙகளூர் சிவா பதிவுல உங்களோட இந்த பதிவுக்கு சுட்டிபார்த்தேன்.
பிரமாதம்.
பதிவு படிச்சுட்டு கமெண்ட் போடலைனா (....) பாவம் வந்துருமாமே.அதனால கமெண்ட் போட்டுட்டேன்.

 
At Saturday, 19 January, 2008, சொல்வது...

அருணா, சாமானியன் நன்றி. பழையதற்கு தூசி தட்டி உயிர்ப்பித்த மங்களூர் சிவாவிற்கும் நன்றி

உமையணன், மிக தாமதமாய் கேட்கிறேன் - அது என்ன சீ ன்னுட்டீங்க? என்ன மொழில?

 
At Saturday, 18 April, 2009, சொல்வது...

Sorry, I can't get it; could you please break the code!

;-)- Agent NJ (njans)
http://njanapidam.blogspot.com

 
At Saturday, 18 April, 2009, சொல்வது...

ஞான்ஸ் நீங்களா? எவ்வளவு வருடம் கழித்து! இருங்க பேச்சு வர மறுக்குது :-)

 

Post a Comment

<< இல்லம்