Friday, July 13, 2007

இதை யாரூக்கு அர்பணிப்பது?

சத்தம்

முணங்கலாய் ஆரம்பித்த
சத்தம் மெல்ல மெல்ல
பலரும் சேர வலுக்க ஆரம்பித்தது
இதுவரை கேட்டறியாத
அந்த சத்தங்கள்
யாருக்கும் பிடிக்கவில்லை
ஏன் அலறுகிறார்கள் என்று
பல முகங்கள் சுழித்தன
அவர்களோ அதை சட்டை செய்யாமல்
தங்கள் குரலை மேலும் உயர்த்தினர்
சிரிக்கிறார்கள் உங்கள் கூச்சலைப்
பார்த்து என்று எச்சரிக்கை வந்தது
வாயை திறந்து பழக்கமில்லை கொஞ்சம்
புரிந்துக் கொள்ளுங்கள் என்று பதில் வந்தது
எங்களைப் போல நாகரீகமாய்
பேச பழகிக் கொள்ளுங்கள்
என்று அறிவுரை சொல்லப்பட்டது
பல நூறு ஆண்டுகள் கட்டப்பட்ட
தொண்டையிலிருந்து வரும் முதல்
சத்தங்கள் நாராசமாய்தான்
உங்கள் காதில் விழும்
பிறகு பழகி விடும் என்றார்கள்
ஓவென்று சிரித்து கூச்சலிட்டப்படி!


எச்சரிக்கை இது ஒரு மீள்பதிவு- லஷ்மீ கேட்டுக் கொண்டதற்காக மீண்டும் உங்கள் பார்வைக்கு

அப்போதைய பின்னுட்டங்களை படித்து ரசிக்க இங்கே கிளிக்க

Labels:

7 பின்னூட்டங்கள்:

At Friday, 13 July, 2007, சொல்வது...

நேயர் விருப்பத்துக்கு செவி சாய்த்ததுக்கு நன்றி உஷா.

 
At Friday, 13 July, 2007, சொல்வது...

லஷ்மீ, மீள் பதிவுப் போட்டதற்கு உண்மையான காரணம் "தயிரின் நிறம் வெள்ளை" என்ற கண்டுபிடிப்புதான்.

 
At Friday, 13 July, 2007, சொல்வது...

சத்தம் சங்கீதமாக மாற வாழ்த்துக்கள். (நாராசமாய் போகாமாலிருந்தால் சர்தான்.) ;)

PS: அதே சேம் பின்னூட்டம் காப்பி-பேஸ்ட் அப்படியே கூட ஒரு ஸ்மைலி.

 
At Friday, 13 July, 2007, சொல்வது...

ஹஹஹா....

 
At Friday, 13 July, 2007, சொல்வது...

உஷா, எனக்கு தோன்றுவது, " மோதி மிதித்து விடு பாப்பா, முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா".இவர்களின் அங்கீகாரம் யாருக்கு வேண்டும்?

மோகன்
"சத்தம் சங்கீதமாக மாற வாழ்த்துக்கள். (நாராசமாய் போகாமாலிருந்தால் சர்தான்.) ;)சத்தம் சங்கீதமா, நாராசமா என்பது கேட்பவர் காதில் இருக்கிறது. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
no Smilies.

.. ஒரு முட்டாள் (..Ag)

 
At Friday, 13 July, 2007, சொல்வது...

உஷா,

கொஞ்சநாளைக்கு முன்னால் லிவிங்ஸ்மைல் வித்யாவைப்பற்றி "உணர்சிவசப்பட்டு அதீதமா எழுதறாங்க.. சொல்லற கருத்துல உண்மை இருந்தாலும் சபை நாகரீகத்துடன் எழுதவேண்டும்" அப்படிங்கற விமரிசனங்கள் எல்லாம் வந்தப்ப உங்களுடைய இந்த கவிதையைத்தான் விமரிசனம் வைச்சவங்களுக்கு பதிலாக சொன்னா சரியாக இருக்கும்னு தேடினேன்! அப்ப எங்க ஒளிச்சி வைச்சிருந்தீங்களோ கிடைக்கலை!

அதனால இப்போ இதை லிவிங் ஸ்மைல்லுக்கு அர்பணிங்க என்பது என் வேண்டுகோள்! :)

 
At Friday, 13 July, 2007, சொல்வது...

ag, (பெயர் புதியதாய் இருக்கிறது) இவங்க அங்கிகாரத்தை எல்லாம் யார் எதிர்பார்த்துக்கிட்டு
இருக்காங்க :-) மோதி மித்தித்துவிடும் கட்டத்தைத் தாண்டி உளறல்களை, சட்டை செய்யாமல்
போகும் நிலைமைக்கு வந்தாச்சு நீங்க சொன்னதுப் போல, சங்கீதமா, நாராசமா என்பது அவரவர்
புரிதலைப் பொறுத்து :-))

இளவஞ்சி நினைவு வைத்திருப்பதைக் குறித்து மிக்க மகிழ்ச்சி. முன்பு முத்துகுமரனும், நண்பன்
அவர்களும் அளித்த பின்னுட்டம் பல புதிய புரிதல்களை எனக்கு அளித்தது.

 

Post a Comment

<< இல்லம்