Wednesday, November 07, 2007

நவம்பர் - சாலை புகைப்பட போட்டிக்கு- புது படத்துடன். பழையது edit செய்தது

சுந்தரும், ஜீவ்ஸ்சும் சொல்கிறார்களே என்று பிகாசாவை தரவிறக்கி, படங்களை தட்டி சரி செய்துக் கொண்டு இருந்தால், என்ன ஆச்சோ தெரியவில்லை, இணைய இணைப்பு டமால். தொலைபேசியில் கேட்டால், ரிலயன்ஸ் எல்லா இடத்திலும் சர்வரை புதுபிக்கிறேன் இப்பொழுது வந்துவிடும் என்று நேற்றும், இன்றும் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். நாம் தரவிறக்கியது காரணமில்லை என்று மனசு சொன்னாலும், யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் பேசாமல் இருந்துவிட்டேன்.

சுந்தர், ஜீவ்ஸ், சிவிஆர் இப்ப படம் எப்படி?

Image and video hosting by TinyPic


முதல் இரண்டு படங்களும் என் பாலைவன வாழ்க்கையில் எடுக்கப்பட்டவை. முதல் படம் பத்துவருடங்களுக்கு முன்பு, சாதாரண காமிராவில் பிலிம் போட்டு எடுக்கப்பட்டது. ஸ்கேன் செய்து இட்டிருக்கிறேன். பு·ஜெய்ரா என்ற சின்னஞ்சிறு நகரம், எந்த வித பச்சையும் இல்லாத வெறும் பாறையும், புல்பூண்டு கூட இல்லாத ஒருவித கருப்பு மண்ணை கொண்டது. இதில் ஒரு நாள் மழையும், மேகமும் சூழ ஊட்டி போல அழகு கோலம் கொண்ட காட்சி இது. இப்படத்தின் அருமை பாலைவனவாசிகளுக்கு மட்டுமே புரியும்.

Image and video hosting by TinyPic

அடுத்து, சொல்லவே தேவையில்லை. ஏதோ புதியதாய் ஷார்ஜா போகும் வழியில் ரோடு போட்டு இருக்கிறார்கள் என்று போனால், வழக்கமாய் செல்லும் பயணிகள் என்னடா நம் வழக்கமான பாதையை காணவில்லையே என்று பாவம் தடுமாறுகின்றன. அப்பொழுது தெரு விளக்குகளும் போட பட்டிருக்கவில்லை. இருளில் வழக்கமான பாதை என்று ஒட்டகங்கள் சென்றால்... தன் சுயநலத்துக்காக எல்லாவற்றையும் அபகரிப்பது மனிதனின் செயல் அல்லவா?

Image and video hosting by TinyPic

இதுவும் சாலை ஓரம். தாயும் பிள்ளையும். பக்கத்தில் போகாதீர்கள் தாய் கடித்துவிடும் என்று வண்டியை நிறுத்தி அரபியில் சொன்ன அரபிய தாத்தா, குட்டி ஒட்டக கறி சூப்பராய் இருக்கும் என்றார். இப்படமும் ஆனந்த் ஒருமுறை இப்படி கருப்பு வெளுப்பு பிண்ணனியில், கலர் காட்டியிருந்தார். ஓரே நாளில் பி.சி. ஸ்ரீராம் ரேஞ்சுக்கு ஆன மாதிரி இருக்கு :-)

Image and video hosting by TinyPic

உலகிலேயே நாத்திகர் அதிகம் வசிக்கும் இடம் எது தெரியுமா :-) புண்ணிய ஸ்தலங்கள் என்று சொல்லப்படும் இடங்களில்! நீங்கள் பார்க்கும் கூட்டம், நடைபயணமாய் திருச்சி சுற்று வட்டார கிராம மக்கள், ஆடி மாதத்தில், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நடந்து போவதுதான். நாங்கள் திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு வண்டியில் இரவு ஒன்பது மணிக்கு மேல் செல்லும்பொழுது, விளக்கில்லாத பாதையில் இரண்டு பக்கமும் தொடந்து மக்கள் வரிசை, நடந்தே திருச்சி செல்லும் கூட்டம். நடு வீதியில் கூட பேசிக் கொண்டே வருபவர்களை பார்த்து ஓட்டினர், "இது கொஞ்ச வருஷமா பேஷனா போயிடுச்சு. நிறைய ஆக்சிடெண்டுங்க நடக்குது" என்று வருத்தப்பட்டார். பலரின் கையில் செல்பேசி, ஆண்கள் பலர் அரைகால் சட்டையில் :-) ஆனால் சிறு குழந்தைகள் உட்பட காலில் செருப்பு அணியவில்லை. இப்படம் மறு நாள் மாலை திரும்பும்பொழுது எடுத்தது. அப்பொழுதும் கூட்டம் குறையவில்லை.

24 பின்னூட்டங்கள்:

At Wednesday, 07 November, 2007, சொல்வது...

ஆக்கா...ரொம்ப நல்லா இருக்கு... ஆனா ரொம்ப பெரிசா இருக்கு படம்.

 
At Wednesday, 07 November, 2007, சொல்வது...

உஷா
இந்த இடம் பெருவிளை வாய்காலுக்கும் சமயபுறத்திற்கும் இடையில் உள்ள இடம் என நினைக்கிறேன் தற்போது அந்த மரங்களையெல்லாம் பிடுங்கிவிட்டு அந்த இடமெல்லாம் அகலமாக ஆக்கிவிட்டனரே.

 
At Wednesday, 07 November, 2007, சொல்வது...

2nd ப்டம் சூப்பர்... அருமை

 
At Wednesday, 07 November, 2007, சொல்வது...

பவன், கொஞ்சம் பொறுப்பா, சரி செஞ்சிடரேன்.

என்னார், 2006 ஆகஸ்டில் எடுத்த படம் அது. காரைக்குடியில் இருந்து திரும்பும்பொழுது, புதுக்கோட்டையில் சுற்றுவட்டாரத்தில் இருந்து,
ஜனங்கள் நடந்து வந்துக் கொண்டு இருந்தார்கள். ஏகப்பட்ட கூட்டம். மற்றப்படி,திருச்சி டூ காரைக்குடி, காரில் பயணம்.புதுக்கோட்டை வழியாய். அவ்வளவுதான் தெரியும்.

நன்றி தீபா. அமீரக வானம் எப்பொழுதும் அப்படி வெறும் நீலமாய்தான் இருக்கும்.

 
At Wednesday, 07 November, 2007, சொல்வது...

உஷா, படங்கள் அருமை - அதை விட அதைப் பற்றிய குறிப்புகள் அருமை. இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்

 
At Wednesday, 07 November, 2007, சொல்வது...

உஷா.

முதலிரண்டு படங்களை Picasa மூலமாக சற்று மெருகேற்றிப் போடுங்கள். குறிப்பாக இரண்டாவது படத்தில் தெரியும் காரின் Dashboard/windshield-ஐ crop செய்து எடுத்துவிட்டு அதற்கு ஈடாக மேலே தெரியும் வானத்தின் உயரத்தையும் :-) குறைத்து சாலை கிட்டத்தட்ட படத்தின் நடுப்பகுதியில் வருமாறு Crop செய்து லேசாய் Sharpness கூட்டி Saturise செய்து போட்டீர்களென்றால் மிகவும் பிரமாதமாக இருக்கும்.

வாழ்த்துகள்.

 
At Wednesday, 07 November, 2007, சொல்வது...

நன்றாக இருக்கிறது

 
At Wednesday, 07 November, 2007, சொல்வது...

ஒட்டகத்தோடு சாலையும்.. பக்தர்களோடு சாலையும் ரொம்ப வித்தியாசமா நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்.. காரைக்கொஞ்சம் க்ராப் செய்து சாலை மட்டும் போடலாமே..

 
At Wednesday, 07 November, 2007, சொல்வது...

eththanai thadaivai sonnaalum kEkka maattENgiraangalE... arumaiyaana photos ...m post production panna super aa varumE.. ( andha ottagam super ) yEN seyya maattEngareenga ?

 
At Wednesday, 07 November, 2007, சொல்வது...

சீனா சார், டெல்பின் மேடம், முத்து லட்சுமி,பாபா, ஜீவ்ஸ், சுந்தர் நன்றி.
சுந்தர், ஜீவ்ஸ், நாளைக்கு சரி செய்ய பார்க்கிறேன். முடியுமான்னு தெரியவில்லை.

 
At Wednesday, 07 November, 2007, சொல்வது...

உஷா

இதைப் பாருங்க.

[IMG]http://i22.tinypic.com/xnu5qe.jpg[/IMG]

 
At Wednesday, 07 November, 2007, சொல்வது...

உஷா அக்கா..

உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.

 
At Wednesday, 07 November, 2007, சொல்வது...

படங்கள் அற்புதம்! உஷா!
நம்மூர் எருமைகள் போல் அங்கு ஒட்டகம்.
தீபாவளி வாழ்த்துக்கள்!!

 
At Thursday, 08 November, 2007, சொல்வது...

நானும் ஒட்டகம் ஏதாவது கண்ணில் படுமா என்று தேடுகிறேன்.ஒட்டகத்து பதில் கார்களாகவே ஓடுகிறது.

 
At Friday, 09 November, 2007, சொல்வது...

ஹ ஹ, சூப்பர். நான் அமீரகம் சென்றிருந்தபோது அலயினில் மட்டும் தான் பின்புற மலைகளைப் பார்த்தேன்! புஜைரா அதைவிட சூப்பரா இருக்கும் போல இருக்கு! அடுத்தட்ரிப்ல் பார்த்துட வேண்டியது தான்! அப்புறம் அந்த மழை... நினைக்கவே சூப்பரா இருக்கு! ஒட்டகப் படம் கலக்கல்! வாழ்த்துக்கள்!

 
At Friday, 09 November, 2007, சொல்வது...

சுந்தர் ஸ்பெஷல் நன்றி. இப்ப எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

செல்லா, புஜெய்ராவும் வானில் மேக துணுக்கு கூட பார்க்க முடியாத, பாலைதான். நான் போட்ட வெகு அதிசயமான படம் அது

ரசிகன், நானானி, நட்டு நன்றி

 
At Saturday, 10 November, 2007, சொல்வது...

photos எல்லாம் ரொம்ப நல்ல இருக்கு. ரொம்ப நாளாக உங்க பதிவுகளை படிச்சுட்டு வரேன், இப்போதான் கமெண்ட் எழுத தைரியம் வந்திருக்கு.உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி, என்ன software உதவியால் தமிழ்ல எழுதறீங்க? நான் இதை டைப் பண்ணது கூகிள் transliterate ல இருந்து.

 
At Saturday, 10 November, 2007, சொல்வது...

ஸ்ரீதர், நன்றி
e kalapai, டவுன் லோட் செய்து, http://www.suratha.com/leader.htm டைப் அடித்துப் பாருங்கள்.

என்னால் தொடர்ந்து டைப் அடிக்க, நேரமின்மையால் முடியாது. ஆக பல வருடங்களாய் பழகிப் போன முரசு அஞ்சலில் முரசு எடிட்டரில் டைப் செய்து, மீண்டும் மீண்டும் திருத்த, சேமிக்க இதை பயன் படுத்துகிறேன். பிறகு http://www.suratha.com/reader.htm இங்கு மேல் பக்க பெட்டியில் காப்பி செய்து, நடுவில் உள்ள TSC என்பதை கிளிக்கினால், கீழே உள்ள் பெட்டியில் யூனிகோர்ட்டில் வந்துவிடும். அதை காப்பி செய்து பிளாக்கருக்கு சென்று நீயூ போஸ்ட்டுக்கு சென்று அங்கு காப்பி செய்து, பிளாக்கில் ஏற்றுவேன்.

 
At Monday, 12 November, 2007, சொல்வது...

kalakkals.

1stum, lastum super. nallaa vandhirukku.

 
At Monday, 12 November, 2007, சொல்வது...

உஷா

இப்போ எவ்வளவோ பரவாயில்லை. முதல் படம் அருமை. ரெண்டாவதுல வானம் ஏகத்துக்கும் ஆக்கிரமிச்சிருக்கு. கொஞ்சம் Crop பண்ணி எடுத்துருங்க.

வாழ்த்துகள்.

 
At Monday, 12 November, 2007, சொல்வது...

சர்வேசா நன்றி. ஆனால் முதல் இரண்டு மனசுக்கு பிடித்தது. முக்கியமாய் ஒட்டக கூட்டம்.

சுந்தர், இப்ப பரவாயில்லையா?

 
At Saturday, 17 November, 2007, சொல்வது...

உஷா

சூப்பரா இருக்கு படங்கள்

வாழ்த்துக்கள்

 
At Saturday, 17 November, 2007, சொல்வது...

நன்றி சிவா

 
At Sunday, 18 November, 2007, சொல்வது...

Usha,

You are invited,

http://sambarvadai.blogspot.com/2007/11/blog-post_16.html

Thanks in Advance.

 

Post a Comment

<< இல்லம்