Wednesday, August 22, 2007

எலுமிச்சை பழ சாதம்- ஒரு விழிப்புணர்வு பதிவு

வெகு நாட்களாய் என் மனதில் ஒரு கேள்வி, இவ்வளவு எழுதுகிறாயே, சமுதாயத்துக்கு பயன் அளிக்கும்படி, ஒரு விழிப்புணர்வு கட்டுரை எழுதக்கூடாதா என்று? சரி இன்று எழுதிவிடலாம் என்று களத்தில் இறங்கிவிட்டேன்.

பொதுவாய் பிரச்சனைகள் எங்கிருந்து, எந்த பக்கத்தில் இருந்து, எந்த ரூபத்தில் வரும் என்று சொல்லவே முடியாது. ஒவ்வொரு முறையும் பிரச்சனையின் தாக்கத்தில் மனம் உடைந்துப் போகிறோம். நம் மன உளச்சலுக்கு வெகு சுலபமாய் பிறர் மீது பழிப் போட்டுவிடுகிறோம். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஏதாவது ஒருவகையில் நம்முடைய கைங்கரியங்கள் அதில் கட்டாயம் இருக்கும். சதவீதங்கள் கூட, குறைவாக இருக்குமே தவிர, பெரும்பாலும் வாய் வார்த்தைகளால் அல்லது செய்கைகளால் நாமும் ஏதாவது செய்து வைத்து இருப்போம். என்ன ஒன்று ஒத்துக் கொள்ளத்தான் மனம் ஒப்ப மறுக்கும். வேற என்ன வேலியில் போகும் ஓணானை மடியில் விட்டுக் கொண்டு, பிறகு குத்துதே குடையுதே என்று கூவுவது மாதிரிதான்.

சரி, தலைப்புக்கு வருகிறேன். என் பிள்ளைகளுக்கு எலுமிச்சை பழ சாதம் மிகப்பிடிக்கும். தேங்காய் துருவி போட்டு. முந்திரி பருப்பு வறுத்துப் போட்டு அவ்வப் பொழுது மதிய சாப்பாடுக்கு செய்வேன். பிரச்சனை என்னவென்றால், இந்த சாதம் செய்யும் நாள் எல்லாம், மதியம் என்னால் சாப்பிட இயலாமல் போய்விடும். சாப்பாட்டை பார்த்தால் வயிறு புரட்டும். சரியாய் சாப்பிட முடியாமல் மந்தமாய் இருக்கும். மணியாக ஆக, தலைவலியும் வரும். விரதம், பட்டினி இதெல்லாம் எனக்கு பழக்கமில்லை. சரியான நேரத்தில் சாப்பிட்டு பழகிவிட்டதால், சாப்பிடாவிட்டால் தலைவலி வரும். ஒவ்வொரு எலுமிச்சை சாதம் செய்யும் நாளிலும் இந்த பிரச்சனை வந்தது. ஏதோ அலர்ஜி போல் இருக்கு என்று செய்வதையே விட்டு விட்டேன்.

போன வருட விடுமுறையில், உறவினர் வீட்டு விசேஷத்தில், இலையில் எ.பழ சாதத்தை வைத்ததும் அலறினேன், எனக்கு அலர்ஜி என்று! எல்லாருக்கும் ஆச்சரியம், எலுமிச்சை பழம் அலர்ஜி என்றுக் கேட்டதே இல்லையே என்றார்கள். என்னுடைய உறவினர் ஒருவருக்கும் இயற்கை வைத்திய முறையில் ஆர்வமுண்டு. தோண்டி துருவி கேட்டார். பழசாறு குடிக்கிறேன், பாட்டில் பாட்டிலாய் எலுமிச்சை பழ ஊறுகாய் தின்கிறேன் என்றால் பிரச்சனை எ. பழ சாதத்தில் இல்லை என்றவர், என்னை அன்று எ.பழ சாதத்தைச் சாப்பிட சொன்னார். நானும் சாப்பிட்டேன். ஆனால் தலைவலி எதுவும் வரவில்லை. சொந்தக்காரர்கள் மத்தியில் ஏதோ அலட்டுகிறேன் என்ற பெயர் வந்ததுதான் மிச்சம்.

ஊரில் இருந்து அப்பொழுது இருந்த அமீரகம் வந்ததும், ஒரு நாள் எலுமிச்சை சாதம் செய்யலாம் என்று ஆரம்பித்ததும், மண்டையில் அடித்ததுப் போல நான் இது நாள் வரை செய்ய வில்லங்கம் புரிந்தது. வேறு என்ன, நல்ல முற்றிய அருமையான தேங்காயில் நாலு பத்தை, நல்ல குண்டு குண்டு முந்திரி பருப்புகள் ஒரு கைப்பிடி என்று பன்னிரண்டு மணி வாக்கில் வாயில் போட்டு அரைத்தால், பிறகு சாப்பாடு இறங்குமா? இது தெரியாமல், எ.பழ சாதம் எனக்கு அலர்ஜி என்றுச் சொல்லிக் கொண்டு இருந்தேன்.பாவம் பழியை அதன் மீதுப் போட்டேன்.

ஆக, மெசேஜ் என்னவென்றால் தீதும் நன்றும் பிறர் தர வாரா.

40 பின்னூட்டங்கள்:

At Wednesday, 22 August, 2007, சொல்வது...

//தீதும் நன்றும் பிறர் தர வாரா.//


I Understood!

Idhaithanga So.Se.Soo nnu sollraanga Pathivulagathile!

:)

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

கொள்ளாம் :)
அது என்ன, எலுமிச்சம்பழ சாதமும் தேங்காய் சாதமும் மிக்ஸா ?

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

ஆஹா, இன்னிக்கு உஷாக்கா கையான்ட நாம மாட்டீனோமின்னு நினைச்சிட்டு வந்தேன், பதிவ படிச்சுப் பார்த்தா நல்ல வேளை அவங்களப் பத்தியே ஒரு சுய-படிப்பு செஞ்சி பார்த்திருக்காங்க... நான் பொழச்சேன் :-))

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

பாவங்க..எலுமிச்சைசாதம்!பழியை உங்கள் வாயிலுள்ள அரவை மில்லில்
வைத்துக்கொண்டு...பின்னே?...சமையல் செய்யும் நேரத்தில் நம்ம பசியை எப்படி ஆத்திக்கொள்வதுதான்?

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

இதுல எந்த உள்குத்தும் இல்லைன்னு நம்புறேன்.

ஆனா வேற யாருக்கோ மெசேஜ் கொடுத்த மாதிரி தோணுது. :-)

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

அடுத்ததா கிலியூட்டும் புளி சாதம் னு எதாவது போடுங்க :-))

சாப்பிடுவதற்கு முன்னர் கொஞ்சம் கொறிச்சாலும் , அதனால் தலைவலிலாம் வராதே. எதேச்சையா என்றோ ஒரு நாள் தலை வலி வந்திருக்கும் அதுக்கு பாவம் எலுமிச்சைசாதம் மாட்டிக்கிச்சா?

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

உஷா எலுமிச்சம் பழம் -விழிப்புணர்வுன்னதும் ஏதோ அதன் மருத்துவ குணம்னு நெனச்சேன்....நல்லாத்தான் ஏமாத்திட்டீங்க போங்க.

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

அதெல்லாம் சரி, ஏதோ விழிப்புணர்வு கட்டுரைன்னு சொல்லியிருக்கீங்களே அது எங்கே? :-)

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

சிபி, என்னவோ போங்க,பின் நவீன கவிதைன்னு போர்ட் போட்ட கவிதைகளுக்கு இல்லாத மீனீங் கண்டுப்பிடிக்கிறா போல
இருக்கு, நீங்க சொல்வது. ஏதோ நாம் கற்ற பாடத்தை எடுத்துச் சொல்லலாம்ன்னா........:-)

தெ.கா, மணியன் நீங்களாவது சுய முன்னேற்ற கட்டுரைன்னு சொன்னீங்களே, அதுக்கு நன்னி . .

மணியன், கடுகு, உ.பருப்பு, ப.மிளகாய், பெருங்காயம் தாளித்து, முந்திரிபருப்பு போட்டு வறுத்து, துருவிய தேங்காயை போட்டு சிவக்க கிளறி, மஞ்சள் தூள் போட்டு இறக்கி வைத்துவிட்டு, கொஞ்சம் ஆறினதும், உப்பு, எலுமிச்சம் பழம் பிழிந்து வெந்த சாதத்தைப் போட்டு கிளறினால்
நான் செய்யும் எ.பழ.சாதம்.

நானானி, தேங்காய் என்றால் உயிர்.சின்னவயதில் பத்தை தேங்காய் வாங்க மட்டும் என்னை அனுப்பவே மாட்டார்கள். முனைகள்
காணாமல் போய்விடும்.

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

//சின்னவயதில் பத்தை தேங்காய் வாங்க மட்டும் என்னை அனுப்பவே மாட்டார்கள். முனைகள்
காணாமல் போய்விடும்//

என்னை அனுப்பினா முழுசாவே காணாம போய்டும்!

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

வறுத்து போடுற ஒரு எழுமிச்சை சாதத்துல ஒரு வாழ்க்கை தத்துவத்தையே சொல்லீட்டீங்களே.

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

என்ன கொடுமையிது உஷாக்கா. விழிப்புணர்வு எங்கேன்னு விழி பிதுங்கி தேடியது தான் மிச்சம். நமக்கு பிடிச்ச சாதத்தை பத்தி ஏதோ சொல்லப் போறாங்கன்னு அடிச்சி புரண்டு ஓடி வந்தால்ல்ல்ல்ல்ல்............க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

ஆமாம் உஷா தேங்காயைப்பாத்தா சாப்பிடனும்ங்கறது என்னால யும் கூட கட்டுபடுத்திக்கொள்ளமுடியாத ஒன்றுதான்..
மத்த எதையுமே இப்படி பாத்தா சாப்பிடனும்ன்னு தோணுறதே இல்லை..
அதுவும் தேங்காய் துண்டு ரெண்டும் கொஞ்சம் பொட்டுக்கடலையும் சேர்த்து வாயிலேயே சட்னிதான் ..மிக்ஸிமாதிரி இல்லன்னா..தேங்காயோட சீனி.. :)

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

//சொந்தக்காரர்கள் மத்தியில் ஏதோ அலட்டுகிறேன் என்ற பெயர் வந்ததுதான் மிச்சம்//
உண்மை தெரிஞ்சி போச்சோ?

//சின்னவயதில் பத்தை தேங்காய் வாங்க மட்டும் என்னை அனுப்பவே மாட்டார்கள். முனைகள்
காணாமல் போய்விடும். //
அது சரி

மங்களூர் சிவா

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

சிபி,
//என்னை அனுப்பினா முழுசாவே காணாம போய்டும்!//
:-))

முழுசாவா ? என்னை விட கில்லாடி தான் , நாலு தேங்கா பத்தை வாங்கி வற சொன்னா , ஒன்றை தின்னுட்டு , கடை காரன் 3 தான் தந்தான்னு பொய்கணக்கு சொல்வேன் நான்!
சிபி,பொட்டுகடலை அமுக்கின மேட்டர் சொல்லவே இல்லை!

இதில் பெரிய ஊழல் செய்வது எப்போது என்றால் அரை மூடி தேங்கா வாங்கி வா என்று சொல்லும்போது தான் நடக்கும்(அதையும் பத்தை போட சொல்லி 2 பத்தையை அமுக்கிடுவேன், வீட்டில் துருவ மூடியா வாங்க சொல்லி இருப்பாங்க அதை எல்லாம் கண்டுகிறதே இல்லை)

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

எலுமிச்சை சாதம் கூடாதோன்னு நினைச்சப்ப என் வயித்துலே அப்படி ஒரு பகீர்.

நாந்தான் இங்கே எல்லா 'கெட் டு கெதருக்கும்' எ.சா. காண்ட்ராக்ட்.

படிச்சு முடிச்சதும், அப்பாடி பிழைச்சேன்.

நான் தேங்காயெல்லாம் போடறதில்லை. ச்சீச்சீ......... அது கொலஸ்ட்ரால்.

ஜெஸிலா,

//விழிப்புணர்வு கட்டுரைன்னு சொல்லியிருக்கீங்களே அது எங்கே? :-)//

சரியாப்போச்சு. அதான் முழிச்சு(விழிச்சு)ப்பார்க்குதேப்பா.
//நல்ல குண்டு குண்டு முந்திரி பருப்புகள் ஒரு கைப்பிடி //

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

ஆகா! எனதருமை எலுமிச்சைச் சாதத்தின் மேல் இப்பிடியொரு பழி சுமத்திய உங்களை என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் முந்திரியின் மீது பழியைப் போட்டு உங்களை நீங்களே காப்பாற்றிக்கொண்டீர்கள். தீது மட்டுமல்ல நன்றும் பிறர் தர வாரா! :)

எலுமிச்சம்பழச்சோறே நீ வாழ்க! ஆகா...ஆகா!

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

உஷா
போறபோக்க பாத்தா, என்னோட ரெசிபியும் யாருடைய ரெசிப்பியும் ஒத்து வராதுன்னு தெரியுது. நான் மஞ்சள், சிவப்பு குடைமிளகாயும் வதக்கி, எலுமிச்சை பழ சாதம் செய்வேன். தேங்காய், முந்திரிப்பருப்பு சேர்க்கறதில்லை.

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

தேங்காயும் முந்திரியும் போட்ட எலுமிச்சை சாதமா. இப்படி டிரை பண்ணதில்லையே. இண்டரஸ்டிங். சமையல் குறிப்பு தருகிறீர்களா.

(நம்ம எலுமிச்சை சாதத்தில் கடலைபருப்பும் கருவேப்பிலையும்தான் இருக்கும் :) )

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

//நல்ல முற்றிய அருமையான தேங்காயில் நாலு பத்தை, நல்ல குண்டு குண்டு முந்திரி பருப்புகள் ஒரு கைப்பிடி என்று பன்னிரண்டு மணி வாக்கில் வாயில் போட்டு அரைத்தால், பிறகு சாப்பாடு இறங்குமா?//

காலையில் இதெல்லாம் ப்ரேக்பாஸ்ட்டா சாப்பிட்டா உடம்பு தாங்குமா? இதை எல்லாம் அழகா எழுதின இது ஒரு 'விழிப்புணவு' பதிவு!!

பேசாம ப்ரேக்பாஸ்ட் என்பதை விழிப்புணவு அப்படின்னே சொல்லலாமா? (முதலில் அப்படித்தான் படிச்சேன். அப்புறம் நீங்க சரியா ஸ்பெல்லிங் போட்டாக்கூட அதை நாங்க தப்பாப் படிச்சு தமிழில் புது வார்த்தைகள் சேர்க்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சியில்.... )

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

////சின்னவயதில் பத்தை தேங்காய் வாங்க மட்டும் என்னை அனுப்பவே மாட்டார்கள். முனைகள்
காணாமல் போய்விடும்//

என்னை அனுப்பினா முழுசாவே காணாம போய்டும்!//

வெறுங்கையோட வீட்டுக்குப் போனா உதை விழுமே அதனால நானே காணாமப் போயிடுவேன். :))

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

பத்மா..நானும் உங்க கட்சி தான்.. கூடவே..உ.பருப்பு.. கடலை பருப்பு..

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

Usha, elumiccham pazhaththukkum

thengaaykkum enna sambantham.

two in one saadhamaa:)))

piththam theLiya marunthonRu irukkuthu paattu ,
ninaivukku varuthu.

maththapadi veli oNAn ,

ellaaththaiyum oththukkiREn.:) en
anubavam pesukiRathu.

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

இறைவன் போட்ட பிச்சையான வாழ்க்கையெனும் அரிசியை நன்றியெனும் உணர்வால் பக்குவப்படுத்தி,ஆசாபாசங்களெனும் புளிப்பு, உப்பு காரம் சேர்த்து உண்ண விழைகையில், சீரும் சிறப்பும் (செல்வமும் புகழும்) தேங்காயும் முந்திரியுமாக உணவுக்கு சுவை கூட்டுகின்றன. ஆனால் அவைகளையே மனம் பற்றிக்கொண்டுவிட்டால் உணவின் மீதே அலர்ஜி வரக்கூடும், இறைவன் மீதே வெறுப்பு வளரக்கூடும் என்னும் உயர்ந்த ஆன்மீக உண்மையை வெளிகொணர்ந்து விட்டீர்கள். உண்மையிலேயே விழிப்புணர்வு கட்டுரைதான். எனக்கு! அன்புடன் :)

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

டெல்பின் மேடம், உணவு விஷயத்தில் நான் மிகவும் ஸ்டிரிட். என்னைப் பார்த்தாலே உங்களுக்கு புரியும். ஆனால் தேங்காய் என் பலவீனம். எங்கோ படித்தேனே, சமையலில் தேங்காய் சேர்த்து சமைப்பதுதான் கொலஸ்டாராலை அதிகரிக்கும்.
ஆனால் பச்சையாய் தின்றால் தவறில்லை என்று!

யூ டூ குமரன் :-)

வவ்வால் ஐயா, ஏதோ மொத முறையாய் ஒரு விழுப்புணர்வு கட்டுரை எழுதியிருக்கேன்.கண்டுக்காதீங்க.

கண்மணி, அதுக்கென்ன கொஞ்சம் பொறுங்க, நம்ம தெ.கா விரைவில் எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்களை விளக்கி ஒரு பதிவு போடுவார்.

ஜெஸி, அதுதான் கடைசில கொட்டை எழுத்துல மெசேஸ் கொடுத்துருக்கோமில்லே :-)

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

இளா, ஏதோ நீங்களாவது நல்ல வார்த்தை சொல்றீங்களே!!!

காட்டாறு, அதுதான் புது ரெசிபி சொல்லியிருக்கேனே பின்னுட்டத்துல. செஞ்சி பாருங்க. ஆனால் ஞாபகமா, கொத்துமல்லி தழையை பொடியாய் நறுக்கி, அதன் மீது தூவி விட்டு பரிமாறவும் என்பதை சேர்த்துக் கொள்ளவும்.

முத்துலட்சுமி, நமக்கு அப்படியே சாப்பிடுவேன் தான். அதுவும் கோவிலில் விபூதி, குங்குமம், துளசி வாசனையுடன் கிடைக்கும் அர்ச்சனை தேங்காய் மூடியை கோவில் தரையில் குட்டி குட்டி உடைத்து சாப்பிட்டால், ...ஆஹா ;-)

மங்களூர் சிவா, ஜி.ரா நன்னி.

வவ்வால், மூடி என்றால் இன்னும் செளகரியமே, அப்படியே எங்காவது இடித்து பெயர்த்து சாப்பிடலாமே. வீட்டில் கண்டும் பிடிக்க முடியாது. இந்தளவுதான் மூடி, நாடார் கடையில தந்தாங்கன்னு ஒரு போடு போட்டு விடலாம்.

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

துளசி, சும்மா ஒரு ஸ்பூன் தே.துருவலையும் வறுத்துப் போட்டு செஞ்சி பாருங்க. அட அடா கொலஸ்ட்ரால் பார்க்கிற
ஆளைப் பாரூ :-))))

பத்மா, சமையலில் நானும் சுயம்பு. கேட்டால் எங்கம்மா இப்படிதான் செய்வாங்க என்று சொல்லிவிடுவேன். என் சமையல் மகாத்மியங்கள் என்று ஒரு பதிவே போடலாம். சோதனை செய்வதில் விருப்பம் அதிகம். நீங்க சொன்னா மாதிரி காப்சிகம் போட்டு செஞ்சிப் பார்க்கிறேன்.

அரை பிளேடு போட்டாச்சு.

இலவசம், ஹி ஹி பிரேக் பாஸ்ட் இல்லை. சும்மா பன்னிரெண்டு மணி வாக்கில் நாலு வாயில் எடுத்துப் போட்டுக் கொண்டது.

 
At Wednesday, 22 August, 2007, சொல்வது...

மங்கை, இலவசம் ஆஹா எத்தனை தேங்காய் பிரியர்கள்.

வல்லிம்மா, ஏன் இந்த தங்கீலிஷ்? தமிழ் பாஃண்ட் இல்லையா?

கபீரன்பன்! உண்மையில் அன்று உண்மை புரிந்தப் பொழுது மனதில் தோன்றிய எண்ணம் இது. தவறை நாம் செய்துவிட்டு பழியை மற்றவர்கள் மீதுப் போடுகிறோம். நன்றி

 
At Thursday, 23 August, 2007, சொல்வது...

Lemonrice try with dry lemons, I think you have come across in Dubai, Arabs very fond of dried lemons and they will use it for biriyani also.

 
At Thursday, 23 August, 2007, சொல்வது...

உஷா!
உண்மையாதான் கேட்கிறேன். எலுமிச்சைச் சாதம் என்றால் என்ன?

 
At Thursday, 23 August, 2007, சொல்வது...

nice to read yr pathippugal after a couple of months. last 2 articles( 'vadivelu' and lemon rice are well written. latha prefers to avoid coconut and mundhiri in lemon rice and instead uses kadali paruppu. i am trying to know how to start using tamail font. till then pl bear with my Tanglish!!
By the by hearty congrats for shifting base to surat
(latha)sridhar

 
At Thursday, 23 August, 2007, சொல்வது...

நான் நல்ல பையனாக்கும்...

கடையில் இருந்து வாங்கி வரும்போதெல்லாம் சாப்பிட மாட்டேன். நறுக்கு வைத்திருப்பார்கள் அல்லது தேங்காய் சில்லாக்கி வைத்திருப்பார்கள்( நாங்க அப்படிதான் சொல்லுவோம்). முதலில் கொஞ்சம் பொட்டுகடலையை போட்டு கொண்டு அதற்கு பதமாக தேங்காயை அள்ளிப் போட்டுக்கொள்வேன்.

 
At Thursday, 23 August, 2007, சொல்வது...

கூத்தலூரான், தவறாய் நினைக்க வேண்டாம். சின்ன சந்தேகம் நீங்கத்தான் "சாபு"வா?

யோகன் செய்முறை சொல்லுயிருக்கேனே? அம்மாக்களுக்கு அவசரத்தில் கைக் கொடுக்கும் தீடீர்
சாத வகை இது. தேங்காய் போடாவிட்டால் கெட்டும் போகாது. பயணத்துக்கு நன்றாக இருக்கும்.

சுகுணா...?????

முத்துகுமரன், இதனால் கண்டறிந்த உண்மை என்னவென்றால், சின்ன வயதில் வீட்டுக்கு தெரியாமல்
தேங்காய் தின்றவர்கள் இன்று எழுத்தாளராய் அல்லது உங்களை போன்ற இலக்கியவாதிகளாய்
பரிமளிக்கிறார்கள். சரியா :-)

ஸ்ரீதர் சார், ஆமாம் வேர்கடலை அம்மா போடுவார். மெயில் வருது பாருங்க.

 
At Sunday, 26 August, 2007, சொல்வது...

என்னமோ ஏதோன்னு வந்து பார்த்தா...

உஷா இது உனக்கே நல்லா இருக்கா....?

இல்லே கேக்கறேன்.... தின்ன ஐட்டத்தெ பாத்தா ....

 
At Wednesday, 29 August, 2007, சொல்வது...

தீதும் நன்றும் பிறர் தர வாரா.
இப்போ புரிந்தது .. The Moral of the Story..

 
At Thursday, 30 August, 2007, சொல்வது...

மஞ்சூர் ராசா,ஒரு சமையல் குறிப்பு போடட்டுமா:-)

மடல்காரன்! நீங்களாவது சொன்னதை அல்லது சொல்ல முற்பட்டத்தை சரியாய் புரிந்துக் கொண்டீர்களே நன்னி :-)

 
At Thursday, 30 August, 2007, சொல்வது...

I LOVE எலுமிச்சம்பழ சாதம் AND THIS BLOG.

CONGRAJULATIONS MADAM CONGRAJULATIONS!

 
At Wednesday, 17 October, 2007, சொல்வது...

எலுமிச்சை பழ சாதம் எப்பிடி செய்வது. ?? நமக்கெல்:லாம் இந்த தயிர்சாதம் தக்காளிசாதம் சாப்பிட பிடிக்கும் ஆனா செய்முறை தெரியாதே.

 
At Sunday, 07 September, 2008, சொல்வது...

எலுமிச்சை சாதத்துல தேங்காய் துருவல் & முந்திரி பருப்பா? ம்ம் நடத்துங்க நடத்துங்க. இதுல செய்றப்போவே ஒரு கைப்பிடி!!! ஆளை பார்த்தா அப்படி சாப்பிடுற மாதிரி தெரியலையே!!!

சரி அதெல்லாம் விடுங்க, எங்க வீட்டுக்கு ஒரு குட்டி நிலவு வந்திருக்கு, என்ன மேட்டர்ன்னு நம்ம வலைப்பதிவுல பாருங்க. நல்லது கெட்டது கூட வலைப்பதிவு வழியாவே சொல்ல வேண்டியதா இருக்கு, என்ன கொடும சார் இது?

 
At Sunday, 07 September, 2008, சொல்வது...

என்ன நடக்குது இங்கே? இந்த ஆதிகால பதிவை இப்ப படிச்சி கமெண்ட் போட்டா, என்ன
எழுதினேன்னு முழிக்க வேண்டியிருக்கு.

அடேய் ராசா, உனக்கு என் மெயில் ஐடி தெரியாது நற நற நற :-((((((((((

 

Post a Comment

<< இல்லம்