Thursday, November 01, 2007

என் நாட்குறிப்பில் சில பக்கங்கள்- 1-11-2007

சும்மா இல்லாமல், வீட்டை சரி செய்கிறேன் (இது வழக்கமாய் செய்வதுதான்- ஒரு சாமான் ஒரு இடத்தில் சில நாட்கள் இருந்தால் எனக்கு சரிப்படாது) அதையும் இதையும் மாற்றி வைத்ததன் வம்பு, சனிக்கிழமை மாலை, வழக்கப்படி, நடந்து விட்டு வந்ததும், இடுப்பு பிடித்ததுப் போல இருந்தது. நேரம் ஆக ஆக வலி. கொஞ்சமும் குனியவும் முடியவில்லை, ஒரு மாதிரி ஸ்ட்ரக் ஆனதுப் போல இருந்தது.

மூவ் தடவிக் கொண்டு படித்து தூங்கிவிட்டேன். காலையில் வலி எல்லாம் இல்லை என்று வேலையை ஆரம்பித்தால், அரைமணியில் மீண்டும் வலி தொடங்கியது. முணுக் முணுக் என்று பின்பக்கம் வலி. காலிலும் பரவியது. முதுகில் வலி இல்லையே என்று வழக்கப்படி கூகுளில் தேடினால் அரை குறை ஞானம், சிறு நீரக பிரச்சனையோ என்று லேசாய் பயம் வந்தது. அன்று ஞாயிற்று கிழமை. தெரிந்த பெண் மருத்துவரைத் தேடிப் போனால், பார்த்துவிட்டு, வலி குறைய ஊசிப் போட்டவர், இனி மேற்கொண்டு ஆர்தோ (இதற்கு தமிழில் என்ன?) மருத்துவரைப் பார்க்க சொன்னார்.

வலியுடன் வீட்டு வேலைகளும் தொடர, மறுநாள் மாலை அவர் சொன்ன, ஆர்தோவை போய் பார்த்தோம். மருந்துகளுடன் பெட் ரெஸ்ட் என்று சொல்லிவிட்டார். உட்கார்ந்தால் வலி அதிகமாகிறது. அதனால் கணிணிக்கும் தடா. மாடி வீட்டில் இருந்து இனித்துக் கொட்டும் குஜராத்தி சாப்பாடுக்கு சொல்லிவிட்டு, எஸ்.பொ அவர்களின் மாயினி மற்றும், அ.முத்துலிங்கத்தின் சிறுக்கதை தொகுப்பும் பக்கத்தில் வந்தாகிவிட்டது.

மாயினி, துப்பறியும் நாவலின் விறுவிறுப்புடனும், சரித்திர கால சம்பவங்களின் சுவாரசியங்களுடன் ஒரு முறை முடித்ததை, சரித்திரம் தெரிந்துக் கொள்ளும் ஆவலுடன் இரண்டாம் முறை தொடர்ந்துக் கொண்டு இருக்கிறேன். இந்நாவல் இலங்கையில் கிடைக்குமா என்று சந்தேகம், ஆட்சியாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, ஒழுக்கங்களை கேள்வியாக்கியுள்ளது. படிக்க படிக்க நிறைய கேள்விகள், மனதில் எழுகின்றன :-)

அதற்குள் நடு நடுவே முத்துலிங்கனாரின் சிறுகதைகள், அலுப்பூட்டும் இவ்வேளையை சுவாரசியமாக்குகின்றன. தலைவலி போய் திருகுவலி வருமோ என்று புத்தகங்களை கீழே வைத்துவிட்டு, தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

காலைகாட்சிகளில் சூர்யவம்சம் என்று ஒன்று, நம் ராதிகா தயாரிப்பு. சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வரும் கிராபிக்ஸ், காட்சி அருமையாய் இருக்கிறது. கதை பொள்ளாச்சி, கிணற்றுகடவு என்று என் அம்மா, அப்பா வாழ்ந்த ஊரை சுற்றி வருகிறது. உடம்பு
சரியானதும் போட்டு பார்க்க சொல்லணும்.

மற்ற தொடர்கள் எல்லாம் அறுவை, தொடர்ந்து பார்ப்பவர்கள் பூமாதேவிக்கு இணையான பொறுமைசாலிகள். கோலங்கள் தொடரில் வரும் ஆதி, ஒரு தொடரில் அதே மழலை தமிழ். கொஞ்சி, கொஞ்சி பேசுவது அந்தாளு ஸ்டைல் என்றால், பெயர் தேவி ப்ரியாவாமாம்,
அந்த பெண், அப்படியே ஓவராய் நம் ஜோ வை இமிடேட் செய்வது அதைவிட கொடுமை :-(

மணிக்கொடி கால எழுத்தாளர் லா.சா.ரா காலமாகிவிட்டார். ஒரு சகாப்தம் முடிந்தது. ஏனோ அவரும், மெளனியும் தங்கள் உலகில் என்னை நுழைய அனுமதிக்கவில்லை. பாம்பு, பளீரீடும் மூக்குத்தி, அம்மன், ஆங்கில எழுத்துக்கள் என ஏனோ அதிகம் கவரவில்லை. நிறைவேறாத காமம் என்று அவர் எழுத்து சுற்றி கொண்டு இருந்ததோ என்று தோன்றும். என் புரிதலுக்கு மிகவும் மேம்பட்டதாய் இருந்தது அவர்கள் இருவரின் எழுத்தும். ஒரு வேளை இன்று படித்தால் புரியுமோ? அடுத்த முறை சென்னைப் போகும்பொழுது, லா.சா.ரா அவர்களின் படைப்புகளை அள்ளிக் கொண்டு வர வேண்டும்.

கற்றது தமிழ் இயக்குனரின் செவ்வி கண்ணில் விழுந்தது. எந்த மனுஷனுக்கு எதிரி வெளியில் இல்லே என்பார்களே, முற்றிலும் சரி.

33 பின்னூட்டங்கள்:

At Thursday, 01 November, 2007, சொல்வது...

கிணத்துக்கடவுல இருந்தீங்களா? நான் கிணத்துக்கடவுதான் தெரியுமோ??

 
At Thursday, 01 November, 2007, சொல்வது...

ம்
அப்புறம் ?
:-)))

 
At Thursday, 01 November, 2007, சொல்வது...

Usha,
Sorry to hear that you are suffering. Take care.

 
At Thursday, 01 November, 2007, சொல்வது...

//அதையும் இதையும் மாற்றி வைத்ததன் வம்பு, சனிக்கிழமை மாலை, வழக்கப்படி, நடந்து விட்டு வந்ததும், இடுப்பு பிடித்ததுப் போல இருந்தது. நேரம் ஆக ஆக வலி. கொஞ்சமும் குனியவும் முடியவில்லை, ஒரு மாதிரி ஸ்ட்ரக் ஆனதுப் போல இருந்தது.//

வயசாகுற காலத்தில் வர்றதுதான் எல்லாம் ;)

 
At Thursday, 01 November, 2007, சொல்வது...

'இலக்கின்றி எழுதுதல்'...அப்டீன்னு ஒரு கான்செப்ட்...

அதோட காப்பி மற்றும் டீ ரைட் எங்கிட்டத்தான் இருக்கு....

பெர்மிசன் வாங்காம அதை யூஸ் பண்ணீருக்கீங்க....

இருக்கட்டும்...இருக்கட்டும்....

(வலி இப்ப எப்டி இருக்கு...உடம்ப பாத்துக்கங்க ஆத்தா..!)

 
At Thursday, 01 November, 2007, சொல்வது...

தேவி ப்ரியாவுக்கு ரசிகர் மன்றம் வைக்கும் அளவு நலம்விரும்பிகள் இருக்கிறார்கள்.

மாயினி விமர்சனம் கிடைக்குமா?

நலம் பெற வேண்டும்...

 
At Thursday, 01 November, 2007, சொல்வது...

தங்ஸ், என் பெற்றோர்களின் பூர்வீகம் கொங்குமண்டலம். ஆனால் எனக்கு எல்லாம் சென்னைதான். கிணற்று கடவு
அப்பாவின் வாயில் அடிக்கடி வரும் ஊர். ரிடையர் ஆனதும் கோவையில் செட்டில் ஆக வேண்டும் என்பது என் கனவு.

ம.சிவா, என்னைப் போலவே கதை கேட்பதில் இவ்வளவு ஆசையா? தொடர்ந்தா போச்சு.

நட்பு தேடி, நன்றி! எனக்கு உங்க மெயில் ஐடி தாங்க. பப்ளிஷ் செய்ய மாட்டேன்.

இரண்டாம் சொக்கன் என்ற புது பிறவி ஐயா! (அடுத்து இந்த பெயரை கூட வைத்துக் கொள்ளலாம்) கொஞ்ச நேரம்
உட்கார்ந்தால் வலி வருகிறது.

பாபா, எனக்கு வராத கலையில் விமர்சன கலையும் ஒன்று. பொதுவாய் வேண்டுமானாலும் எழுதுகிறேன்.
தேவி ப்ரியாவுக்கு ரசிகர் மன்றமா? சரி சரி :-)))

 
At Thursday, 01 November, 2007, சொல்வது...

நீங்க இவ்ளோ திட்டமா உணவு, உடற்பயிற்சி எல்லாம் இருந்துமா இப்படி? கால்ஷியம் சாண்டோஸ் சாப்பிடுங்க (மருத்துவர் ஆலோசனைக்குப்புறம் தான்). :))

சீரியல் பத்தி என்ன சொல்ல? ஒரே ஒரு சீரியல் தான் விஜய் டிவில இரவு 8.30க்கு "மதுரை" பார்ப்பேன்.

 
At Thursday, 01 November, 2007, சொல்வது...

உட்மபு சரி பண்ணிகிட்டு வந்து......... "நட்சத்திரம் ஆனேனே" ஸ்டையில்ல ஒரு பதிவ போட்டு கலக்குங்க........

 
At Thursday, 01 November, 2007, சொல்வது...

அடக்கடவுளே......

இடுப்புவலியா?

உடம்பைப் பார்த்து(???) கொள்ளவும்.

 
At Thursday, 01 November, 2007, சொல்வது...

Dear Usha,
Unga blog in Silent Reader.En kannil pattamudhal mudhal pen padhivalar neenga dhan.Tamizh font il oru blogger nu tamizh la padicha oru sandhosham dhan.

Magazine la unga writings ai padichu iruken.

Sila samayam ungalin ennam - ennai polavae irupadhaga ninaithu kolven - adhavadhu - vaiyai koduthu maati kolvadhu. He He he.

Namakellam nalla manasu.Mandhil onru varthaiyil onru enru iruka theiryadha oru gunam.Idhanal kashtangalai than adhigam sandhithu irukiren.Hmmm..

About La.Sa.RA. Ungal blog moolam dhan avarin maraivai therindhu konden.
Avarin maraivu varuthathai tharugiradhu.
Ennudaiya aazhndha anudhabangalai therivithu kolgiren.

ennudaiya chinna vayadhil padithathil niriaya puriyavillai.Ippodhu dhan padikanam enru ninaithu konden.

En friend in moolam oru murai engal veetuku la.Sa.Ra. vandhu iurndhar ( 12 years back)

Oru nanbanaga vandhu irundhu vittu ponar.

Appodhu naanum en ammavum murku seidhu kondu iurndhom.Konjam butter adhigam agi vittadhu.So muruku shape il varamal, udanindhu poi vandhadhu.

La.Sa.RA - vandha udan - vasanai nanna iurkae ?? enna parnae? enaku thaa enru kettu vangi saptar.

Appdohu "payasam" patri oru vishayam sonnar.Avar pechum avarin ezhuthu pola amanushyamaga than iruku Usha.

"En amma romba kobakari.Chinna vayadhil nanum en annavum sandai pottu kondom.Anru pandigai naal.Amma payasam seidhu vaithu irundhar.Engalai ellam sapida kuptar.Nanga yarum sapida varalai.Amma ku kobam .Enga edhdirkae payasathai - Thotti mutrathil kotti vittar.
Adharku piragu amma ethanaiyo payasam pannina.Ana amma seinju naan sapidama pona andha payasam dhan romba ruji" nu sollindar.
Amma pasam - romhbavae ulla oru ezhuthalar.


மணிக்கொடி கால எழுத்தாளர் லா.சா.ரா காலமாகிவிட்டார். ஒரு சகாப்தம் முடிந்தது. ஏனோ அவரும், மெளனியும் தங்கள் உலகில் என்னை நுழைய அனுமதிக்கவில்லை. பாம்பு, பளீரீடும் மூக்குத்தி, அம்மன், ஆங்கில எழுத்துக்கள் என ஏனோ அதிகம் கவரவில்லை. நிறைவேறாத காமம் என்று அவர் எழுத்து சுற்றி கொண்டு இருந்ததோ என்று தோன்றும். என் புரிதலுக்கு மிகவும் மேம்பட்டதாய் இருந்தது அவர்கள் இருவரின் எழுத்தும். ஒரு வேளை இன்று படித்தால் புரியுமோ? அடுத்த முறை சென்னைப் போகும்பொழுது, லா.சா.ரா அவர்களின் படைப்புகளை அள்ளிக் கொண்டு வர வேண்டும்.

La.SA.RA. - Nichayam oru Sagaptham dhan.

Ungalai polavae nanum - avarin padaipugalai padika ninaikiren....

With Love,
Usha Sankar.

 
At Friday, 02 November, 2007, சொல்வது...

---பொதுவாய் வேண்டுமானாலும் எழுதுகிறேன். ---

அவசியம் போடுங்க... எதிர்பார்ப்புடன் (உங்க பதிவு பார்த்த பிறகு இந்த வருடம் வாங்கவேண்டிய புத்தக லிஸ்ட் போடலாம் என்று ஐடியா :)

 
At Friday, 02 November, 2007, சொல்வது...

தாசு, அம்பி! மருத்துவரும் கால்சியம் மாத்திரை தினமும் சாப்பிட சொன்னார். ஹூம்! வயசு ஆகிறது
என்று எல்லாரும் பயமுறுத்துகிறார்கள். எனக்குதான் அப்படி
தோன்றவில்லை :-)

ராதா, வாசகர் விருப்பம் விரைவில் நிறைவேறும்

துளசி, அது என்ன உங்களுக்கு மட்டும்தான் முதுகுவலி வருமா :-),
எப்படியோ எனக்கும் முதுகு எலும்பு இருக்கு என்று சந்தேகத்துக்கு இடமின்றி நீரூபிக்கப்பட்டுவிட்டது.

இன்னும் ஒரு உஷா, மிக்க நன்றி, http://www.suratha.com/reader. இங்க போய் மேல் பெட்டியில்
ஆங்கிலத்தில் அடித்து, TSC என்பதை கிளிக்கினால் கீழ் பெட்டியில் யூனிகோர்ட்டில் வரும்
அதை காப்பி செய்து கமெண்ட் பாக்சில் போட்டால் ஆயிற்று. இவ்வளவு தங்கிலீஷ் படிக்க
சிரமமாய் இருக்கு. உஷா என்று பெயர் வைத்தாலே, குணமும் இப்படிதான் இருக்கும் போல :-)

பாபா, எஸ்.பொ அவர்களின் பொன்விழாவில் முழு நாளும் இருந்தேன். அதையும், நாவலை
குறித்தும் கட்டாயம் எழுதுகிறேன்.

 
At Saturday, 03 November, 2007, சொல்வது...

உஷா, இது என்ன வலி பேசும் காலமா.
இப்போ தேவலையா.

அதது நகராமல் இருந்தால் நான் நகர்த்தி வச்ச காலம் போச்சு. எங்க வீடு கங்குப் பையந்தான் மாத்தி வைக்கிறான்.

லாசரா நானும் விகடன்,குமுதத்தில் படித்தது தான்.
அவர்,தி.ச.ராஜு,நரச்ய்யா இவர்கள் எல்லாம் எழுத்து வடிவில் சினேகிதமானவர்கள்.

புரிவதுதான் சிரமம்.
இன்னும் வரப் போகும் குளிர்காலத்தில் முதுகு, கை கால் எல்லாம் ஒழுங்காக வைத்துக் கொள்ளுங்கள்.
சீக்கிரமே குணமாக விஷஸ் அனுப்புகிறேன்.

 
At Saturday, 03 November, 2007, சொல்வது...

வல்லி, வலி எல்லாம் ஓடித்தான் ஆக வேண்டும். அதுக்கே தெரியும் நம்ம பாச்சா எல்லாம் இங்க
பலிக்காது என்று :-)

 
At Saturday, 03 November, 2007, சொல்வது...

வல்லி, பல்வேறு காரணங்களினால் நாம் நம் உடலைப் பார்த்துக் கொள்வதே இல்லை. வயது ஆக ஆக, நாம் பராமரிக்காத உடல் அவ்வப்பொழுது சிறு சிறு வகைகளில் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. அதை நாம் அலட்சியம் செய்யும் போது, அது முழு வேலை நிறுத்தம், உண்ணா விரதம் எனப் பயமுறுத்துகிறது. அதை அவ்வப்போது கவனித்து விடுதல் நல்லது.

சீக்கிரமே முழு குணமடைய வாழ்த்துகள்

 
At Saturday, 03 November, 2007, சொல்வது...

உஷா, அவ்வப்போது வந்து படிப்பதுண்டு/பின்னூட்டமிடுவதுண்டு...
இன்று இந்தப் பதிவைப் பார்த்தேன்.. என் அம்மாவுக்கும் இதே தான். குளிர் வந்தால் பாவமாக இருக்கும் (அதனாலியே இங்கே அவரை குளிர்காலத்தில் வரச் சொல்லக் கஷ்டமாக இருக்கும்). வலியை பல்லைக் கடித்துப் பொறுக்கப் பார்ப்பார்...:-((( இப்போதே இதை கவனிப்பது நல்லது.

உடம்பைப் பார்த்துக் கொள்ளவும்.
கெ.பி.

 
At Saturday, 03 November, 2007, சொல்வது...

உஷா, என்னோட முந்தைய பதிவுலே, வல்லி என எழுதிட்டேன் அவசரத்துலே. அது உஷாவுக்கு எழுதின பின்னூட்டம்தான்

 
At Saturday, 03 November, 2007, சொல்வது...

கெகேக்பிக்குணி, இங்கு இன்னும் வெயில் குறையவேயில்லை. தற்போதைய வலிக்கு காரணம்,
வலுவான சாமான்களை, நானே அங்கும் இங்கும் நகர்த்தியது, ஸ்டூலில் ஏறி பளு தூக்கியது போன்றவைதான். இனி இவைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த வாரம், இதற்கான உடல் பயிற்சிகள் பிசியோதொரபியில் சொல்லி தருவார்களாம். தொடர்ந்து செய்தால் சரியாகிவிடும்.

சீனா சார், இரண்டு கமெண்டுகளுக்கு நன்றி. எனக்கு தெய்வம், பூஜை புனஸ்காரங்களில் நம்பிக்கை
இல்லாததால், உண்ணாவிரதம் எல்லாம் என் வாழ்நாளில் இருந்ததேயில்லை. அதை தவிர, உடல் ஆரோக்கியத்தில் மிக எச்சரிக்கையாய் இருப்பேன். இது நானே வரவழைத்துக் கொண்ட தலைவலி

 
At Saturday, 03 November, 2007, சொல்வது...

சரிதான். கணினியில் அமரக் கூடாது என்று சொன்னால் நாங்க கேட்போமா? அதான் இப்படி மொக்கை போடுவது என முடிவோட வந்திருக்கிறோம்.

சொன்னபடி கேட்பது என்பதுதான் சின்ன வயதில் இருந்தே கிடையாதே. ஐந்தில் விளையாததா ஐம்பதில் விளையப் போகுது? உஷாக்கா, அது பழமொழி மீதி வயசை விட்டதுக்கு ரொம்ப ரென்சன் ஆவாதீங்க.

க்விஸ் போட்டியில் ஒரு கேள்விக்குக்கூட விடை தெரியலை. அதைச் சொல்ல தன்மானம் தடுக்குது. அதானே இப்படி வயத்து வலி, முதுகு வலின்னு நொண்டிச் சாக்கு? போகட்டும்.

 
At Sunday, 04 November, 2007, சொல்வது...

அது இல்லை இலவசம், நாலைந்து நாட்களாய் என் பதிவு, வரும் பின்னோட்டம் தவிர வேறு
எதையும் பார்க்கவில்லை. அதிகாலையில் சுஜாதா ஒரு முறை சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது,
அதாவது கொஞ்சம் பிரபலம் அடைந்துவிட்டால், எழுத்தாளர்கள் தங்கள் படைப்பை தவிர மற்றதைப்
படிக்க மாட்டார்களாம். இது நினைவு வந்ததும், பயந்துப் போய்விட்டேன், எனக்கும் அப்படி எதாவது நெனப்பு வந்துவிட்டதா என்று என்னை நானே கேட்டுக் கொண்டு, மற்ற பதிவுகளையும்
படித்துக் கொண்டு தருமிக்கு ஒரு பின்னுட்டமும் போட்டுவிட்டு வந்தேன்.

 
At Sunday, 04 November, 2007, சொல்வது...

Take Care Of Your Health!

 
At Sunday, 04 November, 2007, சொல்வது...

நான் ல.ச.ரா. வின் பச்சைக்கனவு படித்திருக்கிறென். அதுவும் 19 அல்லத 20 வயதில். திரும்பவும் அவர் கதைகள் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் உங்களைப்போலவே உண்டு. மெளனியை குறுக்கும் நெடுக்குமாக பலமுறை படித்து விட்டேன். விமர்சனமம் செய்து அது வெளிவந்தம் விட்டது காலக்குறியில். அவரது ஒவ்வொரு கதைகள் குறித்த விரிவான வாசிப்பும் வைத்திருக்கிறேன் வெளியிடாமல். ல.ச.ரா. குறித்து ஒரு 'பிட்'-டைவேறு போகிற போக்கில் போட்டுவிட்டீர்கள். நிறைவேறா காமம் என்று. இது பொதுவாக எல்லா எழுத்துக்களின் பண்புதன் என்கிறது பிராய்டியம்.

அப்பா உங்களக்கு பின்னோட்டம் போட்டு நான் பிரபல வியாதியிலிருந்து தப்பிச்சேன்.

மேடம் அவ்வப்போது உடம்பையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

 
At Sunday, 04 November, 2007, சொல்வது...

ஜமாலன், மெளனியின் சிறுகதை தொகுப்பு படித்தப்பொழுதும் அப்படிதான் தோன்றியது. அவர் கதைகளைப் பற்றி எழுதியது வெளியிடாமல் வைத்திருக்கிறேன் என்றால், பிலாக் எதுக்கு இருக்கிறது :-) சாஃப்ட் காப்பி இருந்தால் போடுங்களேன். படைப்புக்கும், படிப்பவர்களுக்கும் சுமுகமான உறவு இருக்க வேண்டும். சும்மா பயமுறுத்துகிறா மாதிரி எழுதினால் எப்படி? அது சரி, அவரவர் "பூத்தது போல- நன்றி லா.ச.ரா" இல்லையா?

சிபி, நன்றி

 
At Sunday, 04 November, 2007, சொல்வது...

Usha
I think your lumbar vertibra has mild inflammation, this adds pressure to spinal cord, resulting in pain. this presses sciatic nerve, leading to pain down the legs. The best tratement is to apply heat, increase blood flow and reduce inflammation. Please also go for bone density check up with in a year and make sure your calcim intake is fine as well. When you take calcium, need to take vit D so that the absorption is good. Do not take calium with otu consulting Doctro. You can drink milk, diluted butter milk etc with no side effects.

 
At Sunday, 04 November, 2007, சொல்வது...

உஷா,
இப்போ எப்படி?
நலமா?

 
At Monday, 05 November, 2007, சொல்வது...

நன்றி பத்மா, நீங்கள் சொன்னதுதான் டாக்டரும் சொன்னார். இப்பொழுதும் சிறிது நேரம் உட்கார்ந்தால் வலி வருகிறது, இப்பொழுது கீழ் முதுகில்.

சந்திரவதனா, இப்பொழுது பரவாயில்லை.

 
At Monday, 05 November, 2007, சொல்வது...

உஷா..

இரண்டு மாசத்துக்கு முந்தி எனக்கும் அதுவும் கல்லூரியில திடீர்னு இடுப்பு பிடிப்பு ஏற்பட்டு..ஒரு இன்ச் கூட நகர முடியாம...ஆஹா..அதுக்குள்ள நமக்கு என்ன என்னமோ தோனி..
:-)) அங்கேயே பிஸியோதரபி துறை இருக்குறதுனால வீல் சேர்ல தூக்கிட்டு போய்..ஏதோ மருந்து..ஊசி எல்லாம் குடுத்து...சாயந்திரம் வரைக்கும் படுத்திருந்தேன்...பெரிய நாடகம் தான்... அத்தன பேருக்கு முன்னாடி இடுப்ப பிடிச்சுட்டு நிக்கறதுக்கும் embaressing ஆ இருக்கும்...

இப்ப எப்படி இருக்கீங்க உஷா..கவனம்

 
At Monday, 05 November, 2007, சொல்வது...

//அதிகாலையில் சுஜாதா ஒரு முறை சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது,
அதாவது கொஞ்சம் பிரபலம் அடைந்துவிட்டால், எழுத்தாளர்கள் தங்கள் படைப்பை தவிர மற்றதைப்
படிக்க மாட்டார்களாம்.//

அப்படி அல்ல, கொஞ்சம் பிரபலம் அடைந்து விட்டால் , உள்ளூர் படைப்புகளைப்பற்றி பேசாமல் வாயில் நுழையாத அயல்நாட்டு எழுத்தாளர்களை மட்டும் படித்து , ஆங்காங்கே அவர்கள் எழுதும் போது நேம் டிராப்பிங்க் செய்வார்கள்!(இதுவும் சுஜாதா வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உளறிக்கொட்டியது தான்)

நீங்கள் மவ்னி,லா.சா.ரா, மாயினி,எஸ்.பொ என்று சொல்வதெல்லாம் நேம் டிராப்பிங்கில் வருமா என்று அக்கலையில் வல்லுநர்கள் யாராவது வந்து சொன்னால் தான் உண்டு.

முதுகில வலி வந்து தான் உங்களுக்கு முதுகெலும்பு இருக்குனு நிருபிக்குதா! அப்போ பிரெயின் இருக்குனு நிருப்பிக்க பிரெயின்ல வலி வரனுமா :-)) என்ன கொடுமை இது!

வலியில் நான் வேறு கூடுதலா வலிக்க வைக்கிறேன் போல, தப்பா நினைக்காதிர்கள், வைத்தியர் சொல்படி கேட்டு செயல்படுங்கள்,சீக்கிரம் குணம் அடைவீர்கள்!

//இனி மேற்கொண்டு ஆர்தோ (இதற்கு தமிழில் என்ன?) மருத்துவரைப் பார்க்க சொன்னார்.//

ஆர்த்தோகிராபி = முட நீக்கியல் (அரசு மருத்துவமனையில் இப்படித்தான் எழுதி இருக்கு தப்பா இருந்தா நான் பொறுப்பல்ல)

 
At Monday, 05 November, 2007, சொல்வது...

வவ்வால் ஐயா, சுவாரசியமான பின்னுட்டத்துக்கு மிக்க நன்றி. கற்றது தமிழ் என்று தமிழில் வலை பதிந்து, அதில் தமிழ் எழுத்தாளர்களை குறிப்பிட்டால் தவறா ஐயா? மாயினி எஸ்.பொ அவர்களில் தமிழில் எழுதிய நாவல். இரண்டாம் முறையாய், ஈழம் பற்றி தெரிந்துக் கொள்ள படித்துக் கொண்டு இருக்கிறேன், லா.ச. ரா, மெளனி ஆகியோரும் தமிழில்
எழுதி, என்னைப் போன்ற சாதாரண வாசகர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டவர்கள்.தமிழில் எழுத்தாளர்களில் பிரபலம் என்று குறிப்பிட படுபவர்களின் படைப்புகளில் பெரும்பாலனவைகளை படித்திருக்கிறேன். அதனால் புத்தகங்களைப் பற்றி யார் பதிவு போட்டாலும், என் கண்ணில் விழுந்தால் என்னுடைய பின்னுட்டமும் இருக்கும்.

மூட நீக்கியல் வார்த்தையை சொன்னதுக்கு நன்றி.

மங்கை அப்ப தன்னால் வந்தது தானே போய்விட்டதா?

 
At Monday, 05 November, 2007, சொல்வது...

தாமதமான பின்னோட்டம். மெளனி குறித்து 2 பகுதிகளில் 1 காலக்குறியில் வந்துள்ளது. பிறதொன்று அவரது முக்கியமான கதைகள் பற்றிய ஒரு அரசியல் வாசிப்பு. அது வெளிவரவில்லை. பதிவுகளில் அதனை திரும்ப தட்டுவது சிரமம். ஸாஃப்ட் காப்பி வாய்ப்பை பார்க்கலாம்.

//படைப்புக்கும், படிப்பவர்களுக்கும் சுமுகமான உறவு இருக்க வேண்டும். சும்மா பயமுறுத்துகிறா மாதிரி எழுதினால் எப்படி? அது சரி, அவரவர் "பூத்தது போல- நன்றி லா.ச.ரா" இல்லையா?//

இது என்ன புதுமாதிரியான இலக்கியக் கோட்பாடா? இருக்கு. இலக்கியம் என்பது பு.பி. கூறுவதுபோல எதிர்காலத்திற்கான இன்ஷீரண்ஸ் ஏற்பாடெல்லாம் கிடையாது. சுமுகமான உறவு வேண்டுமென்றால் மளிகைக்கடை பில்தான எழுதவேண்டும். நல்ல இலக்கியம் வாசகனை அடுத்த தளத்திற்கு நகர்த்துகிறது. இருக்கும் நிலையை தக்க வைப்பதல்ல.

அதிகப்பிரசங்கம் என்றால் மன்னிக்கவும்.

 
At Tuesday, 06 November, 2007, சொல்வது...

ஜமாலன்,
உங்களை போன்றோர் என் பதிவை படித்து, பின்னுட்டமும் இடுவது எவ்வளவு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் தருகிறது
தெரியுமா? என்னை போன்ற பெண்களில் தீவிர வாசிப்பு என்பது மிக குறைவு. கலந்து உரையாடவும் யாரும் கிடைக்க மாட்டார்கள். அதனாலேயே ஒரு ஸ்டேஜ்க்கு மேல் போக இயலவில்லை. இன்று இணையம் பல சாளரங்களை திறந்து
விட்டிருக்கிறது. இப்பொழுது யாருக்கு நன்றி சொல்ல?
அதிக பிரசங்கிதனமா? தலையில் குட்டியது போல அல்லவா இருக்கிறது :-)))

பி.கு மளிகைகடை பில் என்பதை, லாண்டரி பில் என்று மாற்றிவிடவும். :-)))))

 
At Tuesday, 06 November, 2007, சொல்வது...

//என்னை போன்ற பெண்களில் தீவிர வாசிப்பு என்பது மிக குறைவு. //

ல.ச.ரா. மெளனி வாசிக்க ஆசைப்படுவதே தீவிர வாசிப்பிற்கான முயற்சிதான். முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

 

Post a Comment

<< இல்லம்