Sunday, October 30, 2005

Aitraaz

அக்க்ஷைய் குமார், கரீனா கபூர் மற்றும் ப்ரியங்கா சோப்ரா நடித்தது. முதல் ஒரு மணி நேரம் சாதாரணமாய் போகும் கதை, போகபோக சூடுப்பிடிக்கிறது. ஆள்மாறாட்ட நகைச்சுவையில் நாயகி கரீனாகபூரை காதலித்து மணக்கிறார் அக்க்ஷைய். அலுவல விருந்து ஒன்றில் முதலாளி, வயதான, ஆனாலும் ஸ்மார்ட்டான அம்ரீஷ் பூரியின் இளம் புது மனைவியாய் ப்ரியங்கா சோப்ரா எல்லாருக்கும் அறிமுகம் ஆகிறார்.

அவரைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார் அக்க்ஷைய். ப்ரியங்காவின் கிறக்கு பார்வை அவரை தொடர, கம்பனிக்கு தலைமை ஏற்ற ப்ரியங்கா, அக்க்ஷைய் க்கு பதவி உயர்வு தருகிறார். அலுவலக விஷயம் பேச என்று வீட்டுக்கு அழைக்கும் ப்ரியங்கா, மறுநாள் அக்க்ஷைய் குமார் தன்னிடம் தவறான நடந்துக் கொண்டார் என்று காரணம் காட்டி வேலையில் இருந்து நீக்குகிறார். தன் மேல் தவறு இல்லை என்று வேலையை விட்டுப் போக மறுக்கிறார் அக்க்ஷைய்.

எல்லாரும் அவரை வேலையை விடும்படி அறிவுறுத்தினாலும், செய்யாத தவறு என்று ஒத்துக் கொள்ளாததால்,
போலீஸ் கேஸ் ஆகி, வழக்கு நீதிமன்றம் போகிறது. வக்கீல் மனைவி கரீனா வாதாடுகிறார். எல்லா சாட்சிகளும் நாயகனுக்கு எதிராய் திரும்ப, ப்ரியங்காவைப் பற்றிய உண்மையை, பிளாஷ்பேக் கதையை மனைவியிடம் சொல்கிறார் அக்க்ஷைய். கடைசி எதிர்பார்த்த முடிவு என்றாலும் விருவிருப்பு குறையவேயில்லை.

செய்யாத தவறு என்று தவிக்கும் நடிப்பில் அக்க்ஷைய் நன்றாக நடித்தாலும், ப்ரியங்கா பாடிலேங்வேஜில், பேசும் தோரணையில் கலக்குகிறார். கரீனாகபூருக்கு நடிக்க அதிகம் வாய்ப்பில்லை. படம் முழுவதும் ப்ரியங்காவே ஆக்கிரமிக்கிறார்.

ப்ரியங்காவின் கேரக்டர் பல இடங்களில் மூன்றாம் பிறை சிலுக்கை ஞாபகப்படுத்துகிறார். வயதானவருக்கு இளம் மனைவி என்றால் அரைகுறை உடையில், கிறக்கு பார்வைப் பார்த்துக் கொண்டுத்தான் இருக்க வேண்டுமா? அதே மூன்றாம் பிறை பூர்ணம் விஸ்வநாதனைப் போல பணக்கார ஆனால் உபயோகமில்லாத கணவன்!

நல்ல நடிப்பு, கதை, இயக்கம் மற்றும் ப்ரியங்கா சோப்ராவிற்காக கட்டாயம் படம் பார்க்கலாம்.

4 பின்னூட்டங்கள்:

At Sunday, 30 October, 2005, Blogger E-currency Guy சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Sunday, 30 October, 2005, Blogger Saravan சொல்வது...

hero peru akshay kumar. akshay kanna illa.

>>ப்ரியங்கா சோப்ராவிற்காக கட்டாயம் படம் பார்க்கலாம்
correcta sonninga.

appuram pona deepavalikku vantha padatha intha varusa deepavalikku vimarsanam elutharinga :D

 
At Sunday, 30 October, 2005, Blogger பினாத்தல் சுரேஷ் சொல்வது...

எனக்கு இந்தப்படம் சுத்தமாக பிடிக்கவில்லை. எல்லா கதாபாத்திரங்களும் அவர்களுக்கு என வடிக்கப்பட்ட ஸ்டீரியோடைப்பில் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி வாழ்கிறார்கள். முக்கியமான சாட்சியான செல்போன் குளறுபடி, அந்த ரெகார்டட் டேப் போன்ற சிறுபிள்ளைத்தனமான (கதைக்கு மிக முக்கிய) முடிச்சு, கரீனாவின் கணவனே கண்கண்ட தெய்வம் காலத்திய பாத்திரப் படைப்பு, ரேப் கேஸ் என்றாலே ஆஜராகிவிடும் வில்லன் வக்கீல் (பரேஷ் ராவல்)...எதுவுமே பிடிக்கவில்லை:-(

 
At Sunday, 30 October, 2005, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

சரவண் நன்றி, மாற்றி விட்டேன்.தீபாவளி புதுபட விமர்சனம்தானே இனி அதுதான் தமிழ் மணத்துல வரிசையாய் வரும்! அசின் ரெண்டு மூணுபடத்துல ஈரோயினா நடிச்சிருக்குல்லே :-)
சுரேஷ், சரவண் சொன்னதை வழி மொழிகிறேன்.

 

Post a Comment

<< இல்லம்