Saturday, October 29, 2005

டில்லியில் பயங்கரம்.

டெல்லியில் மூன்று இடங்களில் பயங்கர குண்டு வெடித்தது. பலர் மரணம். தீபாவளி பர்சேஸில் முழ்கியிருந்த மக்கள் கூட்டத்தில் குண்டுகள் வெடித்துள்ளன. சில இடங்களில் குண்டுகளை கண்டுப்பிடித்து செயழிக்க வைத்துள்ளார்கள்.
யாருக்காக யார் போராடுகிறார்கள் என்றே தெரியாமல், அப்பாவிகள் பலிக்கடா ஆகிறார்கள். மனித உயிர் மிக மலிவாகிவிட்டது.
காலையில் ஆந்திராவில் ரயில் விபத்து. மரணம் இதுவரை இருநூறை தாண்டியுள்ளது. செய்திகளைப் பார்க்க, பார்க்க பயமாய் இருக்கிறது.

12 பின்னூட்டங்கள்:

At Saturday, 29 October, 2005, Blogger பத்மா அர்விந்த் சொல்வது...

சரோஜினி நகரில் குண்டு வெடிப்பு என்று கேள்விப்பட்டேன். அங்கே தென்னிந்தியர்கள் அதிகம் கடைகளுக்கு வருவார்கள், அரசாங்க குடியிருப்புக்களும் அதிகம்.அடிக்கடி போய்வந்த இடம் என்ற காரணமும் ஒரு வித அன்னியோன்னியத்தை தர மனதுக்கு கஷ்டமாய் இருந்தது.

 
At Saturday, 29 October, 2005, Blogger Mookku Sundar சொல்வது...

நியூஸ் பாத்தேன். மனசுக்கு கஷ்டமா இருக்கு.

( ஸ்பெல்லிங் மிஷ்டேக் ( முதல் வரி) சரி பண்ணிடுங்க)

 
At Saturday, 29 October, 2005, Blogger தாணு சொல்வது...

டெல்லியில் இருக்கும் நாத்தனார் சரோஜினி மார்க்கெட்தான் போவதாக இருந்து ஏனோ தடைப் பட்டுவிட்டதாம். அந்த செய்தியைக் கேட்டே ஆடிப்போய்விட்டோம், `போயிருந்தால்' என்ற கற்பனையில். போயிருந்தவர்களின் நிலைமை எவ்வளவு கொடுமை உஷா.

 
At Saturday, 29 October, 2005, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

தொலைக்காட்சியில் பார்க்கும்பொழுது, பொதுஜனங்கள், சாமான்கள் வைத்து தள்ளும் கைவண்டியில் அடிப்பட்டவர்களை போட்டு
வேகமாய் எடுத்துக் கொண்டுப் போனார்கள். இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாகிப் போனதால், அரசு அடிப்பட்டவர்களை கையாள பயிற்சி பெற்றவர்களை உருவாக்க வேண்டும். இன்னும் எத்தனை நாட்கள் "இந்தியா வளரும் நாடு" என்று சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறோம்?

 
At Saturday, 29 October, 2005, Blogger erode soms சொல்வது...

கேவலமான கோழைத்தனத்தால்
மார்தட்டி மகிழ்வோர்
பாவம்
பைத்தியக்காரர்கள்

 
At Sunday, 30 October, 2005, Blogger மதுமிதா சொல்வது...

உஷா

உங்கள் பதிவிற்கு இப்போது தான் வர முடிந்தது.
எல்லாமும் மாறும் என்று மாற்றத்தினைப் பார்த்திருப்போம்.

 
At Sunday, 30 October, 2005, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Sunday, 30 October, 2005, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

வன்முறைக்கு மனித இனம் ஏன் மாறுகிறது என்பதற்கு வறுமையும் ஒரு முக்கியகாரணம். நாங்கள் அஸ்ஸாமில் இருந்தப் பொழுது எல்லை
தாண்டி வங்காள தேசத்தினர் சட்ட விரோதமாய் உடுருவி, எல்லா வேலைகளையும் குறைந்த கூலியில் செய்வார்கள். குறைந்த
கூலி என்பதால் வேலை வாய்ப்பு அவர்களுக்கு அதிகரித்து, அஸ்ஸாமியரின் வேலை வாய்ப்பு குறையும். இதனால் பிரச்சனை ஏற்படும்.
இரண்டு பேரையும் தவறு சொல்ல முடியாது. சர்வேய்வல் பிரச்சனை.
உலகம் முழுவதும் இணைந்து , ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு தந்து வறுமைக்கு முடிவுக்கட்டினால், (முடியும் காரியமா என்று கேட்காதீர்கள்) இத்தகைய வன்முறைகள்,
போராட்டங்கள், சாவுகள் குறையும் என்பது என் எண்ணம்.

 
At Sunday, 30 October, 2005, Blogger தாணு சொல்வது...

சர்வைவல் ப்ராப்ளம் மட்டுமிருந்தால் வலியோரை எளியோர் தாக்குவது மட்டுமே நடக்கும் உஷா. இது அப்பாவிகளைப் பற்றிக்கூட யோசிக்க நெஞ்சில் ஈரம் வறண்ட அயோக்கியர்களின் செயல்.

 
At Sunday, 30 October, 2005, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

தாணு, வறுமை மற்றும் படிப்பறிவில்லாதவர்களை தங்கள் சுயநலத்துக்கு இக்கும்பல்கள் இழுத்துக் கொள்கிறார்களே? ÅÚ¨Á ´Æ¢ó¾¡ø ̨ÈÂÄ¡õ ±ý¸¢§Èý. இத்தகைய வன்முறை செயல்கள் மிக பெரிய நெட் ஓர்க், பொருள் மட்டுமில்லாமல் ஆள் பலமும் தேவை.

 
At Saturday, 05 November, 2005, Blogger ச.சங்கர் சொல்வது...

குழந்தைகளுடன் எல்லோரும் ஷாப்பிங் போவீர்கள்தானே...ஷாப்பிங் complex-ல் உங்கள் செல்லக் குழந்தை ஏதாவது கேட்டு அடம் பிடிக்கும்.நாம் கடைசிவரை அதை வாங்கிக் கொடுக்காமல் complex விட்டு வெளியே வந்து விடுகிறோம். பின் குழந்தையின் முகம் சோகத்தில் சுண்டிப் போனதைப் பார்த்து சீ...எதற்காக சம்பாதிக்கிறோம் என்று யோசித்து குழந்தையிடம் காசு கொடுத்து போ... போய் வாங்கிக் கொள் என சொல்கிறோம். குழந்தை சந்தோஷமாக விரும்பியதை வாங்க ஓடுவதை பெருமையும் சந்தோஷமும் வழிய பார்த்துக் கொண்டு நிற்கிறோம். இது எல்லோர் வாழ்க்கையிலும் சாதாரணமாக ஏதாவது தருணத்தில் நடக்கும் நிகழ்சிதானே....அப்படி complex-க்குள் திரும்ப போன குழந்தை குதூகலத்துடன் நுழைந்த கடைக்கு பக்கத்து கடையில் பாம் வெடித்து.....பாவிகளா.....பாவிகளா....இதயமே இல்லையா....
தெரிந்த ஒருவரின் நண்பருக்கு நடந்த சோகமிது...ஒரு நொடிப்பொழுதில் பெற்ற குழந்தையையும் வாழ்வின் அர்த்தத்தையும் கண் முன்னே தொலைத்து விட்டு நிற்கிறார்கள். இதுபோல் எத்தனையோ... காது கொடுத்து கேட்க்க முடியவில்லை...
டெல்லியிலிருந்து கனத்த இதயத்துடன்....ச.சங்கர்

 
At Sunday, 06 November, 2005, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

மனிதனுக்கு மறதி ஒரு வரப்பிரசாதம் என்கிறோம். ஆனால் சில இழப்புகளை சாகும்வரை மறக்க முடியாது. அதிலும் பெற்ற
குழந்தைகளின் மரணம், பெற்றவர்களின் கண் முன்னால் என்றால் .. கொடுமை!

 

Post a Comment

<< இல்லம்