Tuesday, November 01, 2005

ஜெ டி.வி- சி. அப்பாசாமி!

ஜெயா டீவியில், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்று போட்டு, நேற்றுவரை மாலை நான்கு மணிக்கு சந்திக்கலாம் என்று தங்கர்பச்சான் சொல்லிக் கொண்டிருந்தார். புது படம், நன்றாக ஓடுகிறது அதைப் பற்றி பேச போகிறார் என்று நினைத்திருந்தேன். நான்கு நாளாய் சன், ஜெ தொலைக்காட்சியில் விளம்பர டார்ச்சர் தாங்காமல் அதிகம் அந்தப்பக்கமே போகவில்லை. ஆனால் இப்பொழுது படமே போட போகிறார்கள் என்று அறிவிப்பு வந்துவிட்டது.

அது எப்படி இத்தனை புதிய படம், நன்றாகவும் ஓடிக் கொண்டு இருக்கிறது, அதை எப்படி தொலைக்காட்சியில் போடுகிறார்கள்? மர்மமாய் இருக்கிறது!

காலையில் இளையராஜாவின் இன்னிசை மழை. இனி படம், ஆனால் இரண்டு நிகழ்ச்சிகளையும், பதிவு செய்து பிறகுதான் பார்க்கப் போகிறோம்.எப்படியோ பார்க்க வேண்டியப்படம் என்று நினைத்தது, இவ்வளவு விரைவில் பார்க்க முடிந்தது சந்தோஷமே! (அந்நியன் போன வாரம்தான் பார்த்தேன்) இரண்டரை மணி நேர படம் எப்படியும் நாலில் இருந்து ஐந்து மணிநேரம் ஆக்கிவிடுவார்கள் :-)

12 பின்னூட்டங்கள்:

At Tuesday, 01 November, 2005, சொல்வது...

// இவ்வளவு விரைவில் பார்க்க முடிந்தது சந்தோஷமே! ///

பாத்ததுக்கு அப்புறமும் இப்படியே சொல்ல வாழ்த்துக்கள்

 
At Wednesday, 02 November, 2005, சொல்வது...

முகமூடியாரே படம் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா தங்கர்பச்சானுக்கு பதிலா வேற யாரையாவதுப் போட்டிருக்கலாம். சிலசமயம்
கேமிராவைப் பார்த்து முழிப்பது போல தோணியது. மலையாளத்துல சீனிவாசன், கேரக்டருக்கு அவருக்கே உரிதான அசட்டு முகக்களையுடன் ரொம்ப நல்லா பொருந்தியிருப்பார். அந்த படத்துக்கு விமர்சனம் எழுதினா உதைக்க வந்துவிடுவாங்க :-)
சி. ஓ. அப்பாசமியில் காமெடி என்று நாலு பேரூ கும்பல் சகிக்கவில்லை. பொண்ணு தனியா இருந்தா, பாங்கு லோனு தரேன்னு கைய பிடிச்சி இழுப்பாங்கன்னு அரதத்தல் பழசான கருத்து, இன்னும் எத்தனை நாளு இப்படி சொல்லிக்கிட்டு இருப்பாங்க? நவ்யா நாயரின் நடிப்பு சூப்பர்.
நம்ம வலை பசங்க என்ன விமர்சனம் எழுதினாங்கன்னு, இனி மேலே தான் தேடிப் படிக்கணும்.

 
At Wednesday, 02 November, 2005, சொல்வது...

நானும் படத்தை ஆங்காங்கு பார்த்தேன். தங்கர் இன்னும் நன்றாகச் செய்திருக்க வேண்டும். நடிப்பு இன்னும் முழுமையாக கைவரவில்லை அவருக்கு.

சில படங்களையும் டைரக்டர்களையும் வேறு கிண்டல்.

சொல்லும் முறையிலும் புதுமையில்லை. அழகியிலும் தென்றலிலும் தங்கர் மிகச் சிறப்பான இயக்குனராக இருந்தார். (அதாவது சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்வது). இதில் கதாநாயகன் வேலையும் உண்டு என்பதால் இயக்குனராக சோபிக்கவில்லை.

படத்தின் கதை என்று பார்த்தால் அதே பழைய கதைதான். இவர் குடிகாரர். பொறுப்பில்லாதவர். தறிகெட்டுப் போய் (குடும்பத்தை விட்டு விட்டு சாமியார் மடத்திற்குப் போகிறவனை எப்படிச் சொல்வது. தேவையில்லாமல் அவள் ஒரு தொடர்கதை நினைவிற்கு வந்தது.) பிறகு திருந்தி வருகிறார். ஒன்றிரண்டு அழுகைக் காட்சிகளோடு மனைவி இவரை ஏற்றுக் கொள்கிறார். தமிழ்ப் பண்பாட்டை படத்தில் காட்டியிருக்கிறேன் என்று தங்கர் சொன்னது எதை என்று தெரியவில்லை.

வழக்கமாக பெண்கள் கஷ்டப்படுவதைக் காட்டுவார்கள். ஆனால் இதில் இவர் எப்படி தறி கெட்டுப் போகிறார் என்று காட்டுகின்றார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

ஆனால் கண்டிப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் நவ்யா நாயர். இவரை தமிழுக்கு அழைத்து வந்ததிற்கு தங்கருக்கு நிச்சயமாக நன்றி சொல்ல வேண்டும். நடிப்பு மிகவும் இயல்பாக வருகிறது. பாரட்டுகள் நவ்யா.

பாமகவைச் சேர்ந்தவர் என்று தங்கரை எண்ணிக் கொண்டிருந்தேன். அவருடைய படம் எப்படி ஜெயா டீவியில் வந்தது? ஒருவேளை இது எதிர்கால அரசியல் கூட்டணிக்கு முன்னறிவிப்பா?

 
At Wednesday, 02 November, 2005, சொல்வது...

//இவரை தமிழுக்கு அழைத்து வந்ததிற்கு தங்கருக்கு நிச்சயமாக நன்றி சொல்ல வேண்டும். //

அழைத்து வந்தது தங்கரில்லையே, பிரகாஸ்ராஜின் 'அழகிய தீயே' தானே?

 
At Wednesday, 02 November, 2005, சொல்வது...

//நடிப்பு இன்னும் முழுமையாக கைவரவில்லை அவருக்கு.

After watchin only the last 15 minutes, i'm not qualified to second this line!

//கண்டிப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் நவ்யா நாயர்

Ithukellam yosikka koodathu... he..he.. correctaa sonneenga boss! :-)

 
At Wednesday, 02 November, 2005, சொல்வது...

// அழைத்து வந்தது தங்கரில்லையே, பிரகாஸ்ராஜின் 'அழகிய தீயே' தானே? //
ஓ அதிலேயே இவர் நடித்து விட்டாரோ! அந்தப் படம் பார்க்க முடியாமல் போய் விட்டது. அப்ப நன்றி பிரகாஷ்ராஜிற்கு.

 
At Wednesday, 02 November, 2005, சொல்வது...

கணேஷ், மலையாளத்தில் பாருங்கள். சினிவாசனுக்காக. அதேப் போல "நந்தனம்" இதில் நவ்யா பாலாமணியாகவே வாழ்திருப்பார்.
குருவாயூரில் வீட்டு வேலை செய்யும் பெண். ஆனால் கோவிலுக்கு போக நேர அமையவில்லை. வீட்டில் கிருஷ்ணன்
படத்தை வைத்து, கிருஷ்ணனுடன் பேசிக் கொண்டு, சண்டை, திட்டு எல்லாம் உண்டு. கிருஷ்ணன் என்ன செய்தான் தெரியுமா?
படத்தை பாருங்கள்.
ராமகி, நவ்யா நாயரைப் பார்த்து ஜொல்லுவிடும் உங்கள் ஆணாதிக்க சிந்தனையை வன்மையாய் கண்டிக்கிறேன் :-)

 
At Wednesday, 02 November, 2005, சொல்வது...

ஆக மொத்தம் தீபாவளிக்கு ஒரு புது படம் பார்த்துட்டீங்க.. நாங்க தியேடர்லே போய் மஜா பார்க்கலாம்னு நினைச்சோம் ஆனா உண்ட களைப்புலே நல்லா தூங்கிட்டோம்.

 
At Wednesday, 02 November, 2005, சொல்வது...

I guess that usha is going to form the Navya Nair fans club in the cyberworld :). I am not surprised by the telecasting of a film running in the theatres. There is a precdent for this in JJ TV itself.

 
At Wednesday, 02 November, 2005, சொல்வது...

ரவி, "நீங்கள் கேட்ட பாடல்" ஆக்கிட்டீங்களே! தேன் மொழியும், பாலாமணியையும் ( நந்தனத்தில் ந. நா பெயர்) பிடித்ததே தவிர எந்த நடிகநடிகையும் பிடிக்கும் என்று சொல்ல மாட்டேன். இல்லை இல்லை ஓரே ஒருத்தர் நடிப்பு ரொம்ப பிடிக்கும். உனக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் எம். ஆர். ராதாவை சொல்லுவேன். நான் பார்த்த எல்லா படங்களிலும் அவர் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது.

 
At Wednesday, 02 November, 2005, சொல்வது...

http://mynose.blogspot.com/2005/10/blog-post_15.html

மாமி, ஏற்கனவே இந்தப் படத்திப் பற்றி நானும் கொஞ்சம் ஜொள்ளி இருக்கிறேன் :-)

 
At Wednesday, 02 November, 2005, சொல்வது...

மூக்கரே, ஜொல்லுவது உங்கள் பிறப்புரிமை :-)
உங்க பதிவையும் பார்த்தேன். எங்க வட்டார வழக்குன்னுட்டீங்க? இதுல மாயவரம் தமிழ் எங்க வந்தது? குட்டிங்க ரெண்டோட நடிப்பு ரொம்ப நல்லா இருந்தது என்பதை சொல்ல மறந்துவிட்டேன்.

 

Post a Comment

<< இல்லம்