Monday, November 07, 2005

எழுத்துவியாபாரிகள்.

இந்த வார்த்தையை இணைய அறிமுகம் அல்லது இலக்கிய வட்டத்தில் புகுந்த பிறகுதான் காதில் விழுந்தது. ஏறக்குறைய இழி சொல்லாகவே பொருள் கொள்ளப்படுகிறது. சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் அவர்களின் பதிவில் ஒருவர், அவரை
கற்பனைகளை, எண்ணங்களை விற்று பிழைப்பவர் என்று அவரை குற்றம் சாட்டியுள்ளார். மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு தொழில் எழுத்து. அவருக்கும் வாழ்க்கை நடத்த பொருள் வேண்டுமே!

இதே குற்றசாட்டு அத்தனை பிரபலங்கள் மீதும் வீசப்படுகின்றன. ஆனால் எழுத்துக்கு பணம் பெறுவது எப்படி தவறாகும்? இங்கு வலைப்பதிவில் எழுதுபவர்களை, பிரபல பத்திரிக்கையில் கூப்பிட்டு எழுத சொன்னால் என்ன செய்வார்கள்? பணம், புகழ் என்று இங்கு ஏறக்கட்டிவிட்டு அங்குதானே போவோம்? ஒரு கட்டுரை அல்லது கதை பத்திரிக்கையில் வந்தால் அதை இங்கு சொல்லி பெருமிதப்பட்டுக்கொள்கிறோம்.

ஏதோ ஹாரிபாட்டர் எழுதிய ஜே. கே. ரவுலிங் அம்மாளைப்போல கோடிகளை குவிக்க முடியாவிட்டாலும், சில ஆயிரங்கள் சம்பாதிப்பது இங்கு ஏன் குற்றமாய் கருதப்படுகிறது? சேவை என்று கருதப்பட்ட மருத்துவமும், கல்வி துறையும் இன்று வியாபாரமாய் கொடிக்கட்டிப் பறக்கிறது. படித்த கல்வியை, கற்ற தொழிலை பயன்படுத்தி பொருள் ஈட்டி வாழ்க்கை நடத்தும்பொழுது, அதே போல தன் எண்ணங்களை எழுத்தில் கொண்டு வந்து, பணம் சம்பாதிக்கிறார்கள்.

எண்ணங்களும் அதன் தொடர்பான கதைகளும் அனைத்து மனிதபிறவிக்கும் உண்டு. எழுத்தாளன்(ள்) என்பவர்கள் அதை எழுத்தில் கொண்டு வருகிறார்கள். வாசிப்பு என்பது ஒரு பசி. பசித்தவனுக்கு சோறு போடுவதைப் போல, எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். யாருக்கு எது தேவையோ அதை தேர்ந்தெடுத்துப் படித்துக் கொள்ளலாம். சில சாமார்த்தியசாலிகள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சரவண பவன் சாம்பாரைப் போல மாறாத ருசியில் அப்படி எழுதி குவிப்பதும் ஒரு கலை :-)

இதே இணைய அறிமுகத்துக்கு முன்பு, படிக்கும் புத்தகங்கள், ஒதுக்க வேண்டிய புத்தகங்கள் என்று இரண்டே வகைதான். படிப்பவைகளை ஸ்பெஷல், சாதா, சாதா ஸ்பெஷல் என்று வகைப்படுத்தினேனே தவிர இலக்கியம் என்றெல்லாம் நினைக்கவில்லை. இலக்கியம் என்றால் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவை என்று நினைத்திருந்தேன். ஆனால் இன்றும் சிலர் எழுதும் படைப்புகளை இலக்கியம் தலைக்கு மேல் வைத்து கொண்டாடி, அத்தகைய எழுத்தாளர்களை தங்கள் ஆதர்ச புருஷனாய் கொண்டாட ஆரம்பிக்கிறார்கள். அவர்களும் அதே எழுத்தை வியாபார பண்டமாக்குகிறார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். சிலரோ அவர்களை கட்டம் கட்டி அவர்களின் மேல் சேற்றை வீசத் தொடங்கிவிடுகிறார்கள். இரண்டுமே தேவையில்லை.

எழுத்தாளர்களும் குற்றம் குறையுள்ள மனிதர்களே. சில பலவீனங்கள் அவர்களுக்கும் உண்டு. ஊரை திருத்த, மனிதனை மேம்படுத்த மற்றும் எழுத்து போன்ற வாழ்க்கை என வாழும் எழுத்தாளர்கள் எண்ணிக்கை மிக குறைவு. அதிலும் அவர்கள் வெற்றி பெறுபவர்கள் மிக, மிக குறைவு.

அதேப் போல பதிப்பகங்களைப் பற்றியும் இதே குற்றசாட்டு. பணத்தை முதலீடு செய்யும் பொழுது லாபம் அடைய வேண்டும். ஏதோ ஆபாசங்களைப் பதிப்பித்தால் இத்தகைய குற்றசாட்டு சொல்லலாம். ஜெயமோகன், எஸ்.ரா புத்தகத்தை பதிப்பித்தால் இலக்கிய சேவை என்றும் ராஜேஷ்குமாரோ அல்லது மல்லிகா பத்ரிநாத்தின் சமையல் கலை புத்தகத்தைப் பதிப்பித்தால் எழுத்து வியாபாரியா? அவ்வளவு எதற்கு சுஜாதாவின் புதினங்களை மீள் பதிப்பு செய்ததே குற்றமாக சொல்லப்பட்டது. என்னங்க இது?

29 பின்னூட்டங்கள்:

At Monday, 07 November, 2005, சொல்வது...

ம்ம்ம் அடிங்க அடிங்க..... தோனி அடிக்கிற சிக்ஸர் மாதிரி.....

நியாயமான கேள்விகளாக கேட்டிருக்கீங்க...
நானும் மனுஷ்யபுத்திரன் இந்த கேள்விகளுக்கு விளக்கமளிப்பார் என்றே நினைத்திருந்தேன்.

நம்மாளுங்களுக்கு ஓசியில கொடுத்தாதான் உயர்ந்த சரக்கா தெரியும்

 
At Monday, 07 November, 2005, சொல்வது...

நல்ல கேள்விகள்.

புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி விட்டோம் என்ற Consumer மனோபாவம்தான் இந்தக் குற்றச்சாட்டின் பின்னணியில் இருக்கிறது. பாரதியாரும், புதுமைப்பித்தனும் வறுமையில் வாடியபடி இலக்கியம் படைத்தார்கள் என்பதற்காக, வறுமை இலக்கியத்தின் முதல் Prerequisite என்று கூறிவிடமுடியுமா?

 
At Monday, 07 November, 2005, சொல்வது...

நாமெல்லோருமே வாழ்க்கைக்கு பொருள் ஈட்டியே தான் ஆக வேண்டுm.
அப்படிப்பார்க்கையில்நாமெல்லோருமே
ஏதோ ஒரு விதத்தில் நம்மை விற்று பொருள்ஈட்டுபவர்களே.

மொத்தத்தில் எல்லோருமே வியாபாரிகள் தான்.

யாரோ ஒருவர் சொல்லிக்கொண்டு போறார் என விட்டுவிடுவது தான் நல்லது.

இதை போய் பெரிசுபடுத்திக்கொண்டு.

விளக்கமில்லாதபடியால் தானே வியாபாரி என கூறினார். இப்படி எழுதியதும் அப்படி கூறிய நபர் புரிந்து கொள்வாரா என்ன..?

 
At Monday, 07 November, 2005, சொல்வது...

எல்லோரும் நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள். ஆதவன் பட்டியலே போட்டு விட்டார்.

எழுத்தை விற்கக்கூடாதென்றால் எழுத்தாளன் பிழைப்பது எப்படி? எல்லா எழுத்தாளர்களுமா கணிணிக் கம்பெனிகளில் உட்கார்ந்து கொண்டு பொழுது போக்காகவும் ஆர்வமாகவும் எழுதுகின்றார்கள்?

தங்களுடைய எழுத்தை விற்பதில் தவறேயில்லை. அதைக் குற்றம் என்று சொல்வது அறிவீனம் என்பது எனது கருத்து.

அப்படியில்லை என்பவர்களும் வெகுஜனப் பத்திரிகைகளில் ஆதரவு கிட்டினால் தாங்களும் எழுத்து வியாபாரிகள் ஆவார்கள்.

கவிதைத் தொகுப்பு பதிக்கின்றார்களே? எதற்கு? சும்மா கொடுப்பதற்கா? மக்களைச் சேர வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக இருந்தால் சும்மாதான் கொடுக்க வேண்டும். கடைகளில் விற்பதற்கும் ஏற்பாடு செய்யத்தானே செய்கிறார்கள்.

 
At Monday, 07 November, 2005, சொல்வது...

//ஜெயமோகன், எஸ்.ரா புத்தகத்தை பதிப்பித்தால் இலக்கிய சேவை

அடிங்க அடிங்க.....

Itho... naanum vanthudren...!

 
At Monday, 07 November, 2005, சொல்வது...

//மக்களைச் சேர வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக இருந்தால் சும்மாதான் கொடுக்க வேண்டும்.//

இராகவன்,
சும்மா கொடுத்தால் சீந்துவாரின்றி போகும்.
(கணேஷ், கவனிக்கவும், ஓசியில் கிடைக்கும் 'நெல்லிக்காய்களை' நாம் உயர்ந்த சரக்காக நினைப்பதில்லை, - காசு கொடுத்து வாங்கும் 'ஆப்பிள்களோடு' ஒப்பிட்டால்.)

எழுத்தாளன் தன் கடின உழைப்புக்கும், வெளிக்கொணரும் பிரசவ முயற்சிக்கும் ஈடாக 'ஒரு குறியீட்டு விலை' வைப்பது தவறில்லை.
ஆனால், 'பண்டத்தின்' விற்பனையை மட்டுமே 'கற்பனை'யில் கொண்டு செயலாற்றினால் வருங்கால இலக்கியம் ஒரு அற்பனை போல் கருதி ஒதுக்கி விடும் என்பதை 'மையத்தில்' கொள்க.

 
At Monday, 07 November, 2005, சொல்வது...

சரியாகச் சொன்னீர்கள் இப்னு.

நான் சொல்ல வந்ததைத்தான் நீங்களும் சொல்லியிருக்கின்றீர்கள்.

வருமானமும் ஒரு குறிக்கோளாக இருப்பதில் குற்றமில்லை என்பதே எனது கருத்தும்.

அதே நேரத்தில் வருமானம் வேண்டிச் செய்கின்றவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் தரமானதைக் கொடுத்தால் நிலைத்து நிற்பார்கள். இல்லையென்றால் கடினம்தான்.

அதே நேரத்தில் காசுக்காக எதையும் எழுதுகின்றவர்களைப் பற்றி நான் பேசவேயில்லை. பேசவும் தேவையில்லை. Just ignore them.

 
At Monday, 07 November, 2005, சொல்வது...

நளாயினி பலநாட்களாய் கண்ணில் பட்ட சொல் இது. சதைவியாபாரி என்பதற்கு இணையாய் உச்சரிக்கப்படுகிறது. புத்தகம்
எழுதும் எழுத்தாளர்கள், பதிப்பாசிரியர்கள் அனைவர் மேலும் வீசப்படுகிறது. அனைத்துக்கு இப்னு பதில் சொல்லிவிட்டார். நன்னூல் எழுதிய காலத்திலும் எழுதிய கவிதைகளை அரங்கேற்ற அரசனோ உள்ளூர் வள்ளலோ தேவையாக இருந்திருக்கிறார்கள்.
கண்டுக்காத அரசனை வசைப்பாடவும் புலவர்கள் தயங்கியதில்லை. எந்த காலத்தில் குடும்பம் நடத்த பொருள் தேவைதானே?
ஆபாசங்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மற்ற எதுவுமே எள்ளி நகையாடக்கூடியதில்லை.
என்னுடன படித்தவளின் தந்தை தமிழ் ஆசிரியர். அவர் சின்ன சின்ன புக்கங்கள் போடுவார். மாராட்டிய பக்தி கவிஞர் துக்காராம்,
பீர்பால் கதைகள், சின்ன பிள்ளைகளுக்கு சிரிப்பு கதைகள், இஞ்சி-பூண்டு வைத்தியம்"... இன்னும் பல பெயர்கள் ஞாபகத்தில்
இருக்கிறது. அப்பொழுது இணையம் ஏது? பல விதமாய் விஷயங்களை சேகரித்து எழுதுவார். பொது நூலகங்களில் அவைகளைப்
பார்த்து இருக்கிறேன். இப்பொழுது இணையம்!
இப்படி எழுதுபவர்களின் உழைப்பைப் பார்க்க வேண்டும். எழுத்தை தொழிலாய் கொண்டவர்கள் இதை செய்வதில் தவறு என்ன?
தேவையானவர்கள் படித்துவிட்டுப் போகட்டும். எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதியே வீடு வாங்கினாராம். தேவிபாலா, இந்திரா செளந்திரராஜன், ரமணிசந்திரன்,அனுராதாரமணன் இவர்கள் எழுதி குவித்ததைப் பார்த்தால்
பிரமிப்பாய் இருக்கிறது.
இவை எல்லாம் காலம் கடந்து நிற்குமா என்ற கேள்வியே தேவையில்லை. பதில் அனைவருக்கும் தெரியும். எல்லாரும் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது :-)
ͧÉ, ¿Ç¡Â¢É¢, á¸Åý, ¸§½‰, þôÛ, ¬¾Åý! ¯í¸û ±ñ½í¸¨Ç ¦ÅÇ¢ôÀÎò¾¢Â¾üÌ ¿ýÈ¢.
áõ¸¢, º¢õÀ¡Ä¢ì¸¡ À¼õ §À¡ðÎ þÕ째ý, À¡÷ò¾¢Â¡?

 
At Monday, 07 November, 2005, சொல்வது...

உங்களின் பதிவை வந்திருக்கும் பின்னூட்டங்கள் சுவை கூட்டுகின்றன. இன்னும் எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றவர்களின் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்.

 
At Monday, 07 November, 2005, சொல்வது...

தேன் துளி, எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களிடமிருந்து பதில் வரும் என்று தோன்றவில்லை. இந்த மேட்டரில் அவர்கள் எது சொன்னாலும் தவறாய் திசை திருப்பப்படும் அபாயம் உள்ளது. மூகமூடி அணிந்து வர வாய்ப்பு உண்டு.

 
At Monday, 07 November, 2005, சொல்வது...

//எல்லாரும் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது :-)

Marumavale... mayavarame perumai padukirathu...! :-)

 
At Monday, 07 November, 2005, சொல்வது...

What a realistic padam ya?! :-)

Idukkann Varungaal Padam Poduga!

 
At Monday, 07 November, 2005, சொல்வது...

ராம்கி, என்ன சொல்ல? ஆளு அழகா? நிறமா? பர்சனாலடியா? நடிப்பா? அதவிட வசன உச்சரிப்பு சுத்தம். ஆனாலும் கிரீடம் ஏறிடுச்சுல்ல. ஒத்துக்கிட்டுதானே ஆக வேணும்?
படத்தின் தாத்பர்யம்- குண்டக்க மண்டக்க என்றோ வில்லங்கமாக எழுதும் போதோ தேவையா என்று தோன்றும் போது, இந்த படத்தைப் பார்த்துக் கொள்ளலாம் இல்லையா :-))))

 
At Monday, 07 November, 2005, சொல்வது...

பொதுமக்களைச் சென்றடைகிற எந்த விஷயமுமே ஏற்ற இறக்கங்களுடன் விமர்சிக்கப்படுவது இயல்பு. நீங்க கூட உங்க விவாதத்தை justify பண்ண `மருத்துவமும் கல்வியும்' வியாபாரமாக்கப் பட்டு விட்டதாகச் சொல்லவில்லையா? பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் விமர்சனங்களுக்கு ரொம்ப செவி சாய்க்கக்கூடாது.

 
At Monday, 07 November, 2005, சொல்வது...

எழுத்தென்பது மட்டுமல்ல, எந்த ஒரு கலையுமே, முதலில் தன் திறமையை அடுத்தவர் தம்பால் ஈர்ப்புற செய்வது தான் முதல் இலக்கம். ஆடுத்த இலக்கம் அத்திறமையைக் கொண்டு பொருளடைவதே. இது தான் மனித இயல்பு. சித்தர்களும், பித்தர்களும் கவிப்பாடி பொருளுடைத்தது கூட சோறுண்ணத்தான்.

 
At Monday, 07 November, 2005, சொல்வது...

This comment has been removed by a blog administrator.

 
At Monday, 07 November, 2005, சொல்வது...

இந்த உலகத்தில் இன்று வியாபாரமாகிக்கொண்டிருக்கும் அனைத்து விஷயங்களுமே யாரோ ஒருவரின்/பலரின் கற்பனைதான். ஆக கற்பனையை விற்பதில் ஒன்றும் தவறில்லை...

கற்பனை விற்பவர்கள், கனவு தொழிற்சாலை போன்று எழுத்து வியாபாரிகள் என்ற சொற்பதத்திலும் ஒன்றும் தப்பில்லை, அது கேவலமான பொருளில் சொல்லப்படாமலிருந்தால். ஆனால் (போலீஸ்)மாமா போன்று எழுத்து வியாபாரி என்ற பதமும் அதன் உண்மையான அர்த்தம் இழந்து வேறு விஷயங்களுக்கு பயன்படுகிறது...

அது போலவே சில பெரிய எழுத்தாளர்கள் இறுமாப்போடு வாசகனை திட்டுவதை பார்த்திருக்கிறீர்களா?

 
At Monday, 07 November, 2005, சொல்வது...

சதாயம், நீங்கள் சொன்ன கருத்துதான் என்னை எழுத தூண்டியது என்றாலும் இணையத்தில் பல முறை இந்த குற்றசாட்டை சிலர் சொல்வதை நீங்களும் பார்த்திருக்கலாம். எழுதுபவர்கள் வருமானவரி கட்டும் அளவிற்கு சம்பாதிக்க வாழ்த்துகிறேன் :-)
ஆனால் அவர்களை தூக்கி அரியணையில் உட்கார வைத்து அஷ்டோத்திரம் சொல்ல ஆரம்பிக்கும்பொழுது பிரச்சனை ஆரம்பித்து
விடுகிறது. இந்த ஞான செருக்கு வர வாசகர்கள்தானே காரணம்? அரசியல்வாதிகள், நடிகர்கள், எழுத்தாளர்கள் இவர்கள் பேச்சுகள் மூக்காலே மூன்று சதவீதம் உளரல் அல்லது ஊருக்கு உபதேசம்.
மூகமூடியாரே, மேற் கூறிய பதில் உங்கள் கேள்விக்கும் பொருந்தும். சில அபிமானிகள் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின்
பெயரை கூட சொல்லாமல், (மரியாதையாம்ப்பு) பட்ட பெயரில்தான் குறிப்பிடுவது இன்னொரு கூத்து.
தாணு, மருத்துவம் மட்டுமல்லா அனைத்து துறையும் வியாபாரமாய் விட்டது. இதில் தவறொன்றுமில்லை. பரிணாம வளர்ச்சியில்
மாறுதல். அந்த காலத்தில் மருத்துவர், மருத்துவச்சி என்பவர்கள் தனக்கு தெரிந்ததை செய்வார்கள். இன்று இவை ப்ரோபஷனலாய் மாறி
விட்ட பிறகு சேவை என்று போய் காசுக்கு ஏத்த பணியாரம் ஆகிவிட்டது.
வெளிகண்ட நாதரே உங்கள் கருத்துக்கு நன்றி

 
At Tuesday, 08 November, 2005, சொல்வது...

http://70.86.150.130/dinamalar/Default.aspx

check 2nd page. Your blog featured in Dinamalar today.

 
At Tuesday, 08 November, 2005, சொல்வது...

அலெக்ஸ், நன்றி. நானும் ஸ்ரீகாந்த் ஈ.பேப்பர் பற்றி எழுதியதைப் பார்த்து போனால் அங்க கண்ணுல விழுந்தது. என்னத்தான்
இணையத்துல மாய்ந்து மாய்ந்து எழுதினாலும் அச்சில் வரும் எழுத்துக்கே தனி மவுசு. ராத்திரி பார்த்த பிறகு சைட் கவுண்டுல
நூற்று ஐம்பதுக்கு மேலே ஏறிடுச்சு.

 
At Tuesday, 08 November, 2005, சொல்வது...

தமிழ் உலகம் என்ற யாஹ¥ குழுவில் டாக்டர். சந்திரபோஸ் என்பவர் எழுதுவார். அவர்தான் தினமலரில் வலைப்பதிவுகளைப் பற்றி மற்றும் கணிணி பற்றியும் எழுதுகிறார் என்று நினைக்கிறேன். தினமலருக்கு, அவருக்கும் நன்றி

 
At Tuesday, 08 November, 2005, சொல்வது...

உஷா, தினமலர் செய்திக்கு வாழ்த்துகள்.

எழுத்து வியாபாரிகள் என்ற பதத்தை அதன் உபயோகத்திற்காக நான் கண்டிக்கிறேன்.

ஏற்கனவே சொல்லிட்டேனேன்னு கேக்கறீங்களா?

இப்போதான் நினைவுக்கு வந்தது - தமிழ் ப்ளாக்கர்களிலியே எழுத்து மூலமாக அதிக வருமானம் சம்பாதித்த எழுத்து வியாபாரி நானாகத்தான் இருக்க முடியும் (50 +75$). என்னையே தாக்குதே இந்தப்பதம்! விட்டுடுவேனா?

 
At Tuesday, 08 November, 2005, சொல்வது...

வாழ்த்துக்கள் மூத்த படைப்பாளர் உஷா அவர்களே. மென்மேலும் தங்கள் படைப்பு அச்சு ஊடகத்திலும்வர அன்பு வாழ்த்துக்கள்.

 
At Wednesday, 09 November, 2005, சொல்வது...

உஷா,

தினமலர்லே வந்ததுக்கு வாழ்த்துக்கள்.

இந்தப் எழுத்துவியாபாரிகள்
பதிவுலே ஒண்ணும் சொல்றதுக்கில்லே( இதுவரை ஒரு 'சென்ட்'டும் எழுத்தாலெ சம்பாரிக்காததாலே)

 
At Wednesday, 09 November, 2005, சொல்வது...

பீனாத்தலாரே, எழுத்து வியாபாரியாய் யூரோ, டாலரில் சம்பாதிப்பதை எனக்கு சொல்லிக் கொடுங்கள். மூர்த்தி நன்றி.
துளசி சீக்கிரம் எ.வி யாக வாழ்த்துக்கள்.

 
At Thursday, 10 November, 2005, சொல்வது...

அன்புள்ள உஷா

புரட்சிகரமாக ஏதாவது எழுதிக் கொண்டுதான் இருக்க்றீர்கள். :P
உங்கள் வலைப்பூவின் கேப்ஸன் மாலனின் பதிவிலிருந்து சுட்டது போல் தெரிகிறதே :P

 
At Thursday, 10 November, 2005, சொல்வது...

///மூன்று வருடங்களுக்கு முன்பு எழுத ஆரம்பித்தப்பிறகு,ஆ.வி,கணையாழி. அமுதசுரபி ஆகிய பத்திரிக்கைகளில் கதை, கட்டுரைகள் வந்துள்ளன. ஏறக்குறைய அனைத்து இணைய இதழ்களிலும் எழுதியுள்ளேன். ////

இதற்குப்பிறகு அஞ்சுகாசுகூட சம்பாதிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்திலும் யாரும் தன்னையும் எழுத்து வியாபாரி என்று சொல்ல முன்வரவில்லையே என்ற கோபத்திலும் மூத்த எழுத்தாளர்{அப்படியா உஷா சொல்லவேயில்லை?! :-)} உஷா அவர்கள் முதலையின் வாய்க்குள்ளே தலைவிட்டும் இப்படியான பதிவுகளிட்டும் சமாதானமடைகிறார் என்று சொல்ல நினைத்தாலும் தோனியின் சிக்ஸிற்கு நன்றிகள் சொல்லிவிட்டு, 'காசுக்கேத்த பணியார' ஃபீல்டில் தொழில்தர்மம் தொழில்பக்தி என்று கிறுக்குப்பிடித்த தனமாய் பேசும் சினிமாக்காரர்களை வன்மையாக கண்டித்து, பேச வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். :-)

தினமலரில் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துகள் உஷா.

இன்னொரு பாராட்டு, இலக்கியம் என்றால் திருக்குறள், சிலப்பதிகாரம் என்று நினைத்திருந்ததாக நீங்களாவது சொன்னீர்களே அதற்காக!

எம்.கே.

 
At Thursday, 10 November, 2005, சொல்வது...

ஐயா எம்.கே! எழுதுபவர்கள் எல்லாருக்கும் அங்கீரம் என்பது மிக முக்கியம். அதறகு நான் ஏங்குகிறேன் என்று நீங்கள் நினைத்தால் ஆம் என்று சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எழுத்துவியாபாரி என்ற சொல் என்னைக் குறித்து நீங்கள் சொன்னால் நான் வன்மையாய் கண்டிக்கிறேன் ;-) காரணம் எழுதி சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில் நான் இல்லை, மேலும் அந்தளவு பொறுமையும் இல்லை :-)
இன்றுவரை §¿Ã¢ø ºó¾¢ò¾ எந்த எழுத்தாளர்களிடமும் என் கதையை அல்லது எழுத்தைப் பற்றிய அபிப்ராயத்தைக் கூட கேட்டதில்லை.
கடந்த இரு வருடங்களில் பத்து கதைகளாவது பத்திரிக்கைகளுக்கு அனுப்பியிருப்பேன். அது எந்த கதிக்குப் போனது என்றே தெரியவில்லை. அச்சு பத்திரிக்கையில் கதை வெளியானால் அதன் வீச்சு அதிகம். உதாரணம் தினமலரின் நாளிதழில் வெளியான இருபத்திநாலுமணி நேரத்தில் எண்ணூறுக்கும் அதிகம் பேர்கள் என் பதிவைப் பார்த்து சென்று இருக்கிறார்கள்.( நான் கிளிக்கியது பத்னெட்டு முறை).
இரண்டு வரிகள் வந்த அவள்விகடனைப் பார்த்து பலர் கேட்டார்கள். சில சப்ஜெட்டுகளை எழுதிவிட்டு ஏன் எழுதினேன் என்று
என்னை நானே கேட்டுக் கொள்ளுவேன். அதற்கு முதலைப்படம்!. ஆனால் எழுதிவிட்டு ஏன் எழுதினேன் என்று வருத்தமெல்லால்
பட்டதில்லை ;-)

 
At Thursday, 10 November, 2005, சொல்வது...

கணேஷ், அது புறநானூற்றில் இருந்து சுட்டது :-)

 

Post a Comment

<< இல்லம்