Wednesday, November 09, 2005

அன்புள்ள வாசகர்களே!

அன்புள்ள வாசகர்களே!
காலையில் தினமலரில் இத்தளத்தைப் பற்றிய சிறுக்குறிப்பைப் பார்த்ததும் வந்து படித்துவிட்டுப் போனவர்களுக்கு நன்றி. சுஜாதா ஒரு முறை, பிளாக்ஸ் என்பது கையெழுத்துப் பத்திரிக்கைப் போல என்றார். நானும் இந்நாள் வரை அப்படிதான் நினைத்திருந்தேன்.

சில நூறு பேர்கள் பட்டியலில் இருந்தாலும், வழக்கமாய் பதிவிடுபவர்கள் குறைவு. சில பத்து பேர்கள் படித்துவிட்டு
எங்களுக்குள் கருத்து பரிமாற்றம் செய்துக் கொள்வோம். ஆனால் இன்று உலகில் பல நாடுகளில் உள்ள தமிழ் அறிந்தவர்கள்
படித்ததும், படித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க பார்க்க மிக சந்தோஷமாய் இருக்கிறது.

ஒரு சிறிய வேண்டுக்கோள், புதிய வாசகரே! தளத்தைப் பற்றி உங்கள் எண்ணங்களை அறிய ஆவலாய் இருக்கிறேன். தமிழ்தட்டச்சு தெரியாவிட்டாலும், ஆங்கிலத்தில் எழுதலாம்.

பிறகு உங்களுக்கும் இதுப் போல ஒரு வலைப்பதிவு/பிளாக் ஆரம்பிக்கும் எண்ணம் இருந்தால் சொல்லுங்கள். உதவ நிறைய பேர்கள் இருக்கிறோம். வெகு சுலபமானதும் கூட.
மீண்டும் நன்றி,
ராமசந்திரன் உஷா
ஐக்கிய அரபு குடியரசு.

24 பின்னூட்டங்கள்:

At Wednesday, 09 November, 2005, Blogger வினையூக்கி சொல்வது...

வாழ்த்துக்கள்.

 
At Wednesday, 09 November, 2005, Blogger Ganesh Gopalasubramanian சொல்வது...

ம்ம். நேத்து தான் யாரும் வாங்க மாட்டாங்கன்னு சொன்னீங்க.... இன்னிக்கு பெரிய ஆடியன்ஸுக்கு உங்க பதிவு போய்ச் சேர்ந்திருக்கு... என்னமோ போங்க...

 
At Wednesday, 09 November, 2005, Anonymous Anonymous சொல்வது...

உஷாஜி,

ஐக்கிய அரபு குடியர்சு என்றா இன்னமும் எழுதுவது? ஐக்கிய அரபு அமீரகம் என்று எழுதத் துவங்குங்கள் இனிமுதலாவது.

அமீரகத்தில் வசிக்கும்
சாத்தான்குளத்தான்

 
At Wednesday, 09 November, 2005, Blogger தருமி சொல்வது...

புரியலையே...

 
At Wednesday, 09 November, 2005, Blogger Amar சொல்வது...

All right, A TAMIL SPELL CHECKER is all I need!!!

 
At Wednesday, 09 November, 2005, Blogger ஏஜண்ட் NJ சொல்வது...

See Dinamalar's DOTCOM page :

Usha

NJ

NJ

 
At Wednesday, 09 November, 2005, Blogger யாத்ரீகன் சொல்வது...

பின்னூட்டங்களிடா, சைலன்ட் வாசகன் நான்... இன்று தினமலரில் செய்தியைப்பார்ததும் வாழ்த்துக்கள் சொல்ல வந்தேன்...

பெயரளவுக்கு (நுனிப்புல் ;-)) இல்லாவிடினும் பல தளங்களைத்தொடுகின்றீர்கள் உங்கள் எழுத்தில் :-)

 
At Wednesday, 09 November, 2005, Blogger மணியன் சொல்வது...

நான் வெகுநாட்களாக உங்கள் பதிவை மட்டுமின்றி தமிழ்மணத்தில் திரட்டப் படும் எல்லா பதிவுகளையும் இரசித்து வருகிறேன். ஆயினும் ப்ளாக்கர் கணக்கு இல்லாததினால் பின்னூட்டமிட முடியவில்லை. இன்று உங்கள் பதிவினால் உந்தப்பட்டு ஒரு கணக்கு ஆரம்பித்து விட்டேன். தங்களுக்கு நன்றிகள் பல.

 
At Wednesday, 09 November, 2005, Blogger தருமி சொல்வது...

"வலைப்பதிவு/பிளாக் ஆரம்பிக்கும் எண்ணம் இருந்தால் சொல்லுங்கள். உதவ நிறைய பேர்கள் இருக்கிறோம்"

மேம்படுத்தவும் 'நிறைய பேர்கள்' உண்டா..? இருந்தால் சொல்லுங்களேன்...

 
At Wednesday, 09 November, 2005, Blogger மதுமிதா சொல்வது...

உஷா

உள்ளொளி நான் சொன்னது சரியா?
வாழ்த்தும்மா.
முதல் வாழ்த்து நான் தான் சொன்னேன் நீங்க இந்தியாவில இருக்கும் போது.ஞாபகம் இருக்கா?
உள்ளொளின்னா உடன ஞாபகம் வந்திருக்கணும் தான்

 
At Wednesday, 09 November, 2005, Blogger பத்மா அர்விந்த் சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா.

 
At Wednesday, 09 November, 2005, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

ஆசிப்ஜி, நா முதலில் வெறும் அமீரகம் என்றுப் போட்டு, அதை தவறு என்று சிலர் சொல்ல
ஐ. அ.கு என்று மாற்றினேன். பேசாமல் துபாய் என்று போட்டு விட்டால் போதும், எல்லாருக்கும் புரியும் :-)
தருமி என்ன புரியவில்லை. உங்கள் பிளாக்கில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், எத்தனை சிஷ்ய பிள்ளைகள்
இருக்கிறார்கள்? கேட்டால் செய்து தருகிறார்கள். நானும் அப்படித்தான், சில கணிணி வல்லுனர்களைப் பிடித்து ( பிடிங்கி எடுத்து)
வைத்துள்ளேன்.
சமுத்திரன் "ஸ்பெல் செக்" தமிழில் இருக்கா என்ன?
ஞானபீடமே, இங்கிட்டு வந்து சொந்த விளம்பரமா செய்றீங்க:-)). ஆனா உங்க நெய்சாதத்தைப் பார்த்துவிட்டு,
தமிழ்பதிவை விட்டு ஓடியவர்கள் பலர் என்று கேள்வி (இங்கிட்டும் ஒரு ஸ்மைலி)
மணியன், கல்லை விட்டு எறிந்ததில் ஒரு பழமாவது விழுந்ததே! சீக்கிரம் பிளாக் ஆரம்பிங்க.
மது, உள்ளொலி (!) கதையெல்லாம் அப்புறம் பேசலாம். ஞானபீடம் சிரிப்பாரு.
தேன் துளி, செந்தில், வினையூக்கி, கணேஷ், ராமநாதன் நன்றி

 
At Thursday, 10 November, 2005, Blogger சினேகிதி சொல்வது...

usha,
inoru murai thembi thembi alluthu kadunga nan apo parakala neenga aluthathai =/\=

congrats !!!
sutti kudunga dinamalar seithi parka

 
At Thursday, 10 November, 2005, Blogger Maravandu - Ganesh சொல்வது...

//பெயரளவுக்கு (நுனிப்புல் ;-)) இல்லாவிடினும் பல தளங்களைத்தொடுகின்றீர்கள் உங்கள் எழுத்தில் :-)//

உஷா

இது ஏதோ வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரி தெரியுது , நம்பாதிங்க :-))))

தினமலர்ல வந்ததற்கு டீரீட் கொடுக்கணும் :-)

என்றும் அன்பகலா
மரவண்டு

 
At Thursday, 10 November, 2005, Blogger தாணு சொல்வது...

உங்க அப்ரோச் நிறைய விதங்களில் பலரை மகிழ்ச்சியடைய வைக்கிறது. அதற்கு நீங்கள் மேற்கொள்ளும் சிரமங்கள் வாழ்த்தப்பட வேண்டியது

 
At Thursday, 10 November, 2005, Blogger SVenkat சொல்வது...

பாலைவனத்திலிருந்து ஒரு நுனிப்புல். அது பசுமையாகப் படர்ந்து வளர (தினமலரின் ஆசியோடு கூடிய) வாழ்த்துக்கள்.
Srinivas Venkat

 
At Thursday, 10 November, 2005, Blogger G.Ragavan சொல்வது...

வாழ்த்துகள் உஷா. இப்படியே போனீங்கன்னா வாங்க ஆளில்லைங்குற உங்க ஆதங்கம் தீந்து போயிரும். சிறந்த எழுத்தாளராகப் பரிமளிக்க எனது வாழ்த்துகள்.

 
At Thursday, 10 November, 2005, Blogger Chandravathanaa சொல்வது...

வாழ்த்துக்கள் உஷா
சினேகிதி குறிப்பிட்டது போல சுட்டியைக் கொடுங்கள்.
பார்க்க வசதியாக இருக்கும்.

 
At Thursday, 10 November, 2005, Blogger யாத்ரீகன் சொல்வது...

>>இது ஏதோ வஞ்சப்புகழ்ச்சி அணி >>மாதிரி தெரியுது , நம்பாதிங்க :-))))

அஹா.. மரவண்டு-கணேஷ்.. நான் அப்படியெல்லாம் நினைச்சு சொல்லல.. :-)))) கிளம்பிட்டங்கய்யா.. கிளம்பிட்டாங்கய்யா..

-
செந்தில்/Senthil

 
At Thursday, 10 November, 2005, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

நீங்க வேற சிநேகிதி, சந்திரா! நாலு வரிகள் அதுவும் நான் எழுதிய ம்.ம்.ஹ¥ஹ¥ம் கதையின் முன்னுரையை எடுத்துப் போட்டு இருக்காங்க. அவ்வளவுதான். நெய் சாதம் சாப்பிட்ட கதையும் குட்டிபாப்பா அஞ்சலியைப் பற்றியும் எப்போதோ போட்டாச்சு.
நான் சொல்ல வந்தது அச்சு இதழ்களின் தாக்கத்தைப் பற்றி.
அனைவருக்கும் நன்றி

 
At Thursday, 10 November, 2005, Blogger b சொல்வது...

வாழ்த்துக்கள் உஷாராமச்சந்திரன் அவர்களே.

 
At Thursday, 10 November, 2005, Blogger Nirmala. சொல்வது...

வாழ்த்துகள் உஷா.

நிர்மலா.

 
At Thursday, 10 November, 2005, Blogger Radha Sriram சொல்வது...

HI usha,

congrats!!!! Just 2 days back got a sudden inspiration and started a blog..gave title..(mandai kaanchidichu...eppadi than evlo azhaga title kudukkareenga neengellam??!)downloaded ekalapai.followed Kasi's instructions...then i got stuck.....dint know how to type in tamil...ore frustration....anyway.thanks for the offer to help will soon contact you.....
cheers
Radha

 
At Thursday, 10 November, 2005, Blogger ramachandranusha(உஷா) சொல்வது...

Radha,
See this link. Hope this will help
you. If you need some more help,
mail me to ramachandranusha@yahoo.co.in
Usha

http://www.suratha.com/leader.htm

 

Post a Comment

<< இல்லம்