Saturday, March 18, 2006

கனிமொழி

பிரச்சனைகள் என்று வரும்பொழுது பிறரைக் குற்றம் சாட்டுவது மிக சுலபம். ஆனால் நம் பக்கமும் உள்ளவைகளை சுலபமாய் மறந்துவிடுகிறோம். நம் பக்கத்து குறைகளை கேலி செய்வது தேவையில்லை, ஆனால் குறைகளை சுட்டிக்காட்டலாமே? இது அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பொதுவான கருத்து.

நேற்று "தோழி டாட் காம்" பார்த்தேன். கருணாநிதி அவர்களின் மகளான கனிமொழி நடத்துகிறார் என்ற ஒரு விவரமும் தெரியும்.

அதில் http://www.thozhi.com/vivatham.php விவாதம் என்ற தலைப்பில் கவிதா என்பவர் அரசியலில் பெண்களை இழிவாகப் பேசிவதை கண்டித்து எழுதியுள்ளார். படித்துப் பாருங்கள். சமீபத்து திமுக மாநாட்டில் முன்னாள் பெண் அமைச்சர் ஒருவர், ஜெயலலிதா அவர்களை தரக்குறைவாய் பேசியதை பதிவு செய்துள்ளார்.

இது இந்த கட்சி அந்த கட்சி என்றில்லை. எல்லா கட்சியிலும், எல்லா மட்டத்திலும் அரசியலில் ஈடுப்படும் பெண்களை, அரசியல்வாதிகளின் வீட்டு பெண்களை வாய்க்கு வந்தப்படி தரக்குறைவாய் பேசுவது வழி வழியாய் வந்த வழிதான்!

அதிலும் ஒரு நடிகை மேடை ஏறினால் போதும், அது ஜெயலலிதாவானாலும் சரி, ராதிகா, குஷ்பூவானாலும் சரி அவர்களின் ஒழுக்கமே முதலில் எள்ளி நகையாடப்படும்.

ஒரு கட்சி தலைவரின் மகளான ஒருவர், தான் நடத்தும் இணைய தளத்தில் எதிர்கட்சி தலைவியை அநாகரீகமாய் விமர்சிப்பது தவறு என்று சொல்ல அனுமதித்த கனிமொழி அவர்களின் பண்பட்ட பார்வைக்கு வாழ்த்துக்கள். இத்தகைய இளைய சமூகத்தால் அரசியலும் நாகரீகம் பெறும் என்ற நம்பிக்கையும் வருகிறது.

அப்படியே ஒரு பெண்ணின் தலைமையில் இயங்கும் அதிமுகவினரின் இத்தகைய தரக்குறைவான பேச்சுக்களையும் ஜெயலலிதா அவர்கள் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இங்கு வைக்கிறேன் ( ஆமா, இதை யாரு பார்க்கப் போறாங்க என்று கேட்காதீங்க)

6 பின்னூட்டங்கள்:

At Saturday, 18 March, 2006, சொல்வது...

என்ன, ஊருக்கு கிளம்பலையா ? அவசரப் பயணம் என்றீர்கள்.
இளைய தலைமுறையின் நாகரீகம் போற்றப் பட வேண்டியது.வளர்க இத்தகையோர்!

 
At Saturday, 18 March, 2006, சொல்வது...

//ஒரு கட்சி தலைவரின் மகளான ஒருவர், தான் நடத்தும் இணைய தளத்தில் எதிர்கட்சி தலைவியை அநாகரீகமாய் விமர்சிப்பது தவறு என்று சொல்ல அனுமதித்த கனிமொழி அவர்களின் பண்பட்ட பார்வைக்கு வாழ்த்துக்கள். இத்தகைய இளைய சமூகத்தால் அரசியலும் நாகரீகம் பெறும் என்ற நம்பிக்கையும் வருகிறது//

உண்மைதான் உஷா மேடம்.
நல்ல பதிவுதான்.
ஆமா கருத்து.காம் ல நீங்களும் உறுப்பினரா?

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

 
At Saturday, 18 March, 2006, சொல்வது...

//ஆமா, இதை யாரு பார்க்கப் போறாங்க என்று கேட்காதீங்க//

நாங்கள்ளாம் எதுவா இருந்தாலும் பார்ப்போம்ல!

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

 
At Saturday, 18 March, 2006, சொல்வது...

hello Usha,

thanks for the info will soon be reading....
mmmmm and one more thing.....have a safe trip.....be back soon

Radha

 
At Saturday, 18 March, 2006, சொல்வது...

மணியன் நாளைக்கு நைட்தானே பிளைட்? கொண்டுப் போக வேண்டியவை, அங்கு வாங்க வேண்டியவை,
செய்ய வேண்டியவைகளை பட்டியல் போட்டாகிவிட்டது. மூட்டை கட்டி கட்டி பழக்கம் என்பதால்
அரைமணி நேரம் போதும்.
அது தவிர இலக்கிய பணி தலையானது என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டாலும், வேலை நடுவுல
ரிலாக்ஸ் செய்ய தம் அடிக்க போவீங்களே ( பொதுவா ஆண்களை சொன்னேன்) அப்படி நடுவுல
தட்டி விட்டேன். நேற்று இரவு படித்துவிட்டு உடனே அங்கேயே வாழ்த்து சொல்லிட்டேன். நல்ல
விஷயங்களை நாலு பேரு தெரிந்துக் கொள்ளட்டுமே என்று நாலே வரிகள் தட்டிப் போட்டுவிட்டேன்.

நாமக்கல் சிபி, உறுப்பினர் இல்லை. நீங்க ?

//நாங்கள்ளாம் எதுவா இருந்தாலும் பார்ப்போம்ல! //

இது போதுங்க :-)

ராதா நன்றி.

 
At Sunday, 19 March, 2006, சொல்வது...

நல்ல கருத்து உஷா. ஒரு பெண்ணை மட்டம் தட்ட மிக எளிய வழி...அந்தப் பெண்ணைப் பற்றி இழிவாகப் பேசுவது....கனிமொழி ஒரு பெண். ஆகையால்தான் அந்த இழிவு வசவுகளை ஆதரிக்காமல் இருப்பதில் வியப்பில்லை. நடக்கட்டும். நடக்கட்டும்.

 

Post a Comment

<< இல்லம்