Thursday, February 09, 2006

கொஞ்சம் சீரியசாய் ஒரு கருத்து கணிப்பு

வலைப்பதிவாளர்களுக்கு சில கேள்விகள்.

1) சமீபக்காலமாய் சில பதிவுகளையும், அனுமார் வாலாய் நீண்ட பின்னுட்டங்களையும் படித்துவிட்டு பேஸ்து அடித்ததுப் போல முழிக்கத் தொடங்கியுள்ளீர்களா?
a) ஆம்
b) இல்லை

2) எந்த புற்றில் எந்த பாம்போ, வேலியில் போன ஓணான்... போன்ற பழமொழிகளையும், ஒண்ணுமே புரியலே உலகத்திலே, நந்தவனத்தில் ஓர் ஆண்டி போன்ற பாடல்களை அடிக்கடி உங்கள் வாய் முணுமுணுக்கிறதா?
a) ஆம்
b) இல்லை

3) தமிழில் வலைப்பதிவு தொடங்க, ஈ- கலப்பையும், சுரதாவின் எழுத்துருமாற்றி ஆகிய கணிணி அறிவு மட்டுமே போதும் என்ற எண்ணம் தவறு என்று உணரத் தொடங்கியுள்ளீர்களா?
a) ஆம்
b) இல்லை

4) வலைப்பதிவுகளையோ, பின்னுட்ட பெட்டியையோ திறக்கும்பொழுது மனம் படபடவென்று அடித்துக் கொள்கிறதா?
a) ஆம்
b) இல்லை

5) சாதாரண விஷயத்தில் கூட, ஏதாவது இரட்டை, முன்று பொருள் இருக்குமோ என்று மண்டையை உடைத்துக் கொள்ள தொடங்கியுள்ளீர்களா?
a) ஆம்
b) இல்லை

6) நீங்கள் இத்தனை நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் பிறருக்கு இட்ட சாதாரண பின்னுட்டங்களைக்கூட சேமித்து வைக்கவில்லையே
என்று உங்கள் மனம் புலம்புகிறதா?
a) ஆம்
b) இல்லை

7) நீங்கள் இட்ட பின்னுட்டங்கள் உங்கள் சொந்த பெயரில்/ அனானி/ வேறு பெயரில் இட்டவைகளை அனைத்தும் ஞாபகம் இருக்கிறதா?
a) இல்லை
b) ஆம்

8) நமக்கு தேவையா இது என்று அவ்வப்பொழுது உங்கள் சொந்த செருப்பை எடுத்து அடித்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறதா?
a) ஆம்
b) இல்லை

9) நீங்கள் சொந்த பெயரில் எழுதுபவர் என்றால், செய்தது மாபெரும் தவறு என்று உங்கள் மனசாட்சி நாளும் உங்களை
திட்டுகிறதா?
a) ஆம்
b) இல்லை

10) சமீபக் காலங்களில் பின்னுட்டமோ அல்லது பதிவோ போடலாம் என்று நினைக்கும்பொழுதே, நினைப்பை ஒத்திப் போட
தொடங்கியுள்ளீர்களா?
a) ஆம்
b) இல்லை

*****

மதிப்பெண்கள் விவரங்கள்
a- 0, b-1 என்று போட்டுக் கொள்ளுங்கள்

உங்கள் மதிப்பெண்கள் பத்துக்கு பத்து என்றால் கும்புடுகிறேன் சாமி, நீங்கள் தமிழ் இணைய ஜாம்பவானுங்க.

ஐந்திற்கு மேல் மதிப் பெண்கள் பெற்றிருந்தால், கொஞ்சம் முயற்சி செய்து, ஹோம் ஒர்க் செய்தால் நீங்களும் ஜாம்பவான் ஆகும் வாய்ப்பு பிரகாசமாய் உண்டு.

ஐந்திற்கு கீழான மதிப்பெண்கள் என்றால் சாரி பிரண்டு, நீங்கள் போக வேண்டிய தூரம் மிக அதிகம்.

முட்டை மதிப்பெண் என்றால், கையைக் கொடுங்கள், வெகுவிரைவில் இடத்தை காலி செய்யப் போகிறீர்கள் நாம்கே வாஸ்துவாய் (ஸ்பெல்லிங் கரைட்டா?) பதிவு போடப் போகிறீர்கள்.

33 பின்னூட்டங்கள்:

At Friday, 10 February, 2006, சொல்வது...

விடுபட்ட கேள்விகள்:

11. உங்கள் நண்பர் இட்ட பதிவுக்கு - வரிக்கு வரி உடன்படுகிறேன் என்று பின்னூட்டுகிறீர்களா?

a) ஆம்
b) இல்லை

12. உங்கள் பதிவுகளை முன்பதிவுகளோடும் பின்னூட்டங்களோடும் இணைத்து கருத்து சொல்லப்படுகிறதா?

a) ஆம்
b) இல்லை

13.உங்கள் பின்னுட்டங்களின் தொடர்ச்சிகளைச் சுடச்சுடப் பெற coComment- இல் உறுப்பினராகிவிட்டீரா?

a) ஆம்
b) இல்லை

மேலும் யாராவதுதொடர்வார்கள்:-)

அது நாம் கே வாஸ்தே (பெயருக்காக)

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

நமக்கும் சைபர் தாங்க வருது :-(..

(கைகுடுக்க சொல்றீங்க. குடுத்தா முதலை கடிச்சிராதா?)

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

ஹாஹாஹாஹா !!!! கடைசி பிரிவில்தான் நான் வருகின்றேன் :-(

3,5,8 சூப்பரோ சூப்பர் :-)))))

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

அட ஆமாங்க! போகவேண்டிய தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊரம் ரொம்ப இருக்குங்க...

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

14. ஒரு பதிவை படித்துவிட்டு அதை எழுதியவருக்கு ஒரு கேள்வி, பதில், விளக்கம் என்று ஒரு பதிவு எழுதுகிறீர்களா?

a) ஆம்
b) இல்லை

15. ஆழமான பதிவுகளை படித்துவிட்டு புரிகிறதோ இல்லையோ, சமுதாயத்துக்கு இவ்வகையான பதிவுகள் அவசியம் தேவைப்படுகின்றன. பதிவுக்கு நன்றி என்று பின்னூட்டம் போடுகிறீர்களா?

a) ஆம்
b) இல்லை

16. இதுக்கெல்லாம் எதிர்வினை ஆற்றனுமா. நான் ஆற்றுவதில்லை. இப்ப பாருங்க அன்னிக்கி இது மாதிரி ஒரு விஷயத்துல ___ மாதிரி எதிர்வினை ஆற்றனும்னு நினைச்சி சரி வேண்டாம்னு ஆற்றவில்லை? அப்படீன்னே உங்க எதிர்வினைய ஆற்றறீங்களா?

a) ஆம்
b) இல்லை

17. "கை"க்கு சுடச்சுட கேள்வி கேட்டு அத "கை" பதிவ தவிர மத்த எல்லா இடத்திலயும் - எங்க எங்க எல்லாம் கைன்னு பாக்கறீங்களோ, உ.ம். கைப்புள்ள, அபுமுகை அப்படீன்னு அங்கல்லாம் அந்த கேள்விய கேட்கறீங்களா?

இன்னும் நிறைய இருக்கிறது... "அவங்க" எல்லாம் கேட்டப்புறம் மிச்சம் மீதி விட்டு வச்சா கேட்கிறேன்.

*

நான் மார்க் போட்டு பார்த்தேன். மார்க் பூஜ்யம்னு வருது. நான் பாஸா, பெயிலா?

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

ஐயையோ உஷா
மூணு மதிப்பெண்தான் கிடைச்சுது
பார்டரில் கூட பாஸாகல
அப்ப ரொம்ப தூரம் போகணுமா

இப்பதான ரொம்ப தூரத்திலிருந்து வந்தேன்
மறுபடியுமா???????????

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

I am Jaambavaan!.

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

1.b
2.b
3.b
4.b
5.b
6.b
7.b
8.b
9.b
10.b
11.b
12.-
13.b
மொத்தம் 12/13

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

எனக்கென்னமோ.. நிறையபேர் தன்னடக்கத்தோட இருக்குற மாதிரி தெரியுது.. ;-) பேசாம முடிவுகளை தலைகீழாக்குங்க.. :-)))))

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

சத்தீஷ்க்கும், ஒளியினிலே! முதலில்ல உங்கள் கும்பிடுக்கிறேன். ஜாம்பவான்னா ஒரு மரியாதைத்தான்!

தருமியும், மதுமிதாவும் கொஞ்சம் முயற்சி செய்தால் வெற்றிகனியைப் பறிக்கலாம்.

ராசா, யாத்திரீகன், அப்பா! நம்மளமாதிரி இன்னும் ரெண்டு பேரூ இருக்காங்கன்னா ஒரு நிம்மதிதான்.

முகமூடி, வந்து வந்து பெயிலுன்னு வருதா, கொஞ்சம் நல்லா பாருங்க. இப்பொழுது எனக்கு நேரமில்லை என்பதால் இரண்டொரு
நாளில் வந்து விளக்கமாய் பதில் அளிக்கிறேன்
:-)))

சுரேசு, நீங்க நான் கேட்ட கேள்விகளில் பாசா பெயிலான்னு சொல்லை என்பதை வன்மையாய் கண்டிக்கிறேன்.

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

நமக்கு ரெண்டு மார்க்.
சொந்த பேர்ல எழுதல. மனசு படபன்னு அடிக்கலை.
மத்ததெல்லாம் அவுட்.

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

உஷா.. சரியா 5 வாங்குனா என்ன அர்த்தம்? ரெண்டுங்கெட்டானா? (9தானே ரெண்டுங்கெட்டான்)

எனக்கு 5 மதிப்பெண்கள்.

இந்த கெள்விய வுட்டுட்டீங்க

பின்னூட்டத்தையே ஒரு பதிவா போடுபவரா?

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

மொத பத்து கேள்விகளுக்கு எனக்கு 6.5 வருது....ஆமா. ஒரு கேள்விக்குப் பதில் தெரியலை. அதுனால பாதி மார்க்கு எடுத்துக்கிட்டேன். ஆனா பின்னூட்டத்துல வந்த கேள்விகளப் பாத்துட்டு நான் உண்மையிலே பயந்து போயிட்டேன். மந்திரிக்கக் கோடாங்கியக் கூப்பிட்டிருக்காங்க.

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

ஆதிரை, ஹ¤ஹ¥ம்... பெயில் பெயில்தான் :-)

சிறில், ஒன்னா இப்படி இருக்கணும், இல்லாட்டி அப்படி இருக்கணும். இப்படி மதில் மேல் பூனையாய் இருந்தா தப்பு. இன்னொரு தடவை பரிட்சை எழுதிப் பாருங்க.

11 வது கேள்வி வில்லங்கமா இருக்கே :-))))

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

பெயிலானவர்களுக்கு மாடரேஷன் கெடையாதா :(

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

நான் எப்பவுமே 'நடுநிலமை' வகிப்புதான்.

வில்லங்கமா? கிலோ எத்தன ரூபா?

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

எது எப்படியோ, இங்கே பதியரவங்க, முதல(லை) வாயில தலைய குடுத்திட்ட மாறி தான் எனக்கு தோணுது :)

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

உஷா மேடம், It's upto you to publish this comment.

பெயில்லானவர்களுக்கு,

பாஸு

1) முகமுடி சார் சொன்ன ப்ரிஸ்கிரிப்ஸன 2 மண்டலம் பன்ண்ணுங்கப்பு.

2) உங்களுக்கு ரொம்ப அறிவு / திறமை / டமில் எலக்கிய ஆர்வம் இருக்கு ஒத்துகிரேன் ஆனா ப்லொக் உங்களோட வீடு, அதுல போயி சும்ம எதுக்கு மத்தவங்க கூட மல்லுக்கு நிக்கிரேங்கா. ஒரு வாட்டி கருத்து சொல்லுங்க கேட்டுகிட்டா சந்தோசம், இல்லயா ஒகே பாஸுனு சொல்லிட்டு u carry on.that only matters OK. அத்த விட்டுபோட்டு சும்ம லெட்டரா ஏய்தி / படம் போட்டு, அதுக்கு விளக்கம் கொடுத்து (இதுல லின்க் வேர), அதுக்கு பதில் விளக்கம் கொடுத்து விவாதமேடை ஆக்கதிங்கப்பு. இதுனல உங்களுக்கும் BP,டென்சன் & utter waste of time, ஒங்கள மதிச்சி படிக்க வரவனுக்கும் தாலி அருப்பு :-) :-)

பாஸு டென்ஸன் ஆகி எதுன்ன தப்பா சொல்லி இருந்த மன்னிப்பு கேட்டுகிரேன்.

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

1.b
2.b
3.b
4.b
5.b
6.b
7.b
8.b
9.b. பெருமையாகவே உணர்கிறேன்.
10.b.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய வழக்கமான தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

 
At Friday, 10 February, 2006, சொல்வது...

கேள்வி பதில் எல்லாம் எனக்குத் தெரியாதம்மணி

 
At Saturday, 11 February, 2006, சொல்வது...

ஆதிரை, நல்லா ஹோம் ஒர்க் செஞ்சா தேற வழியுண்டு.

சிறிலு, நடுநிலமையா வேணாம் தம்பி. எனக்கு ஆன கதி உனக்கு :-))))

பார்த்தா, சிம்பாலிக்கா வெச்ச படம்தான் அது

டோண்டு சார், நீங்க என்ன மார்க் வாங்குவீங்கன்னு எங்க எல்லாருக்கும் நல்லா தெரியுமே :-))))

என்னார், கேள்வியே புரியலையா? ரொம்ப சுத்தம் :-)

 
At Saturday, 11 February, 2006, சொல்வது...

கார்த்திக் ஜெயந்த், எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் விஷமாகிவிடுகிறது. ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு திறமை. இணைய பதிவு என்பது எழுத்தை தொழிலாய் கொள்ளமால், அவரவர் சுதந்திரமாய் தங்கள் திறமையை காட்டும் இடம். ஆனால் இப்பொழுது நடப்பது எதுவும் சரியில்லை என்பது மட்டும் தெளிவாய் தெரிகிறது.

ராகவா, கோடாங்கிக்கு இப்ப ரொம்ப டிமாண்டு

 
At Saturday, 11 February, 2006, சொல்வது...

என்னது டீச்சரம்மா மாதிரி கேள்வி எல்லாம் செட் பண்ணி பாஸ் பெயிலு போட்டுட்டு இருக்கீங்க!, இது என்ன அதிக பின்னேட்டம் பெறுவது எப்படின்னு போட்ட பதிவு வகையா இதுவும்?

 
At Saturday, 11 February, 2006, சொல்வது...

நீங்கள் இந்த கருத்துகணிப்பில் 0 மதிப்பெண் எடுத்திருந்தாலும் எப்பொழுது நீங்கள் உண்மைசம்பவம் என்ற இந்த பதிவு எழுதினீர்களோ அப்போதே தேர்ச்சி பெற்றுவிட்டீர் என்றே நினைக்கின்றேன்...

நன்றி

 
At Saturday, 11 February, 2006, சொல்வது...

சென்னை கருத்துக் கணிப்பு ஜாம்பவான்கள் கடையை மூடலாமா என்று பயந்து போய் இருக்கிறார்கள் தெரியுமா? முதலை வாயில் தலை வைத்து மீண்டவர் ஒருவர் கருத்துக் கணிப்புத் துறையில் போட்டிக்கு வந்து விடுவாரோ என்பது தான் காரணம்.:-))

 
At Saturday, 11 February, 2006, சொல்வது...

உஷா,

எனக்கு ஏழு மார்க்..முயற்சியை தொடரட்டுமா?

 
At Sunday, 12 February, 2006, சொல்வது...

//9) நீங்கள் சொந்த பெயரில் எழுதுபவர் என்றால், செய்தது மாபெரும் தவறு என்று உங்கள் மனசாட்சி நாளும் உங்களை
திட்டுகிறதா?
a) ஆம்
b) இல்லை

10) சமீபக் காலங்களில் பின்னுட்டமோ அல்லது பதிவோ போடலாம் என்று நினைக்கும்பொழுதே, நினைப்பை ஒத்திப் போட
தொடங்கியுள்ளீர்களா?
a) ஆம்
b) இல்லை
//

:-)

 
At Sunday, 12 February, 2006, சொல்வது...

முதலையின் வாய்க்குள்ளே தலையெப் போடுவிங்களா
a) ஆம்

b) இல்லை.

ஆனா எல்லோரும் போட்ட மாதிரித்தான் தெரியுது.

 
At Sunday, 12 February, 2006, சொல்வது...

வெ. நா ஊர்ல இல்லையா :-)))

குழலி, இலக்கிய அலசலுக்கு ரெண்டு மூணு பேரூ இருந்தாலும், பிரண்டு ஒருத்தி இங்க இன்சூரன்ஸ்ல வேலப்பார்க்கிறாங்க. எல்லாம் படிப்பாங்க. நிறைய விஷயம் அவங்கக்கூட பேசினதுதான். அவங்கக்கிட்ட ஒவ்வொரு முறையும் சொல்லுவேன். உங்களையும் ஒரு நாள் இழுக்கப்போறேன்னு. செஞ்சிட்டேன். ஆனா, இதுல நான் என்பது நானே !

ராம்கி, கடைய மூடுவதற்கு நல்லநாள் பார்த்துக்கிட்டு இருக்கேன்.

மஞ்சுர் ராஜா, ஒன்னு மட்டும் தெளிவா தெளியுது. வேற என்ன என்னைப் போல இன்னும் பலரும் இருக்காங்கன்னு :-)))

முத்து ஏழு மார்க்கா? உங்களுக்கு என்னங்க, அறிவாளிங்க நட்பு எக்கசக்கம். சீக்கிரம் பத்துக்கு பத்து எடுக்க வாழ்த்துக்கள் :-)))))

 
At Sunday, 12 February, 2006, சொல்வது...

நேசகுமார்ஜி, என்ன செய்ய பட்டப்பிறகுதான் புத்திவருகிறது . என்னத்த எழுதி கிழிக்கிறோம் என்கிற எண்ணம் வலுக்கிறது.
உங்கள் வருகைக்கு நன்றி

 
At Sunday, 12 February, 2006, சொல்வது...

நீங்க நம்ம பதிவு பக்கம் போகலையா? நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்து வந்தனம் வாசிச்சுட்டுத்தானே தொடர்றேன்!

 
At Sunday, 12 February, 2006, சொல்வது...

I said jaambavan, on the basis of entrance exam. When you don't know the answer always choose the same option. I chose (b). Not because i understood the question!!

:-))))) (Bold and double bold)

 
At Monday, 13 February, 2006, சொல்வது...

உஷா
மத்த புதிர்களுக்கு செய்யிற மாதிரியே தோராயமா ஒரு பதில் போட்டுட்டு, முடிவில் தெரியும் favourabilityக்கு ஏற்ப பதிலை மாத்திட்டாப் போச்சுதுன்னு எட்டிப் பார்த்தால், உண்மையாகவே முதலை வாயில் தலை கொடுத்த மாதிரி இருக்குதுங்க!

 

Post a Comment

<< இல்லம்